Sunday, 15 February 2009

இது காதலா? முதல் காதலா??

இன்றைய இளைஞர்கள் பலர் சினிமாக்காதலைப் பார்த்து, ஒரு மாயை உருவான காதலில் சிக்கிக்கொள்கிறார்கள்... பசங்க கிட்ட கேட்டா, யாரடி நீ மோகினி நயந்தாரா, கல்லூரி தமன்னா மாதிரி பொண்ணு வேணுமாம்.. பொண்ணுங்களுக்கு ஜில்லுனு ஒரு காதல் சூரியா மாதிரி வேணுமாம்... ஏன் பிதாமகன் சூரியாவ கட்டிக்க மாட்டீங்களா?? சினிமாவில் வரும் காதல் நிறய பேரோட மனதில் ஒரு வலிக்கப்பட்ட விசையை உருவாக்கியுள்ளது... காதல் பற்றி ஒரு தெளிவான கருத்து இதுவரை கூறப்படவில்லை.. அதனால் காதலை மையப்படுத்தி வரும் நிறய படங்களுக்கு மவுசு தான்... பெரும்பாலான காதல், திருமணத்தில் முடிய, அவற்றில் பெரும்பாலானவை விவாகரத்தில் முடிகின்றன... மாணவிகள் எல்லாம் மனைவி ஆகிறார்கள்... ஒரு படத்துல ஹீரோ போய் சொல்றாரு, ஹாய் மாலினி, ஐ அம் கிருஷ்ணன்... நான் இத சொல்லியே ஆகணும்... நீ அவ்வளவு அழகு... இங்க யாரும் இவ்வளவு அழகா.... ச்ப்ச்ப்ச்ப்.... இவ்வளவு அழக பார்த்து இருக்க மாட்டாங்க... அன்ட் ஐ திங்க், ஐ அம் இன் லவ் வித் யூ.. இத்தனைக்கும் அவர் அந்த பொண்ணு கிட்ட பேசுற மொத வார்த்த அது தான்... இத கேட்டு பெண்கள் நிறய பேரு சூரியா மேல பைத்தியமா இருந்தாங்க... அதுல இன்னொரு அக்கிரமம் ட்ரெயின்ல ஒரு பொண்ண பார்த்த உடனே காதல்.. இதுலா நிஜத்துல நடக்குமா? அப்டியே நடந்தாலும் அந்த காதல் வலுவா இருக்குமா??சினிமாக்காதல் எல்லாம் சிரிமாக்காதலாக இருக்கின்றது.. ஹீரோ ஹீரோயினை காதலிக்கும் சம்பவங்களே சிரிப்பா இருக்கும்.. அவன் ஊர் உலகத்திற்கு நல்லது செய்வான், அவ உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வாள்... இல்ல மழைல நனஞ்சாப்புல, அங்கங்களை காட்டும் ஒரு கிளு கிளு சாங்க்... சும்மா கிடந்த நாய தூக்கி கொஞ்சுனா லவ்வு.. இது தான் நாய்க்காதல்.. இல்லாட்டி வில்லன் கற்பழிக்க வரும் போது, ஹீரோ காப்பாத்துனா, லவ்வு... இந்த வில்லன் இருக்கானே, ஹீரோவோட தங்கச்சிய மட்டும் சீக்கிரமா ரேப் பண்ணிடுவான்.. ஹீரோ வீட்டு வெளியே, சாகவாசமா, டீ குடிப்பாரு.. ஹீரோயின் பல சமயம் வில்லனோட தங்கச்சி, பொண்ணா இருக்கும்.. சொந்த பந்தம் இல்லனா, வில்லன் கொஞ்ச நேரம் கபடி விளையாடி, சரியா புடவையை உருவும் போது, பல மைல் அப்பால உள்ள ஹீரோ சட்டுனு கண்ணாடிய உடச்சி உள்ள புகுந்து வில்லன் மூஞ்சில ஒரு குத்து... ஹீரோயின் கிட்ட, என் கடமைய தானே செஞ்சேன்னு ஒரு பிட்டு.. இதுவே மொக்க ஃபிகரா இருந்தா, நீ என் தங்கச்சி மாதிரினு பிட்டு... அப்றோம் இவர் ஹீரோயின கூட்டிட்டு போய், குஜால் பண்ணுவாரு.. டேய்.. வில்லனும் அதே தான் பண்ண போறான்.. அப்ப உனக்கும், வில்லனுக்கும் என்ன வித்தியாசம்? எகிறி குதித்து, அவள அலேக்கா தூக்கி, காதல் பண்ணனும்னு எல்லா பொண்ணுங்களுக்கும் ஆச இருக்கும்.. ஹீரோயின் முத்தம் கொடுக்குற மாதிரி நமக்கு நம்ப காதலி முத்தம் கொடுக்கணும்னு பசங்களுக்கு ஆச இருக்கும்... சில பேருக்கு மட்டும் தான், சினிமாவுக்கும், வாழ்க்கைகும் உள்ள வித்தியாசத்தை உணர்கின்ற மனப்பக்குவம் இருக்கும். ரிதம் மீனாவ பார்த்து, என் நண்பன் அது மாதிரி குழந்தயோட இருக்குற பொண்ணுக்கு வாழ்க்க தருவேன்னு சொன்னான்.. அது ஏன் உங்களுக்கு ஒரு படம் பார்த்தா இப்டி பண்ணனும்னு தோணுது.. சுயபுத்தி கிடையாதா?? ஏன் விஜயசாந்தி பறந்து சண்ட போடுறாங்க, அது மாதிரி பொண்ணு வேணாமா?? சினிமாவில் காதல் மிகைப்படுத்தி தான் காட்டப்பட்டுள்ளன... அதை சிலர் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த முனையும் போது தான் பிரச்சனை உருவாகின்றது... நிறய மனநல மருத்துவர்களிடம் ஆலோசனைக்கு வரும் தம்பதியர்களின் பிரச்சனை, அவர்கள் மனதில் சினிமாவைப் பார்த்து, இது மாதிரி ஆளு வேணும் என கட்டிவைத்த காதல் கோட்டை, அப்டி கிடைக்கப்பட்ட பின், அவை சந்தோச வாழ்க்கைக்கு அடிதளம் இல்லை என்று தாமதமாக உணர்கின்றனர்....நான் கூட சந்தோச சுப்பிரமணியம் படம் பார்த்து ஜெனிலியா ஹாசினி மாதிரி பொண்ண லவ் பண்ணனும்னு ஆச பட்டேன்.. ஆனா நிஜத்துல அது நடந்தா, எங்க வீட்ல அவ என்ன பத்தி போட்டுக்கொடுத்தா டண்டான டர்ணா தான்... சினிமாக்காதலில் வரும் நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்க்க சந்தோசமா இருக்கும்... படங்கள் பார்த்து, நம்ம காதலர் இது மாதிரி நமக்கு என்ன செய்வார்னு யோசிக்கறதுக்கு பதிலா, நாம அவருக்கு என்ன செய்யலாம்னு பார்க்கணும்... ஒரு காதல் முழுமை பெற சில வருடங்கள் ஆகும்.. அது பழகிய பின் தான் வருமே தவிர, பார்த்த உடனே, அழகில் மயங்கி காதல் தோன்றுவது காமம்.... காதலின் மகத்துவத்தை களங்கப்படுத்துவதற்காகவே பல ஜோடிகள் பார்க், தியேட்டர், பீச்ல இருப்பாங்க... நான் தி-நகர் டிப்போல பார்த்த காட்சி, ஒரு ஜோடி பொது இடம் கூட யோசிக்காம, 100 பேரு நம்பள பாக்குறாங்கனு விவஸ்த இல்லாம பசக்குனு ஒரு கிஸ் கொடுத்தான்.. அட அட அட.. என்ன காட்சி... காண ஆயிரம் கண்கள் வேணுமடா... முதல் இரவையும் அங்கேயே நடத்தி இருந்தா, இன்னும் சந்தோசப்பட்டு இருப்பேன்... தியேட்டருலே கூட நிம்மதியா படம் பாக்க விட மாட்டேங்கிறாங்க... கார்னர்-சீட் கிடச்சா போதும் இவங்களுக்கு.. அதுவும் மொக்க படமா பார்த்து கூட்டிட்டு வருவாங்க.. அப்ப தான் தியேட்டருல கூட்டம் கம்மியா இருக்கும்... ஒரு நாள் கல்லூரில இருந்து வெளிய அனுப்பிச்சிட்டாங்க (வழக்கம் போல).. வீட்டுக்கு போனா அம்மா மானப்பங்கலு படுத்துவாங்கனு, தலைவர் டி.ஆர். படமான வீராசாமிக்கு போனேன்.. என்ன செய்ய? நேரத்த ஓட்டணுமே... மொக்கனு தெரிஞ்சும் போனேன்... எண்ணி 35 பேரு கூட இருக்க மாட்டாங்க... முன்னாடி சீட்ல ஒரு பொண்ணு... அட தலைக்கு பெண்கள், அதுவும் கல்லூரி பெண்கள் கூட விசிறியா யோசிக்க, கொஞ்ச நேரத்துல, அவ பக்கத்துல ஒரு பையன் வந்து உக்கார்ந்தான்... கொஞ்ச நேரத்துல சத்தம் கேட்க, கிசு கிசு பேசுறாங்களோனு பார்த்தா, கிஸு கிஸு பேசுறாங்கய்யா.. அப்றோம் என்ன? எனக்கு படத்தில் தல பண்ணும் சில்மிஷத்த பாக்கவா, இல்ல இவங்க சில்மிஷத்த பாக்கவானு ஒரே குழப்பம்...பீச்க்கு போங்க... கடற்கரையில் பொங்கும் அலைகளின் நுரைகளில், காதல் என்ற பேரில் நடத்தும் ஜொல்லும் கலந்துள்ளது. பீச் பக்கம் போனா, தினமும் காமக்காட்சிகள், பரங்கமலை ஜோதி தியேட்டரோட தரிசனம். அண்ணா சமாதி, லைட் ஹவுஸ் ஃபுல்லா லவ்வர்ஸ் ஏரியா...  மணல் பரப்பெங்கும் கடலை நோக்கி கடலை போட்டுக்கொண்டு இருக்கின்றனர்... காதலனின் முகம் காதலியின் துப்பட்டாவில் மறைக்க, காதலியோ அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஹெல்மட் அணிந்து சிரிப்பும், சீண்டலுமாக காதலின் அர்த்தத்தை மணலில் புதைத்து, கடலில் அஸ்தியாக கரைக்கின்றனர்.சுத்தெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடலை சுடும் அவர்கள் எல்லாரும் நல்ல காதல் செய்றாங்கனு நினைக்காதீங்க... தள்ளிக்கீனு வந்தது, கள்ளக்காதல் இதுங்க தான் அதிகம். பீச்ல தான் எந்த கட்டண அனுமதியும் இல்ல... அதுனால காசு இல்லாத ஏழைக்காதலர்கள் இங்கு வராங்க. சுண்டல் விக்கும் சிறுவர்களின் வியாபார நுணுக்கம் இருக்கே... அட அட அட... “அண்ணா.. யக்கா.. 2 ரூவா தான் சுண்டலு.. வாங்கிக்கோங்க”னு அவங்க பேசுறதுக்கு முன்னாடியே சுண்டல மடிச்சி நீட்ட, பசங்க காதலி முன்னாடி அசிங்கப்பட கூடாதுனு வாங்கிப்பாங்க... இவங்க கை மண்ணுல இல்லாம பொண்ணு மேலயே தான் இருக்கும்... படகு அழகா இருக்கேனு போய் உக்காரலாம்னு பார்த்தா, காதலி மடியில் இவர் தலை வைத்து, உதடுகள் சங்கமித்து, அங்கே ஒரு சுனாமியே நடக்கும்... கடற்கரை பொது இடம்னு இவங்களுக்கு தெரியாதா? கேட்டா “பொது இட்த்துல குண்டு வைக்கலாம்... முத்தம் வைக்க கூடாதா? உன் வேலய பார்த்து போவீயா?”னு கேப்பாங்க.. இடுப்பில் கை வைத்து இறுக்கி, அணைத்த பின், வார்த்தைகள் எல்லாம் இல்லை... ஆக்‌ஷன் தான்... கையில் சிகரட் துண்டுகளுடன், கண்கள் இரண்டையும், நான்கு திசைகளுக்கும் சுழற்றி, அவற்றை ரசிக்கும் காதலி கிடைக்கா இளைஞர்கள்... எங்க தான் இருக்காளுங்க இவ்வளவு பொண்ணுங்களும், தளக்  தளக்னு?? நம்ம கண்ணுக்கு ஒருத்தியும் சிக்க மாட்டேங்கிறாளுங்க... அடுத்தவங்க அந்தரங்க விசயங்கள பாக்குறது தப்பு தான்.. என்ன செய்ய? மனுச மனுசு, வயசு... ஸ்வீட் எல்லாம் வச்சிட்டு அத சாப்பிடக்கூடாதுனா எப்படி? எனக்கு ஒண்ணும் சக்கர வியாதி இல்ல..அவர்களின் மன ஆறுதலுக்காகவே, கிளி ஜோசியமும், மந்திரக்கோலும்... “உங்க ரெண்டு பேரும் கைராசியும் என்னமா பொருந்துது? அடுத்த முகுர்த்தம் கல்யாணம் தான்... லஷ்மி படம் வந்துருக்கு.. நினச்சதெல்லாம் நடக்கும்...” என ஜோசியக்காரங்க கூற, காதலன் முகத்தில் ஏதோ நோபல் பரிசு வாங்குன மாதிரி சந்தோசமும், காதலி முகத்தில் வெக்கமும்... அட அட அட...காதலர் தினத்தன்று, கண்ணில் தென்படும் காதலர்களுக்கு கட்டாயத்திருமணமாம்.... கர்நாடகாவைச் சேர்ந்த ராம் சேனா அமைப்பினரின், சட்டத்தையும், சம்பிரதாயத்தையும் கையில் எடுத்துள்ள அறிக்கை இது... கல்யாணம் பண்ணிக்கிறதெல்லாம் அவங்க சொந்த விசயம், அத செய்ய இவங்க யாரு? ஒரு 2 வருசம் முன்னாடியே இவங்க கிளம்பிருந்தா, நான் நாள் முழுக்க எனக்கு பிடிச்ச பொண்ணு பக்கமே நின்னுருப்பேன்... வீட்டுல பிரச்சனையா? கல்யாணம் பண்ண காசு இல்லையா? உடனே ட்ரெயின் ஏறி, காசு இல்லனா, விட்-ஆவுட்ல கர்நாடகாவுக்கு போய், அவங்க கண்ணுல மாட்ற மாதிரி போய் நின்னுடுங்க.. சாதி, மதம் இவை எல்லாம் பெண்களுக்கு கட்டுப்பாடு விதித்ததை போல, இப்போ மதவாத அரசியலும்... கையில் ஆயுதங்களுடன் சுற்றும் இந்த மண்-மத ரௌடிகள், கலாச்சார காவலர்கள் என்ற பேரில் விட்டால், பெண்கள் ஆண்களுக்கு காய்கறி, பூக்கள் விற்கக்கூடாது, நர்ஸ் எல்லருமே ஆண்களுக்கு சேவை செய்ய கூடாதுனு சொல்வாங்க... ஓட்டு கேக்க வந்தா, நீ ஆம்பிள... நா பொம்பள.. உனக்கு ஓட்டு போட மாட்டேனு சொல்லுங்க...எனக்கு இந்த காதலர் தினம் மேல நம்பிக்கலாம் இல்ல... உண்மையா காதலிக்கிறவனுக்கு, அதுக்குனு ஒரு நாள் எல்லாம் தேவ இல்ல... ஆனா காதல்ங்கிற பேருல இவங்க பண்ற லொல்லு தான் தாங்க முடில.. இப்ப கூட பாருங்க, நண்பன் ஒருத்தன் குறுந்தகவல் அனுப்பியுள்ளான்.. அத நான் 10 பேருக்கு ஃபார்வட்  பண்ணா, என் காதலும், அவன் காதலும் வெற்றி பெறுமாம்.. டேய்.. புடலங்கா.. நான் சனிகிழமை யாரையும் அசிங்கமா திட்டுறதில்ல... காதல் வெற்றி பெறணும்னா, உன் காதலிக்கு மெசேஜ் பண்ணுடா.. அதுக்கு ஏன் எங்க தூக்கத்த கலைக்கிறீங்க?? 


காதலை பொதுஇடத்தில் காம லீலைகளாக மாற்றாதீர்கள்னு அறிவுறுத்துற மாதிரி சொல்லணுமே தவிர, அச்சுறுத்துற மாதிரி சொல்லாதீங்க... மக்கா உண்மையா காதல் செய்றவங்களுக்கு, ஆள கழட்டி விடாம, கடசி வரைக்கும் வாழ எண்ணுபவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்... மத்தவங்களுக்கு நேரா ரூமுக்கோ, இ.சி.ஆருக்கோ உங்க வண்டிய ஓட்டுங்க பா... 

வந்தது தான் வந்தீங்க.. நாலு லொல்லாவது பண்ணிட்டு போங்க எஜமான்... எல்லாரும் குஜாலா இருங்க... அதே சமய லொல்லாவும் இருங்க...


வருகைக்கு நன்றி!!

 
32 comments:

Lancelot said...

siluvai the first...

நட்புடன் ஜமால் said...

முதல்ல

இது

காதலா

G3 said...

English blogla potta postoda translationaakkum :P konjoondu dhaan pudhu sarakku pola idhula :P

G3 said...

Siluvaiya enga 2 naala aala kanum? innuma pettaila kondaatangal mudiyala??? !!!!

G3 said...

//ஆனா நிஜத்துல அது நடந்தா, எங்க வீட்ல அவ என்ன பத்தி போட்டுக்கொடுத்தா டண்டான டர்ணா தான்...//

appo pottu kudukka egapatta matter irukku pola :)))

G3 said...

// தலைவர் டி.ஆர். படமான வீராசாமிக்கு போனேன்.. என்ன செய்ய? நேரத்த ஓட்டணுமே... மொக்கனு தெரிஞ்சும் போனேன்...//

unnakku aanalum thairiyam jaasthi dhaan.. Sondha selavula immam periya sooniyam unakku neeyae vechikkariyae :P

G3 said...

//அவர்களின் மன ஆறுதலுக்காகவே, கிளி ஜோசியமும், மந்திரக்கோலும்... “உங்க ரெண்டு பேரும் கைராசியும் என்னமா பொருந்துது? அடுத்த முகுர்த்தம் கல்யாணம் தான்... லஷ்மி படம் வந்துருக்கு.. நினச்சதெல்லாம் நடக்கும்...” என ஜோசியக்காரங்க கூற, //

avangalukku pozhappu odanumilla :))))

G3 said...

//ஒரு 2 வருசம் முன்னாடியே இவங்க கிளம்பிருந்தா, நான் நாள் முழுக்க எனக்கு பிடிச்ச பொண்ணு பக்கமே நின்னுருப்பேன்...//

adhu enna kanakku 2 varusham munnadi? appadina unakku ippo kalyaanam aayiduchungariya???

G3 said...

//ஓட்டு கேக்க வந்தா, நீ ஆம்பிள... நா பொம்பள.. உனக்கு ஓட்டு போட மாட்டேனு சொல்லுங்க...//

LOL :))) Nalla thaan yosikkara :P

G3 said...

//உண்மையா காதலிக்கிறவனுக்கு, அதுக்குனு ஒரு நாள் எல்லாம் தேவ இல்ல...//

Adhae adhae.. ella naalum kaadhalar dhinamae :))))

G3 said...

Lollu # 1

G3 said...

Lollu # 2

G3 said...

Lollu # 3

G3 said...

Lollu # 4

G3 said...

//நாலு லொல்லாவது பண்ணிட்டு போங்க எஜமான்... //

karekta pannitennu nenaikaren :)

15-oda me the appeatu :))

arun said...

wat happened to u man?variku vari apdiae translate pani iruka..?

ஆளவந்தான் said...

அட்டெண்டன்ஸ்.. படிச்சுட்டு வர்றேன்

ஆளவந்தான் said...

//
அறிவுறுத்துற மாதிரி சொல்லணுமே தவிர, அச்சுறுத்துற மாதிரி சொல்லாதீங்க
//

கரெக்டா சொல்லிட்டே மாமூ :)

Divyapriya said...

//ஓட்டு கேக்க வந்தா, நீ ஆம்பிள... நா பொம்பள.. உனக்கு ஓட்டு போட மாட்டேனு சொல்லுங்க...//

super...
கலக்கல் போஸ்ட் கார்த்திக்

viji said...

### இத கேட்டு பெண்கள் நிறய பேரு சூரியா மேல பைத்தியமா இருந்தாங்க... அதுல இன்னொரு அக்கிரமம் ட்ரெயின்ல ஒரு பொண்ண பார்த்த உடனே காதல்.. இதுலா நிஜத்துல நடக்குமா? அப்டியே நடந்தாலும் அந்த காதல் வலுவா இருக்குமா?? ###

Ithe ithe.. ithe thaan nanum solleren.. but, elarum sandaiku le varanga. :((
u knw..i knw.. oor makkal dunno. :(


## சினிமாக்காதலில் வரும் நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்க்க சந்தோசமா இருக்கும்... ##
yes yes.. there is a movie, jeeva act with 'anbe anbe' movie heroin. padam peru nyabagathule varale.. one of the nicest movie. oru varusham pesa kudathu, terinja maatri kaatikke koodathu, rende perum oru nalal position ku vathu, aprum appa amma samathathoda marriage pananum.. It was a really a good touching story..


### ஒரு காதல் முழுமை பெற சில வருடங்கள் ஆகும்.. அது பழகிய பின் தான் வருமே தவிர, பார்த்த உடனே, அழகில் மயங்கி காதல் தோன்றுவது காமம்.... ###
Shaabaa.. tahthuvama poliyaringale...


### காதலின் மகத்துவத்தை களங்கப்படுத்துவதற்காகவே பல ஜோடிகள் ###
Same blood. enakum inthu nelathaa kathal pera ketale tension aagum..


### உண்மையா காதலிக்கிறவனுக்கு, அதுக்குனு ஒரு நாள் எல்லாம் தேவ இல்ல. ###
Hahahah great thought. i like it. I felt that too. nothing special on 14 feb.


### உன் காதலிக்கு மெசேஜ் பண்ணுடா.. அதுக்கு ஏன் எங்க தூக்கத்த கலைக்கிறீங்க?? ###
ithu kuda parvayillai. radio station ku msg anupi, inniku enn gf enkuda kochikitanga. pls enn chelatta enkita pesa sollunganu msg anupuvanunga. radio le velai seiravanag yenna mama velai ya pakeranga??OK DONE!!!!!!!!

viji said...

i agree with all ur points. :)

viji said...

From the info by Aalavanthan sir, the movie name 'AASAI AASAIYAI'...

but intha maatri nalla movie ooda message ellam makkal follow panne maatanga.. vaaranam aairam kathei matri movie thaa follow panuvanunga. LOL

Lancelot said...

@ g3 akka

namma pettaila Ram sena vanthu namma pullaingala ethuvum pannama parthukittu irunthen...aruva vechu vechu back eriyuthu...so inniku leave eduthukinnu seekiram vantha comment adikiren...

gils said...

//ஆனா நிஜத்துல அது நடந்தா, எங்க வீட்ல அவ என்ன பத்தி போட்டுக்கொடுத்தா டண்டான டர்ணா தான்...////

so..aal iruku..aaana inum veetla intro tharalanu telligna :) aama ithu seriousaana posta ila kaamedia?? terilayepa...surya mela unakenna gaandu :) un aal surya fano? overa poganjiruka :D
news pathia..13th anniki police commissioner telling.."no drinking and driving no koothadichings and all..chamathu pulaya irunga..kalacharatha kaapathunganu"...14th anniki athey gumbalukaga bandobastuku police coming :D :D enna koduma ithu

RAD MADHAV said...

//பல மைல் அப்பால உள்ள ஹீரோ சட்டுனு கண்ணாடிய உடச்சி உள்ள புகுந்து வில்லன் மூஞ்சில ஒரு குத்து... ஹீரோயின் கிட்ட, என் கடமைய தானே செஞ்சேன்னு ஒரு பிட்டு.. இதுவே மொக்க ஃபிகரா இருந்தா, நீ என் தங்கச்சி மாதிரினு பிட்டு//.

சூப்பர் கார்த்திக், தலைவர் டி ஆர் ராஜேந்தர் தலைய சிலுப்பிட்டு வரது 'ஸ்லோ மோசன்' ல, நினைவலைகள் வருது.

"கார்த்திக், பிளாக்குல நீ சீனியர் சிம்பு,
எவ்வளவு வேணும்னாலும் வரட்டும் அம்பு
எதித்து நின்னு காட்டு தெம்பு
பொறுமை போனா போட்டு கும்மு
சொல்றேன் உண்மைய என்ன நம்பு"

Lancelot said...

@ Rad Madhav

sonnatheriyathu kartikoda anbu
nattamai kaila irukathu sombu
thanni venumnaa adikanum pumpu
paramasivan kaluthulla irukathu pambu


@ kartik

mannichukopa siluvai kulla thoongitu irunthu kavjana thatti elupi vuttango...namma Rad Madhav namma kavijai ellam padikala nu nenaikiren...

GAYATHRI said...

adhu enna anna kaadhal mela avlo gaandu..tamil la onnu englees la onnu...seri illa...somethin rong...anubhavam pesudho:p

Ajai said...

English la pothada tamilil suda suda remake panni post pannirukke.. nadhuvula konjam maarudaloda.. irundaalum re-make nalla thaan irukku!!!

Lancelot said...

@ gayathri


naanthamma siluvai un Arun annanoda altar ego..athu vera onnumilla thangachi un kartik annanukku oru figurum madiyaa mattenguthaam...nee enna panraa un collegela irukka top figuresoda numbers ellam eduthu kartik annavukku sms panriyaam ok??? ppaadiyae CC la ennakum annupu (munimmaku theriyaama route podren)...

Lancelot said...

@ Ajai


naina Kartik Vijay fanu prove panranla :P

தாரணி பிரியா said...

supera kalaki irukke karthik

niriya yosiga vekkara pa :)

intha kalathu chinna pasanga ellam puthiyathan irukkinga :)

Anonymous said...

hi everybody


just registered and put on my todo list


hopefully this is just what im looking for, looks like i have a lot to read.

Blogger templates

Custom Search