Monday, 26 January 2009

டாப் 10 அரசியல் படங்கள்: பகுதி- 2

சென்ற வாரம் 10ல் இருந்து 6 வரை உள்ள படங்களை பார்த்தோம். அந்த நிகழ்ச்சியை மீண்டும் பார்க்க, பார்க்காதவர்கள் அதை முதலில் படிக்க இங்கிட்டு சொடுக்கவும்- பகுதி-1

 

5. கண்ணாமூச்சி ஏனடா

 

அம்மா சிறந்த எதிர்கட்சியாக செயல்பட்டாரா என்பதற்கான விடையை இந்த படத்தில் காணலாம். கேப்டன் விஜயகாந்தின் வளர்ச்சி கொஞ்சம் ஆட்டம் காண வைத்தாலும், அதை எதிர்கொள்ள, இளைஞர் பாசறையை நடத்தியது திரைக்கதையின் புத்திசாலித்தனம். ஆனால் படம் முழுக்க மைனாரிட்டி தி.மு.க அரசு,  மூத்த தலைவர் என்ற மரியாதை இன்றி கருணாநிதி என அழைப்பது, ,  இப்படி ஏக போக வசனங்கள் சலிப்படைய வைக்கின்றன.. பென்சில் திருடிய வழக்கில் தி.மு.க உறுப்பினர் கைது, நிஷா புயலுக்கு தி.மு.கவின் மெத்தன போக்கே காரணம் என அறிக்கை விட்டு, அதை ஆதரிக்க பாப்பாபட்டி, ஆண்டிப்பட்டி, அரசம்பட்டி,  .. இப்படி பட்டி, தொட்டி கிராமத்து உறுப்பினர்கள் எல்லாம் டி.வி.யில் தோன்றி தி.மு.க ராஜினாமா செய்ய வேண்டும் என பேச வைக்கும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன.. முக்கித்திணறும் மூன்றாவது அணி,  குருவாயூரில் யானை தானம், கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு, சிறுதாவூரில் நிலப்பிரச்சனை என சம்பந்தமே இல்லாமல் வரும் காட்சிகள் படத்தின் பின்னடைவு.


மொத்தத்தில் கண்ணாமூச்சி ஏனடா – புதுசா எதுவும் இல்லடா

 

 

4. சண்டை


சட்டப்புத்தகத்தை கையில் எடுக்க வேண்டிய மாணவர்கள், சட்டத்தை கையில் எடுத்த வித்தியாசமான படம். பட்டம் வாங்க வேண்டிய நேரத்தில், தேர்வுக்கு மட்டம் போட்டு, கையில் ஆயுதங்களுடன் திட்டமிட்டு வட்டமாக சூழ்ந்து கொண்டு, தங்கள் பசங்களை கட்டம் கட்டிய திகில் கலந்த ஆக்‌ஷன் படம்... வழக்கம் போல சட்டம் தன் கடமையை செய்ய வைத்த காக்கி சட்டைகள் கொடுத்தது அதிர்ச்சி. “எதுவுமே செய்யலயே, ,  ஏன்யா என்ன பதவி மாற்றம் செஞ்சீங்க?? என கமிஷனர் புலம்பும் போது "நீ எதுவுமே செய்யல... , அதுனால தான் உன்ன மாத்துறோம் என்று பஞ்ச் வைக்கும் இடத்தில் தியேட்டரில் கரவொலி.. உனக்கும் எனக்கும் சண்ட, உடய போகுது மண்ட குத்துப்பாடல், பலரின் கைபேசியில் காலர் ட்யுனாக இருக்கு. சாதிப்பிரச்சனையால்,  கல்லூரியை பாதி ஆக்கியது, பயங்கர பொருட்செலவு ஆகியவை மைனஸ்


மொத்தத்தில் சண்டை – நல்லதுக்கே இல்ல

 


3. பிரிவோம் சந்திப்போம்

 

 நண்பர்களான அய்யாவும், கலைஞரும் கோபித்துக்கொண்டு எதிர் எதிர் துருவங்களாக மாறி, பின் மீண்டும் சேர்வார்களா என்ற கேள்வியோடு முடியும் படம். தொடகத்திலேயே இருவரும் பிரிவார்கள் என்று தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும் எப்படி, எதை காரணமாக வைத்து பிரிவார்கள் என்ற பரபரப்பு படம் முழுக்க இருந்தது... ஆரம்பத்திலிருந்தே அனைத்து விசயங்களுக்கும் அய்யா முட்டுக்கட்டை போடுவது ஒரு கட்டத்தில் கலைஞருக்கும், நமக்கும் கடுப்பை உண்டாக்கினாலும்,  ஒரு வேளை இதை காரணமாக வைத்து பிரிவார்களாஎன்று ஒவ்வொரு பிரச்சனைக்கும் ரசிகர்களை யோசிக்க வைத்தது திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி.. திடீரென்று ரசிகர்கள் யுகிக்கா இடத்தில் காடுவெட்டி குருவை வில்லனாக்கி, அவரை காரணம் காட்டி பிரிவது, அதிரடி திருப்பம்... சி.டி.யை காட்டி அறிவியல், விஞ்ஞானம் கூறியதற்க்கு சபாஷ். எதிர்தரப்பில் சேர்ந்தால் மரியாதை கிடைக்குமா, தனியாக நின்றால் சாயம் வெளுத்து விடுமே என ஐயா தயங்கி மீண்டும் சேர முயற்சிக்கும் காட்சிகள் திரைக்கதையின் ஓட்டை.. இணைவோமா என இருவரின் கண்களும் நோக்க “காலம் தான் பதில் சொல்லும் என முடிப்பது டைரக்டர்s  டச்.

 

மொத்தத்தில் பிரிவோம் சந்திப்போம்- அய்யாவின் வழக்கமான அறிவோம்-மறவோம்

 


2. நாயகன்

 

தனது கொள்கைகள், உணர்ச்சிகள் அனைத்தையும் விட்டுக்கொடுத்து அம்மாவின் துதி பாடும் வை.கோ.வின் நடிப்பில் வந்த படம்- நாயகன். 1978லே டால்ஸ்டாய் சொன்னார், நான் மெக்சிகோ செல்கையிலேயே என ஆரம்ப காட்சிகளில் அவர் பேசும் வசனங்களுக்கு நல்ல வரவேற்பு. தமிழீழத்தைக் காக்க இவர் செய்யும் முயற்சிகளும், அதற்கு நேர்மாறாக அம்மா இருக்கும் காட்சிகளும், எங்கே இவர் தன்னோட முயற்சிகளை கைவிட்டு விடுவாரோ என்று ரசிகர்கள் யோசிக்க, அமைதியாக குரல் கொடுப்பது நல்ல யுக்தி. ஆனால் முதல்வரை வசை பாடுவடும், அம்மா செய்யும் சிறு விசயங்களுக்கு கூட அவரை பாராட்டி பல பக்கம் வாழ்த்து மடல் படிப்பது எரிச்சல். அடிக்கடி காணாமல் போய், சேனல்களில் இவரை காமெடியனாக மாற்றும் காட்சிகள் பாவம். ஒபாமா பற்றி புத்தகம், சிறையில் தனது நாட்கள் புத்தகங்கள் படைத்து, அதை பலர்  கண்டுகொள்ளாமல் விட்டது பரிதாபம். கடைசி காட்சியில் ஒரு சிறுவன் “நீங்க கூட்டணியில் இருக்கீங்களா? இல்லையா?? கேட்க, டன் டன் டன் டன் என பின்னணி இசை ஒலிக்க, அவர் அழுவ, கல் நெஞ்சையும் கரைய வைக்கும்.

 

மொத்தத்தில் நாயகன்- திரையில் கொஞ்ச நேரம் வரும் சாதாநாயகன்

 


1. பாசக்கிளிகள்

 

சந்தேகமே இன்றி சென்ற வருடம் மிகப்பெரிய ஹிட், ஒரு குடும்பத்தின் பாசப்போராட்டம்- பாசக்கிளிகள். தாத்தா, மகன், பேரன் என அழகான பெரிய குடும்பம். தண்ணீரில் கல் வீசினாலும், சலனம் ஏற்படாத பாசப்பிணைப்பில் சிக்கியிருக்கும் குடும்பத்தில், ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் புயல் ஏற்படுவது திடுக். இதை ப்ளாஸ்பேக்காக வைத்த இயக்குனருக்கு சபாஷ். மூத்த மகன் எதிர்க்க, இளைய மகன் ஆதரிக்கஇருவருக்கும் பதில் சொல்ல முடியாமல், தலைவர் கலங்கும் காட்சிகள், நெஞ்சை கணமாக்கும். தொடர்ந்து பேரன்கள் செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட, பொறுத்தது போதும்... நம்ப வியாபரத்துல கைய்ய வைக்குறாங்குளே! என பேரன்கள் பதிலடி கொடுப்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. தாத்தாவின் செயல்களின் உண்மைகளை பேரன்கள் தங்கள் சேனல் மூலம் வெட்ட வெளிச்சமாக்க,, அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுவது- வேசம் களஞ்சி போச்சு பாட வைக்கின்றன. திடீர் ஹீரோ ஆன ஆ.ராஜாவை, ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம், ஆஆஆஆஆ.ராஜாவாக்கும் காட்சிகள் பலே பலே.. இதனால் குடும்ப விரிசல் பெரிதாகும் என எல்லாரும் எண்ண, சடாரென்று கோபாலபுரத்தில் ஒரு மீட்டிங் போட்டு, அனைவரும் ஒன்று கூடி, சமாதனப்படலத்தில் வெற்றி பெற்று, குடும்ப பாடல் பாடி இணைவது மயக்கம் வர வைக்கின்றது கண்கள் பனித்தது, இதயம் கனத்தது என தாத்தா தன் பாணியில் டச்சிங் வசனம் கொடுக்க,  “போதும் நடித்தது, நெஞ்சு வலிக்குது என ரசிகர்கள் வெறுப்புடன் நடையை கட்டுகிறார்கள். சப்பென்று முடிந்தாலும், எதிர் கட்சிகள் அதை கப்பென்று பிடித்து அக்கு வேறாக , ஆணி வேறாக பிரிப்பது சந்தர்ப்பவாத நகைச்சுவை. ஒன்று சேர்ந்தவுடன் தினகரன் அலுவலக எரிப்பு, அதில் மறைந்த குடும்பத்தனிரின் நிலமை,, ஸ்பெக்ட்ரம், கேபிள், மூத்த மகனுடன் சிரித்து கொண்டே போட்டோ என நடுநிலையில் இருந்து இறங்கி, இவற்றை அம்போ என விடுவது மைனஸ்.

 

மொத்தத்தில் பாசக்கிளிகள்-  மோசம் செய்த வேசக்கிளிகள்.

 

அடுத்த வருசம் இன்னும் இதை விட சிறந்த, இவற்றை மிஞ்சும் மேட்டர்களுடன் பல அரசியல் படங்கள் வரும் என்ற நம்பிக்கையுடனும்அவற்றை விமர்சனம் செய்வதன் மூலம் என்னோட லொல்லு சில இடங்களுக்கு பரவும் என்ற தலைக்கனத்துடனும் விடைபெறுகின்றேன்! வணக்கம்! 


வருகைக்கு நன்றி!!

15 comments:

நட்புடன் ஜமால் said...

யப்பா கலுக்கர ...

நட்புடன் ஜமால் said...

\\மொத்தத்தில் பிரிவோம் சந்திப்போம்- அய்யாவின் வழக்கமான அறிவோம்-மறவோம்\\

டாப்பு

G3 said...

:)))))))))))))))))))))))))))))

Aparnaa said...

oru katchiyaiyuum vithu vaikkala... GAP10 mathum thappicitaaru.... Nee avar fan ah?? :O Unna round katha pala katchi urupinargal readya irukkanga... edhukko ushaara irundhukko!!!

ஆளவந்தான் said...

//
”கண்கள் பனித்தது,, இதயம் கனத்தது” என தாத்தா தன் பாணியில் டச்சிங் வசனம் கொடுக்க, , “போதும் நடித்தது, , நெஞ்சு வலிக்குது” என ரசிகர்கள் வெறுப்புடன் நடையை கட்டுகிறார்கள். சப்பென்று முடிந்தாலும்,

//

உடன் பிறப்புகளிடமிருந்து ஆட்டோ வரலாம் ஜாக்கிரதை.

ஆளவந்தான் said...

//
, நிஷா புயலுக்கு தி.மு.கவின் மெத்தன போக்கே காரணம் என அறிக்கை விட்டு,
//

இந்த மாதிரி “அறி”க்கையெல்லாம் அம்மா தானே விடுவாங்க, இவருமா?

ஆளவந்தான் said...

//
Aparnaa said...

Unna round katha pala katchi urupinargal readya irukkanga... edhukko ushaara irundhukko!!!
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

Lancelot said...

yeppa irunthalum namma Lancelot jaathi(law students) pathi thappa pesunatha vanmaya kandichu naan inniku sayngaalam namma kupathula tea kudipen...

ஆளவந்தான் said...

//
Lancelot said...
yeppa irunthalum namma Lancelot jaathi(law students) pathi thappa pesunatha vanmaya kandichu naan inniku sayngaalam namma kupathula tea kudipen...
//

mistakenly, i read this as "thee kulippen" ..

Divyapriya said...

ஒருத்தரையும் விட்டு வைக்கல போல :))

செம காமடி :))

Lancelot said...

@ Aalavandhan

siluvayas pottu thalra allavukku appadi enna ayya unku kolla veri...venna Lancelot thee kulikitum...why shud me?

விஜய் said...

உங்கள் சினிமா அரசியல் விவமர்சனம் amazing. ரொம்பவெ ரசித்தேன்.

தாரணி பிரியா said...

கார்த்திக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் ஆட்டோ வரலாம் ஜாக்கிரதை. பார்த்து இருங்க :) :) ஒருத்தரை கூட விட்டு வைக்கலை. இதுதான் இந்த வருடத்தின் சிறந்த விமர்சனம் :) :) :)

Karthik said...

கார்த்திக், கடைசியா இவ்வளவு காமெடியா எங்கே படிச்சேன்னே நினைவு இல்லை. கலக்குறீங்க.
:))

Anonymous said...

*Urakka Kaithattal*

Naatukku ungala maadri naanorru paer Porum! Neenga *Thuglak*, *Junior Vikatan* material.

Vaazhthukkal:-)

Blogger templates

Custom Search