Wednesday, 1 April 2009

எப்டிலா ஏமாத்துறாங்கய்யா!!!

வணக்கம்... இன்றைக்கு உங்களுடைய ராசி பலனை நமக்காக கணித்து தந்து இருப்பவர் ஜோதிட ரத்தினம், முத்து, பவளம், சிகாமணி, கவுண்டமணி, காராமணி ஜக் ஜகா...மேச ராசி நேயர்களே, பக்கத்து வீட்டு பாப்பா கிட்ட உசாரா இருங்க.. காலைலேயே உங்கள அண்ணா பேண்ட்ல ஓட்டை, அக்கா துப்பட்டா காணோம்னு ஏமாத்தி, ஏமாந்த ஃபூல், ஏப்ரல் ஃபூல், டப்பா உள்ள கைய்ய விட்டா காபித்தூள்னு பாட்டுலா பாடுவாங்க..ரிஷப ராசி நேயர்களே, கல்லூரி பக்கம் போகாதீங்க... இன்னைக்கு தேர்வுத்தாள் தரும் சூழ்நிலை ஏற்பட்டால், வாத்தியாரு 100 மார்க்கு போட்டு உங்க கவுரவத்துக்கு உலை வச்சிடுவாரு.. அப்றோம் ஜூனியர் பொண்ணுங்க கிட்ட நீங்க கட்டிக்காக்குற கெத்து போய்டும்
மிதுன ராசி நேயர்களே, பக்கத்து வீட்டு அங்கிள் மேல கோபமா? இது தான் சரியான சமயம்.. ஆண்ட்டி கிட்ட போய் ”ஒரு பொண்ணு எனக்கு போன் போட்டு அங்கிள் பத்தி விசாரிச்சாங்க... அவர் ஞாபகமாவே இருக்காம்.. மறக்க முடில.. அங்கிள் கிட்ட நான் சொன்னேனு சொல்லாதீங்க” பத்த வச்சிட்டு வந்துடுங்க..கடக ராசி நேயர்களே, நீங்க சினிமா பைத்தியமா இருந்தா, உங்கள ஏமாத்தவே ஒரு கூட்டம் இருக்கு... விஜய் கெட்டப் மாத்தி நடிச்சிருக்காரு, டீ.ஆரு தாடிய சவரம் செஞ்சி ஹீரோயின கட்டி பிடிச்சி கசமுசா பாட்டு ஆடியிருக்காரு, அஜித் மைக்கேல் ஜாக்சன் மாதிரி டான்ஸ்ல பொளந்து கட்டிருக்காருனு சொல்லி மொக்க படத்துக்கு கூட்டிட்டுப் போய்டுவாங்கசிம்ம ராசி நேயர்களே, ஆபிஸ் பக்கம் போகாதீங்க.. மீட்டிங் இருக்கு, சம்பள உயர்வுனு சொல்லி பிங்க் ஸ்லிப் கொடுக்க போறாங்க.. பூகம்பமே வந்தாலும், ரூம பூட்டிக்கிட்டு டீ.விய பாருங்ககன்னி ராசி நேயர்களே, லவ் பண்ணா இது தான் செம சான்ஸ்.. உங்க காதலி கிட்ட போய் ஐ லவ் யூ னு சொல்லுங்க.. ஓகேனா பிக்-அப்பு, என் மனசுல அந்த மாதிரி எண்ணம் இல்ல சொன்னா, இல்ல செருப்ப எடுத்தா, ஏப்ரல் ஃபூல் பண்ணேன், உன்ன போய் லவ் பண்ணுவேனானு சொல்லி நைசா தப்பிச்சி வந்துடுங்க..துலாம் ராசி நேயர்களே, நீங்க சீரியல் சிகரங்கள் என்றால் டீ.விய ஆன் பண்ணிடாதீங்க.. கோலங்கள்ல அபிக்கு கல்யாணம், அரசில செந்தமிழ் அரசியும், அவங்க பொண்ணு ராதிகாவும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க, திருமதி செல்வத்துல புருசன்-பொண்டாட்டி சண்ட ஓய்ந்தது, மானாட-மயிலாட ஸ்பெஷல் ஷோல இன்னைக்கு 3 எலிமினேசன்னு சொல்லி நேரத்த வீணாக்குவாங்கவிருச்சிக ராசி நேயர்களே, உடல் நிலை சரியில்லைனா அரசு மருத்துவமனைக்கு போங்க, லஞ்சமே வாங்குறதில்ல, தனியார் மருந்துவமனைக்கு போங்க, ஃபீஸ் எல்லாம் கம்மினு சொல்லி இருக்குற பர்ஸ்-பல்ஸ்க்கு உத்திரவாதம் இல்லாம பண்ணிடுவாங்க..தனுசு ராசி நேயர்களே, உங்க இ-மெயில்திறக்காதீங்க... லாட்டரில பல கோடி ரூபா விழுந்துருக்கு, நமிதா கவர்ச்சி படம் வேணுமா? க்ளிக் (இங்க சொடுக்கு)னு சொல்லி வைரஸ் ஃபுல்லா உங்க கணினில கும்மித்திடுவாங்க..மகர ராசி நேயர்களே, லான்சு மாதிரி நண்பன் உங்க கிட்ட வந்து மச்சி இன்னைக்கு ட்ரீட், வாடானு சொல்லி கூப்டா நம்பி போய்டாதீங்க.. நல்லா வெளுத்து கட்டி முடிக்கும் போது, ஹிஹிஹினு பல் இளிச்சி, பர்ஸ் வீட்டுல வச்சிட்டேன்டா, இன்னைக்கு நீ காசு தா, அடுத்த ட்ரீட் கண்டிப்பா நான் தரேன் மச்சினு சொல்லுவாங்க.. இப்டி உசுப்பேத்தி, பர்ஸ்ச பன்ச்சர் ஆக்குற கூட்டம் ஒண்ணு இருக்கு..கும்ப ராசி நேயர்களே, அரசியல் செய்திகள் எதையும் இன்னைக்கு படிக்காதீங்க... பா.ம.க தனித்து போட்டி, இலங்கையில் போர் நிறுத்தம், தி.மு.க-அ.தி.மு.க புதிய கூட்டணி வியுகம்னு, அசர வைக்கிற மாதிரி எழுதுவாங்க...
மீன ராசி நேயர்களே, ஸ்பென்சர் ப்ளாசாவுல இருக்கும் க்ளோபஸ், லண்ட்மார்க், வெஸ்ட்-சைடு, நைக், ரீப்போக் ஷோரூம்ல இன்னைக்கு எல்லாமே 80% தள்ளுபடி சொன்ன உடனே, தள்ளி அடிச்சிகிட்டு ஓடாதீங்க, அப்றோம் பில் போட்ட உடனே, ஆம்புலன்க்கு சொல்ல வேண்டி இருக்கும்..ஆனா எல்லா ராசிக்காரங்களும் உசாரா இருக்க வேண்டிய நாள் இருக்கு.. அது மே மாசம் வருது.. ஒரு மாசம் கழிச்சி ஏமாத்த போறாங்க, அதுக்கு இப்பவே வசனம்லா ரெடி பண்ணிட்டு இருக்காங்க... ஆனா என்ன, ஒரு நாள் ஏமாந்து, அது ஐந்து வருடம் தொடரும்ல?? எவ்வளவோ வாங்கிட்டோம், இத வாங்க மாட்டோமா?எனக்கு தமிழ் ராசி பலன்கள் எல்லாம் தந்து, இந்த பதிவை போட வைத்த ஜி3 அக்காவுக்கு நன்றியோடு, ஒரு பாட்டை டெடிகேட் செய்றேன்ராசி ராசி, அக்கா கிடைத்தால் எல்லாம் ராசிவருகைக்கு நன்றி!!


29 comments:

Lancelot said...

me the first

GAYATHRI said...

he he he iniku fulllllllllah naa emarave ilaye:p en na naa coll bunk adichen parents ah emaathi[:p]

GAYATHRI said...

lance anna..post eh padikaama me the first nu comment panradhulaam oru pozhappu hmmm!!!!

Lancelot said...

nanbaa semma punchmaa....super dabur posttu... intha siluvai pullarichu poittaan...siluvai miss the writing u...u write the continuing..i the happy...

ஆளவந்தான் said...

உள்ளேன்

ஆளவந்தான் said...

//
டீ.ஆரு தாடிய சவரம் செஞ்சி ஹீரோயின கட்டி பிடிச்சி கசமுசா பாட்டு ஆடியிருக்காரு
//
சூடு கண்ட பூனை??? :)))

ஆளவந்தான் said...

//
பூகம்பமே வந்தாலும், ரூம பூட்டிக்கிட்டு டீ.விய பாருங்க
//

அப்போ மெயில்ல அனுப்பிடுவானுங்க.. சம்பளத்தை இல்ல

ஆளவந்தான் said...

//
இப்டி உசுப்பேத்தி, பர்ஸ்ச பன்ச்சர் ஆக்குற கூட்டம் ஒண்ணு இருக்கு..
//
கூட்டம் ஒன்னு (or) பொண்ணு கூட்டம்??

ஆளவந்தான் said...

//
ஜி3 அக்காவுக்கு நன்றி
//

போஸ்ட் போட சொல்லிட்டு கமெண்ட் போடாம ஆள் எஸ்கேப்பா?

viji said...

great wan... full of jokes. nalla future irukku ungaluku.. :D

kanagu said...

@lancelot
/*லான்சு மாதிரி நண்பன் உங்க கிட்ட வந்து மச்சி இன்னைக்கு ட்ரீட், வாடானு சொல்லி கூப்டா நம்பி போய்டாதீங்க.. நல்லா வெளுத்து கட்டி முடிக்கும் போது, ஹிஹிஹினு பல் இளிச்சி, பர்ஸ் வீட்டுல வச்சிட்டேன்டா, இன்னைக்கு நீ காசு தா, அடுத்த ட்ரீட் கண்டிப்பா நான் தரேன் மச்சினு சொல்லுவாங்க.. */

machi nee enga irukka.. intha avamanamthu ku vandhu pathil sollu..

kanagu said...

super post.. ellame ella rasi kaaran galukkum porundhum.. :D

R-ambam said...

Smart idea for the kanni raasi gang..ella raasikaarangalum follow panlaam .
ungalukku theriyaathaa? thirumathi selvam purushan pondatti fight mudinju poache !

Karthik said...

எப்ப ஜோசியர் ஆனீங்க கார்த்திக்? நான் இந்த செம்ல எல்லா அரியரையும் கிளியர் பண்ணிடுவேனா? ;)

LOL. Superb post!

G3 said...

//ஒரு நாள் ஏமாந்து, அது ஐந்து வருடம் தொடரும்ல?? எவ்வளவோ வாங்கிட்டோம், இத வாங்க மாட்டோமா? //

:))))))))))))))

G3 said...

//ராசி ராசி, அக்கா கிடைத்தால் எல்லாம் ராசி //


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAD MADHAV said...

Me the first (Gentleman Category) :-)

RAD MADHAV said...

//வணக்கம்... இன்றைக்கு உங்களுடைய ராசி பலனை நமக்காக கணித்து தந்து இருப்பவர் ஜோதிட ரத்தினம், முத்து, பவளம், சிகாமணி, கவுண்டமணி, காராமணி ஜக் ஜகா...//

ஜோசியர் பேரு கார்த்திக் குண்டலகேசிதானே ?

RAD MADHAV said...

//viji said...

great wan... full of jokes. nalla future irukku ungaluku.. :D//

periya paatti kitterunthu super aasirvatham. karthik nee theri viduvaai!!!

RAD MADHAV said...

//Lancelot said...

me the first//

sellathu... sellathu... :-((

RAD MADHAV said...

//kanagu said...

@lancelot
/*லான்சு மாதிரி நண்பன் உங்க கிட்ட வந்து மச்சி இன்னைக்கு ட்ரீட், வாடானு சொல்லி கூப்டா நம்பி போய்டாதீங்க.. நல்லா வெளுத்து கட்டி முடிக்கும் போது, ஹிஹிஹினு பல் இளிச்சி, பர்ஸ் வீட்டுல வச்சிட்டேன்டா, இன்னைக்கு நீ காசு தா, அடுத்த ட்ரீட் கண்டிப்பா நான் தரேன் மச்சினு சொல்லுவாங்க.. */

machi nee enga irukka.. intha avamanamthu ku vandhu pathil sollu..//

RRRRRRRRR
eeeeeeeeeeee
ppppppppppppppp
eeeeeeeeeeeeeeeeee
aaaaaaaaaaaa
tttttttttttttttttt
eeeeeeeeeeeeeeeeee
dddddddddddddddd................

RAD MADHAV said...

இந்த அளவுக்கு சிறப்பாக பலன் சொன்னதற்காக உனக்கு 'ஜோதிட திருட்டு திலகம்'
என்ற பட்டத்தை மனமார வழங்கி இந்த இட்லி வடை மாலையை உனக்கு பொன்னாடையாக சார்த்துகிறேன். :-)

RAD MADHAV said...

23

RAD MADHAV said...

24

RAD MADHAV said...

25 Me the ''Quarter'' Century :-))))

Divyapriya said...

ROTFL :D

விஜய் said...

என்ன கார்த்திக், எத்தனை பேர் உங்களை முட்டாள் ஆக்கினாங்க???

gils said...

total galeej postu :D :D raasa unaku matum epdi ithelaam thonuthu?? kaalangathaala tv neria pakirio? antha kannadi poata thataha solrapolavay soliruka :D

Anonymous said...

RAD MADHAV
//"ஜோசியர் பேரு கார்த்திக் குண்டலகேசிதானே ?"//

//"இந்த அளவுக்கு சிறப்பாக பலன் சொன்னதற்காக உனக்கு 'ஜோதிட திருட்டு திலகம்'
என்ற பட்டத்தை மனமார வழங்கி இந்த இட்லி வடை மாலையை உனக்கு பொன்னாடையாக சார்த்துகிறேன். :-)"//

repeatttttt.........

Blogger templates

Custom Search