Sunday, 26 April 2009

மைலோ வித் பாப்பு- அஜித்க்கு ஆப்பு: பகுதி-1

பாப்பைய்யா: அன்புத்தாய்மார்களே.. அருமை பெரியோர்களே... இனிய குழந்தைகளே.. காலை வணக்கம்.. போன நிகழ்ச்சிலே தம்பி விஜய்ய பார்த்தோம்.. அப்ப இந்த வாரம் யாருனு நான் சொல்ல வேணாம்லே.. விஜய்னா அடுத்து இவர் தானே.. வாங்க..தல போல வருமா, தல போல வருமா, தல போல வருமா பாட்டு ஒலிக்க, ஒருவர் வேகமாக நடந்து வருகிறார்..


பாப்பைய்யா: யாருய்யா நீயு... விருந்தினர் வர நேரத்துல அவர் பாட்டுக்கு உள்ளார வந்துட்ட..


அஜித்: அண்ணே... என்ன நல்லா பாருங்கனே... நான் தான் அஜித்..பாப்பைய்யா: ஓ.. கோட்-சூட் இல்லாம,வேட்டில வந்துட்டியா?? அதான் கண்டுபிடிக்க கஷ்டமாயிடிச்சி..டீ.ஆரு: நீ போட்டு வந்ததோ வேட்டி.

சினிமாவில் உனக்கும் விஜய்க்கும் தான் போட்டி


பாப்பைய்யா: டீ.ஆரு.. நீ ரொம்ப தான்யா நாட்டி..(NAUGHTY) ஷோவே இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள முற்றும் போட வச்சிடுவ போல இருக்கே.. நிறுத்துய்யா..கவுண்டரு: டேய்.. கூலிங்-க்ளாஸ் கண்ணா.. அது என்னடா நீ பெருசா சாதிசிட்ட மாதிரி தல போல வருமா? இவரு தான் அணு-விஞ்ஞானி... சந்திரனுக்கு ராக்கெட் விட்டாரு.. ஆனா மகனே.. மொக்க படமா நடிச்சி தள்றதுல உன்ன போல யாரும் வர முடியாது...அஜித்: அண்ணே.. அந்த வில்லு நடிகரை மறந்துடீங்களா?பாப்பைய்யா: அவரு படம்னா கூட பாட்டு, காமெடினு ஏதோ கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்குய்யா.. ஆனா உன் படத்துல பாட்டும் மொக்க.. உன் நடிப்பு தவிர வேற காமெடியே இல்லயே.. ஏன்யா??
டீ.ஆரு: சரி.. கடசியா உனக்கு ஹிட் ஆன படம் என்ன?அஜித்: ஏகன் நீங்க பாக்கலையா??கவுண்டரு: டேய் அதெல்லாம் படமாடா? உன் ஃபேன்ஸாலேயே பாக்க முடில.. என் மாப்பு சத்யராஜ் கூட்டிட்டு போனான்டா.. ஷோ முன்னாடி அடிச்ச குவார்ட்டர் போதையே போச்சு.. காமெடிங்கற பேருல நீ அடிச்ச அக்கப்போர் இருக்கே.. ராமா ராமா...
அஜித்: அண்ணே.. ஒப்பனிங் கலெக்‌ஷன் தெரியுமா?? என் பில்லா விட அதிகம்... அது..
பாப்பைய்யா: எதுய்யா?? உன் படம் ஒப்பனிங்லா நல்லா தான் இருக்கு.. ஃபினிசிங் சரியில்லையே.. முதல் வாரம் ஏதோ ஃபேன்ஸ் தயவாலே ஓடிச்சி.. அடுத்த வாரம் படம் படுத்துகிச்சி.. ஏதோ தல பாவமேனு, உன் ஃபேன்ஸே நெஞ்ச கல்லாக்கிட்டு, கஷ்டப்பட்டு போய் படம் பார்த்தாங்க...
டீ.ஆரு: நீ நடிச்சதோ ஏகன்.. அதுனால தியேட்டருல அடிச்சாங்க பேகான்..கவுண்டரு: யோவ்.. யாருய்யா இவன உள்ள விட்டது.. இங்க நாம என்ன
பேசிட்டு இருக்கோம்.. இவன் என்ன பேசுறான்?? அடடடடடடடடடடடா..அஜித்: ஹே ஃபூல்.. பீ கூல்.. (HEY FOOL, BE COOL)கவுண்டரு: அட்ரா சக்க.... அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க.அஜித்: சரிண்ணே.. பில்லா படத்துல நான் நல்ல நடிச்சேன்ல?பாப்பைய்யா: நீ நல்லா நடிச்சனு சொல்றத விட நல்லா நடந்தய்யா.. அப்டி இருந்தும் உன் தொப்பை குறையலையே... டான் கதையில புள்ளி மான் மாதிரி, அழகா ராம்ப் வாக் பண்ணிட்ட.. ஆனா உன்ன விட நயந்தாரா பிகினி சூப்பருலே.. அதுக்காகவே 2 வாட்டி பார்த்தேன்ல..
டீ.ஆரு: படம் ரிப்பீட் ஆடியன்ஸே அதுக்காக தான்ங்க... அவனவன் செலவு பண்ணி 2 நிமிசம் விளம்பரப்படம் எடுப்பானுங்க... ஆனா இரண்டரை மணிநேரம் கூலிங்க்ளாஸ்க்கும், கோட்-சூட்டுக்கும் விளம்பரமா எடுத்த படம் தான் பில்லா..
கவுண்டரு: ஹே.. ஓல்ட் மேன்.. நீ கரெக்டா சொன்ன.. அது கூட விட்டுடு.. சேவல் கொடி பறக்குதய்யா பாட்டுல எல்லாரும் மஞ்சள் துணி கட்டி ஆடிட்டு இருக்க, நீ மட்டும் சம்பந்தம் இல்லாம, ஜீன்ஸ்-பேண்ட், டீ-ஸர்ட்ல வந்த.. சரி.. பையன் ஆடுவானே நானும் முத வரில இருந்து பாக்குறேன்.. ம்ம்ம்ம்ம்..அஜித்: அண்ணே.. பக்தி பரவசத்துல அப்டி வந்துட்டேன்னே... நான் தல.. அவ்வளவு பேருல நான் வித்தியாசமா தெரியணும்ல.. அதான்..பாப்பைய்யா: நீ தான் டான்ஸே ஆட மாட்டேலே.. அதுல இருந்தே கண்டுபிடிச்சிடலாம் நீ தான் அஜித்னு.. பிறவு என்ன??கவுண்டரு: டேய்.. என்ன அண்ணேனு கூப்டாத... ஏற்கனவே ஒரு அண்டா தலையன் என்ன அண்ணே அண்ணே கூப்டு ஏகப்பட்ட பிரச்சனைகள், ரோதனைகள், வேதனைகள் கொடுத்துட்டான்.. இப்ப புதுசா நீ வேறயா?? ஒடி போய்டு படுவா..பாப்பைய்யா: அதே படத்துல செய் ஏதாவது செய்னு ஒரு சாங்க் இருக்கு.. அந்த பொண்ணு சிலுக்கு மாதிரி இல்லனாலும் மிலுக்கு மாதிரி இருந்தாலே.. அவ்வளவு உணர்ச்சியோட ஆடுறா... கழுத்துல சுளுக்கு வந்த மாதிரி இப்டி, அப்டி திருப்பிட்டு இருக்கய்யா... அப்றோம் முகத்துல வேற மலச்சிக்கல் வந்த மாதிரி ஒரு எக்ஸ்பிரஸ்ஸன்.. ஏன் தம்பி?? விளங்குமா??
டீ.ஆரு: ஆமாங்க.. இதுக்கு நானே ஆடி இருப்பேனே.. இதே மாதிரி கோட்-சூட் போட்டு, என்ன காதலிக்க ஓராயிரம் பேர் இருக்காங்கனு மும்தாஜ் கூட அட்டகாசமாக, காதல் ரசம் சொட்ட ஆடியவன் தான் இந்த டீ.அர்.அஜித்: நீங்க ஆடுனா அது பேரு பில்லா இல்ல... பெ....பாப்பைய்யா: வேணாம்யா... நீ அவர மாதிரி ரைமிங்கா சொல்றேனு ஒண்ணுகிடக்க சொல்ல, அவருக்கு கோவம் வந்து, தமிழன்யா.. அப்ரெஸ், டிப்ரெஸ்னு கத்திட்டு இருப்பாரு..
அஜித்: பெரிய குல்லா மாதிரி இருக்கும்னு சொல்ல வந்தேன்...ரவுசு தொடரும்.........
வருகைக்கு நன்றி!!

Monday, 20 April 2009

விளம்பர ரீ-மிக்ஸ்

சன் டைரக்ட் DTH விளம்பரம் பாத்து இருப்பீங்க.. உன்னோடது அதிகம்னு வருமே.. பாக்கலைனா இதோ கீழே லிங்க்கு.. பாருங்க..இத இப்ப ஏத்தமாதிரி ரீ-மிக்ஸ் பண்ணலாமா?2 அரசியல்வாதிகள் பேசிக்கிறாங்க


தல 1: என்ன தேர்தல்ல தோத்துட்டியா?

தல 2: ஆமா

தல 1: நான் போன எலக்ஷன்ல 20000 கள்ள வோட்டு போட்டு ஜெயிச்சேன்..

தல 2: அட.. என்னோடது அதிகம்... நான் 30000 கள்ள வோட்டு போட வச்சேனே..

தல 1: ஊட்டி, நீலகிரி, கோவா, மும்பை நிலம் வாங்கி போட்டுருக்கேன். மொத்தம் 12 கோடி

தல 2: அத.. இதுலயும் என்னோடது அதிகம்... சிம்லா, சுவிஸ், லண்டன்னு வெளிநாடுல கூட வாங்கி வச்சிருக்கேன்.. மொத்தம் 29 கோடி

தல 1: என் மேல 4 கேசுங்க...

தல 2: சே.. இதுல உன்னோடது அதிகம்.. என் மேல 2 கேசு தான்
2 காலேஜ் பசங்க பேசிக்கிட்டா எப்படி இருக்கும்?

மக்கா 1: அர்ரியர் (ARREARS) தேர்வா?

மக்கா 2: ஆமா!!

மக்கா 1: நா 2 அர்ரியர்..

மக்கா 2: அட.. என்னோடது அதிகம்... நா 10 அர்ரியர்

மக்கா 1: DSP, TOC அர்ரியர் இருக்கா?

மக்கா 2: அத விட அதிகம்... மேத்ஸ் 1, மேத்ஸ் 2, GRAPHICS, ADC எல்லாமே இருக்கு!! சரி எவ்வளவு நேரம் எக்ஸம் எழுதுவ?

மக்கா 1: நான் 2 மணி நேரம்..

மக்கா 2: சே.. இதுல உன்னோடது அதிகம்.. நான் 45 நிமிசம் தான்
கடசியா நம்ம நம்பிக்கை நட்சத்திரங்கள் விஜய், அஜித்...

அஜித்: ஹே.. ரீ-மேக்கா??

விஜய்: ஆமாங்கணா..

அஜித்: எவ்வளவு ஷோ பாத்தாங்க?? எனக்கு ஃபர்ஸ்ட் டே தான்.. அப்றோம் கூட்டமே இல்ல...

விஜய்: அட.. என்னோடது அதிகம்ணா.. என் படம் ஃபோர் டேஸ் தான் ஃபுல்ங்ணா..

அஜித்: பில்லா, ஏகன், கிரிடம் தான் ரீ-மேக் பண்ணேன்!!

விஜய்: அட.. இதுலயும் என்னோடது அதிகம்.. போக்கிரி, கில்லி, குருவி, காதலுக்கு மரியாதை, யூத், வசீகரா இப்டி ஏகப்பட்ட ரீ-மேக்ங்ணா!!

அஜித்: எனக்கு 20 ஃப்ளாப்பு!

விஜய்: சே.. இதுல உன்னோடது அதிகம்.. எனக்கு 17 தான்ணா...(கவுண்டமணி வாய்ஸ்: டேய் குருவி தலையா... போஸ்டர் அடிச்சி படத்த ஹிட் ஆக்கிட்டு பேச்ச பாரு, லொல்ல பாரு, எகதாளத்த பாரு.. படுவா.. ஓடி போய்டு.. என் கண் முன்னால நிக்காத)வருகைக்கு நன்றி!!

Tuesday, 14 April 2009

திருந்த விட மாட்டேங்கிறாங்களே!!

இன்னைக்கு ஏப்ரல் 14.. ஆனா இதை என்ன நாளா கொண்டாடுவதுனு குழப்பம் இருக்கு.. தாத்தா கருணாநிதி சித்திரை திருநாள் சொல்ல, இன்னொருத்தர் தமிழர் திருநாள் சொல்ல, அந்த பக்கம் தமிழ் புத்தாண்டுனு சொல்ல, ஷப்பா... இப்பவே கண்ண கட்டுடே... ஒரு நாள் லீவு கிடச்சதே சந்தோசமா இருந்துட்டு போவியா??ஆங்கில புத்தாண்டுக்கு தான் உறுதிமொழி எடுக்கணுமா? தமிழன்டா நான்... அதுனால தமிழ் புத்தாண்டு அன்னைக்கி எதாவது உறுதிமொழி எடுக்கலாம்னு பார்த்தா, இந்த சமூகமும் சுற்றமும் என்னை திருந்த விட்டார்களா? குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்.. நான் திருந்த தடையாய் இருக்கும் சில காரணங்களை பார்ப்போம்.. இது என் ஒருவன் தனிப்பட்டவனுக்கு மட்டும் பொருந்தாது.. என்னைப்போல் நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் இருக்காங்க.. அவங்க எல்லாருக்கும் இது சமர்ப்பணம்.. (கமல் மாதிரி பேசுனது போதும்.. மேட்டருக்கு வாடா)1. பக்கத்து வீட்டு பொண்ணு இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தா நம்ம கத டரியல் தான்.. ஆண்ட்டி, அம்மா தந்தாங்கனு பலகாரம்லா கொண்டு வருவா.. நமக்கு அந்த பொண்ணு மேலயும் ஒரு கண்ணு இருக்கும், பலகாரம் மேலயும் ஒரு கண்ணு இருக்கும்... தெரிந்தோ நம்ம வீட்டு பெரியவங்க, நல்லா படிக்கிறியானு கேக்க, அவளும் படிக்கிறேன் ஆண்ட்டினு சொல்ல, அப்றோம் நம்ம மானம் புத்தாண்டு அதுவுமா ஜெட் ஏர்வேஸ் ஏறி போகும்.. இவனும் இருக்கானே.. படிக்கிறானா? எப்ப பார்த்தாலும் ஊரு சுத்துறதுலேயே இரு.. இந்த பொண்ண பாருடானு காலைல சாமிக்கு பண்ண அர்ச்சனை நமக்கு ஆரம்பிக்கும்.. அப்றோம் எப்டிங்க அந்த பொண்ண கரெக்ட் பண்ண??2.இவ்வளவு வருசம் ஒழுங்கா தேர்வு எழுதல.. கடசி வருசம் ஒழுங்கா படிக்கலாம்னு நினச்சா இந்த ஐ.பி.எல் (IPL) ஒண்ணு இருக்குலே... நைட் ஃபுல்லா கண் முழிச்சி படிக்கலாம்னு ப்ளான் (PLAN) பண்ணா, கரெக்டா நைட் மாட்ச் போடுறாங்க... மாட்ச் நைட் முடிய, தூக்கம் கண்ண இழுக்க அப்றோம் என்னத்த படிக்க??3.மூணு வருசம் நம்ம மேல இருக்குற காண்டயெல்லாம் இந்த கடசி வருசம் காட்டுவாங்க வாத்தியாருங்க.. டேய்.. கேடி.. என்னடா தாடி? உனக்கு ஹால் டிக்கெட் இல்ல.. ப்ராஜக்ட் ரிப்போர்ட்ல (PROJECT REPORT) இந்த ஃபான்ட் (FONT) தப்பு.. போ.. போ போய் மாத்து.. கடசி தேதி முடிஞ்சி போச்சே.. கையெழுத்துலா போட முடியாது.. சொல்லி வெறியேத்துவாங்க..


க்ளாஸ்ல (CLASS) இருந்தாலும் ஆப்ஸெண்ட் (ABSENT).. ஐ.வி, டூர்க்கு (IV,TOUR) தடா.. தெரியாத பாடம் எல்லாம் செமினாரா (SEMINAR) கொடுக்குறது.. இம்போசிஷன் (IMPOSITION), அஸ்ஸைன்மெண்ட்னு (ASSIGNMENT) உசுர வாங்குறது.. அது எல்லாத்தையும் விட விஞ்ஞானிகள் மூணு வருஷம் ஆராய்ந்து பண்ண ப்ராஜக்டை, நம்பள மூணு மாசத்துல முடிக்க சொல்லுற அபத்தம் இருக்கே... அப்பப்பா....4.மத்த நாளுக்கு எல்லாம் ஃப்ரி மெசஜ் தரும் இந்த செல்போன் மண்டையன்ஸ், முக்கியமான நாட்களப்ப 10, 25, 50னு தங்கள் வசதிக்கேற்ப பிச்சை எடுப்பாங்க.. சேசே... கொள்ளை அடிப்பாங்க.. லீவ் நாளாச்சே, கடல போடலாம்னு ஹாப்பி நியு இயர்னு மெசஜ் அனுப்பலாம்னு பார்த்தா, மிஸ்ட் கால் கொடுக்க கூட பேலன்ஸ் இருக்காது போன்ல.. ஏர்செல் (AIRCEL) கார்ட்னா, மக்கா நீ செத்த.. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தெரியாத நம்பர்ல இருந்து கால் வர, நாமளும் ஆவலா எடுக்க, வணக்கம், ஊஊ ஆயியே ஆயியே.. இந்த பாடல் உங்க காலர்டியூனா வேணுமா? உடனே அழுத்துங்கனு அழகான வாய்ஸ்ல அம்மணி குரல் கேக்கும்.. இவனுங்கள எல்லாம்.... வேணாம்பா.. அப்றோம் வன்முறைய தூண்டுற மாதிரி பேசுறேனு கைது பண்ண போறாங்க..5.இந்த மின்சார துறை இருக்கே.. இந்த ஒரு நாளாவது வீட்டுக்கு அடங்கி, நல்ல பிள்ளையா எங்கேயும் சுத்தாம டி.வில நிகழ்ச்சி பார்த்து, வடை, சக்கர பொங்கல் கொரிச்சிகிட்டு இருக்கலாம்னு பார்த்தா, விடுவாங்களா?? கரண்ட்ட கட் பண்ணி விட்டுடுவாங்க.. ஏற்கனவே வெயில் மண்டைய பொளக்கிறது.. இதுல போய் வெளிய சுத்துனா அப்றோம் பயங்கர கருப்பா இருக்குற நாம கருப்பா பயங்கரமா வினு சக்கரவர்த்திக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி ஆக வேண்டியது தான்..6.காலேஜ் முடிய போகுது.. ஒரு வழியா நம்ம ஆளு கிட்ட ப்ரோப்போஸ் (PROPOSE) பண்ணலாம்னு ஐ லவ் யூனு சொன்னா, சொல்லி வச்ச மாதிரி எல்லா பொண்ணுமே (அடப்பாவி.. ஒரு பொண்ணுகிட்ட சொல்லாம, நிறய பொண்ணு கிட்ட சொல்றியேடா கேக்குறீங்களா?? டெக்னிக்கலா, IF-ELSE LOOP, SWITCH CASE தான் சரி பட்டு வரும்) சாரி.. எனக்கு படிக்கணும்.. அதுல தான் என் கவனம், படிச்சி முடிச்சி டிகிரி (DEGREE) வாங்கணும்னு பழய பஞ்ஜாங்கம் பேசிட்டு இருப்பாங்க.. ஏம்மா.. அதான் கடசி வருசம் வந்தாச்சுல.. இதுக்கு மேலயும் படிக்கணும் படிக்கணும்னா என்னத்த படிக்கணும்?? குமுதம், கல்கியா?? கேக்க, நான் படிச்சி பாஸ் ஆயிடுவேன்.. நீ டிகிரி வாங்குவியா? நம்ப படிப்ப தாக்கி, அர்ரியர்ஸ்ஸ (ARREARS) திரும்ப கேசரி மாதிரி கிளருவாங்க..இத்தனை புத்தாண்டு வந்தாலும் இந்த பொண்ணுங்க என்ன நினக்கிறாங்க தெரிஞ்சிக்க முடில.. பொண்ணுங்கள பொருத்த வரை பசங்க அதிகமா பேசுனா அறுவை, சிரிச்சி சிரிச்சி பேசுனா ஜொல்லு, பேசாம இருந்தா ஜடம், தமிழ்ல பேசுனா பழம், இங்கிலிஸ்ல பேசுனா பீட்டர், படிச்சா கிறுக்கு, படிக்கலைனா மக்கு, சண்ட போட்டா ரௌடி, சண்ட போடலைனா பயந்தாங்கோலி.. ஆனா பசங்க, எங்களுக்கு பொண்ணுங்க நீங்க என்ன பண்ணாலும் ஃபிகரு...


கரெக்ட்டா தான் சொல்லிருக்கான்.. விரோதி ஆண்டுனு.. எத்தன விரோதிகள்டா என் முன்னேற்றத்திற்கு??எல்லருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வேணாமா? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

வேணாமா? தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

வேணாமா? சன் டீ.வி. 16வது வருச வாழ்த்துக்கள்

இதுவும் வேணாமா? டாக்டர். அம்பேத்கார் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

விஷ் யூ எ ஹாப்பி செவ்வாய்க்கிழமை

விஷ் யூ எ ஹாப்பி ஹாலிடே


வருகைக்கு நன்றி!!


Friday, 10 April 2009

அயன்-ஆக்‌ஷன் லயன்

புதன்’s குறைப்பார்வை:


நேத்து ப்ராஜக்ட்க்கு டாக்குமெண்டேசன் (DOCUMENTATION) பண்ண கடசி நாள்.. ஆனா அத முடிக்க வழிய காணும்.. கல்லூரில வீட்டுக்கு போய் எடுத்துகிட்டு வாங்க அனுப்ப, நானும், சில நண்பர்களும் சேர்ந்து அயன் படத்துக்கு கிளம்பிட்டோம்.. மோசமான பசங்க சார்.. டாக்குமெண்டேசன்லா பண்ணி முடிச்சிட்டாங்க... நாம வீட்டுக்கு போனாலும் ஒண்ணும் புடுங்க போறதில்லையே... அதான் இவங்க கூட கிளம்பிட்டேன்..
என்னோட பள்ளி, கல்லூரி நண்பர்கள் ஆகட்டும்.. ப்ளாக் நண்பர்கள் ஆகட்டும்... நிறய பேரு (95% மேல்) அஜித் விசிறிகளாக உள்ளனர்.. என் நண்பர்கள் எல்லாம் என்னை கலாய்ப்பாங்க, டேய் நீ விஜய் ஃபேனா இருக்கறதுக்கு பதிலா நாக்க புடிங்கிட்டு சாகலாம்.. நான் சொல்வேன், டேய், உங்கள மாதிரி அஜித் ஃபேனா இருக்கறதுக்கு ஷூலேஸ்ல தூக்கி மாத்தி செத்துடலாம்.. நான் விஜய் ஃபேன்னு சொல்லிக்க எனக்கு கில்லி, போக்கிரி போதும்டானு சொல்லிடுவேன்... அது என்னமோ தெரில, அஜித் நல்லா நடிச்சாலும் கலாய்க்கணும் தான் தோணுது... அவர் படத்துல காமெடி (ஆழ்வார் தவிர்த்து) தாளம் போட வைக்கும் பாடல்கள் சிறப்பா இல்ல... அயன் படம் கில்லி மாதிரி இருக்குனு என் மற்ற நண்பர்கள் சொல்ல, ஒரு எதிர்ப்பார்ப்போட தான் போணோம்...கதைனு பெருசா ஒண்ணும் இல்ல.. ஆனா அத கையாண்ட விதம் ரொம்ப புதுசு.. ரெண்டு கடத்தல் கூட்டம்.. ஒண்ணு பிரபு-சூரியா கேங்.. மற்றோன்று வில்லனுடையது... கடத்தல் பண்ணாலும் அத நியாயமா செய்வாராம் பிரபு.. தங்கம், வைரம், எலட்ரானிக் பொருட்கள் தான் கடத்துவேன்.. நோ போதை, கெட்ட சமாச்சாரம்.. (என்ன கொடும சரவணன் இது) மொத கேங் வளர்ச்சி வில்லனுக்கு பிடிக்கல.. அதுனால அவர பழி வாங்க இவர் எடுக்கும் முயற்சிகள், அதனால் வரும் கொலைகள், எதிர் விளைவுகள் என என படபடத்து முடிவில் வில்லனை போட்டுத்தள்ளி ஹீரோ ஜெய்க்கும் சுபமே...இப்ப இருக்கும் ஹீரோக்களின் மசாலா படங்கள் வில்லுடைந்து, தியேட்டரில் பேகான் அடிக்கும் நிலையில் உள்ளன.. ஆனால் தனக்கு சரியாக எது சூட் ஆகுமோ அந்த கதையை தேர்ந்தெடுத்து கணகச்சிதமாக சூரியா நடிக்கிறார்.. மசாலா, மாஸ், ஆக்‌ஷன் படங்கள் சூரியாவால் பண்ண முடியுமா? என்றால் முடியும் என்று சொல்கிறது இந்த படம்.. (ஆனாலும் சில ரசிகர்களால் தாங்க முடியாது, இவரும் இது மாதிரி படம் பண்ணுறாரே) காங்கோவின் வீதிகளில் வைரம் கைமாறிக்கொண்டே இருக்க, சூரியா விடாமல் துரத்தும் அந்த ஸ்டண்ட்க்கே பாதி டிக்கெட் காசு போச்சு.. ஆக்‌ஷனிலும், நட்பிலும் மின்னும் சூரியா, வலுவில்லாத ரொமன்ஸ் காட்சிகளில் மட்டும் பின்ன முடியாமல், சிரித்தே பெண்களை மயக்குகிறார்.. (ஐயோ... சிரிக்கிறான்டீ.. பின்னாடி இருந்த பெண்ணின் கமெண்ட்) முதல் பாதி சூரியா-ஜெகன் காமெடி காட்சிகளில் லைட்டா கில்பான்ஸி இருக்கு.. என்னவோய்.. பெண்கள், தாய்மார்கள் படத்துக்கு அதிகமா வருவாங்க.. மறந்துடேளா?பிரவுக்கு பில்லா அப்புறம் செம சான்ஸு.. நல்லா உபயோகித்துள்ளார்.. போலிஸ் ஸ்டேசனில் அவர் எகிறும் காட்சிக்கு, அதான் கும்பி சொல்றாருல வசனத்திற்கு தியேட்டரில் விசிலும், கைதட்டலும்.. தமன்னாவ இப்டி வீணாக்கிடீங்களே... நடிக்க வாய்ப்பே இல்ல.. ஆடை குறைப்பும் இல்ல.. ஜி3 அக்கா பாஷைல சொல்லணும்னா அவ்வ்வ்வ்வ்வ்.. துணி மாத்தும் போது ஹீரோ பாத்த உடனே காதல் வருதாம்.. இது தெரிந்து இருந்தால் சூரியாக்கு முன்னாடி நான் போய் இருப்பேன்... போங்கடா உங்க ரொமான்ஸ் லாஜிக்.. நீங்க இன்னும் எம்.ஜி.ஆர் பாணில இருந்து மாற மாட்டீங்களா?? விழி மூடி யோசித்தால் பாடலில் அருமையான முகபாவங்கள்...கருணாஸ், ஜெகன் பிரபு கேங்கில் இருக்கும் மற்ற கதாபாத்திரங்கள்.. இடைவேளைக்கு முன்னாடி ஜெகன் பற்றி தெரியும் அந்த காட்சி எதிர்பாராத திருப்பம்.. போதை மயக்கத்தில் சூரியாவிடம் மன்னிப்பு கேட்டு, மச்சி நீ என் ஃப்ரெண்டுடானு அழும் காட்சியில் கைத்தட்டல் அள்ளுகிறார்... ஹாஸ்பத்திரியில் கருணாஸ் வெகுந்து அழும் போது நல்ல நடிப்பு..எல்லா கேரக்டரையும் சூப்பரா தேர்வு செய்த இயக்குநர் கே.வி. முக்கியமான டெம்போ கதாபாத்திரம் வில்லனை மட்டும் கோட்டை விட்டுட்டார்.. படம் ஆரம்பத்தில் இருந்து எங்கள பயமுறுத்துடானு கத்தி டையர்ட் ஆனது தான் மிச்சம்.. முடி வெட்ட கூட காசு இல்லாத பாவ வில்லன்.. பைல்ஸ் வந்த குரங்கு மாதிரி முகத்தில் உணர்ச்சிகள்.. பிரபு-சூரியாவ கொடுமபடுத்துவதை விட நம்மள தான் அதிகம் பண்ணுறாரு...
காங்கோ மலைக்குகைகள், மலேசியா, சென்னை என கதையோடு நம்மை பயணிக்க வைக்கின்றது எம்எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு.. ஹாரிஸின் பாடல்கள் ஸ்வீட் மெலடி.. ஆனால் எல்லாமே கதையினுள் திணிக்கப்பட்ட பாடல்களாவே இருக்கு.. சூரியாவும் தமன்னாவும் லவ் பண்ண வந்தாலே தியேட்டரில் பாட்டானு கத்த ஆரம்பிச்சிடலாம்... ஹனி ஹனி பாட்டுக்கு எங்க கல்லூரி கல்சுரல்ஸ்ல ஆடுற மாதிரி நடன அமைப்பு.. அந்த பொண்ணும் கிக்கா இல்லாம, சிக்கா (SICK) முகபாவங்கள்...
சுறுசுறு முதல் பாதி, ஆனால் இரண்டாம் பாதியில் படம் வேகம் குறைந்து படம் எப்படா முடியும்னு உஸ்ஸ் போட வைக்கின்றது.. அண்ணனே தங்கையை நண்பணுக்கு செட் செய்து தருவது... இருவரையும் குஜாலாக பார்த்து ரசிப்பது... கேட்டா உன்ன மாதிரி நல்லவன் கிடைக்க கஷ்டம்னு சொல்றது டூடூ மச்.. கஸ்டம்ஸ் அதிகாரி பொன்வண்ணனிடம் சூரியா சேர்ந்து, வில்லனை போட்டு கொடுப்பது, அவரும் சூரியா குற்றவாளினு தெரிந்தும் எதிரிக்கு எதிரி நண்பன்னு இணைந்து வேலை பார்ப்பது லாஜிக் உதைத்தல்..
லாஜிக் மிஸ் ஆகும் சில காட்சிகளுக்கு பின்னோட்டம் மாதிரி ரீ-வைண்ட் பண்ணும் இடங்களில் கே.வி. ஆனந்த் பளிச்.. ஆனா அதுவே நிறய வர, கொஞ்சம் சலிப்.. ஆங்கில பிஸ்ஸாவை நம்ம ஊரு டேஸ்டுக்கு ஏத்த மாதிரி படைத்து இருக்கிறார்... ஆனாலும் ருசியா தான் இருக்கு..
43 பூச்செண்டுகள் தரலாம்!!


அயன்- ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு மட்டும்!!
வருகைக்கு நன்றி!!

Sunday, 5 April 2009

சிம்மதிக்காரம்

ஒரு வழியா கணினி புது விண்டோஸ் எர்ருவியாச்சு.. 2 வாரமா ப்ராஜக்ட், தேர்வுனு கல்லூரில தாக்கிட்டாங்க.. இணையதள மையத்துக்கு தினமும் வருகை தந்து, ப்ளாக் நண்பர்களோட அரட்டை அடித்து வீட்டுக்கு கிளம்பிய ஒரு நாள்:


டி.வில ஒவ்வொரு சேனலா மாத்திட்டு இருந்தேன்... அப்ப நிகழ்ச்சியின் முடிவில் ஒரு கேள்வி கேட்கப்படும்னு வர, கடுப்பாயிட்டேன்.. ஏனா நாளைக்கு தேர்வாச்சே.. அங்கன என்ன கேள்வி கேக்க போறாங்க தெரில.. பாஸ் ஆனா தான் ப்ராஜக்ட்ல கையோப்பம் போடுவாங்களாம்.. என்கிட்ட போய் இந்த விதிய வச்சிட்டாங்களே? எப்படியாவது பாஸ் ஆகணும்னு ஒரு உத்வேகத்தோட, நம்ம படிப்பு தோழர்கிட்ட முக்கியமான கேள்விகள கேட்டேன்.. அவனும் அனுப்புனான்.. ஆனா விதி வலியதே.. அறுக்க தெரியாதவன் இடுப்ப சுத்தி 63 அருவாளாம்.. அது மாதிரி கேள்வி கிடச்ச அப்புறம் தெரிஞ்சது, ஒரு மெசஜ் வேஸ்ட் பண்ணிட்டேனேனு.. படிக்க புக்னு ஒண்ணு வேணும்லே?? அது தான் என்கிட்ட இல்லையே...


கல்லூரில பாத்துக்கலாம்னு நல்லா தூங்கிட்டேன்.. காலைல கல்லூரிக்கு போன உடனே மொத வேளயா பிட் தயார் பண்ணியாச்சு.. ரெண்டு 10 மார்க், மூணு 2 மார்க் எழுதிகிட்டேன்.. மத்த கேள்விகள நுனிபுல் மேயுற மாதிரி பார்த்துக்கிட்டு, தேர்வு எழுத போனா அங்க இன்னொரு இடி.. எழுதிட்டு போன ரெண்டு 10 மார்க்குமே ஒரே OPTION கேட்டுட்டாங்க.. மூணு 2 மார்க்ல ஒண்ணு தான் வந்துச்சி.. கஷ்டப்பட்டு 20 நிமிசம் போராடி எழுதினேன்.. பக்கத்துல இருந்த ஜூனியர் பையன் என்னை ஒரு மாதிரி பாக்க, (இதுக்கு முன்னாடி தேர்வுகளுலஅவன நான் எழுத விடாம பண்ணுவேன்.. மொக்க போட யாராவது வேணும்ல) எழுதுவத நிறுத்திட்டு, அவன் கைப்பேசில கிரிக்கெட் ஸ்கோர் பார்த்துகிட்டே, எதிரே சுமாரா இருந்த ஜூனியர் பொண்ண சைட் அடிச்சிட்டு இருந்தேன்.. தேர்வு அறையிலே பாக்குற அளவுக்கு இருந்த மூணு பொண்ணுங்கள அவளும் ஒருத்தி.. ஆனா என்ன கண்டுக்காம அவ பாத்து எழுதிகிட்டே இருக்க, நான் அவ காதுல விழுற மாதிரி பாத்து... ரீஃபில் காலியாக போகுது.. படிச்சதுக்கு மேல எழுதுறபோல உடனே திரும்பி என்ன அவ முறைக்க, நான் கண்ணகிக்கு கோவமா? எரிச்சிடாதீங்க!!!” சொல்லிட்டு, என் சிந்தனையில் மூழ்க அப்ப சிலப்பதிகாரத்த இன்றய காலத்திற்கேற்ப ரீ-மேக் பண்ண தோன்றிய கதை:


கோவலன் மாதவிக்கு ரீ-சார்ஜ், டாப்-அப் பண்ணியே சொத்தெல்லாம் அழிஞ்சி போக, கடசியா அவன்கிட்ட இருந்த நோக்கியா N72 போன அடகு வைக்கலாம்னு போனான்.. (ஏன் N72னா ஜூனியர் பையனோட போனும் அதே தான்.. அவனால் தோன்றிய கதைக்கு ஏதோ என்னால முடிஞ்ச சிறிய நன்றிகள்).. அங்கே மதுர அடகு கடை ஃபோன அடகு வைக்க போக, அந்நேரம் பார்த்து, அரசரோட N72 ஃபோனும் களவாடப்பட, அடகு மாமா, அரசன்கிட்ட கோவலன போட்டுகொடுத்திடாரு... அரசன் கோவலனை 3310 செங்கல் ஃபோனாலையே மண்டைய உடைக்குமாறு தண்டனை கொடுத்து, அதை நிறைவேற்றி விட்டாரு...


இதை கேள்விபட்ட கண்ணகி, வெகுண்டு எழுந்து, அரண்மைக்கு போய்அரசனிடம் நீதி கேட்டாங்க


மதிகெட்ட மன்னா.. நோக்கியா என்பது கனைட்டிங் பீப்பிள் (CONNECTING PEOPLE) ஆனால் அதை காரணமாக வைத்தே என்னையும் என் கணவனையும் பிரித்துவிட்டாயே!!


உன் கணவன் கள்வன்!!


யார் கள்வன்? என் கணவனா?? உன் ஃபோனில் நீ உபயோகிக்கும் சிம் என்ன?


என் ஃபோனில் உள்ளதோ ஏர்டெல் (AIRTEL)


ஆனால் என் ஃபோனில் உள்ளதோ ஹட்ச் (HUTCH)


யாரங்கே, கொண்டு வாருங்கள் என் ஃபோனை...


அரசன் ஃபோனை உடைக்க, அதில் இருந்து, ஹட்ச் சிம் பறக்க, அதில் மூக்கில் சிக்கி, முச்சடைத்து, ஹட்ச் என்று தும்மி, அவன் இறந்தான்.. அதை பார்த்து ராணியும் அதிர்ச்சியல் உயிர் துறக்க, இன்னொருபுறம் ஃபோனை எடுத்து வரும் அவசரத்தில், சார்ஜை வேலையாள் நிறுத்த மறந்துவிட, அதனால் ஸார்ட்-சர்க்யூட் (SHORT-CIRCUIT) ஆகி, அரண்மனை தீப்பிடித்து எறிந்து, மொத்த ஊருக்குமே,
தீ பரவி சாம்பலானது.. கண்ணகியை கோவலன் அழைத்து சென்றான்.. எப்படி? அதான் ஹட்ச்ல?? WHERE EVER YOU GO OUR NETWORK FOLLOWS!!இது தான் கார்த்தியின் சிம்மதிக்காரம்


நான் இந்த யோசனையில் இருந்ததை பார்த்த எனக்கு தெரிந்த ஜூனியர் பெண், நான் கேள்விகளுக்கு தான் இப்டி பயங்கரமா யோசிக்கிறேன்னு நினைத்து, தேர்வு முடிந்த உடனே மேசஜ் அனுப்புனா..


என்ன?? பயங்கரமா யோசிக்கிறிங்க?? பாஸ் ஆயிடுவீங்களா??


நான் சொன்னேன்


என்ன மாதிரி பசங்களா எழுதுனா பாஸ் ஆக மாட்டாங்க... எழுத எழுத தான் பாஸ் ஆவோம்!!

வருகைக்கு நன்றி!!
நாங்களும் 25 போட்டோம்ல!! ஆதரவுக்கு நன்றி... கமெண்ட், வருகை போன்ற பந்துகளை வீசி 50 அடிக்க உதவவும்!!

Wednesday, 1 April 2009

எப்டிலா ஏமாத்துறாங்கய்யா!!!

வணக்கம்... இன்றைக்கு உங்களுடைய ராசி பலனை நமக்காக கணித்து தந்து இருப்பவர் ஜோதிட ரத்தினம், முத்து, பவளம், சிகாமணி, கவுண்டமணி, காராமணி ஜக் ஜகா...மேச ராசி நேயர்களே, பக்கத்து வீட்டு பாப்பா கிட்ட உசாரா இருங்க.. காலைலேயே உங்கள அண்ணா பேண்ட்ல ஓட்டை, அக்கா துப்பட்டா காணோம்னு ஏமாத்தி, ஏமாந்த ஃபூல், ஏப்ரல் ஃபூல், டப்பா உள்ள கைய்ய விட்டா காபித்தூள்னு பாட்டுலா பாடுவாங்க..ரிஷப ராசி நேயர்களே, கல்லூரி பக்கம் போகாதீங்க... இன்னைக்கு தேர்வுத்தாள் தரும் சூழ்நிலை ஏற்பட்டால், வாத்தியாரு 100 மார்க்கு போட்டு உங்க கவுரவத்துக்கு உலை வச்சிடுவாரு.. அப்றோம் ஜூனியர் பொண்ணுங்க கிட்ட நீங்க கட்டிக்காக்குற கெத்து போய்டும்
மிதுன ராசி நேயர்களே, பக்கத்து வீட்டு அங்கிள் மேல கோபமா? இது தான் சரியான சமயம்.. ஆண்ட்டி கிட்ட போய் ”ஒரு பொண்ணு எனக்கு போன் போட்டு அங்கிள் பத்தி விசாரிச்சாங்க... அவர் ஞாபகமாவே இருக்காம்.. மறக்க முடில.. அங்கிள் கிட்ட நான் சொன்னேனு சொல்லாதீங்க” பத்த வச்சிட்டு வந்துடுங்க..கடக ராசி நேயர்களே, நீங்க சினிமா பைத்தியமா இருந்தா, உங்கள ஏமாத்தவே ஒரு கூட்டம் இருக்கு... விஜய் கெட்டப் மாத்தி நடிச்சிருக்காரு, டீ.ஆரு தாடிய சவரம் செஞ்சி ஹீரோயின கட்டி பிடிச்சி கசமுசா பாட்டு ஆடியிருக்காரு, அஜித் மைக்கேல் ஜாக்சன் மாதிரி டான்ஸ்ல பொளந்து கட்டிருக்காருனு சொல்லி மொக்க படத்துக்கு கூட்டிட்டுப் போய்டுவாங்கசிம்ம ராசி நேயர்களே, ஆபிஸ் பக்கம் போகாதீங்க.. மீட்டிங் இருக்கு, சம்பள உயர்வுனு சொல்லி பிங்க் ஸ்லிப் கொடுக்க போறாங்க.. பூகம்பமே வந்தாலும், ரூம பூட்டிக்கிட்டு டீ.விய பாருங்ககன்னி ராசி நேயர்களே, லவ் பண்ணா இது தான் செம சான்ஸ்.. உங்க காதலி கிட்ட போய் ஐ லவ் யூ னு சொல்லுங்க.. ஓகேனா பிக்-அப்பு, என் மனசுல அந்த மாதிரி எண்ணம் இல்ல சொன்னா, இல்ல செருப்ப எடுத்தா, ஏப்ரல் ஃபூல் பண்ணேன், உன்ன போய் லவ் பண்ணுவேனானு சொல்லி நைசா தப்பிச்சி வந்துடுங்க..துலாம் ராசி நேயர்களே, நீங்க சீரியல் சிகரங்கள் என்றால் டீ.விய ஆன் பண்ணிடாதீங்க.. கோலங்கள்ல அபிக்கு கல்யாணம், அரசில செந்தமிழ் அரசியும், அவங்க பொண்ணு ராதிகாவும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க, திருமதி செல்வத்துல புருசன்-பொண்டாட்டி சண்ட ஓய்ந்தது, மானாட-மயிலாட ஸ்பெஷல் ஷோல இன்னைக்கு 3 எலிமினேசன்னு சொல்லி நேரத்த வீணாக்குவாங்கவிருச்சிக ராசி நேயர்களே, உடல் நிலை சரியில்லைனா அரசு மருத்துவமனைக்கு போங்க, லஞ்சமே வாங்குறதில்ல, தனியார் மருந்துவமனைக்கு போங்க, ஃபீஸ் எல்லாம் கம்மினு சொல்லி இருக்குற பர்ஸ்-பல்ஸ்க்கு உத்திரவாதம் இல்லாம பண்ணிடுவாங்க..தனுசு ராசி நேயர்களே, உங்க இ-மெயில்திறக்காதீங்க... லாட்டரில பல கோடி ரூபா விழுந்துருக்கு, நமிதா கவர்ச்சி படம் வேணுமா? க்ளிக் (இங்க சொடுக்கு)னு சொல்லி வைரஸ் ஃபுல்லா உங்க கணினில கும்மித்திடுவாங்க..மகர ராசி நேயர்களே, லான்சு மாதிரி நண்பன் உங்க கிட்ட வந்து மச்சி இன்னைக்கு ட்ரீட், வாடானு சொல்லி கூப்டா நம்பி போய்டாதீங்க.. நல்லா வெளுத்து கட்டி முடிக்கும் போது, ஹிஹிஹினு பல் இளிச்சி, பர்ஸ் வீட்டுல வச்சிட்டேன்டா, இன்னைக்கு நீ காசு தா, அடுத்த ட்ரீட் கண்டிப்பா நான் தரேன் மச்சினு சொல்லுவாங்க.. இப்டி உசுப்பேத்தி, பர்ஸ்ச பன்ச்சர் ஆக்குற கூட்டம் ஒண்ணு இருக்கு..கும்ப ராசி நேயர்களே, அரசியல் செய்திகள் எதையும் இன்னைக்கு படிக்காதீங்க... பா.ம.க தனித்து போட்டி, இலங்கையில் போர் நிறுத்தம், தி.மு.க-அ.தி.மு.க புதிய கூட்டணி வியுகம்னு, அசர வைக்கிற மாதிரி எழுதுவாங்க...
மீன ராசி நேயர்களே, ஸ்பென்சர் ப்ளாசாவுல இருக்கும் க்ளோபஸ், லண்ட்மார்க், வெஸ்ட்-சைடு, நைக், ரீப்போக் ஷோரூம்ல இன்னைக்கு எல்லாமே 80% தள்ளுபடி சொன்ன உடனே, தள்ளி அடிச்சிகிட்டு ஓடாதீங்க, அப்றோம் பில் போட்ட உடனே, ஆம்புலன்க்கு சொல்ல வேண்டி இருக்கும்..ஆனா எல்லா ராசிக்காரங்களும் உசாரா இருக்க வேண்டிய நாள் இருக்கு.. அது மே மாசம் வருது.. ஒரு மாசம் கழிச்சி ஏமாத்த போறாங்க, அதுக்கு இப்பவே வசனம்லா ரெடி பண்ணிட்டு இருக்காங்க... ஆனா என்ன, ஒரு நாள் ஏமாந்து, அது ஐந்து வருடம் தொடரும்ல?? எவ்வளவோ வாங்கிட்டோம், இத வாங்க மாட்டோமா?எனக்கு தமிழ் ராசி பலன்கள் எல்லாம் தந்து, இந்த பதிவை போட வைத்த ஜி3 அக்காவுக்கு நன்றியோடு, ஒரு பாட்டை டெடிகேட் செய்றேன்ராசி ராசி, அக்கா கிடைத்தால் எல்லாம் ராசிவருகைக்கு நன்றி!!


Blogger templates

Custom Search