Sunday, 26 April 2009

மைலோ வித் பாப்பு- அஜித்க்கு ஆப்பு: பகுதி-1

பாப்பைய்யா: அன்புத்தாய்மார்களே.. அருமை பெரியோர்களே... இனிய குழந்தைகளே.. காலை வணக்கம்.. போன நிகழ்ச்சிலே தம்பி விஜய்ய பார்த்தோம்.. அப்ப இந்த வாரம் யாருனு நான் சொல்ல வேணாம்லே.. விஜய்னா அடுத்து இவர் தானே.. வாங்க..தல போல வருமா, தல போல வருமா, தல போல வருமா பாட்டு ஒலிக்க, ஒருவர் வேகமாக நடந்து வருகிறார்..


பாப்பைய்யா: யாருய்யா நீயு... விருந்தினர் வர நேரத்துல அவர் பாட்டுக்கு உள்ளார வந்துட்ட..


அஜித்: அண்ணே... என்ன நல்லா பாருங்கனே... நான் தான் அஜித்..பாப்பைய்யா: ஓ.. கோட்-சூட் இல்லாம,வேட்டில வந்துட்டியா?? அதான் கண்டுபிடிக்க கஷ்டமாயிடிச்சி..டீ.ஆரு: நீ போட்டு வந்ததோ வேட்டி.

சினிமாவில் உனக்கும் விஜய்க்கும் தான் போட்டி


பாப்பைய்யா: டீ.ஆரு.. நீ ரொம்ப தான்யா நாட்டி..(NAUGHTY) ஷோவே இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள முற்றும் போட வச்சிடுவ போல இருக்கே.. நிறுத்துய்யா..கவுண்டரு: டேய்.. கூலிங்-க்ளாஸ் கண்ணா.. அது என்னடா நீ பெருசா சாதிசிட்ட மாதிரி தல போல வருமா? இவரு தான் அணு-விஞ்ஞானி... சந்திரனுக்கு ராக்கெட் விட்டாரு.. ஆனா மகனே.. மொக்க படமா நடிச்சி தள்றதுல உன்ன போல யாரும் வர முடியாது...அஜித்: அண்ணே.. அந்த வில்லு நடிகரை மறந்துடீங்களா?பாப்பைய்யா: அவரு படம்னா கூட பாட்டு, காமெடினு ஏதோ கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்குய்யா.. ஆனா உன் படத்துல பாட்டும் மொக்க.. உன் நடிப்பு தவிர வேற காமெடியே இல்லயே.. ஏன்யா??
டீ.ஆரு: சரி.. கடசியா உனக்கு ஹிட் ஆன படம் என்ன?அஜித்: ஏகன் நீங்க பாக்கலையா??கவுண்டரு: டேய் அதெல்லாம் படமாடா? உன் ஃபேன்ஸாலேயே பாக்க முடில.. என் மாப்பு சத்யராஜ் கூட்டிட்டு போனான்டா.. ஷோ முன்னாடி அடிச்ச குவார்ட்டர் போதையே போச்சு.. காமெடிங்கற பேருல நீ அடிச்ச அக்கப்போர் இருக்கே.. ராமா ராமா...
அஜித்: அண்ணே.. ஒப்பனிங் கலெக்‌ஷன் தெரியுமா?? என் பில்லா விட அதிகம்... அது..
பாப்பைய்யா: எதுய்யா?? உன் படம் ஒப்பனிங்லா நல்லா தான் இருக்கு.. ஃபினிசிங் சரியில்லையே.. முதல் வாரம் ஏதோ ஃபேன்ஸ் தயவாலே ஓடிச்சி.. அடுத்த வாரம் படம் படுத்துகிச்சி.. ஏதோ தல பாவமேனு, உன் ஃபேன்ஸே நெஞ்ச கல்லாக்கிட்டு, கஷ்டப்பட்டு போய் படம் பார்த்தாங்க...
டீ.ஆரு: நீ நடிச்சதோ ஏகன்.. அதுனால தியேட்டருல அடிச்சாங்க பேகான்..கவுண்டரு: யோவ்.. யாருய்யா இவன உள்ள விட்டது.. இங்க நாம என்ன
பேசிட்டு இருக்கோம்.. இவன் என்ன பேசுறான்?? அடடடடடடடடடடடா..அஜித்: ஹே ஃபூல்.. பீ கூல்.. (HEY FOOL, BE COOL)கவுண்டரு: அட்ரா சக்க.... அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க.அஜித்: சரிண்ணே.. பில்லா படத்துல நான் நல்ல நடிச்சேன்ல?பாப்பைய்யா: நீ நல்லா நடிச்சனு சொல்றத விட நல்லா நடந்தய்யா.. அப்டி இருந்தும் உன் தொப்பை குறையலையே... டான் கதையில புள்ளி மான் மாதிரி, அழகா ராம்ப் வாக் பண்ணிட்ட.. ஆனா உன்ன விட நயந்தாரா பிகினி சூப்பருலே.. அதுக்காகவே 2 வாட்டி பார்த்தேன்ல..
டீ.ஆரு: படம் ரிப்பீட் ஆடியன்ஸே அதுக்காக தான்ங்க... அவனவன் செலவு பண்ணி 2 நிமிசம் விளம்பரப்படம் எடுப்பானுங்க... ஆனா இரண்டரை மணிநேரம் கூலிங்க்ளாஸ்க்கும், கோட்-சூட்டுக்கும் விளம்பரமா எடுத்த படம் தான் பில்லா..
கவுண்டரு: ஹே.. ஓல்ட் மேன்.. நீ கரெக்டா சொன்ன.. அது கூட விட்டுடு.. சேவல் கொடி பறக்குதய்யா பாட்டுல எல்லாரும் மஞ்சள் துணி கட்டி ஆடிட்டு இருக்க, நீ மட்டும் சம்பந்தம் இல்லாம, ஜீன்ஸ்-பேண்ட், டீ-ஸர்ட்ல வந்த.. சரி.. பையன் ஆடுவானே நானும் முத வரில இருந்து பாக்குறேன்.. ம்ம்ம்ம்ம்..அஜித்: அண்ணே.. பக்தி பரவசத்துல அப்டி வந்துட்டேன்னே... நான் தல.. அவ்வளவு பேருல நான் வித்தியாசமா தெரியணும்ல.. அதான்..பாப்பைய்யா: நீ தான் டான்ஸே ஆட மாட்டேலே.. அதுல இருந்தே கண்டுபிடிச்சிடலாம் நீ தான் அஜித்னு.. பிறவு என்ன??கவுண்டரு: டேய்.. என்ன அண்ணேனு கூப்டாத... ஏற்கனவே ஒரு அண்டா தலையன் என்ன அண்ணே அண்ணே கூப்டு ஏகப்பட்ட பிரச்சனைகள், ரோதனைகள், வேதனைகள் கொடுத்துட்டான்.. இப்ப புதுசா நீ வேறயா?? ஒடி போய்டு படுவா..பாப்பைய்யா: அதே படத்துல செய் ஏதாவது செய்னு ஒரு சாங்க் இருக்கு.. அந்த பொண்ணு சிலுக்கு மாதிரி இல்லனாலும் மிலுக்கு மாதிரி இருந்தாலே.. அவ்வளவு உணர்ச்சியோட ஆடுறா... கழுத்துல சுளுக்கு வந்த மாதிரி இப்டி, அப்டி திருப்பிட்டு இருக்கய்யா... அப்றோம் முகத்துல வேற மலச்சிக்கல் வந்த மாதிரி ஒரு எக்ஸ்பிரஸ்ஸன்.. ஏன் தம்பி?? விளங்குமா??
டீ.ஆரு: ஆமாங்க.. இதுக்கு நானே ஆடி இருப்பேனே.. இதே மாதிரி கோட்-சூட் போட்டு, என்ன காதலிக்க ஓராயிரம் பேர் இருக்காங்கனு மும்தாஜ் கூட அட்டகாசமாக, காதல் ரசம் சொட்ட ஆடியவன் தான் இந்த டீ.அர்.அஜித்: நீங்க ஆடுனா அது பேரு பில்லா இல்ல... பெ....பாப்பைய்யா: வேணாம்யா... நீ அவர மாதிரி ரைமிங்கா சொல்றேனு ஒண்ணுகிடக்க சொல்ல, அவருக்கு கோவம் வந்து, தமிழன்யா.. அப்ரெஸ், டிப்ரெஸ்னு கத்திட்டு இருப்பாரு..
அஜித்: பெரிய குல்லா மாதிரி இருக்கும்னு சொல்ல வந்தேன்...ரவுசு தொடரும்.........
வருகைக்கு நன்றி!!

19 comments:

ஆளவந்தான் said...

first :(

ஆளவந்தான் said...

//

டீ.ஆரு: நீ நடிச்சதோ ஏகன்.. அதுனால தியேட்டருல அடிச்சாங்க பேகான்..
//
avvvvvvvvvvvvv :((((

ஆளவந்தான் said...

//
ஆனா உன்ன விட நயந்தாரா பிகினி சூப்பருலே.. அதுக்காகவே 2 வாட்டி பார்த்தேன்ல..
//
நமீதாவுக்காக ஒரு தடவ எக்ஸ்ட்ரா பாத்தேன்

லொள்ளு சபா said...

கார்த்திக் தாங்க முடியல்......
அருமையா எழுதிருக்கப்பு.....

லொள்ளு சபா said...

பில்லாவுக்கு அஜித்....
பிலாவுக்கு .......
லொள்ளு கார்த்தி....

லொள்ளு சபா said...

நல்ல அருமையான கற்பனை கார்த்தி....
அருமையோ அருமை.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆகா.. நம்ம தலைய அநியாயத்துக்கு ஒட்டி இருக்கீங்களே நண்பா.. ஆனா உண்மைல ரொம்ப நல்லா இருக்கு.. உங்க லொள்ளு அருமை..

Suresh said...

//படம் ரிப்பீட் ஆடியன்ஸே அதுக்காக தான்ங்க... அவனவன் செலவு பண்ணி 2 நிமிசம் விளம்பரப்படம் எடுப்பானுங்க... //

ஹா ஹா நிறைய சிரித்தேன் ஆனா அவரை எனக்கு பிடிக்கும், சும்மா ஜோக்கு நல்லா அருமையா இருக்கு அதுல ஏகன் பில்லானு ஒன்னு விடல அவ் நல்லா இருக்குயா உங்க நக்கல ஹ ஹா ;)

Suresh said...

//நீ தான் டான்ஸே ஆட மாட்டேலே.. அதுல இருந்தே கண்டுபிடிச்சிடலாம் நீ தான் அஜித்னு.. பிறவு என்ன??//

ஹா ஹா ஹம் தல ரசிகனாய் மறந்து ரசித்தது

லொள்ளு சபா said...

karthi beauty yaaru
theriumaa...?

enaku therium.
annaaa solla maten..

kandupidi...
kandupidi...

லொள்ளு சபா said...

karthi en blogla
4 linesla thann vijaya otti erukken.

athukku eppadi
varikku vari ajitha otti palikku pali vankiteye...

ethu niyayama?


(free ad 4 my blog)

kanagu said...

/*நீ தான் டான்ஸே ஆட மாட்டேலே.. அதுல இருந்தே கண்டுபிடிச்சிடலாம் நீ தான் அஜித்னு.. பிறவு என்ன??*/

LOL :D

romba kalachita Karthik.. ithula adutha part na thaangathu :(

post nalla irukku... aana rasikka mudiyalaye paaaaaaaaaaa :(((((((((

Thamizhmaangani said...

அடுத்த பாகம் எப்போ?:)

Lancelot said...

Siluvai the first....


thambi nee eluthuraa thalaiya pathi
aana naa pesa pora aaalu illayathalapathi

uppu thinna thanni kudi
thappu senja thalayil adi

vaannathulla parakuthu kaka
bangladesh thalainagar Dhaka

en mrs peru munimma
innaiku kelamai sanniyamma...

varttaaa

Karthik said...

ஹா..ஹா. ஏன் இந்த கொலைவெறி? :))

(டலபதியை தாக்க ஆரம்பித்தால் தாங்க மாட்டார் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.)

Karthik said...

கர்த்திக்கை பாண்டியன் சார், சுரேஷ் மாம்ஸ் நீங்க அஜித் ஃபேனா இருந்தாலும் இந்த பதிவ மதிச்சி கமெண்ட் போட்டடுக்கு நன்றி..


தமிழ்மாங்கனி வருகைக்கு நன்ஏஇ.. சீக்கரமா பதிவு வரும்


சிலுவ.. நானு ரொம்ப நாளா பாக்குறேன்.. இந்த வெயிலுக்கு இதமா தலையில எலுமிச்ச பழம் தடவிக்கோ.. பதிவுக்கு சம்பந்தம் இல்லாம பேசுறதே வேளய போச்சு..


வாங்க கார்த்திக்.. மோதிப்பார்க்கலாம்...

விஜய் said...

கண்ணா இந்தப் பதிவ மட்டும் டி.ஆரோ அஜீதோ படிச்சாங்க, மகனே உனக்கு சங்கு தான்.

விவழுந்து விழுந்து சிரித்தேன்.

Anonymous said...

karthick romba nalla eluthara.
ajitha adichu dhuvachu kaayappoottutta.

gils said...

ajith mela unaken ivlo gaandu...mokka vijaiku ajith evlovo better...enna elarum mokkiaya nadichitu nalla padam nadipanga..ivan ulta..

Blogger templates

Custom Search