Tuesday, 24 February 2009

விளையாடு விளையாடு

சின்ன வயசுல வீட்டுல எதாவது போட்டு உருட்டுறது எனக்கொரு வேல... மின்சாரம் போச்சுனா சிம்மினி விளக்கு ஏத்தி வைப்பாங்க... அம்மா அதை கண்ணாடில போடுறதுக்குள்ள நான் போய் ஊதி அணைக்க, முதுகுல ரெண்டு போட்டு விளையாட்டு வினையாகும்னு சொல்வாங்க... அப்றோம் ஸ்கூல பசங்கள போட்டு லொல்லு பண்ணும் போது (தொட்டில் பழக்கம், சுடுகாடு வரைக்கும்), அவனுங்க கோவிக்க, உடனே “என்னடா டேய்.. சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன்?” சொல்வேன்.. எவனாவது ஒரு பையன் ஒரு பொண்ண ரூட் விடும் போடு, அவங்களுக்குள்ள சின்ன சின்ன சண்ட வரும் போது, பொண்ணு சொல்லும், “விளையாட்டுக்கு கூட இப்படி சொல்லாதே!” துடுக்கு தனமா பேசும் போது, விளையாட்டுப்பிள்ளையடா நீ அப்டினு பெரியவா பாராட்டுவாங்க.. கமல் கூட வேட்டையாடு விளையாடுனு நடிச்சாருல.. இப்ப சன் மியுசிக் திருப்புனா, 15 நிமிசத்துக்கு அப்பா அம்மா விளையாட்டு விளையாடி பாப்போமா செல்லம் செல்லம் செல்லம்னு உசிர வாங்குறாங்க... அதுலயும் நான் உசார் பண்ணலாம்னு நினச்ச தமன்னா கூட ஆடுறான்... இத பார்த்து நான் அழ........... நிறுத்து நிறுத்து, இப்டி மேட்டரே சொல்லாம எழுதிட்டே இருந்தா நாங்க அழுவோம்னு நீங்க சொன்னது கேக்குது.. 
பதிவுலக தளபதி விஜய் என்ன டக்(TAG) பண்ணிருக்காரு... பொங்கல் அப்ப பண்ணாரு.. இன்னும் தாமதித்தா நம்பள பொங்கிடுவாருனு நான் அவர் கோத்து விட்ட டக்க இங்க தொடர்கிறேன்... வழக்கொழிந்த சொற்கள்.. இதை கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம்னு யோசிச்சேன்.. எல்லாரும் சொற்களையே போட, எனக்கு இப்ப ஒரு சொல் கூட கிடக்கல.. அப்ப தான் எழுத்தாளரும், நாட்டுப்புறக்கலை சேமிப்பாளருமான கழனியூரான் அவர்கள் குங்குமம் இதழில், நாகரிகத்தால் ஓரங்கட்டப்படும் கிராமங்களில் இப்போது வழக்கொழிந்து வரும் விளையாட்டுக்கள் பற்றி ஒரு கட்டுரை எழுத, அதை நான் நூல் பிடித்து, இந்த டேக்கின் சில இடங்களில் அவற்றை மேற்கோளாக காட்டி, இந்த கட்டுரையை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்... திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள கழுநீர்குளம் அவரது சொந்த கிராமம். சங்க இலக்கியங்களில் கழுநீர்பூவும், அன்னப்பறவையும் இருந்ததாக சொல்லப்பட்ட ஊரில் இன்று அவை இல்லை. சங்கத்தையும், ஊரையும் இணைத்து எம்.எஸ்.அப்துல்காதராகிய அவர் கழனியூரான் ஆனார்.விளையாட்டு உடலையும், உள்ளத்தையும் ஒருசேர வளர்க்கிறது. கிராமப் புறங்களில் சென்ற தலைமுறையினர் விளையாடிய விளையாட்டுகளை இன்று காண முடியவில்லை.குழந்தைப் பருவத்தில் பொம்மை வைத்து விளையாடுவதில் தொடங்கும் விளையாட்டு, பருவம் தோறும் பல்வேறு வடிவங்களில் மனித வாழ்க்கையோடு பயணிக்கிறது. குழந்தைகள் ஆரம்பத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுகின்றன; அந்தக் காலத்தில் தச்சாசாரிகள் குழந்தைகள் விளையாட என்று மரப்பாச்சி பொம்மைகளை (மரத்தால் ஆன பொம்மைகளை) செய்து கொடுத்தார்கள். இன்றோ டோரா, பார்பி, ஸ்பைடர் மேன், டெடி பியர் என ஏகப்பட்ட பொம்மைகள் கொட்டிக்கிடக்கின்றன... நான் இந்தியன் படத்தில், அந்த தாத்தா தன்னோட பொண்ணுக்கு ஆசயா செய்து தருவாரு பாருங்க, அதான் கடசியா பார்த்தது... எனக்கும் ஒரு மரப்பாச்சி பொம்ம வாங்கி தந்தாங்க... நான் அத தரையிலே போட்டு அடிச்சி அடிச்சியே உடச்சிட்டேன்...இடது உள்ளங்கையில், வலது கை முட்டாய் பருப்புக் கடைந்து, பப்புக் கட பப்புக் கட, இது உனக்கு, இது பாப்பாக்கு, இது அம்மாக்கு, இது அப்பாக்கு, இது தாத்தாக்கு என்று பாட்டுப் பாடியும், பிறர்க்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டு (கற்பனையாகத்தான்!) விளையாடுவார்கள். கடைசியில் நண்டு வருது, நரி வருது, சிக்லிக்கான் சிக்லிக்கான் என்று கிச்சம் காட்டியும் (கூச்சப்பட வைத்தும், சிரிப்புக் காட்டியும்) விளையாடுவார்கள். இப்ப எங்க பக்கத்து வீட்டு பாப்பா கிட்ட அண்ணாக்கு ஒரு முட்டாய் தாம்மானு கேட்டா போடானு சொல்லிட்டு ஓடுது... இத வெளிய சொன்னா சின்ன கொழந்த கூட உன்ன அசிங்கப்படுத்துதே? உன் மூஞ்ச பார்த்தாலே தெரியும் நீ குழந்தய கடத்துறவன்னு என்று நம்பளையே கலாய்ப்பாங்க...கோட்டான் கோட்டான்னு ஒரு விளையாட்டு இருக்குமாம்... நடுக்குளத்தில் வட்டமிட்டு தூரம் தூரமாய் ஏழெட்டு பேர் நீந்தியபடியே நிற்பார்கள். சா... பூ...த்ரி போட்டு தோற்றவன் வட்டத்தின் நடுவில் நிற்பான். விளையாட்டுத் தொடங்குவதற்கு முன்பு 'கோட்டான்... கோட்டான்... ஏன் கோட்டான்' என்பது போல ஒரு பாட்டு பாடுவார்கள். ஜூட் என்று கத்தியதும் நடுவில் இருப்பவன் பிடிக்க வருவான். வட்டம் அப்படியே கலையும். சிலர் "கொட்டமிடும் கெலுத்தி... நொட்டம் சொல்லிப் போச்சு... கெட்டப் பையன் யாரு... கிட்ட வந்து கூறு..” என கிண்டலாய்ப் பாட, எல்லோரும் மூழ்கியபடியே குளத்தின் நாலு மூலைகளுக்கும் போவார்கள். மேல் மட்டத்திலேயே நீந்துகிறபோது வேகமாக நீந்துகிறவர்கள் விரைந்து வந்து பிடித்துவிடுவார்கள். விரட்டி வருகிறபோது சிலபேர் பிடிப்பட போகிற சமயத்தில் கரையேறிவிடுவார்கள். அப்படி ஏறினால் தோற்றதாக அர்த்தம். கரையேறியவன் மற்றவர்களைப் பிடிக்க வேண்டும். பெரும்பாலும் கரையேறுகிறவன் அப்படியே வீட்டிற்குதான் ஓடியிருக்கிறான். மூழ்கியவர்கள் மறுகரை பகுதியில் அடர்ந்திருக்கிற வெங்காயத் தாமரை காட்டுக்குள் மறைந்துகொள்வார்கள். சிலர் வலப்பக்கக் கரையோரம் உள்ள தாமரைக்காட்டுக்குள் மூழ்கிக்கொள்வார்கள். வேகமாக மூழ்கிப்போகக்கூடிய சிலர் இங்கு அங்குமாக நீந்திப் போய்க்கொண்டே திறமை காட்டுவார்கள். இப்போ ஆறும் இல்ல.. அப்டி இருந்தாலும் அதுல விளையாட ஆளே இல்ல...பல்லாங்குழி தெரியுமா? ஸ்நேகா பாடுவாங்களே?? பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், ஒற்றை நாணயம்... ஆங்.. ஸ்நேகானு சொன்ன உடனே கப்புனு பிடிச்சீங்களே... பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். பொதுவாக புளியங்கொட்டையை வைத்து பல்லாங்குழி ஆட்டம் (பாண்டி ஆட்டம்) ஆடப்படுகிறது. எனக்கு தெரிந்து 4 வகை பாண்டி ஆட்டங்கள் இருக்கின்றன. இருவர் மட்டுமே விளையாடும் சாதா பாண்டி, மூன்று பேர் விளையாடும் மிகவும் விறுவிறுப்பான ராஜா பாண்டி, ஒருவர் மட்டுமே முடிவே இல்லாமல் விளையாடும் சீதா பாண்டி (சீதை அசோக வனத்தில் இருக்கும்போது விளையாடியதாம்), நிறைய காய்கள் வைத்து விளையாடும் காசி பாண்டி. ஆனா இதுலா எப்படி விளையாடனும்னு எனக்கு தெரியாது.. எங்க அக்கா கூட விளையாடி, ஆட்டமே புரியாம தோத்துப்போவேன்.. இப்போவும் இது சில இல்லங்களில் விளையாடப்பட்டாலும், சீக்கிரமே வழக்கிழந்து போகும்னு என் எண்ணம்...கிட்டிப்புல் என்கிற சில்லாங்குச்சி விளையாட்டை நாள் முழுவதும் விளையாடினாலும் சிறுவர்களுக்கு அலுக்காது. கிட்டிப்புல்னா கில்லி... கில்லி தெரியாதா? விஜய்னு மொக்க போடதீங்க... அவரு அந்த படத்துல கில்லி மாதிரி நடிச்சி இருந்தாலும், ஒரு காட்சில கூட கில்லிய காட்டி இருக்க மாட்டாரு.. பேசாம கபடினு படத்துக்கு பேர் வச்சி இருக்கலாம். இரு பக்கமும் கூராக ஒரு சிறு குழியின்மேல் கிடைமட்டமாக இருக்கும் புள்ளை, நீண்ட ஒரு பக்கம் கூராக உள்ள தடியால் (கிட்டி) குழியிலிருந்து தெண்டி(கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டாகும். அதன்பின்னர் புள்ளு வீழ்ந்த இடத்திலிருந்து குழியை நோக்கி புள்ளு வீசப்படும், அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும். சரியாக இப்படி தான் விளையாடுவார்களா என்று தெரியாது.. எங்க அப்பா சொன்னதிலிருந்து நான் எழுதுகின்றேன்.. இன்று?? கிரிக்கெட் என்ற மட்டைப் பந்து விளையாட்டு வந்து மற்ற விளையாட்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டது. 
பம்பர விளையாட்டில் பையன்கள் மும்முரமாக அலைவார்கள். குறிபார்த்து எதிரியின் பம்பரத்தைத் தாக்கி உடைப்பது என்றெல்லாம் நடக்கும். பம்பர விளையாட்டில்தான் எத்தனை வகைகள்..? எத்தனை சட்ட திட்டங்கள்..? இப்போ விளையாடுறாங்களா? சின்ன கவுண்டர் தான் தொப்புள்ல பம்பரம் விட்டு ஒரு புரட்சியை உருவாக்கினாருலே?? நடுவர் இல்லாத இந்த விளையாட்டுகளில், சிறுவர்கள் தானே முன் வந்து வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மைதான் என்ன..? இப்பல்லாம் தோத்தாலே அழுக, சண்டனு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருகின்றது.
கிராமங்களில் அன்று குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகளில்தான் எத்தனை வகைகள் இருந்தது? மரத்துல, குளத்துல, காடுகள்ல, தெருவுலனு.. இப்போ நம் குழந்தைகள், வீடியோ கேம்ஸ்களின் (என்னையும் சேர்த்து) முன்னால் இரவு பகலாக ஆணி அடித்த பதுமைகள் போல் உக்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உக்கார்ந்திருக்கிறார்கள். பாரதியார் கூட ஓடி விளையாடு பாப்பானு சொன்னாருலே.. இப்போ அதே பேருல கலைஞர் தொலைக்காட்சில, சின்னக்குழந்தைகள ஆபாச நடனம் ஆட வச்சி காசு பாக்குறாங்க.. ஒரு குழந்த ஆச தோச அப்பளம் வட, ஆச பட்டத செய் செய் செய்னு சின்ன உடையை உடுத்தி, பாட்டுக்கு ஏத்த மாதிரி முகத்தில் உணர்ச்சிகள காட்ட, திக்குனு இருந்துச்சி... அந்த வரிகளுக்கான அர்த்தம் கூட புரியக்கூடாத வயசு.. இதை பார்த்து மார்க் போட ஒரு கூட்டம், கை தட்டி ரசிக்க ஒரு கூட்டம், கடசியா அவங்கள பெத்த அம்மா, அப்பா கண்களில் இந்த நடனத்த பார்த்து ஆனந்த கண்ணீர்.. கேட்டா, இது சின்ன வயசுலேயே அவங்களுக்குள்ள இருக்குற திறமையை வெளிக்கொண்டு வராங்களாம்... அதுக்கு உங்களுக்கு வேற பாட்டே கிடைக்கலையா??
தமிழகம் எங்கும் வட்டாரத்திற்கு வட்டாரம் இதுபோல எண்ணற்ற விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன. அவை யாவும் இன்று வழக்கொழிந்து வருகின்றன. எனவே, அவைகளை எழுத்திலாவது பதிவு செய்து வைக்கலாம் என்று எண்ணுகிறேன். நான் இந்த டக்கை ஒருவருக்கு கோத்து விடலாம் என்று எண்ணினேன்... ஆனால் சூழ்நிலை சரி வர அமையவில்ல. என்ன செய்ய அவர் நெகட்டிவாக யோசித்திவிட்டதால் நான் யாருக்கும் இந்த டக்கை கோத்துவிடல.. 
டிஸ்கி 1: அப்டியே விஜய் அண்ணா.... நான் போன வருசம் கொடுத்த டக்க (TAG) மறந்துதாதீங்க... சீக்கிரம் போடுங்க!!!


டிஸ்கி 2: டிஸ்கினா என்னனு எனக்கு தெரியாது... எல்லாரும் தபால் முடிச்ச உடனே போடுறாங்கனு நானும் போட்டேன்.. டிஸ்கினா என்ன?


எல்லாரும் நல்லா, லொல்லா இருங்க.. அப்டியே கும்மி அடிச்சிட்டு போங்க...

 

வருகைக்கு நன்றி!!

Thursday, 19 February 2009

சங்கறுக்கும் சங்கங்கள்: பகுதி-1

என்னடா இந்த பையன் அவன் வலைப்பூல ஒரே பசங்களாவே அறிமுகப்படுத்துறான்... பெண்கள மதிக்கவே மாட்டானா பல பெண் ரசிகைகள் கேட்டதால (ராசா?? யாருப்பா?? வந்து குத்துறது விஜியும், G3யும் தான்... அவங்களும் கேட்டுட்டாலும்... இதெல்லாம் கேள்வியும் நானே, பதிலும் நானே பகுதில போட வேண்டியதுபா) நான் அடுத்த கதாபாத்திரம், அதுவும் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க (டேய்.. வேணாம்) ஒரு பெண் கதாபாத்திரம் அறிமுகம் செய்றேன்...வணக்கம் என் பேரு சங்கம் வைத்த சங்கமித்திரை... இப்ப தான் கல்லூரில அடி எடுத்து வச்சிருக்கேன்... எனக்கு நூல் விடலாம், பொண்ணு பேரே அழகா இருக்கு, அப்ப அவளும் அழகா தான் இருப்பா என கணக்கு பண்ண சரியாக மணக்கணக்கு போடுபவர்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிடுறேன்... நான் ஏற்கனவே காதலில் இருக்கேன்... அந்த விசயம் எனக்கும் கார்த்திக்கும் மட்டும் தான் தெரியும்.... அதுனால உங்க கற்பனைக் குதிரைகளுக்கு கடிவாளம் கட்டி, வேற புல்வெளியில் மேய விடுங்கள்... 
சரி என் சொந்த ஊரு மதுர.. அதுனால சங்கம் வளர்த்த மதுரகாரியான நான், என் பேர சங்கம் வைத்த சங்கமித்திரைனு வச்சேனு எண்ண வேணாம்... ஊரு உலகத்துல வேல வெட்டி இல்லாம, மல்லாக்க பார்த்து, சில பேரு பயங்கரமா யோசிப்பாங்க... ஆனா இந்த ஊரு உலகம், பொறாம பிடிச்ச உலகம் இதயெல்லாம் மொக்கனு சொல்லிடும்... அதுனாலயே பலர் இது மாதிரி யோசிக்கறத நிறுத்திபுடுறாங்க... அவங்கள ஊக்குவிக்கவும், இது போன்ற வேற்று சக்திகளின் தூற்றல்களுக்கு மனம் கலங்கி, முடங்கி கிடக்காமல், தொடர்ந்து யோசிக்கவும், அதேபோல ஒத்த (டேய் சிலுவ, அசிங்கமா படிக்காத.. பொறுமையா படி- இது கார்த்தி வாய்ஸ்) எண்ணம் உடயவர்கள எல்லாரயும் ஒண்ணு சேக்கவே நான் பல சங்கங்கள் ஆரம்பித்துள்ளேன்... நான் இந்த வலைப்பூ பக்கம் வரும் போது, என்னோட சில சங்கங்கள உங்களுக்கெல்லாம் அறிமுகப் படுத்துறேன்... நீங்களும் அந்த சங்கத்த போல சிந்திப்பவர்னா தாராளமா வந்து சேருங்க... கட்டணம், மாத சந்தா இதுலா வச்சா மட்டும் நீங்க கட்டப்போறீங்களா என்ன? அதுனால அனைவருக்கும் நுழைவு இலவசம்... உங்க நண்பர்கள கூட இதுல சேர்த்து விடுங்க... நம்ப சங்கங்களின் புகழ் உலகம் எங்கும் பரவட்டும்... வரலாறுல சங்கம் வைத்த சங்கமித்திரானு என்ன பத்தி பொன் எழுத்துகளால் பொறிக்கப்படட்டும்...


சரி வாங்க... நாம நம்ப சங்கங்கள் சிலவற்ற பாப்போம்....1. கத்திய வச்சி கேக் வெட்டலாம், காய்கறி வெட்டலாம்... ஏன் மனுசன கூட வெட்டலாம்.... ஆனா கிணறு வெட்ட முடியுமா?

மிகவும் கூர்மையா யோசிப்போர் சங்கம் 2. கலர் டி.வி.ல கறுப்பு-வெள்ளை படம் பாக்கலாம்... ஆனா கறுப்பு-வெள்ளை டி.வில கலர் படம் பாக்க முடியுமா?

பக்கத்து வீட்டில் ஓ.சி. டி.வி பார்ப்போர் சங்கம்3.T.Nagar போனா டீ வாங்கலாம்
ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

நகரம் நகரமாக சுற்றுவோர் சங்கம்4.பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

வலிக்க வலிக்க யோசிப்போர் சங்கம்5. காபில சுகர் இருந்தா இனிக்கும்...
காலேஜ்ல ஃபிகர் இருந்தா இனிக்கும்...

காலேஜ் முழுக்க மொக்க ஃபிகரை பார்த்து, காபி ஷாப்பில் வருகை போடுவோர் சங்கம்6.இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்
ஆனா கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

கடலை போட ஃபிகர் இல்லாம அல்லல் படுவோர் சங்கம்7. உன் பெயரை கேட்ட உடனே தான் தெரிந்தது
உன் அப்பா, அம்மாவும் கவிதை எழுதுவார்கள் என்று

மனசாட்சி இல்லாம மொக்க கவிதை எழுதுவோர் சங்கம்8. உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

இப்படிக்கு போனை ரீ-சார்ஜ் பண்ண காசு இல்லாதவர்கள் சங்கம்9. ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14
அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14

ஃபிகர் கிடைக்காமல் புலம்புவோர் சங்கம்10. பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

ஃபுல்லை உள்ளே தள்ளி பஸ்க்கு காத்திருப்போர் சங்கம்11. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா?

மருந்து மாத்திர கொடுக்காம மொக்க போடுவோர் சங்கம்12. அண்ணன் ஃப்ரெண்ட அண்ணனா பாக்கணும்
அக்கா ஃப்ரெண்ட அக்காவா பாக்கணும்
அப்ப பொண்டாட்டி ஃப்ரெண்ட??

வில்லங்கமா யோசிப்போர் சங்கம்இந்த வருகைக்கான சங்கங்கள் முடிவுக்கு வருதுங்க... டஜன் சங்கங்கள் தான் என்னோட ஒவ்வொறு பதிவிலும் சொல்வேன்... ஏனா ஒரு நாளைக்கு 2 சங்கங்கள் தான் ஆரம்பிக்கணுமாம்... ஞாயிறு விடுமுற ஆதலால், கூட்டி கழிச்சி பாருங்க, கணக்கு சரியா வரும்... உங்களுக்கு பிடிச்ச சங்கங்கள வந்து கும்மி அடிச்சிட்டு போங்க... பிடிக்கலையா?? பரவால, 2 குத்து குத்திட்டு போங்க... எல்லாரும் சந்தோசமா இருங்க, லொல்லா இருங்க!!வருகைக்கு நன்றி!!

Sunday, 15 February 2009

இது காதலா? முதல் காதலா??

இன்றைய இளைஞர்கள் பலர் சினிமாக்காதலைப் பார்த்து, ஒரு மாயை உருவான காதலில் சிக்கிக்கொள்கிறார்கள்... பசங்க கிட்ட கேட்டா, யாரடி நீ மோகினி நயந்தாரா, கல்லூரி தமன்னா மாதிரி பொண்ணு வேணுமாம்.. பொண்ணுங்களுக்கு ஜில்லுனு ஒரு காதல் சூரியா மாதிரி வேணுமாம்... ஏன் பிதாமகன் சூரியாவ கட்டிக்க மாட்டீங்களா?? சினிமாவில் வரும் காதல் நிறய பேரோட மனதில் ஒரு வலிக்கப்பட்ட விசையை உருவாக்கியுள்ளது... காதல் பற்றி ஒரு தெளிவான கருத்து இதுவரை கூறப்படவில்லை.. அதனால் காதலை மையப்படுத்தி வரும் நிறய படங்களுக்கு மவுசு தான்... பெரும்பாலான காதல், திருமணத்தில் முடிய, அவற்றில் பெரும்பாலானவை விவாகரத்தில் முடிகின்றன... மாணவிகள் எல்லாம் மனைவி ஆகிறார்கள்... ஒரு படத்துல ஹீரோ போய் சொல்றாரு, ஹாய் மாலினி, ஐ அம் கிருஷ்ணன்... நான் இத சொல்லியே ஆகணும்... நீ அவ்வளவு அழகு... இங்க யாரும் இவ்வளவு அழகா.... ச்ப்ச்ப்ச்ப்.... இவ்வளவு அழக பார்த்து இருக்க மாட்டாங்க... அன்ட் ஐ திங்க், ஐ அம் இன் லவ் வித் யூ.. இத்தனைக்கும் அவர் அந்த பொண்ணு கிட்ட பேசுற மொத வார்த்த அது தான்... இத கேட்டு பெண்கள் நிறய பேரு சூரியா மேல பைத்தியமா இருந்தாங்க... அதுல இன்னொரு அக்கிரமம் ட்ரெயின்ல ஒரு பொண்ண பார்த்த உடனே காதல்.. இதுலா நிஜத்துல நடக்குமா? அப்டியே நடந்தாலும் அந்த காதல் வலுவா இருக்குமா??சினிமாக்காதல் எல்லாம் சிரிமாக்காதலாக இருக்கின்றது.. ஹீரோ ஹீரோயினை காதலிக்கும் சம்பவங்களே சிரிப்பா இருக்கும்.. அவன் ஊர் உலகத்திற்கு நல்லது செய்வான், அவ உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வாள்... இல்ல மழைல நனஞ்சாப்புல, அங்கங்களை காட்டும் ஒரு கிளு கிளு சாங்க்... சும்மா கிடந்த நாய தூக்கி கொஞ்சுனா லவ்வு.. இது தான் நாய்க்காதல்.. இல்லாட்டி வில்லன் கற்பழிக்க வரும் போது, ஹீரோ காப்பாத்துனா, லவ்வு... இந்த வில்லன் இருக்கானே, ஹீரோவோட தங்கச்சிய மட்டும் சீக்கிரமா ரேப் பண்ணிடுவான்.. ஹீரோ வீட்டு வெளியே, சாகவாசமா, டீ குடிப்பாரு.. ஹீரோயின் பல சமயம் வில்லனோட தங்கச்சி, பொண்ணா இருக்கும்.. சொந்த பந்தம் இல்லனா, வில்லன் கொஞ்ச நேரம் கபடி விளையாடி, சரியா புடவையை உருவும் போது, பல மைல் அப்பால உள்ள ஹீரோ சட்டுனு கண்ணாடிய உடச்சி உள்ள புகுந்து வில்லன் மூஞ்சில ஒரு குத்து... ஹீரோயின் கிட்ட, என் கடமைய தானே செஞ்சேன்னு ஒரு பிட்டு.. இதுவே மொக்க ஃபிகரா இருந்தா, நீ என் தங்கச்சி மாதிரினு பிட்டு... அப்றோம் இவர் ஹீரோயின கூட்டிட்டு போய், குஜால் பண்ணுவாரு.. டேய்.. வில்லனும் அதே தான் பண்ண போறான்.. அப்ப உனக்கும், வில்லனுக்கும் என்ன வித்தியாசம்? எகிறி குதித்து, அவள அலேக்கா தூக்கி, காதல் பண்ணனும்னு எல்லா பொண்ணுங்களுக்கும் ஆச இருக்கும்.. ஹீரோயின் முத்தம் கொடுக்குற மாதிரி நமக்கு நம்ப காதலி முத்தம் கொடுக்கணும்னு பசங்களுக்கு ஆச இருக்கும்... சில பேருக்கு மட்டும் தான், சினிமாவுக்கும், வாழ்க்கைகும் உள்ள வித்தியாசத்தை உணர்கின்ற மனப்பக்குவம் இருக்கும். ரிதம் மீனாவ பார்த்து, என் நண்பன் அது மாதிரி குழந்தயோட இருக்குற பொண்ணுக்கு வாழ்க்க தருவேன்னு சொன்னான்.. அது ஏன் உங்களுக்கு ஒரு படம் பார்த்தா இப்டி பண்ணனும்னு தோணுது.. சுயபுத்தி கிடையாதா?? ஏன் விஜயசாந்தி பறந்து சண்ட போடுறாங்க, அது மாதிரி பொண்ணு வேணாமா?? சினிமாவில் காதல் மிகைப்படுத்தி தான் காட்டப்பட்டுள்ளன... அதை சிலர் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த முனையும் போது தான் பிரச்சனை உருவாகின்றது... நிறய மனநல மருத்துவர்களிடம் ஆலோசனைக்கு வரும் தம்பதியர்களின் பிரச்சனை, அவர்கள் மனதில் சினிமாவைப் பார்த்து, இது மாதிரி ஆளு வேணும் என கட்டிவைத்த காதல் கோட்டை, அப்டி கிடைக்கப்பட்ட பின், அவை சந்தோச வாழ்க்கைக்கு அடிதளம் இல்லை என்று தாமதமாக உணர்கின்றனர்....நான் கூட சந்தோச சுப்பிரமணியம் படம் பார்த்து ஜெனிலியா ஹாசினி மாதிரி பொண்ண லவ் பண்ணனும்னு ஆச பட்டேன்.. ஆனா நிஜத்துல அது நடந்தா, எங்க வீட்ல அவ என்ன பத்தி போட்டுக்கொடுத்தா டண்டான டர்ணா தான்... சினிமாக்காதலில் வரும் நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்க்க சந்தோசமா இருக்கும்... படங்கள் பார்த்து, நம்ம காதலர் இது மாதிரி நமக்கு என்ன செய்வார்னு யோசிக்கறதுக்கு பதிலா, நாம அவருக்கு என்ன செய்யலாம்னு பார்க்கணும்... ஒரு காதல் முழுமை பெற சில வருடங்கள் ஆகும்.. அது பழகிய பின் தான் வருமே தவிர, பார்த்த உடனே, அழகில் மயங்கி காதல் தோன்றுவது காமம்.... காதலின் மகத்துவத்தை களங்கப்படுத்துவதற்காகவே பல ஜோடிகள் பார்க், தியேட்டர், பீச்ல இருப்பாங்க... நான் தி-நகர் டிப்போல பார்த்த காட்சி, ஒரு ஜோடி பொது இடம் கூட யோசிக்காம, 100 பேரு நம்பள பாக்குறாங்கனு விவஸ்த இல்லாம பசக்குனு ஒரு கிஸ் கொடுத்தான்.. அட அட அட.. என்ன காட்சி... காண ஆயிரம் கண்கள் வேணுமடா... முதல் இரவையும் அங்கேயே நடத்தி இருந்தா, இன்னும் சந்தோசப்பட்டு இருப்பேன்... தியேட்டருலே கூட நிம்மதியா படம் பாக்க விட மாட்டேங்கிறாங்க... கார்னர்-சீட் கிடச்சா போதும் இவங்களுக்கு.. அதுவும் மொக்க படமா பார்த்து கூட்டிட்டு வருவாங்க.. அப்ப தான் தியேட்டருல கூட்டம் கம்மியா இருக்கும்... ஒரு நாள் கல்லூரில இருந்து வெளிய அனுப்பிச்சிட்டாங்க (வழக்கம் போல).. வீட்டுக்கு போனா அம்மா மானப்பங்கலு படுத்துவாங்கனு, தலைவர் டி.ஆர். படமான வீராசாமிக்கு போனேன்.. என்ன செய்ய? நேரத்த ஓட்டணுமே... மொக்கனு தெரிஞ்சும் போனேன்... எண்ணி 35 பேரு கூட இருக்க மாட்டாங்க... முன்னாடி சீட்ல ஒரு பொண்ணு... அட தலைக்கு பெண்கள், அதுவும் கல்லூரி பெண்கள் கூட விசிறியா யோசிக்க, கொஞ்ச நேரத்துல, அவ பக்கத்துல ஒரு பையன் வந்து உக்கார்ந்தான்... கொஞ்ச நேரத்துல சத்தம் கேட்க, கிசு கிசு பேசுறாங்களோனு பார்த்தா, கிஸு கிஸு பேசுறாங்கய்யா.. அப்றோம் என்ன? எனக்கு படத்தில் தல பண்ணும் சில்மிஷத்த பாக்கவா, இல்ல இவங்க சில்மிஷத்த பாக்கவானு ஒரே குழப்பம்...பீச்க்கு போங்க... கடற்கரையில் பொங்கும் அலைகளின் நுரைகளில், காதல் என்ற பேரில் நடத்தும் ஜொல்லும் கலந்துள்ளது. பீச் பக்கம் போனா, தினமும் காமக்காட்சிகள், பரங்கமலை ஜோதி தியேட்டரோட தரிசனம். அண்ணா சமாதி, லைட் ஹவுஸ் ஃபுல்லா லவ்வர்ஸ் ஏரியா...  மணல் பரப்பெங்கும் கடலை நோக்கி கடலை போட்டுக்கொண்டு இருக்கின்றனர்... காதலனின் முகம் காதலியின் துப்பட்டாவில் மறைக்க, காதலியோ அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஹெல்மட் அணிந்து சிரிப்பும், சீண்டலுமாக காதலின் அர்த்தத்தை மணலில் புதைத்து, கடலில் அஸ்தியாக கரைக்கின்றனர்.சுத்தெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடலை சுடும் அவர்கள் எல்லாரும் நல்ல காதல் செய்றாங்கனு நினைக்காதீங்க... தள்ளிக்கீனு வந்தது, கள்ளக்காதல் இதுங்க தான் அதிகம். பீச்ல தான் எந்த கட்டண அனுமதியும் இல்ல... அதுனால காசு இல்லாத ஏழைக்காதலர்கள் இங்கு வராங்க. சுண்டல் விக்கும் சிறுவர்களின் வியாபார நுணுக்கம் இருக்கே... அட அட அட... “அண்ணா.. யக்கா.. 2 ரூவா தான் சுண்டலு.. வாங்கிக்கோங்க”னு அவங்க பேசுறதுக்கு முன்னாடியே சுண்டல மடிச்சி நீட்ட, பசங்க காதலி முன்னாடி அசிங்கப்பட கூடாதுனு வாங்கிப்பாங்க... இவங்க கை மண்ணுல இல்லாம பொண்ணு மேலயே தான் இருக்கும்... படகு அழகா இருக்கேனு போய் உக்காரலாம்னு பார்த்தா, காதலி மடியில் இவர் தலை வைத்து, உதடுகள் சங்கமித்து, அங்கே ஒரு சுனாமியே நடக்கும்... கடற்கரை பொது இடம்னு இவங்களுக்கு தெரியாதா? கேட்டா “பொது இட்த்துல குண்டு வைக்கலாம்... முத்தம் வைக்க கூடாதா? உன் வேலய பார்த்து போவீயா?”னு கேப்பாங்க.. இடுப்பில் கை வைத்து இறுக்கி, அணைத்த பின், வார்த்தைகள் எல்லாம் இல்லை... ஆக்‌ஷன் தான்... கையில் சிகரட் துண்டுகளுடன், கண்கள் இரண்டையும், நான்கு திசைகளுக்கும் சுழற்றி, அவற்றை ரசிக்கும் காதலி கிடைக்கா இளைஞர்கள்... எங்க தான் இருக்காளுங்க இவ்வளவு பொண்ணுங்களும், தளக்  தளக்னு?? நம்ம கண்ணுக்கு ஒருத்தியும் சிக்க மாட்டேங்கிறாளுங்க... அடுத்தவங்க அந்தரங்க விசயங்கள பாக்குறது தப்பு தான்.. என்ன செய்ய? மனுச மனுசு, வயசு... ஸ்வீட் எல்லாம் வச்சிட்டு அத சாப்பிடக்கூடாதுனா எப்படி? எனக்கு ஒண்ணும் சக்கர வியாதி இல்ல..அவர்களின் மன ஆறுதலுக்காகவே, கிளி ஜோசியமும், மந்திரக்கோலும்... “உங்க ரெண்டு பேரும் கைராசியும் என்னமா பொருந்துது? அடுத்த முகுர்த்தம் கல்யாணம் தான்... லஷ்மி படம் வந்துருக்கு.. நினச்சதெல்லாம் நடக்கும்...” என ஜோசியக்காரங்க கூற, காதலன் முகத்தில் ஏதோ நோபல் பரிசு வாங்குன மாதிரி சந்தோசமும், காதலி முகத்தில் வெக்கமும்... அட அட அட...காதலர் தினத்தன்று, கண்ணில் தென்படும் காதலர்களுக்கு கட்டாயத்திருமணமாம்.... கர்நாடகாவைச் சேர்ந்த ராம் சேனா அமைப்பினரின், சட்டத்தையும், சம்பிரதாயத்தையும் கையில் எடுத்துள்ள அறிக்கை இது... கல்யாணம் பண்ணிக்கிறதெல்லாம் அவங்க சொந்த விசயம், அத செய்ய இவங்க யாரு? ஒரு 2 வருசம் முன்னாடியே இவங்க கிளம்பிருந்தா, நான் நாள் முழுக்க எனக்கு பிடிச்ச பொண்ணு பக்கமே நின்னுருப்பேன்... வீட்டுல பிரச்சனையா? கல்யாணம் பண்ண காசு இல்லையா? உடனே ட்ரெயின் ஏறி, காசு இல்லனா, விட்-ஆவுட்ல கர்நாடகாவுக்கு போய், அவங்க கண்ணுல மாட்ற மாதிரி போய் நின்னுடுங்க.. சாதி, மதம் இவை எல்லாம் பெண்களுக்கு கட்டுப்பாடு விதித்ததை போல, இப்போ மதவாத அரசியலும்... கையில் ஆயுதங்களுடன் சுற்றும் இந்த மண்-மத ரௌடிகள், கலாச்சார காவலர்கள் என்ற பேரில் விட்டால், பெண்கள் ஆண்களுக்கு காய்கறி, பூக்கள் விற்கக்கூடாது, நர்ஸ் எல்லருமே ஆண்களுக்கு சேவை செய்ய கூடாதுனு சொல்வாங்க... ஓட்டு கேக்க வந்தா, நீ ஆம்பிள... நா பொம்பள.. உனக்கு ஓட்டு போட மாட்டேனு சொல்லுங்க...எனக்கு இந்த காதலர் தினம் மேல நம்பிக்கலாம் இல்ல... உண்மையா காதலிக்கிறவனுக்கு, அதுக்குனு ஒரு நாள் எல்லாம் தேவ இல்ல... ஆனா காதல்ங்கிற பேருல இவங்க பண்ற லொல்லு தான் தாங்க முடில.. இப்ப கூட பாருங்க, நண்பன் ஒருத்தன் குறுந்தகவல் அனுப்பியுள்ளான்.. அத நான் 10 பேருக்கு ஃபார்வட்  பண்ணா, என் காதலும், அவன் காதலும் வெற்றி பெறுமாம்.. டேய்.. புடலங்கா.. நான் சனிகிழமை யாரையும் அசிங்கமா திட்டுறதில்ல... காதல் வெற்றி பெறணும்னா, உன் காதலிக்கு மெசேஜ் பண்ணுடா.. அதுக்கு ஏன் எங்க தூக்கத்த கலைக்கிறீங்க?? 


காதலை பொதுஇடத்தில் காம லீலைகளாக மாற்றாதீர்கள்னு அறிவுறுத்துற மாதிரி சொல்லணுமே தவிர, அச்சுறுத்துற மாதிரி சொல்லாதீங்க... மக்கா உண்மையா காதல் செய்றவங்களுக்கு, ஆள கழட்டி விடாம, கடசி வரைக்கும் வாழ எண்ணுபவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்... மத்தவங்களுக்கு நேரா ரூமுக்கோ, இ.சி.ஆருக்கோ உங்க வண்டிய ஓட்டுங்க பா... 

வந்தது தான் வந்தீங்க.. நாலு லொல்லாவது பண்ணிட்டு போங்க எஜமான்... எல்லாரும் குஜாலா இருங்க... அதே சமய லொல்லாவும் இருங்க...


வருகைக்கு நன்றி!!

 
Thursday, 12 February 2009

தோஸ்து படா தோஸ்து: பகுதி-2

பகுதி-1 மிஸ் பண்ணிட்டீங்களா?இங்க சொடுக்குங்க... பகுதி-1

 

என்ன G3 அக்கா?? நம்ப கில்ஸ் அண்ணாவ இப்படி வாரிட்டீங்களே??   நான் அந்த தபாலுல சொல்ல வந்தது "என்ன தான் சிற்பத்திற்கு வெவ்வேறு உருவம் இருந்தாலும்அதை சிலைனு தானே கும்பிடுறோம்.. அதுபோல,, கில்ஸ் அண்ணா என்ன தான் தமிழை ஆங்கிலத்தில் போட்டாலும்,, எனக்குள்ளே பராவல்ல தமிழில் பதிவு போட்டா கூட படிக்கிறாங்களேனு ஒரு ஆர்வத்த தூண்டியது... ஹி ஹி.. கில்ஸ் அண்ணா ஒ.கே.வா?   நம்ப மீட்டர அப்டியே மறக்காதீங்க... ஏன்கா??  என் பதிவுல அடக்கி வாசிக்கணும்?  ? நல்லா சத்தமாவே, சவுண்ட் சரோஜா அக்கா மாதிரி அடிச்சி விடுங்க.. நான் கவலைப்பட மாட்டேன்... 100 குத்து குத்துனாலும் நான் அசர மாட்டேன்.. நான் ஒரு ப்ளாக் அரசியல்வாதி.. உங்கள் ஓட்டு எனக்கு தேவை...


சரி... இப்ப நம்ப மேட்டருக்கு வருவோம்... நம்ப ஸ்குலு, காலேஜு, ஏரியா பசங்க பத்தி இப்ப பாக்கலாம்...

 

பிட்டு: இவன் தேர்வுக்கு பிட் அடிப்பான்னு இந்த பேரு வைக்கல.. தம்பிக்கு பொழுதுபோக்கு பிட் படம் பாக்கறது தான்.. பிட்டு படம்னா என்னன்னு தெரியாதவங்க எனக்கு மின்னஞ்சல் தட்டி விடுங்க.. விலாவரியா பேசலாம்.. எப்பவுமே ஒரு உணர்ச்சி வேகத்தோட தான் இருப்பான்.. இப்டி தான் பாருங்க, நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாட்ட பார்த்து, “மச்சி செம பிட்டுடானு கத்துவான்... ஸ்குல் படிக்கும் போது நல்லவனா தான் இருந்தான்.. ஸ்குல் ப்ரஸ்ட்லா வருவான்.. எங்ககூட சேர்ந்த உடனே கேக்கவா வேணும்???

 

ஜேஜே: இதுல அவன் பேரோட ஒரு பகுதி ஒளிஞ்சி இருக்கு... எனக்கு இவன் தல.. ஏனா என்ன விட பெரியவன்.. கல்லூரி முடிச்சி வேல பாக்குறான்.. வாழ்க்கைலே எப்பவுமே சக்சஸ் தான் இவனுக்கு.. மிடாஸ் டச்னு ஆங்கிலத்துல சொல்வாங்க.. அது இவனுக்கு பொருந்தும்... போன வருசம் சும்மா GRE எழுதுனான்.. 1330 மார்க் எடுத்துட்டான் பயப்புள்ள.. இத்தனைக்கும் முந்தின இரவு டாஸ்மாக் கடைல கனவு கண்டுகிட்டு இருந்தான்.. ஆனா ரொம்ப நல்லவன்.. எனக்கு பணப்பற்றாக்குறை வரும் போதுலா இவன் தான் ஸ்பான்சர்..

 

மெசஜ் மாமா: உங்க போனுக்கு மெசஜ் வேணுமா?? ?? இவனை அணுகவும்.....  நான் ஸ்டாப் மெசஜ் செர்விஸ்... வோடபோன், , ஏர்டெல், ஏர்செல் பி.எஸ்.ன்.ல்(BSNL),  ரிலையன்ஸ், , அட இப்ப வந்த விர்ஜின் எல்லா சிம்மும் இவன் வசம்.. எல்லாரும் மெசஜ் காசு ஆக்குன உடனே “பிச்சக்கார பசங்க.. 5 பைசாக்கு என்னலா பண்ணுறாங்க பாரு திட்டினோம்... ஆனா நாங்க சந்தோசப்பட்டோம், இவன் தொல்ல இனிமேல் குறையும்னு... ஆனாலும் கொய்யால ரேட் கட்டர் (RATE CUTTER) போட்டு எங்க உசிர வாங்குறான்.. இப்டி தான் ஒரு நாள் லவ் மெசஜ் ஒன்ன 7 வாட்டி அனுப்பிச்சிட்டான்.. அடுத்த நாள் அவன்கிட்ட கேட்டா, “இல்ல மச்சி.. ஒரு நாளைக்கு 300 மெசஜ் ஃப்ரில.. நேத்து கொஞ்சம் கம்மியா அனுப்பிச்சிட்டேன்... ஆனா போட்ட காசுக்கு கணக்கு காட்டணும்ல?? அதான் தெரிஞ்சே அனுப்புனேன்.. ஒரு வழியா 300ம் காலி ஆச்சு இப்டி எங்கள காலி பண்ணுவான்...

 

 

கடல: அட்டு பிகரா?  சுமார் பிகரா? சூப்பர் பிகரா?? ஒரு பொண்ணையும் இவர் விட்டு வைக்க மாட்டாரு.. இவன் ஆர்குட் ப்ரொபைல் (PROFILE) பாருங்க.. 567 தோஸ்துங்க.. அதுல 512 பொண்ணுங்க... மவராசன் வஞ்சனை இல்லாம எல்லா தேசத்து பொண்ணுங்க கிட்டயும் நேச கரம் நீட்டி, நோகாம, நேரம் போகற்து தெரியாம,  பொறுமையா, அருமையா கடலை வறுப்பாரு... ஒவ்வொரு கண்டத்திலும், இவருக்கு ஒவ்வொரு தோழிகள்... மவனே நீ என்னைக்கு கண்டம் ஆக போறேனு தெரில... நெட்ல வர காதல் கவிதைகள், நட்பு கவிதைகள், பார்வட் மெசஜ் எல்லாத்தையும் சுட்டு , இவர் எழுதுன மாதிரி ஃபில் கொடுப்பான் பாருங்க, அட அட அட.. அத கண்டுபிடிச்சி சில பொண்ணுங்க சீ சீ னு அவன அசிங்கப்படுத்தும் போதும், கலங்காம “மாமா.. தினமும் புதுசா ஒரு ஃபிகர் இந்த உலகுல உருவாகும் போது, நம்ப வண்டி பிரச்சனை இல்லாம ஓடும்.. எவ்வளவோ அசிங்கப்பட்டுருக்கோம்.. இதுலா ஜுஜுபிடா.. கடல போட்டு அசிங்கப்படுறவன் மனுசன்... அதையும் தொடச்சிட்டு, தொடர்பவன் வீரன்.. நான் வீரன்  பன்ச்லா வைப்பான்...

 

 

தோழர்: ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நல்லவன் இருப்பான்.. எப்படி தாரணி அக்கா கூட்டத்துல வடிவு அம்மணியோ, இங்க இவன்.. பையன் எங்ககூட சேர்ந்து இன்னும் கெட்டு போகல.. உலக அதிசயம் இல்ல?? ?எங்கள்ல சிலர் பேசும் போது 5 வார்த்த பேசுனாஅதுல கண்டிப்பா ஓ**, பா* போன்ற அழகிய தமிழ் வார்த்தைகள் சரளமா இடம் பெறும்... ஆனா இவன் அசிங்கமா பேசி நாங்க கேட்டதே இல்ல.. பயங்கரமா கலாய்ப்போம், வெறி ஏத்துவோம்.. க்ளாஸ்ல இருக்குற மொக்க பிகர இவனுக்கு கோத்து விடுவோம்.. அசர மாட்டான்.. அன்னைக்கு ஒரு நாள் டென்சன் ஆகி போடா மயிரு திட்டினதுக்கு நாங்களா ட்ரீட் (TREAT) வச்சி கொண்டாடுனோம்னா பாத்துக்கோங்க... எங்க கூட்டத்திற்கு இவன் ஒரு அடிமை.. ஆங்.. இவன் ஏன் தோழர்னு தெரியுமா?? ?பாக்க கோலங்கள் சீரியல்ல வர தோழர் பாலகிருஷ்ணன் (கோலங்கள் பாக்காதவங்க காலையில் 8 மணிக்கு மெகா டி.வி. பாருங்க.. பழய பாடல்கள வழங்குவாரு) மாதிரி இருப்பான்... ஆனா பேச்சு எல்லாம் தொல்காப்பியன் மாதிரி.. தத்துவம் மாமாஸ்... என்ன யோசன??? ? ஆமாம்.. பயங்கர படிப்பாளி.. நாங்க தேர்வுக்கு முந்தின இரவு தான் படிக்க ஆரம்பிப்போம்.. இவன் க்ளாஸ் தேர்வுக்கே படிச்சிட்டு வருவான்.. தேர்வுக்கு 15 நாள் முன்னாடி படிக்க லீவ் விடுவாங்க.. அதாங்க STUDY HOLIDAYS..  நாங்க ஊர் பொறுக்க, இவன் புத்தகம் பொறுக்குவான்.. அறிவாளி.. தேர்வுக்கு முன்னாடி ஒரு 5 கேள்வி சொல்லி கொடுப்பான்.. அதுனால தான் என்னால பாஸ் ஆக முடியுது.. இப்ப இவன் அடிமை இல்ல தெய்வம்...

 

அஜித்: க்ளாஸ்ல பாவப்பட்ட அஜித் விசிறி.. எனக்குலா அஜித்த கலாய்கற்து அல்வா சாப்டுற மாதிரி... இவன் விஜய கலாய்கிறேனு ஆரம்பிக்க, நா போட்டு அஜித்த வார, கொஞ்ச நேரத்துல,  ஈடு கொடுக்க முடியாம, இவன் அமைதியாடுவான்... பேரு தான் அஜித்து.. ஆனா பாக்க தங்கர் பச்சான் மாதிரி இருப்பான்.. ஒரு விசயத்திற்கு பக்காவா ப்ளான் போடுவான்... ஆனா கடசிலே ப்ளான் போட்ட அவனே மீட்டிங்கு வரமாட்டான்... அஜித் படத்திற்கு எப்டி தியேட்டர்ல கூட்டம் குறைவோ அது மாதிரி வகுப்புல இவனோட வருகையும் குறைவா தான் இருக்கும்.. கல்லூரிக்கு வந்த நாட்கள விட லீவ் போட்ட நாட்களே அதிகம்.. ஏனா ஊருல எந்த நோய் வந்தாலும் மொத இவன தான் தாக்கும் (அப்டினு சொல்லி லீவ் போடுவான்) டெங்கு, சிக்கன் குனியா,,  வயித்தி வலி, டைப்பாய்டு சொல்லிட்டே போகலாம்.. இப்டி தாங்க பொங்கலுக்கு ஒரு வாரம் லீவ் விட்டாங்க... அடுத்த ஒரு வாரம் ஆளே காணும்.. என்னடா கரும்பு, ஸ்நாக்ஸ் சாப்டு ஒடம்பு சரியில்லாம போச்சானு விசாரிச்சாஅவனுக்கு பொங்கல் குனியாவாம்...

 

டான்: இவன் சாருக்கான் விசிறி.. ஆனா ஹிந்தி தெரியாது.. பேருக்கேத்த மாதிரி இவன் ஒரு டான் மாதிரி செயல்படுவான்... அதுக்குனு எல்லாரையும் போட்டு பின்னி பெடல் எடுக்க மாட்டான்.. சொப்ளாங்கி பையன்... இந்த வட்டத்துல இவன் என்ன செய்றானு யாருக்குமே தெரியாது.. ஜேஜேக்கு மட்டும் ஓர் அளவுக்கு விளங்கும்.. ரொம்ப ரகசியமா செயல்படுவான்.. தேர்வுக்கு படிக்க மாட்டான்.. ஆனா பாஸ் பண்ணுவான்... ஊர் சுத்த கூப்டா வருவான்... இன்னும் இவன எங்களால புரிஞ்சிக்க முடில...

 

மொக்க: காதுல ரத்தம் வராத குறையா மொக்க போடுவான்.. இவன் கூட எதிர் மொக்க போட்டா, நாம காலி.. அதுக்கும் சட்னு கவுன்டர் கொடுப்பான்.. ஒரு சம்பிள்

ஒருத்தன்கிட்ட ரிசல்ட் வந்த உடனே கேட்டோம், “மச்சி.. ரிசல்ட் என்ன ஆச்சு??

கரண்ட் (அதாது இந்த செமஸ்டர் பேப்பர்) போச்சுடா..

கவலைப்படாதே... மறுகூட்டல் போடுடா...

உடனே அவன் வந்து, கரண்ட் போச்சுனா ஏன் மறுகூட்டல் போடணும்??E.B.OFFICEகு போன் போடு... இல்ல ஒரு 2 மணி நேரம் வெயிட் பண்ணு... இப்ப மின்சார பற்றாக்குறை... அதுனால கரண்ட் போக தான் செய்யும்...

 

அவ்வ்வ்வ்வ்வ்வ்... முடில?? இதுமாதிரி நிறய இருக்கு...

 

விஞ்ஞானி: இயற்பியல், வேதியியல், கணிதம் எல்லா தேர்வுலயும் நிறய மார்க் எடுப்பான்.. ஆனா கையெழுத்து மோசமா இருந்ததால, ஆங்கிலம், தமிழ் இந்த ரெண்டு பேப்பர்ல மட்டும் டண்டானா டர்ணா... பயங்கர மூளக்காரன்.. இவன்கூட தான் பைக்ல சுத்துவோம்... ஆர்குட்ல கடல போடுவதற்கே சில பசங்க அவங்க PROFILEல போன் நம்பர் போடுவாங்க.. போரடிச்சா அவனுகளை கலாய்க்க இவன் தான் குரு... அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகள் எல்லாத்தையும் நச்சுனு, மூச்சு உடாம பேசுவான்.. எதிர் முனைல மூச்சடச்சி போய், போன நிறுத்தி வச்சிடுவாங்கனா பாருங்களேன்...

 

இது தான்பா இந்த மொக்க கூட்டம் பத்தின அறிமுகம்... அடுத்து வர போற தபால்ல, இவங்க பண்ண லொல்லுகள உங்க கூட பகிர்ந்துக்கிறேன்... என்னது? இவங்க ஆளுங்கள பத்தி சொல்லவே இல்லையா??  ஆமாம்.. நாங்க எல்லாம் சூரியா, விஷால், , ஜெயம் ரவி மாதிரி அழகான ஆண்கள் பாருங்க.. எங்கள சுத்தி பொண்ணுங்க கூட்டம் மாதிரி மொய்க்கும்.. யித்தெரிச்சல் கிளப்பாதீங்க... இந்த கூட்டத்துல காதலி உள்ள ஒரே ஆளு ஜேஜே தான்.. பாக்க அழகா இருப்பான்.. மூத்தவர் வேறயா??? அதான்... மத்தவங்களுக்கும் காதலி இருக்காங்க... ஆனா அது அந்த பொண்ணுங்களுக்கு தெரியாது.. தெரிஞ்சும் அவங்க எங்கள லவ் பண்ணல...

 

ஆண்டவன் கெட்டவங்களுக்கு..   ஆயிரம் ஃபிகர் தருவான்.. ஆனா அத்தனையும் அட்டு பீசா தருவான்...

நல்லவங்களுக்கு    ஒரு பிகர் தருவான்... ஆனா அதுவும் க்கெட்டா(GETHU) சம பிகரா தருவான்...

 

இதான்க வாழ்க்கை.. இது தான் காதலர் தினத்திற்கு,  காதலி இல்லாம, சிங்கிளா சிங்கம் மாதிரி இருக்கறவங்களுக்கு என்னோட மெசஜ்.. எப்படி??? நச்சுனு ஒரே தபால்ல 2 மேட்டர் சொன்னோமா???


குஜாலா, லொல்லா இருங்க.... மறக்காம லொல்லு பண்ணிட்டு போங்க...


வருகைக்கு நன்றி!!

 

Blogger templates

Custom Search