Thursday, 12 March 2009

என்ன கொடும சரோஜா இது: பகுதி-2

முதல் பகுதி படிக்க, சொடுக்குங்க இதை- பகுதி-1

பன்ச்னா நம்ம கேப்டன் இல்லாம எப்படி? அதுவும் சிரிப்பு பன்ச்னா, நம்ம கேப்டன் தான் வின்னர்.. 


வாஞ்சிநாதன் படத்துல நாசர அடிப்பாரு, உடனே நாசர் யேய் நீ வேணும்னு தானே அடிச்ச?” அதுக்கு நம்ம கேப்டன் ”இல்ல நீ வேணாம்னு தான் அடிச்சேன்” 


அதே படத்துல இன்னொரு வசனம், நாசர் சொல்வாரு, “நீ சுட்டா நான் உன்ன கூண்டுல ஏத்துவேன்டா” உடனே அவரு “நான் சுட்டா நீ கோர்ட்டுக்கே வர முடியாதுடா”  வாவ் வாவ் வாவ்


என்னது? நரசிம்மாவா? சொல்றேன்..


கேப்டன மின்சார நாற்காலில கட்டி வச்சி, 1000 வோல்டேஜ் ஷாக்கு கொடுப்பாங்க... ஆனா கேப்டன் சிரிச்சிகிட்டே, "சாதரண மனுசன கரெண்ட் தொட்டா தான் ஷாக் அடிக்கும், நான் நரசிம்மாடா, கரெண்ட் என்ன தொட்டா, கரெண்டுக்கே ஷாக் அடிக்கும்” சொல்லி நரம்ப முறுக்க, ட்ரன்ஸ்பார்மர் வெடிச்சி நமக்கு ஷாக் கொடுப்பாரு...


ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பேரரசுவ மறக்க முடியுமா?


நீ வெட்ட நான் இளநீ இல்லடா, பழனி..


இது தான் ஆரம்பம்.. இனிமேல் தான் பூகம்பம்.. அவரு நடிப்ப பார்த்தா கண்டிப்பா பூகம்பம் தான்


சிவகாசில சொல்வாரு, அவரு சொல்லி அடிக்கறதுல கில்லி, சொல்லாம அடிக்கறதுல திருப்பாச்சி, சொல்லி சொல்லாம சுழட்டி அடிக்கறதுல சிவகாசி.. நீ யாருடானா பரதேசினு சொல்லி இருப்பாரு...


நான் பொறந்தது திருப்பாச்சி, வளர்ந்தது சிவகாசி, படிச்சது திருப்பதி, இப்ப வந்துருக்கிறது தர்மபுரி... ராத்தியானா சாப்பிடுவாரு பேல் பூரி, பானி பூரி.. விஜய டீ.ஆர் மறக்க முடியுமா?? எலேலோ வீராசாமி... எம்புட்டு பாசம் காமி.. 


கூட்டி கொடுக்கறதுல நீ முள்ளமாரி
வாரி வழங்குறதுல நான் வள்ளல் பாரி

வீராசாமி சார்.. ஐ ஆம் வெரி சாரி


அப்பாவை போல தானே பிள்ளையும்.. சிம்பு சிலம்பாட்டத்துல பிரிச்சி மேஞ்சிடுவேன்னு சொல்வாரு... எங்க ஊருல இருக்குற வீட்டுல கூரை ஒழுகுது... பிரிச்சி மேஞ்சா நல்ல இருப்பாரு.. அதுலேயே இன்னொரு வசனம், நான் விரல் ஆட்டுற பையன் இல்ல, விரல விட்டு ஆட்டுறவன்.. தோழா.. வீட்டுல வாஷ் பேசின் கொஞ்சம் அடச்சிகிச்சி, அப்டியே விரல விட்டு ஆட்டுனா நல்லா இருக்கும்... சிம்பு வந்தா தனுஷ் இல்லாமையா?? ஆனா இவரு கொஞ்சம் அடக்கி தான் வாசிச்சிருக்காரு.. ஆனா ஐய்யா ஓவரா போய் சுலுக்கு எடுத்துகின படம் சுள்ளான்.


சுள்ளான் பாக்குறதுக்கு தான் மச்சி படு சைலண்ட்டு, பத்திகிச்சி சும்மா பார்ட் பார்ட்டா கழட்டி பருப்பு எடுப்பான்.. சோழர் பரம்பரையில் ஒரு மெக்கானிக்..டாக்டர் ராஜசேகரோட டப்பிங் படம் உடம்பு எப்படி இருக்கு.. படம் பார்த்தா கொஞ்சம் வீக்கா தான் இருக்கு.. அதுல வில்லன் சொல்வாரு.. 


நான் ஹிரோசிமா நாகாசாகி பாம்மு..
நீ சாதாரண பொட்டு வெடிடா மாமூ.நம்ம தலைவர் பாரி, ஓரி, வீரதளபதி ஜே.கே ரித்தீஷ் என்ன மாஸ், நாயகன் படத்துல?? அதுல சில வசனங்கள்நீ என் மேல கண்ணு தான்டா வைப்ப... ஆனா நான் உன்மேல கன்னே(GUN) வைப்பேன்.


பொன்னம்பலம்: நான் எதிர்கட்சி MLAவா இருக்கலாம்.. ஆனா நான் சிட்டிங்(Sitting) MLA


ஜே.கே: நீ சிட்டிங் எம்.எல்.ஏ இல்ல.. சீட்டிங் (CHEATING) MLAஇப்ப ரீசண்டா இந்த சிரிப்பு கோஸ்தில சேர்ந்து இருப்பது, நம்ம சுந்தர்.சீ.. எல்லாரோடய வீட்டுலயும் சன் டீ.வி வருதுலே?? அப்ப 10 நிமிசத்துக்கு ஒரு வாட்டி பாப்பீங்க!! ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்துல ஹிந்தூஸ்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடுவாங்களா? அக்பர் கசாப் கடைல முஸ்லீம்கள் மட்டும் தான் கறி வாங்குறாங்களா??இன்னும் இதுபோல பல இருக்கு... சொல்லிட்டே போனா, நாம நம்ம லொல்ல எப்ப பார்க்க? இதுபோல பல நல்ல படங்கள் வந்தா தான், என்னோட பொழப்பு ஓடும்.. மாஸ் படங்கள் வாழ்க...ஓஓஓஓ... நாம இப்ப இத யாருக்காவது கோத்து விடணுமே... யார டம்மி ஆக்கலாம்??தங்கை காயத்ரி (நல்ல பொண்ணு.. அண்ணன் மேல இருக்குற பாசத்துல, எப்ப டேக்குக்கு அழைத்தாலும் சிறப்பா, சிரிப்பா செய்வாங்க)வருகைக்கு நன்றி!!

Monday, 9 March 2009

என்ன கொடும சரோஜா இது: பகுதி-1

மலேசியா பெரியவா, ஆ’சிரி’யை விஜி என்னை டேக்(TAG) கோத்திட்டாங்க.. நம்பள நம்பி பல பேரு டக் தராங்க.. நம்பிக்கைக்கு பாத்திரமானவன் (எவர்சில்வர்??), கண்டிப்பா டேக்  செய்வேன்.. அதே மாதிரி என் டேக்கயும் யாராவது செய்ங்கபா... அவங்க எனக்கு கொடுத்த தலைப்பு, பஞ்ச் வசனங்கள் கலாய்க்கணும்... அதாவது பஞ்சர் ஆக்கும் பஞ்ச் வசனங்கள்.. வசனகர்த்தா, இயக்குநர்லா முளய கசக்சி பிளிஞ்சி, ரூம் போட்டு யோசிச்சி, பஞ்ச் வசனங்கள் எழுத, ஆனா சில பல சமயம் டைமிங் மிஸ் ஆகி அவை சிரிப்பு வசனங்களா மாறிடும்.. அதுலயும் ஹீரோவுக்கு பொருந்தா வசனம்னா நகைச்ச்சுவைக்கு கேக்கவே வேணாம்.. வாங்க.. நாம கொஞ்ச வசனங்கள் பார்ப்போம் (கொஞ்சம் இல்ல நிறய.. ஏனா நமக்கு தான் மொக்க படம் பாக்குறது கரும்பு சக்க குடிக்கிற மாதிரி ஆச்சே)நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி படம்னாலே பஞ்ச் வசனம் அனல் பறக்கும்.. அதே சமயம் ஹீரோயிசம்காக சேர்க்கப்படும் வசனங்கள் சிரிப்பை வரவழைக்கும்.. சந்திரமுகில மந்திரவாதி ரஜினிய பார்த்து சொல்வாருஅவரு யாரு தெரியுமா? அவரையா வெளிய போக சொன்னீங்க? அவரு சாதாரண டாக்டர் மட்டுமில்ல, அமெரிக்காவுல படிச்சவரு, அங்கேயே டாக்டர் ஆனவரு.. ப்ரூட்டோவோட நேரடி சிஸ்சியர்.. அன்னைக்கு மாடில இருந்து இறங்கி வரும் போதே அவரு கண்ணுல தேஜஸ்ஸ பார்த்தேன்.. அப்ப ரஜினி கண்ணுல மச்ச லைட் அடிக்குமே.. யப்பா.. சிரிப்பு தான்..நம்ம ஆச்சி மனோரமா எல்லா கிராம படத்திலும் இந்த வசனம் பேசிடுவாங்க..
நீதி செத்து போச்சே, ஆலமரத்த சாச்சி புட்டீங்களே... என் தெய்வமே... போய்டீயே...சினிமால ஒரு விபத்து நடக்கும், உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவாங்க.. அங்கன டாக்டர் சீரியசா சிகிச்சை தந்து, கொஞ்ச நேரம் கழிச்சி வெளிய வந்து, “ஐ ஆம் சாரி, நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்.. ஆனா எங்கலால அவர காப்பாத்த முடில.. ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்து இருந்தா, காப்பாத்தி இருக்கலாம்” கண்ணாடிய கழட்டிட்டு சொல்வாரு..ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்து இருக்கலாம் தான்... ஆனா ஆக்சிடண்ட் நடந்தே 20 நிமிசம் தான் ஆச்சி டாக்டர்!!இளைய தளபதி விஜய் இன்னும் பயங்கரமா காமெடி பண்ணுவாரு..எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டோமா?? அப்டி என்ன பெருசா பண்ணிட்டாருனு தான் தெரில..  ஒழுங்கா நடிப்பு பண்ணுங்க... நல்ல கதைய கேட்டு படமா பண்ணுங்கஷாஜகான்லே ஒரு எமோசனல் சீன்.. விஜய் கிட்ட ஏன் நீ லவ் பண்ற பொண்ணுகிட்ட லவ் சொல்ல மாட்டீங்கிறனு நண்பர்கள் கேக்க, உடனே அவரு சொன்னா செத்துருவாடானு சொல்லி நம்பள சிரிக்க வைப்பாரு..போக்கிரியாருடா தமிழ்னு கேப்பான் அடியாளு.. டேய்.. இங்க எல்லாரும் தமிழ் தான்.. பாவம் அவன்.. கில்ஸ் அண்ணா ப்ளாக்க படிச்சிட்டு எது தமிழ், எது இங்கிலிஷ்னு குழம்பி போயிருப்பான்.. அவன அடிச்சிட்டு, யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அடிறது உடம்புல தெரியுதோ அவன் தான் தமிழ்.. நான் தான் தமிழ்..அல்டிமேட் ஸ்டார் அஜித், அல்டிமேட் காமெடி பண்ணிருப்பாரு.. திருப்பதி படத்துல, திருப்பதி இறங்கி போறவன் இல்ல... ஏறி போறவன்னு சொல்வாரு.. யப்பா, உன் ஸ்டாப் போய் 3 நிமிசம் ஆச்சு, சீக்கிரம் இறங்கு... அதுத்துல ஸ்டாப்ல செக்கிங்ல மாட்டப்போற!!ரெட் படத்துல R for REVOLUTION E FOR EDUCATION D FOR DEVELOPMENT,  ரெட்டு, அது.. சார் கத்த, மொக்க முடியாம நாமளும், போதும் விடுனு கத்தலாம்.. கலர் கலரா வசனம் பேசுறது இதுதான் போல... அட்டகாசம் படத்துல எழுந்துட்டேன், தோ வரேன்... சொல்வாரு.. அதுக்கு முன்னாடி போய் பல் வளக்கிட்டு வா... லான்ச் மாதிரி இருக்காதே... இவரோட உச்சகட்ட காமெடி, ஆழ்வார் படத்துல, பஜனை பாடுறவங்க மாதிரி கடவும் வேசம் போட்டுகிட்டு, நான் கடவுள்னு சொல்லி வில்லன போட்டு தள்ளுவாரு... தயவு செய்து இந்த படம் மட்டும் பாக்காதீங்க... வாழ்க்கையே வெறுத்து போய்டும்..இன்னும் இருக்கு... சொன்னா அப்றோம் கில்ஸ் அண்ணா கைரேகை தேஞ்சி போய்டும்.. மெடிகல் செலவுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது.. அதுனால அடுத்த தபால்ல பாப்போம்... (டக்கையே 2 பகுதியா போட்ட மொத ஆள் நீ தான்டா)சரி.. அடுத்து என்ன வரும்னு லீட் தரவா??வீ வில் மீட்

வில் மீட்

மீட்

ட்


வருகைக்கு நன்றி!!

Sunday, 1 March 2009

கேள்வியும் நானே, பதிலும் நானே-3

1.விஜய் அரசியல் பிரவேசம் பற்றி?

உள்ளூருல ஓணான் பிடிக்க முடியலையாம்.. இதுல வெளியூருல போய் டைனோசர் பிடிப்போம்ங்கற கதையா இருக்கு.. மொதல்ல ஐயாவ சினிமால ஒழுங்கா நடிக்க சொல்லுங்க...
2.நான் ஒரு மென்பொருள் பொறியாளரை விரும்புகிறேன்... அவரை கட்டிக்கவா??


அம்மணி... உங்களுக்கு ஊருல விவசாயம் பாக்குற மாமா பையன் இருந்தா கட்டிக்கோங்க... நாலு வேல சாப்பாட்டுக்கு பிரச்சன இருக்காது... இங்க நிலம மோசம்...3.நான் ஜோக் அடிச்சா என் புருசன் ஒரு ரியாக்‌ஷனும் காட்ட மாட்டேங்கிறாரு???


அழுவுறது ஆம்பளைக்கு அழகில்ல தாயீ...4.ஸ்லம்டாக் மில்லினியருக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?


எதிர்ப்பு என்பதை விட வயித்தெரிச்சல்னு சொல்லலாம்.... அந்த படத்தில் காட்டியது போல, இந்தியாவில் சேரிகளும், குழந்தைகளும் இல்லையா?? குறை சொல்லும் சில அறிவு ஜீவி இயக்குநர்கள், நடிகர்கள் நம் கலாசாரத்த கட்டிக்காக்கும் படங்களா எடுத்தார்கள்??? இதையெல்லாம் காட்டாமல் பிரம்மாண்ட படைப்பில் காலந்தள்ளும் இவர்கள், இந்தியாவின் பெருமையையா எடுத்தாங்க?? உண்மையை காட்டினால், அதை எதிர்கொள்ள முடியாமல், மீடியாவில் தாங்கள் இருக்க வேண்டுமென சொல்லும் போலி விமர்சனம்5.செவிடன் காதில் சங்கு ஊதுவது??


இலங்கை தமிழர்கள காப்பாத்துங்கனு மத்திய அரசிடம் முறையிடுவது... போர நிறுத்துங்கனு ராஜபக்சே கிட்ட கத்துவது...6. கஜினியில் ஆமிர் கான் உடம்பு எப்படி? சும்மா மெர்சிலா இல்ல?


ஓஓஓஓஓஓ... சினிமால பாடி லாங்குவேஜ் சொல்வாங்களே... அது இது தானா??7. ஐபிஎல்??


மூணு பத்து ரூபாய்..... பீட்டர்சன் அஞ்சு ரூபாய்... ஃப்ளின்டாப் அஞ்சு ரூபாய்8. சமீபத்தில் தங்களை சிரிக்க வைத்தது??


இலங்கையில் தமிழர்கள் அவதிப்படுகிறார்கள் என அதை கண்டித்து தமிழகத்தில் எதற்கும் பயன்படாத முழு அடைப்பை நடத்தியது.. இதனால் போர் முடிவுக்கு வந்ததா?? இலங்கை தமிழர்கள காப்பாத்துங்கனு கத்திட்டு இங்க இருக்குற தமிழர்களுக்கு பிரச்சனை செய்தது... பிராட்வேல வக்கீல்கள் பஸ்ஸை உடைத்த காட்சி, சிரிப்போ சிரிப்பு...
9. காதலர் தினத்திற்கு தமிழக அரசு ஏன் எதுவும் அறிவிக்கவில்லை?


கலர் டி.வி இல்லாதவர்களுக்கு எப்படி இலவசமாக டி.வி தந்தார்களோ, அது போல காதலி இல்லாதவர்களுக்கு இலவசமாக........ வேணாம்லே... போதும்...
10. கிழக்கு கடற்கரை சாலைல பைக்கில் டாப் கீர்ல வேகமா போன அனுபவம்???


யோவ்... நக்கலா?? இருக்கற்து ஒரு ஓட்ட ஹெர்குலஸ் சைக்கிள்... அதுல போய் டாப் கீர்னு, பாதாம் கீர்னு... வீட்டுல பொம்ம பைக் கூட இல்ல...


வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search