Wednesday, 7 January 2009

மைலோ வித் பாப்பு- விஜய்க்கு ஆப்பு: பகுதி-2

சென்ற அரட்டையில் டி.ஆர். அவரை கலாய்த்து விட்டதால் கோபம் வந்து சென்று விட்டார். அந்த கண் கொல்லா சே சே.. கொள்ளா காட்சியை மிஸ் பண்ணியவர்கள் இங்கிட்டு கிளிக் செய்யவும்.

(பாப்பைய்யா செய்த சமாதனத்தால் டி.ஆர். திரும்ப வந்தார்)

டி.ஆர்:

என்மேல பாசம் வச்சி கூப்பிட்டார் பாப்பைய்யா

இனிமேல் என்ன எதிர்த்து பேசுனா வைப்பேன் ஆப்பைய்யா

 

(கவுண்டமணி குரலில்) அசிங்கப்பட்டான் தாடிக்காரன்.. ஹே ஹே.. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நானும் வெளிய சொல்ல மாட்டேன்.. நீயும் சொல்லாத.. ஹே ஹே...

டி.ஆர்: 2 படம் ஊத்திக்கிச்சி.. அடுத்த படமாவது ஓடுமா???

பாப்பைய்யா: எங்கைய்யா? ...தியேட்டர விட்டு வெளிய ஒடுறதா?

டி.ஆர்: அது போன 2 படம்... இப்ப வரப்போற வில்லு தியேட்டர்ல ஒடுமா???

பாப்பைய்யா: அப்படி தெளிவா சொல்லு தம்பி..

விஜய்: அண்ணா... நிறுத்துங்கணா... என்னோட எல்லா படமும் ஹிட் தான்ணா.. கடசியா ப்லாப்(FLOP) ஆன படம் உதயாணா..

பாப்பைய்யா: தம்பி.. அப்ப அழகிய தமிழ் மகன், குருவி படத்துல நடிச்சது யாரு??

விஜய்: நான் தான்ணா.. அதுலயும் அழகிய தமிழ் மகன் படத்துல டபுள் ஆக்டிங்ணா..

(கவுண்டமணி குரலில்) டேய்.. இந்த டகால்டி வேல நம்ப கிட்ட நடக்காது மகனே.. உன் ஒரு ஆக்டிங்கே இங்க பாக்க முடில.. இதுல நீ டபுள் ஆக்டிங் வேறயா?

டி.ஆர்: உன் படத்துக்கு அசிங்கமான தமிழ் மகன் அப்டி பேரு வச்சி இருக்கலாம்.. அவளவு கேவலமான படம்.. 10 நிமிசம் கூட பாக்க முடில

விஜய்: (டி.ஆரை பார்த்து சிரித்துக்கொண்டே.., 2 கையையும் மேலே உயர்த்தி, ..ஆடியன்ஸ் பார்த்து) கேவலமான படத்த பத்தி யாரு பேசுறது பாருங்கண்ணா.. (பாப்பைய்யாவை நோக்கி) அண்ணா.. நீங்களே அந்த படத்த பாத்துட்டு என்கிட்ட நல்லா இருக்குனு சொன்னீங்கல.. 2 ஆப்ல(HALF).. ஞாபகம் இருக்கா??

(கவுண்டமணி குரலில்) மாப்பிள.. ஆனாலும் இவன் ரொம்ப நல்லவன்.. இவ்வளவு வயசான ஆள கூட அண்ணா அண்ணா அப்டினு கூப்டுறான் பாரு..

பாப்பைய்யா: தம்பி.. நா நமிதா வந்தத நல்லா இருக்குனு சொன்னேன்..ஹி ஹி.. அதுலயும் உன் கூட பீச்ல போட்ட டான்ஸ் சூப்பர்யா.. படத்துல எனக்கு அது ரொம்ப பிடிச்சி இருந்துதுலே.. சட்டர்டே நைட் பார்டிக்கு போகலாம் வரியா?நா வரேன்லே..

டி.ஆர்: பார்டிக்கு போக போறீங்கலா? ?? பாட்டி கிட்ட சொல்லவா?

பாப்பைய்யா: ஏன்யா உனக்கு வயித்தெரிச்சல்?? உனக்கு தான் மும்தாஜ் இருக்காங்கலே? .. போய் அவங்க கூட ஆடுய்யா..

டி.ஆர்: உன் குருவி படம் ஊத்திக்கிச்சில?

விஜய்: அண்ணா.. நீங்க இந்தியால தான் இருக்கீங்கலா? படத்தோட 150வது நாள் வெற்றி விழா கூட நடத்தி முடிச்சாச்சு.. குருவி மெகா ஹிட்ங்ணா..

(டென்சன் ஆகி முடியை சிலுப்பி)

குருவி படத்துல நீ பறந்து பண்ண சண்ட

அதுனால காஞ்சி போச்சு என் மண்ட

(கவுண்டமணி குரலில்)படுவா.. இப்படியே பேசுன வறண்டு போகும் உன் தொண்ட

டி.ஆர்: போடாப்

பாப்பைய்யா: நிறுத்துயா.. பெண்கள், குழந்தைகள் எல்லாரும் இருக்காங்க... தப்பித்தவறி வார்த்தைய விட்டுடாட தம்பி.. அப்றோம் கும்மி அடிக்க வரவங்களும் ஓடிடுவாங்க.. இந்த இடமே மகளிர் ஓட ஆதரவால தான் கஸ்தப்பட்டு போகுது..

டி.ஆர்: புண்ணாக்குனு சொல்ல வந்தேன்..

பாப்பைய்யா: பயந்துட்டேன்லே.. ஆனா ரைமிங் மிஸ் ஆயிடிச்ச்சே..

டி.ஆர்: ரைமிங் மிஸ் ஆனாலும் டைமிங் மிஸ் ஆகாது..

பாப்பைய்யா: பின்றய்யா.. இவருக்கு வருவோம்.. படம் ரீலிஸ் ஆவதற்கு முன்னாடியே 100வது நாள் போஸ்டர் அடிக்கிறது நீங்க தானே தம்பி.. அந்த போஸ்டர் வீணாக கூடாதுனு தானே நீங்க படத்த ஓட்டுறீங்க.. வில்லுக்கு போஸ்டர் ரெடியாப்பா? எவ்வளவு நாள்?100? 200?

விஜய்: அண்ணா.. நாங்களா நேர்மையா படத்த ஒட்றவங்கண்ணா..

டி.ஆர்: தம்பி.. உன் படத்த பாக்க முடியாம ஆப்பரேட்டர் கூட அழுவுராருபா.. உன் படம் முதல் வாரம் காமெடி படம்.. அடுத்த வாரம் திகில் படமா இருக்கு.. ஏனா யாரும் பாக்க வரர்தில்ல.. ஆப்பரேட்டர் படத்த போட்டுட்டு கான்டீன்ல போய் சமோசா சாப்டுறாரு

விஜய்: அண்ணா.. என் படத்த விட உங்க படம் சம காமெடி.. முதல் ஷோல,,,.. அதுவும் முதல் காட்சில இருந்தே தியேட்டர் சிரிப்புல அதிரும்ங்ணா..

டி.ஆர்: தம்பி.. நீ என் படத்த தியேட்டர்ல பாத்துருக்கியா?ச்சிருக்கேன் நா வச்சிருக்கேன்.. மச்சான் உன்ன மனசுக்குள்ள வச்சிருக்கேன்... அந்த பாட்டுக்கு நா ஆடும் போது ரசிகர்கள் திருவிழா கண்ட மாதிரி கை தட்டி ரசிச்சி ஆடுவாங்க..

விஜய்: அண்ணா... அது கை தட்டி ரசிக்கிறவங்க இல்ல... கை கொட்டி சிரிக்கிறவங்க.. இருட்டுல கண்ணு தெரியல உங்களுக்கு..

(கவுண்டமணி குரலில்) சூப்பரப்பு... சூப்பரப்பு

டி.ஆர்: யோவ்.. மியுசிக்னா என்ன தெரியுமா??

விஜய்: (டி.ஆரை பார்த்து சிரித்துக்கொண்டே,.. , 2 கையையும் மேலே உயர்த்தி.. , ஆடியன்ஸ் பார்த்து) மியுசிக் பத்தி எனக்கு என்ன தெரியும்? தாடி அண்ணாக்கு நம்பல பத்தி தெரியல போல.. அண்ணா.. என் படம் ஹிட் ஆகுதோ இல்லையோ.. , பாட்டு தான் பர்ஸ்ட் ஹிட்.. மியுசிக் சேனல், .. கல்யாண வீடு, திருவிழா.. இது மாதிரி எந்த விழா நடந்தாலும் நம்ப பாட்டு தான்..

பாப்பைய்யா: கரெக்ட் தம்பி.. இவரு பாட்டு எல்லாம் அசத்த போவது யாரு, .. கலக்க போவது யாரு இது மாதிரி காமெடி நிகழ்ச்சில தான் போடுவாங்க.. ஐயா டி.ஆரு.. உனக்கு இசை பத்தி தெரியுமா? எல்லா படத்தலயும் டண்டனக்கா தானா??

டி.ஆரு: (முடியை சிலுப்பியபடி) ஐயா... குத்து வேணுமா? (விரலில் சொடுக்கு) டண்டர் டண்டக்.. டண் டண்.. டங்குணா டங்குணா.. வெஸ்டர்ன் வேணுமா? ஜிம்பு ஜக்.. ஜம்பு ஜக்.. ஜிஞ்ஜானா.. ஜிஞ்ஜானா.. உம்கு டக் அம்கு டக்... மெலடி வேணுமா? ந நா நா... ம மா மா.. ஆ ஆ.. ல ல.. வா வா.. இந்த மியுசிக் போதுமா??

(கவுண்டமணி குரலில்) ஐயோ ஐயோ.. (அழுதுக்கொண்டே) ராமா ராமா.. நா அப்பவே சொன்னேன்,.. வரமாட்டேன்னு.. கேட்டீயா?பாட்டும் நீயே.. பாவமும் நானே.. ஐயோ ஐயோ..

பாப்பைய்யா: போதும் பா உன் பாட்டு.. நீ நிப்பாட்டு.. அடடா.. உன் கூட சேந்து எனக்கும் தொத்திக்கிச்சிலே..

டி.ஆர்: சரி.. நேத்து வந்த உனக்கெல்லா எதுக்கு அரசியல் ஆச??

விஜய்: எப்ப வந்தேங்கறது முக்கியம் இல்ல.. புல்லெட் எப்படி இறங்குறது தான் முக்கியம்..

பாப்பைய்யா: என்னய்யா புல்லெட், .. கட்லெட்னு.. இப்படிலா வன்முறைய தூண்டுற மாதிரி பேசுனா, .. ஜெயில போட்டுடுவாங்க..

விஜய்: பன்ச் டயலாக் சொல்லி ரொம்ப நேரம் ஆச்சுங்ணா.. அதான்

டி.ஆர்: அப்ப 2011ல நீ தான் முதலமைச்சரா??

விஜய்: அந்த பெரிய ஆசலா எனக்கு இல்ல.. அதுக்குத்தான் நீங்க, சரத்குமார், .. விஜயகாந்த் அண்ணால இருக்கீங்களே.. நா எதுக்குண்ணா??

பாப்பைய்யா: அப்ப 2016ல வருவீங்களா தம்பி??

விஜய்: அது உறுதியா சொல்ல முடியாதுங்ணா... ஆனா ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்..

(அப்போ ஒரு குரல் கைப்பேசியில் பேசியபடியே உள்ளே நுழைய)

சொல்லுங்க.. இப்போ தான் நிதின் சத்யா வச்சி பந்தயம் வெற்றிகரமா போச்சு.. எல்லாரும் அடுத்த படம் எப்போன்னு கேக்குறாங்க.. அவ்வளவு எதிர்பார்ப்பு.. நிதின் மாதிரி விஜய் போற்றும் நடிகர்கள் இருந்தா ஆரம்பிக்கலாம்.. நம்ப சிபிராஜ், ஜெய் ஆகாஷ், ஸ்ரீகாந்த் இவங்கலா கால்சீடோட ரெடியா இருக்காங்க.. இல்லனா ஒரு புதுமுகம் வச்சி கூட ஆரம்பிக்கலாம்.. ஆமாம் ஆமாம்.. அடுத்து அரசியல் தான்.. 2011ல நம்ப பையன் தான்.. நீங்க தான் உள்துறை அமைச்சர்.. இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம்.. அடுத்து மும்பை குண்டுவெடிப்புக்கு எதிர்ப்பு, .. பொருளாதார வீழ்ச்சி இதுக்கு உண்ணாவிரதம், .. பேரணி, .. மனித சங்கலி இப்படி எல்லாத்தயும் பண்ணலாம்... ஆமாம் ஆமாம்.. கோவை, .. மதுர.... , சென்னை எல்லாத்துலயும் ஆளுங்க ரெடி... நெல்லை, .. ஈரோடு நீங்க பாத்துக்கோங்க... அடுத்த வாட்டி கூட்டம் பெருசா, வெள்ளமென இருக்கணும்.. சரியா??

விஜய் (முகத்தில் பீதி): அஅஅ.. அண்ணா.. இதோட நிகழ்ச்சியோட முடிச்சிக்கலாம்.. அப்பா வந்துட்டாரு.. அப்றோம் நா இன்னும் அசிங்கப்படணும்... அஅஅ.. அப்ப நா கிளம்புறேன்.. அவரு இன்னொரு உண்ணாவிரதத்துக்கு ப்ளான் போடுறாரு.. போன வாட்டியே அவரு மட்டும் நல்லா சாப்டு என்ன பட்டினி போட்டுடாருங்ணா.. இதுக்கு மேல என் உடம்பு தாங்காதுங்ணா.. எஸ்கேப்...

(பயத்துடன் விஜய் ஓட)

பாப்பைய்யா: இவர திருத்துறதுக்கு பதிலா இவங்க அப்பாவ திருத்துனா இந்த நாள் மட்டும் இல்ல வருடத்தில் எல்லா நாளும் இனிய...  நாளா இருக்கும்.. பிறகு சந்திப்போமா? போகறதுக்கு முன்னாடி எல்லாரும் லொள்ளு பண்ணிட்டு போங்க..

12 comments:

G3 said...

Naan dhaan pharshta???

G3 said...

:))))))))))))))

Karthick Krishna CS said...

i think ur gonna attack ajith next. thats wy for a safety, to show u as a neutral, lik alibi, u r taking on Vijay. anyway, i doubt u'l accept... i liked the first part better... nice try... all d best...

arun said...

evanaium vidratha illa pola iruku..nalla timing kuduthu eludhi iruka..adutha manrathuku simbhu va varavai..T.R vida avar inum putu putu vaipaar..

SUREஷ் said...

// ஒரு வேளை அப்படி இருந்தால் அது உண்மையே.. இந்த வலைப்பூவை படிப்பதன் மூலம், ... உங்களின் அறிவு மூளை எழுத்தாற்றல் நகைகள் ஏதேனும் தொலைந்து போனாலோ களவாடப்பட்டாலோ அதற்கு தொகுப்பர் பொறுப்பில்லை//


சூப்பருங்கண்ணா....

நட்புடன் ஜமால் said...

கவுண்டமனி பார்ட் - அருமை.

ஆளவந்தான் said...

//
பாப்பைய்யா: பின்றய்யா.

அது ரொம்ப பிடிச்சி இருந்துதுலே

நா வரேன்லே.
//
பாப்பைய்யாவின் TradeMark வசனங்கள் எல்லாமே பொருத்த்மா இருந்துச்சு..


//
முதல் வாரம் காமெடி படம்.. அடுத்த வாரம் திகில் படமா இருக்கு.. ஏனா யாரும் பாக்க வரர்தில்ல..
//
செம நக்கலு ஆமா


உன்னோட இந்த புது template நல்லா இருக்கு.

ஆளவந்தான் said...

உன் விருப்பப்படி பொல்லாதவன் விமர்சனப்பதிவு போட்டாச்சு

swathi paul(dew drop) said...

en vijay melle evvalo kovam??????

Divyapriya said...

// இந்த இடமே மகளிர் ஓட ஆதரவால தான் கஸ்தப்பட்டு போகுது//

அப்டீங்களாண்ணா? :))

// இவர திருத்துறதுக்கு பதிலா இவங்க அப்பாவ திருத்துனா இந்த நாள் மட்டும் இல்ல வருடத்தில் எல்லா நாளும் இனிய... நாளா இருக்கும்..//

ROFTL :-D

Lancelot said...

சாரி பா லேட்ஆ வந்தத்துக்கு முனிம்மாக்கு உடம்பு முடில பா அதான் லேட்... நீ மெய்யலுமே விசய் ரசிகன் தானா? இல்ல இப்படி லந்து விட்டுறுக்க? அசித் கிட்ட காசு வாங்கிக்கினியா? பாவம் நொந்தசேகர் கஷ்டப்பட்டு படம் எடுக்களம்னு பார்த்தா அவராயும் காலாய்கீற...மெடர் தெரியுமா உனக்கு? நிதின் சத்யா சிந்து துகிளுரித்த தானி கூட நடிக்கணும்னு தான் இந்த படத்த ஒத்துக்கிட்டாராம் பாக்கி படி விசய் ரசிகர் எல்லாம் கிடையாது...எந்த மூளை உள்ளவானாவது அவனுக்கு ரசிகணா இருப்பானா? (உண்ண சொல்லல பா :P)

ஷாஜி said...

/எந்த மூளை உள்ளவானாவது அவனுக்கு ரசிகணா இருப்பானா? //

--இது யாருக்கு???????????

Blogger templates

Custom Search