Friday, 23 January 2009

டாப் 10 அரசியல் படங்கள்: பகுதி- 1

அரசியல் என்றாலே நகைச்சுவை, , சஸ்பென்ஸ், அடிதடி, பாசம், மோதல், விட்டுக்கொடுத்தல், பிரிவு, நட்பு, மகிழ்ச்சி, வேதனை என பல நிகழ்வுகள் வரும்.. அதுவே ஒரு படமாக எடுத்தால்? கலாய்பதற்கு சொல்லி தரவா வேணும்? சென்ற வருடம் 2008ல் வந்த சிறந்த 10 சித்திரங்களை காண்போம்... படங்களை பெரியதாக விமர்சனம் செய்ய வேண்டி உள்ளதால், இந்த தபாலில் 10ல் இருந்து 6 வரை உள்ள படங்களை காண்போம்.

 


10. பொம்மலாட்டம்


பாரதப்பிரதமர் மன்மோகன் சிங்க் நடிப்பில், சோனியா காந்தி அவர்களின் மேற்பார்வையில் தயாரான படம்- பொம்மலாட்டம். படம் முழுக்க இந்த இருவர் கூட்டணியே இருப்பது மைனஸ்.. நாட்டில் அடுத்தடுத்து கலவரம் நடக்க, பிரதமர் என்ன செய்வார் என எல்லாரும் ஆவலாக இருக்க “அமைதி காப்போம், ! விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்! என தேய்ந்து போன டேப்-ரெக்கார்டர் மாதிரி ஒரே வசனத்தை பேசுவது எரிச்சல்... வெளிநாடு பயணம் போன்ற இயற்கை காட்சிகள் நிறைய உண்டு. மந்திரிகள் ராஜினாமா,, விலைவாசி உயர்வு,, பெட்ரோல்-டீசல் பிரச்சனை, நாடாளுமன்றத்தில் அமளி என எல்லா திசைகளிலும் தாக்குதல் நடக்க, அதை சமாளிக்க முடியாமல் திணறும் காட்சிகள் நம்மை பரிதாபப்பட வைக்கின்றன!

 

மொத்தத்தில் பொம்மலாட்டம் – ஆட்டம், கூட்டம் ரொம்ப கம்மி

 

9. தாம் தூம்


சத்தியமூர்த்தி பவனில் எடுக்கப்பட்ட முழு நீள ஆக்‌ஷன்-காமெடி திரைப்படம்.. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் யார் கதாநாயகன், யார் வில்லன் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நட்சத்திரப்பட்டாளம். ஜி.கே.வாசன், கிருஷ்ணமூர்த்தி, தங்கபாலு என எல்லாரும் ஹீரோயிசம் கலந்த வில்லத்தனம் பண்ணுவது திகில் கலந்த குழப்பம். அடுத்த அடி யாருக்குனு யோசிக்கும் போது, தீடீரென்று தங்கள் கூட்டணிக்குள்ளே ரத்தம் வரும் அளவுக்கு அடித்துக்கொள்வது சிரிப்பு கலந்த சஸ்பென்ஸ். விடுதலைச்சிறுத்தைகளுடன் மோதுவது எதிர்பாராத திருப்பம் என்றாலும், தொடர்ந்து அடித்துக்கொண்டே இருப்பது, மைனஸ்.

 

மொத்தத்தில் தாம் தூம்- அடிதடிக்கு பஞ்சமில்லை

 


8. புலி வருது


மத்தியில் ஆளும் காங்கிரஸ் சொந்த தயாரிப்பில் உருவான படம்.. பாராளமன்றத் தேர்தல் வரும் வரும் என்று ஒரு மாயையை கிளப்புவது இந்த படத்தின் கதை.. தேர்தலை முன்கூட்டியே நடத்த, மாநில தேர்தல் முடிவுகளை நம்பும் வெள்ளோட்டமான திரைக்கதை என்றாலும், அதில் வெற்றி-தோல்வி கலந்து வருவது எதிர்பார்த்த திருப்பம். முடிவே இல்லாத, தொடரும் க்ளைமாக்ஸ் மிகப்பெரிய பலவீனம்


மொத்தத்தில் புலி வருது- பாத்தா வலி வருது


 

7. பொய் சொல்ல போறோம்


மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளம்.. அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல் பட்ட படம்.. “நீங்கள் எங்களுக்கு ஓட்டு போட்டால் இதை நிச்சயமாக செய்வோம் என்று தொடங்கும் முதல் ரீல் பொய், கடைசி ரீல் வரை செல்கிறது. மக்களுக்கு எது உண்மை, எது பொய் என்று தெரிய சிறிது நேரம் பிடித்தாலும், உண்மை, சே சே, பொய் தெரிந்தவுடன் தங்கள் இயலாமையை நினைத்து சிரிப்பது,  நகைச்சுவை... படம் முழுக்க நிறய பொய்கள் கொட்டி கிடப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. அனைத்து கட்சிகளும், தங்களுக்கென்று சேனலை வைத்து தொடர்ந்து பொய்யாய் சொல்வது தலைவலி.

 

மொத்தத்தில் பொய் சொல்ல போறோம்- சொன்னது போதும்


 

6. சாது மிரண்டால்


படம் ஆரம்பத்தில் இருந்தே விலகிடுவேன், விலகிடுவேன் என சிறு பிரச்சினையை கூட பூதாகரமாய் காட்டி அதிர்ச்சி அலையை உருவாக்கி, இறுதியில் விலகிய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிரடி படம்- சாது மிரண்டால். தொடர்ந்து "ஆதரவு வாபஸ்" என மிரட்டுவது,  படம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கும் வசனம், வெறுப்படைய வைத்தாலும், எப்போ நடக்கும் என ரசிகர்கள் (NDA) ஆவலுடன் எதிர்பாக்கத்தான் செய்தார்கள். திடுப்பென்று அணுசக்தி ஒப்பந்தத்தை கையில் எடுத்து, கூட்டணியில் இருந்து விலகுவது எதிர்பாராத திருப்பம். கதை முடிஞ்சி போச்சோனு நினைக்க, சமாஜ்வாதி கட்சியுடன் சிறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து UPAவை வெற்றி பெற வைக்கும் இடம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ஜெயித்தவர்களின் புன்னகை முகமும், நூலிழையில் கோட்டை விட்ட எதிர்கட்சியின் குற்றச்சாட்டுகளும் பலே போட வைக்கும் இடங்கள்.. முதல் பாதி டல்லடிக்க, ரெண்டாவது பாதி ராக்கெட் வேகம்.


மொத்தத்தில் சாது மிரண்டால் – வேகம் உண்டு, விவேகம் இல்லை

 

 

நான் உசிரோடு இருக்கும் பட்சத்தில் அடுத்த பதிவுல முதல் 5 படங்களின் விமர்சனம் தருகிறேன்!!


வருகைக்கு நன்றி!!

10 comments:

Lancelot said...

me the first

Lancelot said...

yeppa saltkottai siluvai first timeaa vallkailaa mutha thadavaiyaa SMS potti vaikiraanpa...

inga vanthu comment vidum rasigargalae- Kartik yaarkitta adipattu saavan???


A) Vijay rasigargalidam,

B) arasiyal katchigalidam,

C) ippadi mokkai poduvathinal nammala mathiri rasigargalidam

neenga unga optiona mudivu pannitinganaa phonea edungaa "SAAVU (space) A or B or C" nu type panni anuppa vendiya no 0-00-000.


jayikiravangaluku- Kartikukku tharma adi kodukum vaippu valangapadum...

நட்புடன் ஜமால் said...

பொய் சொல்ல போறோம் நல்ல இருந்திச்சிப்பா.

நட்புடன் ஜமால் said...

லொள்ளு நல்ல இருக்கு.

நக்கல் தூக்கலா இருக்கு.

விஜய் said...

Really Interesting.
அதிலும் மொம்மலாட்டமும், தாம் தூம் விமர்சனமும் சூப்பரோ சூப்பர் ;-)

சீக்கிரம் முதல் ஐந்து படங்களுக்கான விமர்சனத்தையும் எழுதுங்க :-)

ஆளவந்தான் said...

//
நான் உசிரோடு இருக்கும் பட்சத்தில் அடுத்த பதிவுல முதல் 5 படங்களின் விமர்சனம் தருகிறேன்!!
//
ஏனிந்த மர்டர் வெறி மக்கா..

நல்ல கற்பனை & பதிவு..

Karthick Krishna CS said...

read tis in a weekly... u should've attached a note...

Divyapriya said...

அநியாய லொள்ளா இருக்கே :)

Aparnaa said...

Marana kalaai... adhutha 5 padam eppa post panna poreenga??? :)

Karthik said...

முடியலைங்க. மத்ததை நாளைக்கு வந்து படிக்கிறேன்.
:)

இத்தனை நாள் எப்படி மிஸ் பண்ணினேன்??
:(

Blogger templates

Custom Search