Tuesday, 20 January 2009

வில்லு- சம டல்லு

புதன்’s குறைப்பார்வை:


விஜய் நடிப்பில் ஜேம்ஸ் பாண்ட் படம்... ஹா ஹா ஹா.. ஐயோ.. என்ன கேக்கவே சிரிப்பாவும்,  அதிர்ச்சியாவும் இருக்கா? ? அதை 158 நிமிசம் எடுத்தா??  அதான் வில்லு.. ட்ரைலர் செமயா இருந்துதேனு படத்துக்கு போனா??? கத என்னா பெரியா புடலங்கா கத.. விஜய் படத்துக்கு கதய கேக்குறது டு-மச்..    அப்பாவை கொன்ன வில்லன் கோஷ்திய பையன் பழி வாங்குற 4009வது படம்.. வருசா வருசம் மழை வருதோ இல்லையோ,  இந்த கதைல ஒரு 15-20 படம் வரும். இந்த வருசம் முத படம் வில்லு.. கொஞ்சம் எம்.ஜி.ஆர் பார்முலா,  நிறய தெலுகு பார்முலா.. இதுல அப்பாக்கு மிலிட்டரி ஆபிசர், பய்யனுக்கு முல்லமாரி வேசம்.. போக்கிரி டீம் கூட்டணி. அதுனாலே படம் ஃபுல்லா போக்கிரி ஹங்-ஓவர்.. போக்கிரி 2 பாதியோனு சந்தேகம் வர அளவுக்கு பாட்டு,  சண்டை,  சில காட்சிகள் எல்லாதுலயும் கிட்டத்தட்ட அதே பீல்...

 

தியேட்டர்ல ரசிகர்கள்லா விஜயோட அறிமுகம் எப்படி இருக்கும் யோசிக்க, சுட்டி டிவி கணக்கா,  500 அடி பறந்து வராரு.. அதுவும் கொள்ளகாரன் மாதிரி முகமெல்லாம் புடவைய சுத்திகிட்டு.. கேட்டா போக்கிரி மேன்.. இது கொஞ்ச நாள் முன்னால நெட்ல உலவ விட்ட விடியோ காட்சிகள்.. அத பாத்தே சிரிச்சாங்க.. மாத்தி வச்சி இருக்கலாம்.. புருஸ் லியா,  ஜெட் லியாஅண்ணன் கில்லிடானு பன்ச் வச்சி,  வில்லனை பஞ்சர் ஆக்குராரு.. கடசிலே சிவனேனு கிடந்த சுறா மீன எடுத்து, ஒருத்தன் முதுகுல குத்துறாரு.. ஐயோ அம்மா... அப்டினு நாங்க கத்தல.. அடுத்து என்ன?? ஒ ஓ ஒ ஓ ஓ ஒ ஒ ஓ ஓ ஓ ஆமாம் பாட்டு தான்.. ஆனா போக்கிரி அளவுக்கு குத்தாட்டம் இல்லனாலும் தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டத்துக்கு குறைவில்லை... நடுவுல குஷ்பு வந்து ஒரு ஆட்டம் போட்டு,  அதிர்ச்சி அலையை உருவாக்குறாங்க... விசிலு சத்தம் காதை பொலக்க மச்சி படம் தாறுமாறுடானு நண்பனுக்கு குறுந்தகவல் தட்டி விட்டேன்.

 

அப்டியே அழகான கிராமத்துக்கு படம் நகர,  அங்கே நயந்தாரா,  வடிவேலு நகைச்சுவையால முதல் பாதி நகருது.  தூத்துக்குடியிலிருந்து முனீச்ஜெர்மனிக்கு தாவி மீண்டும் சென்னையில் முடிகிறது. முதல் பாதி வரை பிரச்சனை இல்லாம,  வடிவேலு நகைச்சுவை,  நயந்தாரா கவர்ச்சி (ஆபாசம் கூட சொல்லலாம்) என போற படம்,  2வது . பாதில ரெண்டு விஜய் பண்ற காமெடியால களையிழந்து போகுது. அதுலயும் பறக்குற ஏரோப்ளேன்ல இருக்குற சாவிய எடுத்து கடல்ல போட்டு வில்லன சாவடிக்கிற வித்தை டேய்.. இது என்ன அவர் சைக்கிளா? , சாவி எடுத்து விளையாட? பாரசூட்டை அலேக்காக தன்னோட சட்டைல பதுக்கி வச்சி,  சரியா நயந்தாரா படகுல குதிச்சி,  அடுத்து என்னபா?? ஃபைட் அப்றோம் பாட்டு தானே? ? பீச்ல நயந்தாராவோட ஜல்சா பாட்டு.. போங்கப்பா நீங்களும்,  , உங்க காமெடியும்! இதை விட கடசி 15 நிமிச சிரிப்பு கலந்த சீரியஸ் க்ளைமாக்ஸ் தான் படத்தோட மிகப்பெரிய மைனஸ்.. மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தளபதி, இயற்கையின் உதவியால்,  மணற்புயல் மூலமா வெளிய வர காட்சி, இயக்குநரின் அதி புத்திசாலிதனத்திற்கு ஓர் உதாரணம்.. எப்படிலா யோசிக்கிறாங்க???? விஜய் ரசிகர்களே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. மரண மொக்கயான  சொதப்பல் முடிவால்,  கில்லி மாதிரி வெளிய வர வேண்டிய ரசிகர்கள்,  வெளிரிய முகத்தோடு டல்லாக வந்தார்கள்.

 

விஜய் ரசிகர்களுக்கு நல்ல தீனி.. நடனம்குறும்புத்தனம், கல்யான வீட்டில நடனம் ஆடிக்கொண்டே சண்டை என பின்னி பெடலுடுத்துதனக்கு இட்ட பணியை நன்றாக செய்துள்ளார். அப்பா- மகன் இரு வேடத்தில் மகன் தான் டாப்பு... அப்பா விஜய் சிரிப்பு..  சிக்ஸ்-பேக்,  ஹர் ஸ்டைல் வித்தியாசம் காட்டாம,  மிலிட்டரி சட்டை,  முறுக்குன மீசை என மெனக்கெடாமல் செய்துள்ளார்.. வாரணம் ஆயிரம் சூரியாவ கொஞ்சம் பாத்து பண்ணி இருக்கலாம்... இல்ல அப்பாவா வேற யாரவாது போட்டு இருக்கலாம்... போக்கிரி போலிஸ் வெற்றியால பிரபு தேவா யோசிக்கல போல.. அதயே வாட்ச்-மேன்னு கிண்டல் பண்ணவங்க,  இந்த சோல்ஜர் கெட்-அப்ப சும்மா விடுவாங்களா? ? மேஜர் விஜய்யும்,  அவரோட ஃப்ளாஷ்பேக்கும் தான் படத்தோட இன்னொரு மேஜர் மைனஸ்.

 

நயந்தாரா தான் நாயகினு தெரிஞ்சதாலே என்னவோ, தியேட்டர்ல எப்பவுமே விஜய் படத்துக்கு இருக்கும் தாய்மார்கள்,  பெண்கள்,  குட்டீஸ் கூட்டம் மிஸ்ஸிங்.. அம்மணி நடிக்க கத்துக்கணும்.. பொருளாதார நெருக்கடில சம்பளம் குறைக்க தயக்கம்.. ஆனா ஆடைக்குறைப்புல நயந்-தாராளம்.. மேடம்,  நீங்க நடிப்பு கத்துக்கறதுக்கு முன்னாடி,  ஒரு ஆடை வடிவமைப்பாளரை பாக்கறது நல்லது.. படத்துக்கு படம் ஆடை குறையுது.. இப்படியே போனா,  அடுத்த 2 படத்துல???  சீ சீ

 

படத்தோட ஓரே,  மிகப்பெரிய பலம் வடிவேலுவின் காமெடி.. அவரையும் ரெண்டாவது பாதில வீணாக்கித்தாங்க.. வடிவேலுவோட அறிமுகமே சூப்பரா இருக்கு.. இதே மாதிரி விஜய்க்கும் யோசிச்சி இருக்கலாம்லே???? ஆனா மாட்டு காமெடி எரிச்சல்.. அதே மாதிரி வாயை உவ்வென்று குவித்து இன்னும் எத்தனை படம் தான் பீல் பண்ணுவாருனு தெரியல.. ரூட்ட மாத்துங்க சார்.. இல்லனா யாராவது வீட்டுல கல்லடிக்க போறாங்க!

 

இசை இன்னொரு பலம்.. தெலுகு வாடை அடித்தாலும்,  தாளம் போட வைக்கிறது... ஆனா போக்கிரி எஃப்பெக்ட்லேயே எல்லா பாடலையும் படமாக்கியது மிகப்பெரிய மைனஸ்.. நீ கோபப்பட்டால் பாடலில் 5 விஜய் ஆடும் நடனம்,  படமாக்கிய விதம் அருமை.. பின்னணி இசையில கோட்டை விட்டுட்டாரு தேவி ஸ்ரீ.. விஜய் படம்னா அதிர வேணாமா? ? ரஷ் பாக்கும் போது தூங்கிகிட்டே போட்டாரா? ? தசாவதாரம் ரவி வர்மனா கேமரா??? என்னப்பு சம்பள பிரச்சனையா? ? சண்டை,  பாடல் காட்சிகளில் சல்லி அடிக்குது கேமரா கோணங்கள்.

 

பழகுன பாவத்துக்கு பிரகாஷ் ராஜ் வில்லன்.. அநியாயத்திற்கு வீண் ஆக்கிட்டாங்க.. மற்ற கேரக்டர்கள்லா கல்யாண வீட்டுல தலைய காட்டுன கணக்கா,  உள்ளேன் அய்யா கோஸ்திகள்..

 

படம் முடிஞ்சி வெளிய வரும் போது ரசிகர்கள் பச்சயா திட்டுறாங்க!

 

1: மச்சி, படம் வில்லு இல்லடா... *லு மாதிரி இருக்கு

2: பாண்ட் படம் எமாத்திட்டான்டா,... சரியான *டு படம்

3: 300 ரூபாய்க்கு ப்ளாக்ல வித்தவன தேடுங்கடா..

4: நயந்தாரா பிட்டுக்கு காசு சரியா போச்சு

5. பயப்புள்ள சண்ட சீன்ல நல்லா சிரிக்க வச்சான்டா

 

என்னைப்போல பல நொந்த உள்ளங்கள் உலகம் முழுதும் இருக்கும் என்று நம்புகின்றேன். குருவி கொடுத்த அடியை மறந்து திரும்ப அதே தவறை செய்துள்ளார்.. நான் எம்.ஜி.ஆர் ரூட்ல போறேன்னு சொல்ற விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படும் விஜய் அவர்களை மாதிரி நல்ல திரைக்கதை உள்ள படத்தை மொதல்ல தேர்வு செய்ங்கணா... அடுத்து சிறுபுள்ள தனமான சண்டை காட்சிகள் வைக்காம, நல்ல ஸ்டண்ட் மாஸ்டரை தேர்வு செய்ங்கணா.. முக்கியமா உங்க அப்பா பேச்ச கேக்காதீங்கணா.. இருந்தாலும் போஸ்டர் அடிச்சி படத்தை ஓட வைப்பீங்க... ஆனா விஜய் இனிமேல் கவனமா பயனப்பட வேண்டிய நேரம் இது.. ரசிகர்களுக்கே வில்லு புடிக்கல.. இதே ரேஞ்ச்ல போனா அடுத்து ஹாட்-ரிக் ஃப்லாப் தான்.. உங்களுக்கு வில்லு ஒரு எச்சரிக்கை மணி..

 

வில்லு.. சுல்லுனு பாய்ந்து,  குறி தவறி எங்கேயோ விழுந்து போச்சு


35 பூச்செண்டுகள்


பி.கு: இந்த படத்துக்கு பதிலா புத்தக கண்காட்சிக்கும்சென்னை சங்கமத்திற்கும் சென்றவர்கள் பல்லாண்டு வாழ்க!!!

 

வருகைக்கு நன்றி!!

23 comments:

Lancelot said...

siluva present

ஆளவந்தான் said...

//
நடுவுல குஷ்பு வந்து ஒரு ஆட்டம் போட்டு, அதிர்ச்சி அலையை உருவாக்குறாங்க.
//

அதிர்ச்சி அலையா... இல்ல மலையா? :)

ஆளவந்தான் said...

//
வில்லு.. சுல்லுனு பாய்ந்து, குறி தவறி எங்கேயோ விழுந்து போச்சு
//
எங்கேயும் போகல.. ரசிகர்களின்.. கு... சே.. நெஞ்சுல குறிபார்த்து பாஞ்சுடுச்சாமே

G3 said...

Me the third :)

ஆளவந்தான் said...

நீ கில்லாடி ராசா.. அப்டியே அவன திட்டுற மாதிரி திட்டி... கடேசியில லேசா ஒரு டச் குடுத்திட்டியே மக்கா.. நல்லாயிரு ராசா :)

G3 said...

Namma oorla vijay padathaiyum innum theatrela poi paakara nallavanga neraya per irukkeenga pola :P

En team mate andha padathukku porennu sonnappovae enda indha suicide attemptnen.. hehe.. ticket kaasu annadhu.. car uncle dhu eri okkandha kootittu poga poraangannu dialogue uttaan.. marunaal return vandhu kadharinaan paarunga oru kadharal.. neeyae ippadina selavu panna ungannan eppadida irukkarnu ketta.. avan leave pottu veetla okkandhu azharaan g3 ngaraan :D

viji said...

i enjoyed the way u describe the movie. antha padathe kandipa pakanum le..

ps: tupparathuku

ஆளவந்தான் said...

//
அமெரிக்கா கண்ணு அடிச்சிசாம்
சு(SHOE) சு(SHOE) மாரி சு சு மாரி
//

எந்த படத்தோட பாட்டு இது????????

Narayanan said...

which college da

Ajai said...

Padam naa first naal paarthen... Sema mokka.. theatre la VIJAY fanse aludaanga!!! Climax la konja per velinadappu senjithaanga!! Inda padam paaka poravangalukku anacin, novacin, crocin maathiraigalai free ah thandha nalla irukkum!!

Ramar kitha villa ketaaru

bhima kitha ghadaya ketaaru

Pradhu deva kitha kadaiya ketaara??

விஜய் said...

போக்கிரி படத்தைப் பார்த்த பிறகு இனி வாழ்ழ்கையில் விஜய் படத்தை டிருட்டு டி.வி.டி’ல கூட பார்க்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துட்டேன். அதனால் நான் பிழைத்தேன் :-)

பி.கு. போக்கிரியைப் பார்த்ததே அசினுக்காகத் தானே :-)))

ஷாஜி said...

/இருந்தாலும் போஸ்டர் அடிச்சி படத்தை ஓட வைப்பீங்க...//

---இந்த உண்மைய சொன்னதற்காக SAC&Co உங்கள தேட ஆட்டோ அனுப்பி இருக்காங்களாம்.

(பி.கி: BAKERY-னு கலாச்சதுக்கே விஜய் டி.வி.ய உண்டு இல்லனு ஆக்குனவங்க..நீங்க கொஞ்சம் உசார இருங்க தம்பி..)

அன்புடன்
உங்கள் நலம் விரும்பி..

Aparnaa said...

Film was average!!! Edhukku nee ippadi kindal panni irukka?? Vijay pidikalana padam paakada!! Kilambitte iru!!! Inga vandhu kalaikirenu mokka podadha!!!

ஷாஜி said...

@aparna:

same to you aparna...

(Review was Mokkai!!! Edhukku nee ippadi Comments panni irukka?? review pidikalana padhiva padikada!! Kilambitte iru!!! Inga vandhu comments naanum podurenu mokka podadha!!!)

Karthick Krishna CS said...

i condemn.. review is not neutral...

Lancelot said...

innama aparna unku theriyaatha namma puthan periya vijay fannu...

@ kaki

naina yaara parthu neutral illanra nee??

Divyapriya said...

செம லொள்ளு review about வில்லு :)

ஆனா அதென்ன கடைசியில 35 பூச்செண்டுகள்? புரியல...

ஆளவந்தான் said...

//
Divyapriya said...
செம லொள்ளு review about வில்லு :)

ஆனா அதென்ன கடைசியில 35

//
இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா.. இந்த படத்துக்கு விமர்சனம் எழுதினதே பெரிய விசயம்.. இதுல உங்க கேள்விக்கு வேற பதில் எழுதணுமா...

சரி.. நானே சொல்றேன்..

அது மக்கு...சே.. மார்க்கு.

Anonymous said...

review la kalakiputtinga appu :)
trailer nalla irundhudha.. bhrathiyar get up la vijay ah paatha vudane mudivu panniten.. padam flop nu.. kadasi vari enaku serum.. book fair.. sangamam rendukum ponnen :)
but padikkathavan kum poiten :(

MayVee said...

bharat ratna for you for seein ths movie

ஆளவந்தான் said...

//
MayVee said...
bharat ratna for you for seein ths movie
//

nobel prize for writing this post :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

miga miga arumayaana vimarsanam. kalakkiteenga..naan innum villu paakkala...paakira maadhiriyum illa...but enna nadandhu irukkumnu velcicham poattu kaati irukeenga :)

vijay panra lollu thaanga mudiyala...super start aaganumnu yaendaan ippadi kola veriyoda irukkanungannu therila...ozunga padam edunganna cartoon padamae nalla irukkum pola....pattaa dhaan puriyum ivanungalukku

ஆளவந்தான் sonna maadhiri, niceaa varthaigala thoova vittutu escape aanadhu semma lollu lol

-- kittu mama

Swamy Srinivasan aka Kittu Mama said...

@Ajai
//Ramar kitha villa ketaaru
bhima kitha ghadaya ketaaru
Pradhu deva kitha kadaiya ketaara??//

haha kalakiteenga. kaetaa dhaan buddhi vandhu irukkumae

infact i also remember another joke from one my telugu friend. seems like they were seeing a movie directed, choregraphed, dialogues etc etc being credited to lawrence and one of the audience in the movie has yelled, "you idiot. you should also credit yourself to be the only audience in the movie" as the movie was so bad lol

-- kittu mama

Blogger templates

Custom Search