Tuesday, 24 February 2009

விளையாடு விளையாடு

சின்ன வயசுல வீட்டுல எதாவது போட்டு உருட்டுறது எனக்கொரு வேல... மின்சாரம் போச்சுனா சிம்மினி விளக்கு ஏத்தி வைப்பாங்க... அம்மா அதை கண்ணாடில போடுறதுக்குள்ள நான் போய் ஊதி அணைக்க, முதுகுல ரெண்டு போட்டு விளையாட்டு வினையாகும்னு சொல்வாங்க... அப்றோம் ஸ்கூல பசங்கள போட்டு லொல்லு பண்ணும் போது (தொட்டில் பழக்கம், சுடுகாடு வரைக்கும்), அவனுங்க கோவிக்க, உடனே “என்னடா டேய்.. சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன்?” சொல்வேன்.. எவனாவது ஒரு பையன் ஒரு பொண்ண ரூட் விடும் போடு, அவங்களுக்குள்ள சின்ன சின்ன சண்ட வரும் போது, பொண்ணு சொல்லும், “விளையாட்டுக்கு கூட இப்படி சொல்லாதே!” துடுக்கு தனமா பேசும் போது, விளையாட்டுப்பிள்ளையடா நீ அப்டினு பெரியவா பாராட்டுவாங்க.. கமல் கூட வேட்டையாடு விளையாடுனு நடிச்சாருல.. இப்ப சன் மியுசிக் திருப்புனா, 15 நிமிசத்துக்கு அப்பா அம்மா விளையாட்டு விளையாடி பாப்போமா செல்லம் செல்லம் செல்லம்னு உசிர வாங்குறாங்க... அதுலயும் நான் உசார் பண்ணலாம்னு நினச்ச தமன்னா கூட ஆடுறான்... இத பார்த்து நான் அழ........... நிறுத்து நிறுத்து, இப்டி மேட்டரே சொல்லாம எழுதிட்டே இருந்தா நாங்க அழுவோம்னு நீங்க சொன்னது கேக்குது.. 
பதிவுலக தளபதி விஜய் என்ன டக்(TAG) பண்ணிருக்காரு... பொங்கல் அப்ப பண்ணாரு.. இன்னும் தாமதித்தா நம்பள பொங்கிடுவாருனு நான் அவர் கோத்து விட்ட டக்க இங்க தொடர்கிறேன்... வழக்கொழிந்த சொற்கள்.. இதை கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம்னு யோசிச்சேன்.. எல்லாரும் சொற்களையே போட, எனக்கு இப்ப ஒரு சொல் கூட கிடக்கல.. அப்ப தான் எழுத்தாளரும், நாட்டுப்புறக்கலை சேமிப்பாளருமான கழனியூரான் அவர்கள் குங்குமம் இதழில், நாகரிகத்தால் ஓரங்கட்டப்படும் கிராமங்களில் இப்போது வழக்கொழிந்து வரும் விளையாட்டுக்கள் பற்றி ஒரு கட்டுரை எழுத, அதை நான் நூல் பிடித்து, இந்த டேக்கின் சில இடங்களில் அவற்றை மேற்கோளாக காட்டி, இந்த கட்டுரையை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்... திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள கழுநீர்குளம் அவரது சொந்த கிராமம். சங்க இலக்கியங்களில் கழுநீர்பூவும், அன்னப்பறவையும் இருந்ததாக சொல்லப்பட்ட ஊரில் இன்று அவை இல்லை. சங்கத்தையும், ஊரையும் இணைத்து எம்.எஸ்.அப்துல்காதராகிய அவர் கழனியூரான் ஆனார்.விளையாட்டு உடலையும், உள்ளத்தையும் ஒருசேர வளர்க்கிறது. கிராமப் புறங்களில் சென்ற தலைமுறையினர் விளையாடிய விளையாட்டுகளை இன்று காண முடியவில்லை.குழந்தைப் பருவத்தில் பொம்மை வைத்து விளையாடுவதில் தொடங்கும் விளையாட்டு, பருவம் தோறும் பல்வேறு வடிவங்களில் மனித வாழ்க்கையோடு பயணிக்கிறது. குழந்தைகள் ஆரம்பத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுகின்றன; அந்தக் காலத்தில் தச்சாசாரிகள் குழந்தைகள் விளையாட என்று மரப்பாச்சி பொம்மைகளை (மரத்தால் ஆன பொம்மைகளை) செய்து கொடுத்தார்கள். இன்றோ டோரா, பார்பி, ஸ்பைடர் மேன், டெடி பியர் என ஏகப்பட்ட பொம்மைகள் கொட்டிக்கிடக்கின்றன... நான் இந்தியன் படத்தில், அந்த தாத்தா தன்னோட பொண்ணுக்கு ஆசயா செய்து தருவாரு பாருங்க, அதான் கடசியா பார்த்தது... எனக்கும் ஒரு மரப்பாச்சி பொம்ம வாங்கி தந்தாங்க... நான் அத தரையிலே போட்டு அடிச்சி அடிச்சியே உடச்சிட்டேன்...இடது உள்ளங்கையில், வலது கை முட்டாய் பருப்புக் கடைந்து, பப்புக் கட பப்புக் கட, இது உனக்கு, இது பாப்பாக்கு, இது அம்மாக்கு, இது அப்பாக்கு, இது தாத்தாக்கு என்று பாட்டுப் பாடியும், பிறர்க்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டு (கற்பனையாகத்தான்!) விளையாடுவார்கள். கடைசியில் நண்டு வருது, நரி வருது, சிக்லிக்கான் சிக்லிக்கான் என்று கிச்சம் காட்டியும் (கூச்சப்பட வைத்தும், சிரிப்புக் காட்டியும்) விளையாடுவார்கள். இப்ப எங்க பக்கத்து வீட்டு பாப்பா கிட்ட அண்ணாக்கு ஒரு முட்டாய் தாம்மானு கேட்டா போடானு சொல்லிட்டு ஓடுது... இத வெளிய சொன்னா சின்ன கொழந்த கூட உன்ன அசிங்கப்படுத்துதே? உன் மூஞ்ச பார்த்தாலே தெரியும் நீ குழந்தய கடத்துறவன்னு என்று நம்பளையே கலாய்ப்பாங்க...கோட்டான் கோட்டான்னு ஒரு விளையாட்டு இருக்குமாம்... நடுக்குளத்தில் வட்டமிட்டு தூரம் தூரமாய் ஏழெட்டு பேர் நீந்தியபடியே நிற்பார்கள். சா... பூ...த்ரி போட்டு தோற்றவன் வட்டத்தின் நடுவில் நிற்பான். விளையாட்டுத் தொடங்குவதற்கு முன்பு 'கோட்டான்... கோட்டான்... ஏன் கோட்டான்' என்பது போல ஒரு பாட்டு பாடுவார்கள். ஜூட் என்று கத்தியதும் நடுவில் இருப்பவன் பிடிக்க வருவான். வட்டம் அப்படியே கலையும். சிலர் "கொட்டமிடும் கெலுத்தி... நொட்டம் சொல்லிப் போச்சு... கெட்டப் பையன் யாரு... கிட்ட வந்து கூறு..” என கிண்டலாய்ப் பாட, எல்லோரும் மூழ்கியபடியே குளத்தின் நாலு மூலைகளுக்கும் போவார்கள். மேல் மட்டத்திலேயே நீந்துகிறபோது வேகமாக நீந்துகிறவர்கள் விரைந்து வந்து பிடித்துவிடுவார்கள். விரட்டி வருகிறபோது சிலபேர் பிடிப்பட போகிற சமயத்தில் கரையேறிவிடுவார்கள். அப்படி ஏறினால் தோற்றதாக அர்த்தம். கரையேறியவன் மற்றவர்களைப் பிடிக்க வேண்டும். பெரும்பாலும் கரையேறுகிறவன் அப்படியே வீட்டிற்குதான் ஓடியிருக்கிறான். மூழ்கியவர்கள் மறுகரை பகுதியில் அடர்ந்திருக்கிற வெங்காயத் தாமரை காட்டுக்குள் மறைந்துகொள்வார்கள். சிலர் வலப்பக்கக் கரையோரம் உள்ள தாமரைக்காட்டுக்குள் மூழ்கிக்கொள்வார்கள். வேகமாக மூழ்கிப்போகக்கூடிய சிலர் இங்கு அங்குமாக நீந்திப் போய்க்கொண்டே திறமை காட்டுவார்கள். இப்போ ஆறும் இல்ல.. அப்டி இருந்தாலும் அதுல விளையாட ஆளே இல்ல...பல்லாங்குழி தெரியுமா? ஸ்நேகா பாடுவாங்களே?? பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், ஒற்றை நாணயம்... ஆங்.. ஸ்நேகானு சொன்ன உடனே கப்புனு பிடிச்சீங்களே... பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். பொதுவாக புளியங்கொட்டையை வைத்து பல்லாங்குழி ஆட்டம் (பாண்டி ஆட்டம்) ஆடப்படுகிறது. எனக்கு தெரிந்து 4 வகை பாண்டி ஆட்டங்கள் இருக்கின்றன. இருவர் மட்டுமே விளையாடும் சாதா பாண்டி, மூன்று பேர் விளையாடும் மிகவும் விறுவிறுப்பான ராஜா பாண்டி, ஒருவர் மட்டுமே முடிவே இல்லாமல் விளையாடும் சீதா பாண்டி (சீதை அசோக வனத்தில் இருக்கும்போது விளையாடியதாம்), நிறைய காய்கள் வைத்து விளையாடும் காசி பாண்டி. ஆனா இதுலா எப்படி விளையாடனும்னு எனக்கு தெரியாது.. எங்க அக்கா கூட விளையாடி, ஆட்டமே புரியாம தோத்துப்போவேன்.. இப்போவும் இது சில இல்லங்களில் விளையாடப்பட்டாலும், சீக்கிரமே வழக்கிழந்து போகும்னு என் எண்ணம்...கிட்டிப்புல் என்கிற சில்லாங்குச்சி விளையாட்டை நாள் முழுவதும் விளையாடினாலும் சிறுவர்களுக்கு அலுக்காது. கிட்டிப்புல்னா கில்லி... கில்லி தெரியாதா? விஜய்னு மொக்க போடதீங்க... அவரு அந்த படத்துல கில்லி மாதிரி நடிச்சி இருந்தாலும், ஒரு காட்சில கூட கில்லிய காட்டி இருக்க மாட்டாரு.. பேசாம கபடினு படத்துக்கு பேர் வச்சி இருக்கலாம். இரு பக்கமும் கூராக ஒரு சிறு குழியின்மேல் கிடைமட்டமாக இருக்கும் புள்ளை, நீண்ட ஒரு பக்கம் கூராக உள்ள தடியால் (கிட்டி) குழியிலிருந்து தெண்டி(கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டாகும். அதன்பின்னர் புள்ளு வீழ்ந்த இடத்திலிருந்து குழியை நோக்கி புள்ளு வீசப்படும், அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும். சரியாக இப்படி தான் விளையாடுவார்களா என்று தெரியாது.. எங்க அப்பா சொன்னதிலிருந்து நான் எழுதுகின்றேன்.. இன்று?? கிரிக்கெட் என்ற மட்டைப் பந்து விளையாட்டு வந்து மற்ற விளையாட்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டது. 
பம்பர விளையாட்டில் பையன்கள் மும்முரமாக அலைவார்கள். குறிபார்த்து எதிரியின் பம்பரத்தைத் தாக்கி உடைப்பது என்றெல்லாம் நடக்கும். பம்பர விளையாட்டில்தான் எத்தனை வகைகள்..? எத்தனை சட்ட திட்டங்கள்..? இப்போ விளையாடுறாங்களா? சின்ன கவுண்டர் தான் தொப்புள்ல பம்பரம் விட்டு ஒரு புரட்சியை உருவாக்கினாருலே?? நடுவர் இல்லாத இந்த விளையாட்டுகளில், சிறுவர்கள் தானே முன் வந்து வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மைதான் என்ன..? இப்பல்லாம் தோத்தாலே அழுக, சண்டனு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருகின்றது.
கிராமங்களில் அன்று குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகளில்தான் எத்தனை வகைகள் இருந்தது? மரத்துல, குளத்துல, காடுகள்ல, தெருவுலனு.. இப்போ நம் குழந்தைகள், வீடியோ கேம்ஸ்களின் (என்னையும் சேர்த்து) முன்னால் இரவு பகலாக ஆணி அடித்த பதுமைகள் போல் உக்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உக்கார்ந்திருக்கிறார்கள். பாரதியார் கூட ஓடி விளையாடு பாப்பானு சொன்னாருலே.. இப்போ அதே பேருல கலைஞர் தொலைக்காட்சில, சின்னக்குழந்தைகள ஆபாச நடனம் ஆட வச்சி காசு பாக்குறாங்க.. ஒரு குழந்த ஆச தோச அப்பளம் வட, ஆச பட்டத செய் செய் செய்னு சின்ன உடையை உடுத்தி, பாட்டுக்கு ஏத்த மாதிரி முகத்தில் உணர்ச்சிகள காட்ட, திக்குனு இருந்துச்சி... அந்த வரிகளுக்கான அர்த்தம் கூட புரியக்கூடாத வயசு.. இதை பார்த்து மார்க் போட ஒரு கூட்டம், கை தட்டி ரசிக்க ஒரு கூட்டம், கடசியா அவங்கள பெத்த அம்மா, அப்பா கண்களில் இந்த நடனத்த பார்த்து ஆனந்த கண்ணீர்.. கேட்டா, இது சின்ன வயசுலேயே அவங்களுக்குள்ள இருக்குற திறமையை வெளிக்கொண்டு வராங்களாம்... அதுக்கு உங்களுக்கு வேற பாட்டே கிடைக்கலையா??
தமிழகம் எங்கும் வட்டாரத்திற்கு வட்டாரம் இதுபோல எண்ணற்ற விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன. அவை யாவும் இன்று வழக்கொழிந்து வருகின்றன. எனவே, அவைகளை எழுத்திலாவது பதிவு செய்து வைக்கலாம் என்று எண்ணுகிறேன். நான் இந்த டக்கை ஒருவருக்கு கோத்து விடலாம் என்று எண்ணினேன்... ஆனால் சூழ்நிலை சரி வர அமையவில்ல. என்ன செய்ய அவர் நெகட்டிவாக யோசித்திவிட்டதால் நான் யாருக்கும் இந்த டக்கை கோத்துவிடல.. 
டிஸ்கி 1: அப்டியே விஜய் அண்ணா.... நான் போன வருசம் கொடுத்த டக்க (TAG) மறந்துதாதீங்க... சீக்கிரம் போடுங்க!!!


டிஸ்கி 2: டிஸ்கினா என்னனு எனக்கு தெரியாது... எல்லாரும் தபால் முடிச்ச உடனே போடுறாங்கனு நானும் போட்டேன்.. டிஸ்கினா என்ன?


எல்லாரும் நல்லா, லொல்லா இருங்க.. அப்டியே கும்மி அடிச்சிட்டு போங்க...

 

வருகைக்கு நன்றி!!

40 comments:

நட்புடன் ஜமால் said...

விளையாடுவோம்

G3 said...

//நிறுத்து நிறுத்து, இப்டி மேட்டரே சொல்லாம எழுதிட்டே இருந்தா நாங்க அழுவோம்னு நீங்க சொன்னது கேக்குது.. //

We crying? no no never.. we only mothifying u :P

G3 said...

//அண்ணாக்கு ஒரு முட்டாய் தாம்மானு கேட்டா போடானு சொல்லிட்டு ஓடுது... //

ROTFL :))))))))))))

G3 said...

//கோட்டான் கோட்டான்னு//

Ippo dhaan indha vilayaata mudhal dhadavaiya kelvi padaren :)

G3 said...

//பல்லாங்குழி தெரியுமா?//

Pallankuzhi theriyum.. aana adhula nee sonna 4 vagai ellam theriyaadhu raasa..

Paarungalaen.. ivanukkullayum edho inparmation irundhirukku :P

G3 said...

kittipul pamparam ellam ok..

Aanalum.. nondi kallaanga pondra vilayaatukal pattiyalil serkapadaadhadhai miga miga vanmaiyaaga kandikkiren..

G3 said...

//ஒரு குழந்த ஆச தோச அப்பளம் வட, ஆச பட்டத செய் செய் செய்னு சின்ன உடையை உடுத்தி, பாட்டுக்கு ஏத்த மாதிரி முகத்தில் உணர்ச்சிகள காட்ட, திக்குனு இருந்துச்சி... அந்த வரிகளுக்கான அர்த்தம் கூட புரியக்கூடாத வயசு.. இதை பார்த்து மார்க் போட ஒரு கூட்டம், கை தட்டி ரசிக்க ஒரு கூட்டம், கடசியா அவங்கள பெத்த அம்மா, அப்பா கண்களில் இந்த நடனத்த பார்த்து ஆனந்த கண்ணீர்.. கேட்டா, இது சின்ன வயசுலேயே அவங்களுக்குள்ள இருக்குற திறமையை வெளிக்கொண்டு வராங்களாம்... அதுக்கு உங்களுக்கு வேற பாட்டே கிடைக்கலையா??//

Indha kodumaikku dhaan naan andha pgm ellam paakaradhae illai :)

G3 said...

Sila vilayaatugala pathi namma ji annachiyum ezhudhi irukaaru.. chk out

http://veyililmazai.blogspot.com/2006/12/21.html

http://veyililmazai.blogspot.com/2006/12/22_29.html

G3 said...

Seri naan poi word puzzle velayaadanum..

G3 said...

so rounda 10 pottutu me the escape :)))))))

RAD MADHAV said...

11 ME THE ELEVENTH. KONJAM BUSY,
APPURAMAA VARREN, VILAYAADURATHUKKU

விஜய் said...

கார்த்திக்,
நீங்க எழுதியிருக்கும் எல்லா விளையாட்டையும் நான் சிறு வயதில் விளையாடிருக்கேன். ஆனால் இந்த 10 வருடங்களாகத்தான் சிறுவர்கள் இந்த மாதிரியான விளையாட்டுக்களை மறந்து போயிருக்காங்க. டி.வி.யின் ஆதிக்கத்தினால்.
என் தங்கை மகனுக்கு கார்டூன் சானலோ, அல்லது சுட்டி டி.வி.யோ போட்டு விட்டால் போதும். சமர்த்தா இருப்பான். இல்லைன்னா அங்கே இங்கேன்னு ஓடுவான் என்பதால் எப்போதுமே டி.வி. முன்னால் அமர்த்திவிடுவாள் என் தங்கை. இதற்கு பெற்றோரும் ஒரு பெரிய காரணம்.

நம் குழந்தைகளை இந்த மாதிரி டி.வி.க்கு நேர்ந்து விடாமல் அவர்களோடு கூடி விளையாடணும்.

விஜய் said...

ஆமாம், என்னை எப்போது Tag செய்தீங்க. நான் மறந்து போயிட்டேனா?

Lancelot said...

ada ennamo popaa ennaku munimma kuda vilayadura appa amma vilayattu , dhaya kattai , odi pudichi ithu thaan theiryum, ischool pakkam pogumpothu kalla manna, current current box ellam aadi iruken...

//அவரு அந்த படத்துல கில்லி மாதிரி நடிச்சி இருந்தாலும்//

appadiyaa??? nadippuna avarukku innanu theriyumma???

Lancelot said...

appa intha post parkum pothu unkku oru paattu dedicate panrampa makkal ethukuvaanganu nenaikiren...


"Theeratha villayattu pillai
Kartik theeratha vilayattu pillai figures ellam madippan,
avan figures ellam madipaan,
madithu marina pakkam thallikinu povaan,
Theeratha villayattu pillai
Kartik theeratha vilayattu pillai "

RAD MADHAV said...

//என்ன செய்ய அவர் நெகட்டிவாக யோசித்திவிட்டதால் நான் யாருக்கும் இந்த டக்கை கோத்துவிடல.. //

Lance negative pottu vittathaala oru 'vulkuththaaaaaaaaaaa'

RAD MADHAV said...

//அவைகளை எழுத்திலாவது பதிவு செய்து வைக்கலாம் என்று எண்ணுகிறேன். நான் இந்த டக்கை ஒருவருக்கு கோத்து விடலாம் என்று எண்ணினேன்... ஆனால் சூழ்நிலை சரி வர அமையவில்ல.//

Karthik, avasarappattu yethaavathu thappana mudivellam yeduthudathappaa... Nalla vela naan thappichchen.

Lancelot said...

@ Rad madhav

naan siluvai pa lance unna pathi soli irukaan...Kartik ta sollu pa..Lance intha blog pakkam ellam varamaatan because he dont speak DAmil...so avankitta tucku panna venamnu sollu...

RAD MADHAV said...

//கிராமங்களில் அன்று குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகளில்தான் எத்தனை வகைகள் இருந்தது? மரத்துல, குளத்துல, காடுகள்ல, தெருவுலனு.. இப்போ நம் குழந்தைகள், வீடியோ கேம்ஸ்களின் (என்னையும் சேர்த்து) முன்னால் இரவு பகலாக ஆணி அடித்த பதுமைகள் போல் உக்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உக்கார்ந்திருக்கிறார்கள்.//

Nalla yosichi paaruppa...
Indha kaalaththula cityla odi viladrathukku yenga idam irukku?

RAD MADHAV said...

//இப்போ நம் குழந்தைகள், வீடியோ கேம்ஸ்களின் (என்னையும் சேர்த்து) முன்னால் இரவு பகலாக ஆணி அடித்த பதுமைகள் போல் உக்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.//

Kulantha, adhuvum Nee... Neee....
Idhu unakke over aa theriyalayaapa????

ஆளவந்தான் said...

//
. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள கழுநீர்குளம் அவரது சொந்த கிராமம்.
//
அருமையான ஏரியா :)

Ajai said...

Paravala... Unmaiya othukita, naanum Video games la vilaiyaadhuvenu!!

Dei nee vilaiyaaduna MUDUKU PUNCH, GHOLI, KOKKA MAINA adhula ean podala?? Oh.. un rasigarkal unkitha sinna post keakuradaala podalaiyo???

Ajai said...

Un blog la comment varaama kedukura perumai LAnceku thaan serum... Paavam paiyan raabagala, thongama, thonda thanni irangaama ungala magilvikka post poduraan.. nee ennadaana, postkku sambandam illama comment panra...


PS: idhu karthik solli thandhu naa type pannala!!!

ஆளவந்தான் said...

கில்லி,பல்லாங்குழி, பம்பரம், முட்டாய் பருப்புக் கடைந்து, கோட்டான் கோட்டான் ( நாங்க இதை முங்கி பிடிச்சு விளையாடுறது’னு சொல்லுவோம்) எல்லாம் விளையாடியாச்சு,


பாண்டி ஆட்டம் வேற இல்ல? த்ரையில் கட்டம் போட்டு ஒத்த கால்ல்ல தாவி தாவி விளையாடுறது தானே, இல்லியா??


இத தவிர்த்து, சொட்டாங்கல், தாயம், கூட்டாஞ்சோறு, கொக்கு,குருவி பிடிக்கிறது.

ஓணானை வெரட்ட்டி கொடுமை படுத்தி கொல்றது எல்லாம் பண்ணியாச்சு..

ஆளவந்தான் said...

இது தொடர்பான S.ராமகிருஷ்ணனின்
பதிவு இங்கே

ஆளவந்தான் said...

ooops.. naan quarter adichutten pola :)))

ஆளவந்தான் said...

//
அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும். சரியாக இப்படி தான் விளையாடுவார்களா என்று தெரியாது..

எங்க ஊருக்கும் பக்கத்து ஊருக்குமே நிறைய் வித்தியாசம் உண்டு.

ஏன் சிறுவர்களுக்கும், கொஞ்சம் பெரிய பசங்களுக்குமே விதியில் நிறைய வித்தியாசம் உண்டு. நம்ம மக்கள் நல்ல customize பண்ணிட்டாங்க், வசதிக்கேத்த மாதிரி

ஆளவந்தான் said...

//
, கடசியா அவங்கள பெத்த அம்மா, அப்பா கண்களில் இந்த நடனத்த பார்த்து ஆனந்த கண்ணீர்.. கேட்டா, இது சின்ன வயசுலேயே அவங்களுக்குள்ள இருக்குற திறமையை வெளிக்கொண்டு வராங்களாம்...
//

ஒன்னும் சொல்ற்திக்கில்லே
:(((

ஆளவந்தான் said...

//
இப்போ ஆறும் இல்ல.. அப்டி இருந்தாலும் அதுல விளையாட ஆளே இல்ல..
//
நீச்சலும் தெரிவதில்லை :(((

Karthik said...

nalla irukkunga...!
:)

நட்புடன் ஜமால் said...

சாப் பூத்3

நட்புடன் ஜமால் said...

காலை முதல் வேலை ஜாஸ்தி அதான்பா விளையாட முடியலை

இப்ப யார் ரெடி ...

Lancelot said...

@ Ajai

oi unku ethanai thadava solrathu Lance inga comment pudaa mataanu... and naan putta comment inna thappu naan vilayaduna vilayatta thaanae solla mudiyum athaa vittutu Kartik kabadi vilayadum pothu avan trouseraa pasanga avthaa matteraa solla mudiyum...innapa nee galeejaa irukka...

Divyapriya said...

விஜய்க்கு சூப்பர் பட்டம் தான்...வித்யாசமான நல்ல போஸ்ட் :)

VASAVAN said...

Karthik, Nice, keep it up.

gils said...

adaapavi..postlaye PhD pannita!! ivlo velaaaaavaria velaatu pathi seriousa oru post!! nalla informative

viji said...

#### முட்டாய் பருப்புக் கடைந்து, பப்புக் கட பப்புக் கட, இது உனக்கு, இது பாப்பாக்கு, இது அம்மாக்கு, இது அப்பாக்கு, இது தாத்தாக்கு என்று பாட்டுப் பாடியும், பிறர்க்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டு (கற்பனையாகத்தான்!) விளையாடுவார்கள். கடைசியில் நண்டு வருது, நரி வருது, சிக்லிக்கான் சிக்லிக்கான் என்று கிச்சம் காட்டியும் ####

heheheh so sweet. i nvr play all this. =(
sounds very cute. :)

### இப்ப எங்க பக்கத்து வீட்டு பாப்பா கிட்ட அண்ணாக்கு ஒரு முட்டாய் தாம்மானு கேட்டா போடானு ##

chinan ponu kuda ungala matikirathu illaiya?? padu mosama irukku unga nilamai. :D

Anonymous said...

:)

Sharon said...

//பல்லாங்குழி தெரியுமா?// Pallankuzhi theriyum.. aana adhula nee sonna 4 vagai ellam theriyaadhu raasa.. Paarungalaen.. ivanukkullayum edho inparmation irundhirukku :P

Livinglrag said...

so rounda 10 pottutu me the escape :)))))))

Blogger templates

Custom Search