Sunday, 18 January 2009

சைபிரியா பறவையும், வெள்ளை பூனையும்

வணக்கம் கண்ணு.. எல்லாரும் நல்லா இருக்கீங்களா??  ஊட்டில நமக்கு சொந்தமா ஒரு பண்ணை வீடும்தோட்டமும் இருக்குலே.. அதுனால அங்கிட்டு போய் கொஞ்ச நாள் தங்குனதாலே உங்களுக்குலா கத சொல்ல முடியல.. சரி திரும்ப வந்துட்டோம்லே.. என்ன கத சொல்லலாம்னு யோசனல மூழ்குனப்ப, அங்க நடந்த ஒரு சுவாரசியமான விசயத்தையே உங்களுக்கு கதயா சொல்றேன்.. (டேய் உலக மண்டையா.. மொத நீ கதய சொல்லு... அது சுவாரசியமா இல்லையானு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்)

 


சைபிரியாவின் குளிர் தாங்க முடியாம, அங்கிட்டுருந்து கிளம்பி, வெயிலான பிரதேசம் தேடி பறக்க ஆரம்பிச்சிடு அந்த பறவை (பறவை முனியம்மால இல்ல.. அது நம்ப சிலுவயோட ஆளு..) அந்த பறவை பாக்கவே வித்தியாசமா இருந்ததாலே, அது என்ன வகையறானு தெரில கண்ணு.. வயித்துக்குள்ள போக போற பறவை இரை.. அதுல பாக்க கூடாது வகை.. எப்படி கண்ணு என் சோக்கு கலந்த கவிதை? சரி கதைக்கு வருவோம்.. இது கொஞ்சம் சோம்பேறி பறவ.. நாட்கள கடத்தியதால், , பயங்கர பனிப்பொழிவுக்கு நடுவே பறக்க ஆரம்பிச்சிது.. சிறகுகளுல வேற பனித்துளிகள் ஒட்டிக்கிச்சு கண்ணு.. நடுங்குற குளிர்ல நாமலே சிரமம் படும் போது,, அது சின்ன பறவ.. தாக்குப்பிடிக்க முடியுமா கண்ணு? அதுனால பறக்கவே முடில.. ஒரு வழியா கஷ்டப்பட்டு, ஊட்டிக்கு வந்துடிச்சி.. இங்கிட்டு தான் விதி சதி செஞ்ச மாதிரி, , சிலுவயோட தம்பி, , அறுவ (அவன் குணாதியசத்த சொல்லலபா.. உண்மையிலே அவன் பேரு அறுவ.. அறுவா ஆறுமுகம்... அத சுருக்கி அறுவ) வந்தான்.

 

இந்த பறவைக்கு காதல் தோல்வி வேறயா... இந்த அறுவ எப்பவுமே ரோட்ல குடிச்சிட்டு விழுந்து கிடப்பான்.. அப்டி ஒரு நாள் கிடந்தப்ப, ,  அவன் பாதி சரக்கு பாட்டில குடிக்காம அப்டியே மயங்கி கிடந்தான்.. அந்த வழியா வந்த பறவ, காதல் தோல்வி, , பறக்க கஷ்டம் இப்டி ஒரே வேதனையா இருந்ததாலே, , அவன் சரக்குல, கொஞ்சோண்டு குடிச்சிட்டு பறக்க ஆரம்பிச்சிடு.. மனுசன் நாமலே குடிச்சா தில்லாலங்கடி, டண்டணா டர்ணா தான்.. பாவம், ... சிறு பறவை.. , தாங்குமா கண்ணு.. ? ஒரு கட்டத்தில் பறக்க முடியாம,, அப்டியே நம்ப பண்ணைலே விழுந்துது. புல்வெளில விழுந்ததால,  உடல் முழுக்க ஒட்டியிருந்த பனி அப்டியே அத மூடிக்கொள்ள, , உறஞ்சி போய் , , செத்து போன மாதிரி கிடந்தது கண்ணு..


அங்கன மேஞ்சினு இருந்த நம்ப மாடு அது மேல சரியா சாணம் போட்டிச்சி.. சாணம் சூடா இருக்கும்லே.. அந்த கதகதப்பில பனியெல்லாம் கரைய,,   கொஞ்ச கொஞ்சமா உடம்புல அசைவு வர ஆரம்பிச்சிடு கண்ணு... ரொம்ப நாள் கழிச்சி வெப்பத்தை அனுபவிச்ச சந்தோசத்துலயும் கொஞ்ச போதையிலும், ,,  , அது தன்ன மறந்து பாட ஆரம்பிச்சிடு.. அங்க நாம வளக்குற பூன , , நல்லா வெள்ள வெளிர்னு அழகா இருக்கும் கண்ணு.. இந்த சத்தத்தை கேட்டு ,,  பூன அங்கன போய் ஒரு அமுக்கு அமுக்கி அந்த பறவய கொன்னுடிச்சி.. நமக்கு வந்துச்சி பாரு கோவம் கண்ணு.. பூனய சம மாத்து மாத்தி , , தொறத்தி , நம்ப வேலக்கார பயபுள்ள ராமசாமிய கூப்டு,    செத்து போன பறவய எடுத்து , சுத்தமா அத கழுவி மதியானத்துக்கு வறுவல் பண்ணி சாப்டேன் கண்ணு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இன்னும் நெஞ்சுலேயே இருக்கு.. சம டேஸ்ட்ல??

 

லொல்லு தீர்ப்பு: விதச்சவன் ஒருத்தன், அனுபவிச்சவன் ஒருத்தன் கணக்கா,  பூனயோட இரய அதுக்கு தராம, அது கூட மல்லு கட்டி சண்ட போட்டு திருடி சாப்டுருக்கீயே.. நீ எவளவு பெரிய டகால்டி டா ஒல்ட் நாட்டாம.. படுவா ஓடிப்போய்டு...

 

நாட்டாம தீர்ப்பு: நம்ம மீது அசிங்கத்தை வாரி இறைப்பவர்கள் எல்லாரும் நம் எதிரிகள் இல்ல அது மாதிரி அவலமான இடத்தில சிக்கியிருக்கும் போது நம்மை மீட்பவர்கள் எல்லாருமே நம் நண்பர்கள் இல்ல.. அசிங்கமான ஒரு சூழலில் சிக்கியிருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருப்பதே புத்திசாலித்தனம் கண்ணு...


நா வரட்டுமா?? ஏலே பசுபதி.. எட்ரா வண்டிய..

அஅஆஆஆஆஆஅஅஆஆஆஆஆஆஆஆஆஆஅ


வருகைக்கு நன்றி!!

5 comments:

Lancelot said...

siluvathan firstu...

Lancelot said...

ஏய் பெர்ஸு ஏன் முனிம்மா வா எப்போதும் வம்புக்கு இழுக்குறா...மவனே அது மேல உனக்கு ஒரு ஐ ஆ? நம்ம தம்பிய இன்ட்ரோடியூஸ் பண்ணத்துக்கு ரொம்ப தாங்க்ஸ் பா...இந்த கதைல வர குருவி பேரு என்ன விசய் ஆ???

நட்புடன் ஜமால் said...

லொள்ளும் அதுக்கு பின்னே உள்ள ஜொள்ளூம் ஜூப்பரூ ...

Divyapriya said...

சத்தியமா ஒன்னும் புரியல :((

ஆளவந்தான் said...

//
அசிங்கமான ஒரு சூழலில் சிக்கியிருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருப்பதே புத்திசாலித்தனம் கண்ணு
//
மூஞ்சியில எரியப்பட்ட சாணிய துடைச்சுகிட்டே... அமைதியா இருக்கனும் :)

Blogger templates

Custom Search