Friday, 2 January 2009

மைலோ வித் பாப்பு- விஜய்க்கு ஆப்பு: பகுதி-1

அன்பு தாய்மார்களே.. அருமை பெரியோர்களே.. இனிய குழந்தைகளே... அனைவருக்கும் வணக்கம்.. இவ்வளவு நாளா பட்டிமன்றம் நடத்தி நமக்கு போர் அடிச்சி போச்சுலே... அதுனாலே புதுசா ஒரு நிகழ்ச்சி பண்ணலாம்னு யோசன.. ஆனா நிகழ்ச்சி 2 பேரு பண்ணா நல்லா இருக்கும் சொன்னாங்க.. நம்ப ராசா கூட பண்ணலாம்னு பாத்தா சேனல் காராங்க அவங்களே ஒரு ஆள முடிவு பண்ணிடாங்க.. அவரு கூட சேர்ந்து தான் நான் நிகழ்ச்சி செய்யணுமாம்லே...

அப்போ ஹை-பிட்சில் ஒரு குரல்

கலைஞர் பேரன் மேல வச்சாரு பாசம்

அதுனால மக்களுக்கு பண்ணிடாரு மோசம்

இப்ப தெரிஞ்சி போச்சு அவரோட வேசம்

பாப்பைய்யா: என்னய்யா இவர் கூட நா நிகழ்ச்சி பண்ண்ணுமா? ...விளங்குமா? ...அரை மணி நேர நிகழ்ச்சில 10 நிமிசம் ப்ரேக் விட்டா மீதி 17 நிமிசம் பேசுவாரே...

அய்யா டி.ஆரு. நம்ப நிகழ்ச்சியே அவங்க டி.வி.ல போகுது... நீ என்ன இப்படி பேசுற?

இத முன்னாலே சொல்லி இருக்கலாம்ல.. இப்ப பாருங்க..

கலைஞர் தொட்டதெல்லாம் பொன்னு

அதுனால செழிக்குது பாரு நம்ம மண்ணு

அவர்மேல இருக்கு ஊரோட கண்ணு

ஜெய்க்க போவது நம்ப சின்னம் சன்னு

பாப்பைய்யா: பின்றான்லே... எம்.எல்.ஏ. சீட் உனக்கு இருக்குய்யா.. வாப்பா நிகழ்ச்சி உள்ள போகலாம்.. நம்ப தம்பி நடத்துன அரட்டை அரங்கம் செம ஹிட்டுல.. அதுனால நானும் இவரும் சேர்ந்து ஒரு வித்யாசமான நிகழ்ச்சி ஒண்ணு தரலாம்னு இருக்கோம்.. மக்களுக்கு எதாவது பிரச்சனைனா புலம்புறதுக்கு பல நிகழ்ச்சிகள் இருக்கு... ஆனா பிரபலமானவங்க அவங்களுக்கு இருக்குற பிரச்சனையை மேடை போட்டு சொல்ல ஒரு அரங்கம், ,..மன்றம் இல்லையே? அந்த குறயை போக்க தான் இந்த நிகழ்ச்சி. பிரபலங்கள் தங்களோட குறைகளை சொல்லும் நிகழ்ச்சி, மன்றம்- அரட்டை மன்றம்..

 

டி.ஆரு: (முடியை சிலுப்பியபடி) சார்.. எனக்கு கூட சில பிரச்சனைகள் இருக்கு.. சொல்லவா?

பாப்பைய்யா: வேணாம்லே... எதுக்கு இந்த கொல வெறி... நீயே பல பிரச்சனைகளுக்கு காரணம்.. இதுல உன் பிரச்சனையை சொல்லி இன்னும் பெருசாக்குவே.. விட்டுடு ஐயா... ஷோ முடிஞ்ச உடனே நாம பேசிக்கலாம்..

அப்போது பாடல் ஒன்று ஒலிக்கிறது

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா..

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா...

ஒருவர் ஒடி வந்து கும்பிட்டு போட்டு நிற்க, பாடல் ஒலிப்படும் நிற்கிறது..

 

பாப்பைய்யா: யாருய்யா நீ?

தமிழ் நாட்டுல என்ன பார்த்து யாருன்னு கேட்ட முதல் ஆள் நீங்க தான்

பாப்பைய்யா: ஓ! விஜய் தம்பியா? வாங்கய்யா.. ஷேவ்லா பண்ணி வந்து இருக்கீங்க.. அதான் அடையாளம் தெரியல..

விஜய்: இது வில்லு படத்துக்கான கெட்-அப் சேஞ்ணா

பாப்பைய்யா: நல்லா தான்யா இருக்கு.. அப்படியே அந்த முடியை வெட்டுனா நல்லா இருக்கும்லே?? ...குருவி கூடு கட்டுன மாதிரி இருக்கு

டி.ஆரு: அதுனால தான் தம்பி குருவின்னு படத்துல நடிச்சாரா? ?...சரியான கெட்-அப்போட தான் நடிச்சி இருக்காரு!

விஜய்: (பாப்பைய்யாவை பார்த்து சிரித்துக்கொண்டே, 2 கையையும் மேலே உயர்த்தி, ஆடியன்ஸ் பார்த்து) முடியை பத்தி யாரு பேசுறானு பாருங்கண்ணா??

 

பாப்பைய்யா:(தன் தலையை தடவியபடி) எங்களுக்கும் ஒரு காலத்துல இருந்துதுலே!

டி.ஆரு: தம்பி.. முடி அமையாம இருந்தா பிரச்சனை இல்ல... முடியாம இருந்தா தான் பிரச்சனை.. நடிக்க முடியாம இருந்தா தான் பிரச்சனை 

விஜய்: (டி.ஆரை பார்த்து சிரித்துக்கொண்டே, 2 கையையும் மேலே உயர்த்தி, ...ஆடியன்ஸ் பார்த்து) நடிப்ப பத்தி யாரு பேசுறானு பாருங்கண்ணா??

டி.ஆரு: (டென்சன் ஆகி முடியை சிலுப்பி)

என் கூட பண்ணாத வம்பு

என் பையன் தான்டா சிம்பு

யாருக்கும் தூக்க மாட்டான் சொம்பு

(கவுண்டமணி குரலில்) மவனே.. இப்படியே பேசுன பறந்து வரும் கம்பு

டி.ஆரு: எவன்டா அவன்?

வாடா என் மன்னாரு வாங்கி தான் நிப்பாரு

நின்னாக்கா அடிப்பேன் நிமிந்தாக்கா உதைப்பேன் (மேடையில் ஒரு ரவுண்ட் அடிக்க)

(கவுண்டமணி குரலில்) டேய்.. தாடி.. இப்படியே பாடுன வாய உடைப்பேன்..

(டி.ஆர் பேச வாய திறக்க)

பாப்பைய்யா: போதும்யா.. நீ பேச பேச அவரும் சரிக்கு சமமா கலாய்ப்பாரு. நிறுத்தும் ஓய்... இல்ல உன் பிரச்சனை பேசுற மேடையா மாறிடும்.. தம்பி விஜய் உன் கவலை என்ன??

விஜய்: இதோ.. இதுதானுங்கணா என் ப்ராப்லம்.. எல்லாரும் என்னையே போட்டு கலாய்க்கிறாங்க.. ஆர்குட், ...பேஸ்புக் இப்போ ப்ளோக்ல கூட நா தான் ஹாட் டாபிக்ணா.. நைட் ஆன நிம்மதியா தூங்க முடிலணா.. பார்வட் மெசேஜ் கூட போட்டு தாக்குறாங்கணா..

 

பாப்பைய்யா: ஆமாம்யா.. நேத்து எனக்கு கூட மெசேஜ் வந்துச்சுல.. எவன் தெலுகு பட ரி-மேக்ல கூட ஜெட்டி கலர் மாத்தாம நடிக்கிறானோ அவன் தான் விஜய் பின்றாங்களே..

விஜய்: என்னங்கணா நீங்களும் கிண்டல் பண்றீங்க? என்னமோ நா தான் ரி-மேக் பண்ற மாதிரி.. எல்லா நடிகரும் ரி-மேக் படத்துல நடிக்கிறாங்க.. ஏதோ நா 2 படம் அதிகமா நடிச்சிட்டேன்.. அது தப்பா?

பாப்பைய்யா: ஐயா.. நீ நடிக்கற்தே 2 படம் தான்.. அந்த 2 படமும் ரி-மேக் தான்லே!

விஜய்: சரிங்கணா.. இங்க ரி-மேக் படம் பண்ணாத நடிகர்கள நீங்க காட்டுங்க... நா நடிப்ப விட்டுடுறேன்

டி.ஆரு: நீ இதுவரைக்கும் எங்க நடிச்ச..., நடிப்ப விடுறதுக்கு? ...யோவ்.. ஊருக்கே தெரியும் இந்த டி.ஆரு ரி-மேக் படத்துல நடிச்சதில்லை

விஜய்: அண்ணா.. நீங்க இதுவரைக்கும் பண்ண படம் எல்லாமே உங்க பழய படத்தோட ரி-மேக் தான்.. ஒரு தங்கச்சி.. அவள ஒரு கெட்டவன் கட்டிப்பான்.. நீங்க அத நினச்சி அழுதிட்டே 3-4 பாட்டு பாடுவீங்க.. இல்லனா உங்க பொண்டாட்டி கிட்ட சண்ட போட்டுட்டு வந்துடுவீங்க.. உங்க பையன் 2 ஆப்ல வந்து, ...அவருக்கு ஒரு அறிமுக சாங்க்..., அம்மா அம்மா அழுதுக்கிட்டே பாட்டு பாடுவாரு..., வில்லன அடிச்சி க்ளைமாக்ஸ்ல உங்கள சேர்த்து வைப்பாரு.  இருப்பாங்க..ஜால்ரா அடிக்கறதுக்கு வெண்ணிறஆடை மூர்த்தி,  பாண்டு,  தாமு,  ஜோக்கர் துளசி,  தியாகு இருப்பாங்க.. 20 வருசம் ஆச்சு.. இன்னும் நீங்க கதையையும் மாத்தல.. , அவங்களையும் மாத்தல!

பாப்பைய்யா: விடுங்கய்யா! அவர் ரேஞ்ச்சுக்கு அவளவு தான்! இவங்கள விட்டா வேற யாரு இவருக்கு ஜிங்க்-ஜக் அடிப்பா? ... நீ பேசுலே!

விஜய்: இவரோட பையன் இவருக்கு போட்டியா வருவாரு போல.. ரஜினி அண்ணாவோட படத்த உல்டா பண்ணி பண்ணாரு... அப்றோம் என் ஸ்டைலில் கொஞ்சம் படம் பண்ணாரு.. இப்போ அஜித் அவரோட படத்த பண்றாரு... உங்க உங்க ஸ்டைல் தான் காபி அடிக்கலங்ணா!

பாப்பைய்யா: மொக்க வசனம் பேசுறது இவர் ஸ்டைல் தான்யா.. கவனிக்கலையா?

டி.ஆரு: காஞ்ச மரம் தான் சார் கல்லடிப்படும்... இந்தப்பையன் இப்படி வளர்றானேன்னு பெரிய நட்சத்திரங்களுக்கு பொறாமை சார்

பாப்பைய்யா: எங்கய்யா வளர்றான்? .. இன்னும் சின்ன புள்ள தனமா எல்லா நடிகர்கள் கிட்டயும் சண்ட போட்டுட்டு இருக்கானே? .. அவனுக்கு நீ சிம்புன்னு பேர் வச்சதுக்கு பதில்லா வம்புன்னு வச்சிருக்கலாம்.. பொருந்தும்லே

டி.ஆரு: அவன மாதிரி ஒரு நல்லவன் இல்ல சார்!

விஜய்: என்னங்கணா நீங்க? .. அவரே நான் கெட்டவன்னு சொல்லிட்டு இருக்காரு..

டி.ஆரு: யோவ்.. நீ சிலம்பாட்டம் படம் பாக்கலையா? .. அதுல ஒரு பாட்டு வருதே கேட்டியா?

(தன்னோட இஞ்சி இடயை ஆட்டி, .. விரலில் சொடுக்கு போட்டே)

கூட்டம் கூட்டம் கூட்டம் இது தமிழுக்கு வருகிற கூட்டம்

ஆட்டம் ஆட்டம் ஆட்டம் சிலம்பரசனின் சிலம்பாட்டம்

(கவுண்டமணி குரலில்) ஆமாம்.. கூடிட்டாலும்... நீ ஒரு தாடி, .. உன் பையன் ஒரு கேடி.. ரெண்டு பேரும் சேர்ந்து உங்கள நீங்களே பாடிக்கிட்டா உண்டு.. அப்டியே இவங்களுக்கு கூட்டம் வருது..

 

டி.ஆரு: (அமைதியாக) எவன்டா அவன்? எனக்கு கூட்டம் இல்லன்னு சொல்றது..(டென்சன் ஆகி) ஹே.. எனக்கு என்ன கூட்டம் இருக்குன்னு தெரியுமா? நேத்து மதுரைல பாத்தியா? .. தமிழன்யா! You are suppress and oppress depress the தமிழன்யா! போய் ஐ.எஸ்.ஐ ரிப்போர்ட் கேளுயா.. எனக்கு இருக்குற க்கோர்ட்(Crowd) தெரியுமாயா? Are you ready to prove it? எனக்கு கூட்டம் வரலன்னு சொல்றவன் குருடன்யா! கண்ணு தெரியாத மூடன்யா! நேருக்கு நேர் பேசுற தமிழன்யா! (விரலில் சொடுக்கு போட்டே)நா ஒண்ணும் 100 ரூபா பிரியாணி பொட்டலம் கொடுத்து கூட்டத்த கூட்டலயா!! பூன கண்ண மூடிச்சினா உலகம் இருண்டுடுமா? தமிழன்யா!

 

பாப்பைய்யா: அய்யா.. கூட்டம் கூட்டம்னு கத்தி இருந்த பாதி கூட்டத்தையும் ஓட வச்சிட்டியே.. இப்ப கேமராவ அங்கிட்டு இங்கிட்டு திருப்ப முடியாதுலே.. அமைதியா பேசுங்க!

டி.ஆரு: நா அமைதியா பேசுறேன்.. தென்றலா இருந்த என்ன புயலா எழுப்பி விட்டாரு! How can you say? How can you say? How can you say? I’m not a crowd puller or not? தமிழன்யா! (விரலை உயர்த்தி மிரட்டும் தோணியில்)நெருப்பு... நெருப்பு... அளந்து பேசு..(குரலை உயர்த்தி) தமிழன்.. தமிழன்.. தமிழன்..

பாப்பைய்யா: கை தட்டுங்கய்யா... அதுக்காக தான் இவரு கத்துறாருல.. சீக்கிரம் தட்டுங்க... சத்தமா தட்டுங்க... இல்லனா இதையே பேசிட்டு இருப்பாரு!

(அரங்கம் அதிர்கிறது)

பாப்பைய்யா: அதான் தட்டியாச்சுல... போதும்யா... வாங்க!! இந்த பாதி அரங்கத்திற்கு ஆவது நிகழ்ச்சிய நடத்தலாம்..

விஜய்: அண்ணா.. பரவால.. விடுங்கணா.. நீங்க பாக்காததா? .. வாங்காத கலாய்ச்சலா? எவ்வளவோ வாங்கிடீங்க, .. இத வாங்க வாங்க மாட்டீங்களா? ஆனா ஒண்ணுணா.. என்ன தான் கலாய்ச்சாலும், .. மூச்சுக்கு 100 தடவ தமிழன் தமிழன் என் படப்பேர சொல்லிடீங்களே.. டாங்க்ஸ்ங்ணா!!

டி.ஆரு: என்னை அவமானப்படுத்துன இடத்துல இனிமேல் இருக்க மாட்டான் இந்த டி.ஆரு.

(என்றபடி டி.ஆரு. நடக்க, .. அரங்கமே அதிர்ச்சியில்- சந்தோசத்தில்)

 

பாதியில் கோபம் கொண்டு சென்ற டி.ஆரு. திரும்ப நிகழ்ச்சிக்கு வருவாரா??? காத்திருங்கள்...

 

தொடரும்!!!

20 comments:

Lancelot said...

முதல ஸிலுவ

இனியவள் புனிதா said...

:-) செம்ம கலாய்ச்சல்

அதிரை ஜமால் said...

\\"மைலோ வித் பாப்பு- விஜய்க்கு ஆப்பு: பகுதி-1"\\

ஆஹா தலைப்பே சரி ஆப்பு

G3 said...

:))))))))))))))))))

pinni pedal eduthirukka raasa :)

Anonymous said...

Chance illa... First la irundhu kadasi varaikkum sirichen.. adhulayum kurippa nee VIJAY fan ah irunduthu VIJAYa kalaaicha pathiya.. aiooo... Sirichi sirichi vayiru valikkudhu!!!

Koundamani timing chance illa!! Sema counters illam... :) apdiye anda TR video pothu irukalam..

pagudhi 2 eppo???

GAYATHRI said...

lol!!indha vijay ku evlo mandram nadathi advice pannalum budhi varaadhu!!adhulayum tr pappayaa solina vilangidum!!lol!nice imagination...thala TR always rocks!:p
superle!!!

gils said...

!!! ananda vikatan padicha mari iruku..oru nallakariam panna :D i meant that thodarum portion :d eagerly awaiting next part

swathi paul(dew drop) said...

waiting for the next part .serial paatha effect kadaisile

தாரணி பிரியா said...

:)))))))))))))))))))))))
சிரிச்சுட்டே இருக்கேன் கார்த்திக் செமையா கலாய்கீறீங்க‌

Divyapriya said...

LOL :D

//என் கூட பண்ணாத வம்பு
என் பையன் தான்டா சிம்பு
யாருக்கும் தூக்க மாட்டான் சொம்பு//

மாடு தலையில இருக்கறது கொம்பு
உன்னை அடிக்கறதுக்கு எடுத்துட்டு வரேன் கம்பு :-D

Karthick Krishna CS said...

made me remember the same type of write up in anandha vikatan...
chk these links, u may get more dialogues...

Latest one

http://video.google.com/videosearch?q=T.R&emb=0&aq=f#q=Rajendar&emb=0

Old one

http://video.google.com/videosearch?q=T.R&emb=0&aq=f#q=T.R&emb=0

ஆளவந்தான் said...

//
கலைஞர் பேரன் மேல வச்சாரு பாசம்

அதுனால மக்களுக்கு பண்ணிடாரு மோசம்

இப்ப தெரிஞ்சி போச்சு அவரோட வேசம்
//

வீட்டுக்கு ஆட்டோ வந்தாலும் ஆச்சர்யபடுறதுக்கில்ல, அந்தளவுக்கு நக்கலு

ஆளவந்தான் said...

//
“எவன் தெலுகு பட ரி-மேக்ல கூட ஜெட்டி கலர் மாத்தாம நடிக்கிறானோ அவன் தான் விஜய்
//
முடியல.. தாங்க முடியல..

Ajai said...

Vijay rasigana irunduitte Vijaya ippadi kalaikira? Appa ajitha enna vaaru vaaruva?? Kadsile TR kochitu poraarula.. apdiye anda Video Link kodhuthu iurkalam!! Goundamani dialogues la sooperappu sooperapu

MayVee said...

yeiyadi.... ippovey kanna katudey...

விஜய் said...

Really hilarious and mind blowing.

சாலமன் பாப்பையா உபயோகிக்கும் அதே வார்த்தைகளைப் போட்டிருக்கீங்களா, சாலமன் பாப்பையா பேசுவது மாதிரியேஇருக்குது.

விஜய் said...

தலைப்பைப் பார்த்தவுடனே, எனக்கு தான் ஏதோ ஆப்புன்னு நினைச்சுட்டேன் :-)

Meera said...

First konjam blade but
then comedy irrunthathu

arun said...

super thalaiva..sirikama iruka mudiala..simbu-vambu migavum porutham..being a vijay fan don know wat made u to make fun of him..our col boys will be jumping in joy if they read this..lollu sabha paatha feeling iruku.

ஷாஜி said...

சார்.. சிரிச்சு சிரிச்சி வயிறு வலிக்குது சார்..

Blogger templates

Custom Search