Monday, 26 January 2009

டாப் 10 அரசியல் படங்கள்: பகுதி- 2

சென்ற வாரம் 10ல் இருந்து 6 வரை உள்ள படங்களை பார்த்தோம். அந்த நிகழ்ச்சியை மீண்டும் பார்க்க, பார்க்காதவர்கள் அதை முதலில் படிக்க இங்கிட்டு சொடுக்கவும்- பகுதி-1

 

5. கண்ணாமூச்சி ஏனடா

 

அம்மா சிறந்த எதிர்கட்சியாக செயல்பட்டாரா என்பதற்கான விடையை இந்த படத்தில் காணலாம். கேப்டன் விஜயகாந்தின் வளர்ச்சி கொஞ்சம் ஆட்டம் காண வைத்தாலும், அதை எதிர்கொள்ள, இளைஞர் பாசறையை நடத்தியது திரைக்கதையின் புத்திசாலித்தனம். ஆனால் படம் முழுக்க மைனாரிட்டி தி.மு.க அரசு,  மூத்த தலைவர் என்ற மரியாதை இன்றி கருணாநிதி என அழைப்பது, ,  இப்படி ஏக போக வசனங்கள் சலிப்படைய வைக்கின்றன.. பென்சில் திருடிய வழக்கில் தி.மு.க உறுப்பினர் கைது, நிஷா புயலுக்கு தி.மு.கவின் மெத்தன போக்கே காரணம் என அறிக்கை விட்டு, அதை ஆதரிக்க பாப்பாபட்டி, ஆண்டிப்பட்டி, அரசம்பட்டி,  .. இப்படி பட்டி, தொட்டி கிராமத்து உறுப்பினர்கள் எல்லாம் டி.வி.யில் தோன்றி தி.மு.க ராஜினாமா செய்ய வேண்டும் என பேச வைக்கும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன.. முக்கித்திணறும் மூன்றாவது அணி,  குருவாயூரில் யானை தானம், கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு, சிறுதாவூரில் நிலப்பிரச்சனை என சம்பந்தமே இல்லாமல் வரும் காட்சிகள் படத்தின் பின்னடைவு.


மொத்தத்தில் கண்ணாமூச்சி ஏனடா – புதுசா எதுவும் இல்லடா

 

 

4. சண்டை


சட்டப்புத்தகத்தை கையில் எடுக்க வேண்டிய மாணவர்கள், சட்டத்தை கையில் எடுத்த வித்தியாசமான படம். பட்டம் வாங்க வேண்டிய நேரத்தில், தேர்வுக்கு மட்டம் போட்டு, கையில் ஆயுதங்களுடன் திட்டமிட்டு வட்டமாக சூழ்ந்து கொண்டு, தங்கள் பசங்களை கட்டம் கட்டிய திகில் கலந்த ஆக்‌ஷன் படம்... வழக்கம் போல சட்டம் தன் கடமையை செய்ய வைத்த காக்கி சட்டைகள் கொடுத்தது அதிர்ச்சி. “எதுவுமே செய்யலயே, ,  ஏன்யா என்ன பதவி மாற்றம் செஞ்சீங்க?? என கமிஷனர் புலம்பும் போது "நீ எதுவுமே செய்யல... , அதுனால தான் உன்ன மாத்துறோம் என்று பஞ்ச் வைக்கும் இடத்தில் தியேட்டரில் கரவொலி.. உனக்கும் எனக்கும் சண்ட, உடய போகுது மண்ட குத்துப்பாடல், பலரின் கைபேசியில் காலர் ட்யுனாக இருக்கு. சாதிப்பிரச்சனையால்,  கல்லூரியை பாதி ஆக்கியது, பயங்கர பொருட்செலவு ஆகியவை மைனஸ்


மொத்தத்தில் சண்டை – நல்லதுக்கே இல்ல

 


3. பிரிவோம் சந்திப்போம்

 

 நண்பர்களான அய்யாவும், கலைஞரும் கோபித்துக்கொண்டு எதிர் எதிர் துருவங்களாக மாறி, பின் மீண்டும் சேர்வார்களா என்ற கேள்வியோடு முடியும் படம். தொடகத்திலேயே இருவரும் பிரிவார்கள் என்று தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும் எப்படி, எதை காரணமாக வைத்து பிரிவார்கள் என்ற பரபரப்பு படம் முழுக்க இருந்தது... ஆரம்பத்திலிருந்தே அனைத்து விசயங்களுக்கும் அய்யா முட்டுக்கட்டை போடுவது ஒரு கட்டத்தில் கலைஞருக்கும், நமக்கும் கடுப்பை உண்டாக்கினாலும்,  ஒரு வேளை இதை காரணமாக வைத்து பிரிவார்களாஎன்று ஒவ்வொரு பிரச்சனைக்கும் ரசிகர்களை யோசிக்க வைத்தது திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி.. திடீரென்று ரசிகர்கள் யுகிக்கா இடத்தில் காடுவெட்டி குருவை வில்லனாக்கி, அவரை காரணம் காட்டி பிரிவது, அதிரடி திருப்பம்... சி.டி.யை காட்டி அறிவியல், விஞ்ஞானம் கூறியதற்க்கு சபாஷ். எதிர்தரப்பில் சேர்ந்தால் மரியாதை கிடைக்குமா, தனியாக நின்றால் சாயம் வெளுத்து விடுமே என ஐயா தயங்கி மீண்டும் சேர முயற்சிக்கும் காட்சிகள் திரைக்கதையின் ஓட்டை.. இணைவோமா என இருவரின் கண்களும் நோக்க “காலம் தான் பதில் சொல்லும் என முடிப்பது டைரக்டர்s  டச்.

 

மொத்தத்தில் பிரிவோம் சந்திப்போம்- அய்யாவின் வழக்கமான அறிவோம்-மறவோம்

 


2. நாயகன்

 

தனது கொள்கைகள், உணர்ச்சிகள் அனைத்தையும் விட்டுக்கொடுத்து அம்மாவின் துதி பாடும் வை.கோ.வின் நடிப்பில் வந்த படம்- நாயகன். 1978லே டால்ஸ்டாய் சொன்னார், நான் மெக்சிகோ செல்கையிலேயே என ஆரம்ப காட்சிகளில் அவர் பேசும் வசனங்களுக்கு நல்ல வரவேற்பு. தமிழீழத்தைக் காக்க இவர் செய்யும் முயற்சிகளும், அதற்கு நேர்மாறாக அம்மா இருக்கும் காட்சிகளும், எங்கே இவர் தன்னோட முயற்சிகளை கைவிட்டு விடுவாரோ என்று ரசிகர்கள் யோசிக்க, அமைதியாக குரல் கொடுப்பது நல்ல யுக்தி. ஆனால் முதல்வரை வசை பாடுவடும், அம்மா செய்யும் சிறு விசயங்களுக்கு கூட அவரை பாராட்டி பல பக்கம் வாழ்த்து மடல் படிப்பது எரிச்சல். அடிக்கடி காணாமல் போய், சேனல்களில் இவரை காமெடியனாக மாற்றும் காட்சிகள் பாவம். ஒபாமா பற்றி புத்தகம், சிறையில் தனது நாட்கள் புத்தகங்கள் படைத்து, அதை பலர்  கண்டுகொள்ளாமல் விட்டது பரிதாபம். கடைசி காட்சியில் ஒரு சிறுவன் “நீங்க கூட்டணியில் இருக்கீங்களா? இல்லையா?? கேட்க, டன் டன் டன் டன் என பின்னணி இசை ஒலிக்க, அவர் அழுவ, கல் நெஞ்சையும் கரைய வைக்கும்.

 

மொத்தத்தில் நாயகன்- திரையில் கொஞ்ச நேரம் வரும் சாதாநாயகன்

 


1. பாசக்கிளிகள்

 

சந்தேகமே இன்றி சென்ற வருடம் மிகப்பெரிய ஹிட், ஒரு குடும்பத்தின் பாசப்போராட்டம்- பாசக்கிளிகள். தாத்தா, மகன், பேரன் என அழகான பெரிய குடும்பம். தண்ணீரில் கல் வீசினாலும், சலனம் ஏற்படாத பாசப்பிணைப்பில் சிக்கியிருக்கும் குடும்பத்தில், ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் புயல் ஏற்படுவது திடுக். இதை ப்ளாஸ்பேக்காக வைத்த இயக்குனருக்கு சபாஷ். மூத்த மகன் எதிர்க்க, இளைய மகன் ஆதரிக்கஇருவருக்கும் பதில் சொல்ல முடியாமல், தலைவர் கலங்கும் காட்சிகள், நெஞ்சை கணமாக்கும். தொடர்ந்து பேரன்கள் செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட, பொறுத்தது போதும்... நம்ப வியாபரத்துல கைய்ய வைக்குறாங்குளே! என பேரன்கள் பதிலடி கொடுப்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. தாத்தாவின் செயல்களின் உண்மைகளை பேரன்கள் தங்கள் சேனல் மூலம் வெட்ட வெளிச்சமாக்க,, அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுவது- வேசம் களஞ்சி போச்சு பாட வைக்கின்றன. திடீர் ஹீரோ ஆன ஆ.ராஜாவை, ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம், ஆஆஆஆஆ.ராஜாவாக்கும் காட்சிகள் பலே பலே.. இதனால் குடும்ப விரிசல் பெரிதாகும் என எல்லாரும் எண்ண, சடாரென்று கோபாலபுரத்தில் ஒரு மீட்டிங் போட்டு, அனைவரும் ஒன்று கூடி, சமாதனப்படலத்தில் வெற்றி பெற்று, குடும்ப பாடல் பாடி இணைவது மயக்கம் வர வைக்கின்றது கண்கள் பனித்தது, இதயம் கனத்தது என தாத்தா தன் பாணியில் டச்சிங் வசனம் கொடுக்க,  “போதும் நடித்தது, நெஞ்சு வலிக்குது என ரசிகர்கள் வெறுப்புடன் நடையை கட்டுகிறார்கள். சப்பென்று முடிந்தாலும், எதிர் கட்சிகள் அதை கப்பென்று பிடித்து அக்கு வேறாக , ஆணி வேறாக பிரிப்பது சந்தர்ப்பவாத நகைச்சுவை. ஒன்று சேர்ந்தவுடன் தினகரன் அலுவலக எரிப்பு, அதில் மறைந்த குடும்பத்தனிரின் நிலமை,, ஸ்பெக்ட்ரம், கேபிள், மூத்த மகனுடன் சிரித்து கொண்டே போட்டோ என நடுநிலையில் இருந்து இறங்கி, இவற்றை அம்போ என விடுவது மைனஸ்.

 

மொத்தத்தில் பாசக்கிளிகள்-  மோசம் செய்த வேசக்கிளிகள்.

 

அடுத்த வருசம் இன்னும் இதை விட சிறந்த, இவற்றை மிஞ்சும் மேட்டர்களுடன் பல அரசியல் படங்கள் வரும் என்ற நம்பிக்கையுடனும்அவற்றை விமர்சனம் செய்வதன் மூலம் என்னோட லொல்லு சில இடங்களுக்கு பரவும் என்ற தலைக்கனத்துடனும் விடைபெறுகின்றேன்! வணக்கம்! 


வருகைக்கு நன்றி!!

Friday, 23 January 2009

டாப் 10 அரசியல் படங்கள்: பகுதி- 1

அரசியல் என்றாலே நகைச்சுவை, , சஸ்பென்ஸ், அடிதடி, பாசம், மோதல், விட்டுக்கொடுத்தல், பிரிவு, நட்பு, மகிழ்ச்சி, வேதனை என பல நிகழ்வுகள் வரும்.. அதுவே ஒரு படமாக எடுத்தால்? கலாய்பதற்கு சொல்லி தரவா வேணும்? சென்ற வருடம் 2008ல் வந்த சிறந்த 10 சித்திரங்களை காண்போம்... படங்களை பெரியதாக விமர்சனம் செய்ய வேண்டி உள்ளதால், இந்த தபாலில் 10ல் இருந்து 6 வரை உள்ள படங்களை காண்போம்.

 


10. பொம்மலாட்டம்


பாரதப்பிரதமர் மன்மோகன் சிங்க் நடிப்பில், சோனியா காந்தி அவர்களின் மேற்பார்வையில் தயாரான படம்- பொம்மலாட்டம். படம் முழுக்க இந்த இருவர் கூட்டணியே இருப்பது மைனஸ்.. நாட்டில் அடுத்தடுத்து கலவரம் நடக்க, பிரதமர் என்ன செய்வார் என எல்லாரும் ஆவலாக இருக்க “அமைதி காப்போம், ! விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்! என தேய்ந்து போன டேப்-ரெக்கார்டர் மாதிரி ஒரே வசனத்தை பேசுவது எரிச்சல்... வெளிநாடு பயணம் போன்ற இயற்கை காட்சிகள் நிறைய உண்டு. மந்திரிகள் ராஜினாமா,, விலைவாசி உயர்வு,, பெட்ரோல்-டீசல் பிரச்சனை, நாடாளுமன்றத்தில் அமளி என எல்லா திசைகளிலும் தாக்குதல் நடக்க, அதை சமாளிக்க முடியாமல் திணறும் காட்சிகள் நம்மை பரிதாபப்பட வைக்கின்றன!

 

மொத்தத்தில் பொம்மலாட்டம் – ஆட்டம், கூட்டம் ரொம்ப கம்மி

 

9. தாம் தூம்


சத்தியமூர்த்தி பவனில் எடுக்கப்பட்ட முழு நீள ஆக்‌ஷன்-காமெடி திரைப்படம்.. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் யார் கதாநாயகன், யார் வில்லன் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நட்சத்திரப்பட்டாளம். ஜி.கே.வாசன், கிருஷ்ணமூர்த்தி, தங்கபாலு என எல்லாரும் ஹீரோயிசம் கலந்த வில்லத்தனம் பண்ணுவது திகில் கலந்த குழப்பம். அடுத்த அடி யாருக்குனு யோசிக்கும் போது, தீடீரென்று தங்கள் கூட்டணிக்குள்ளே ரத்தம் வரும் அளவுக்கு அடித்துக்கொள்வது சிரிப்பு கலந்த சஸ்பென்ஸ். விடுதலைச்சிறுத்தைகளுடன் மோதுவது எதிர்பாராத திருப்பம் என்றாலும், தொடர்ந்து அடித்துக்கொண்டே இருப்பது, மைனஸ்.

 

மொத்தத்தில் தாம் தூம்- அடிதடிக்கு பஞ்சமில்லை

 


8. புலி வருது


மத்தியில் ஆளும் காங்கிரஸ் சொந்த தயாரிப்பில் உருவான படம்.. பாராளமன்றத் தேர்தல் வரும் வரும் என்று ஒரு மாயையை கிளப்புவது இந்த படத்தின் கதை.. தேர்தலை முன்கூட்டியே நடத்த, மாநில தேர்தல் முடிவுகளை நம்பும் வெள்ளோட்டமான திரைக்கதை என்றாலும், அதில் வெற்றி-தோல்வி கலந்து வருவது எதிர்பார்த்த திருப்பம். முடிவே இல்லாத, தொடரும் க்ளைமாக்ஸ் மிகப்பெரிய பலவீனம்


மொத்தத்தில் புலி வருது- பாத்தா வலி வருது


 

7. பொய் சொல்ல போறோம்


மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளம்.. அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல் பட்ட படம்.. “நீங்கள் எங்களுக்கு ஓட்டு போட்டால் இதை நிச்சயமாக செய்வோம் என்று தொடங்கும் முதல் ரீல் பொய், கடைசி ரீல் வரை செல்கிறது. மக்களுக்கு எது உண்மை, எது பொய் என்று தெரிய சிறிது நேரம் பிடித்தாலும், உண்மை, சே சே, பொய் தெரிந்தவுடன் தங்கள் இயலாமையை நினைத்து சிரிப்பது,  நகைச்சுவை... படம் முழுக்க நிறய பொய்கள் கொட்டி கிடப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. அனைத்து கட்சிகளும், தங்களுக்கென்று சேனலை வைத்து தொடர்ந்து பொய்யாய் சொல்வது தலைவலி.

 

மொத்தத்தில் பொய் சொல்ல போறோம்- சொன்னது போதும்


 

6. சாது மிரண்டால்


படம் ஆரம்பத்தில் இருந்தே விலகிடுவேன், விலகிடுவேன் என சிறு பிரச்சினையை கூட பூதாகரமாய் காட்டி அதிர்ச்சி அலையை உருவாக்கி, இறுதியில் விலகிய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிரடி படம்- சாது மிரண்டால். தொடர்ந்து "ஆதரவு வாபஸ்" என மிரட்டுவது,  படம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கும் வசனம், வெறுப்படைய வைத்தாலும், எப்போ நடக்கும் என ரசிகர்கள் (NDA) ஆவலுடன் எதிர்பாக்கத்தான் செய்தார்கள். திடுப்பென்று அணுசக்தி ஒப்பந்தத்தை கையில் எடுத்து, கூட்டணியில் இருந்து விலகுவது எதிர்பாராத திருப்பம். கதை முடிஞ்சி போச்சோனு நினைக்க, சமாஜ்வாதி கட்சியுடன் சிறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து UPAவை வெற்றி பெற வைக்கும் இடம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ஜெயித்தவர்களின் புன்னகை முகமும், நூலிழையில் கோட்டை விட்ட எதிர்கட்சியின் குற்றச்சாட்டுகளும் பலே போட வைக்கும் இடங்கள்.. முதல் பாதி டல்லடிக்க, ரெண்டாவது பாதி ராக்கெட் வேகம்.


மொத்தத்தில் சாது மிரண்டால் – வேகம் உண்டு, விவேகம் இல்லை

 

 

நான் உசிரோடு இருக்கும் பட்சத்தில் அடுத்த பதிவுல முதல் 5 படங்களின் விமர்சனம் தருகிறேன்!!


வருகைக்கு நன்றி!!

Tuesday, 20 January 2009

வில்லு- சம டல்லு

புதன்’s குறைப்பார்வை:


விஜய் நடிப்பில் ஜேம்ஸ் பாண்ட் படம்... ஹா ஹா ஹா.. ஐயோ.. என்ன கேக்கவே சிரிப்பாவும்,  அதிர்ச்சியாவும் இருக்கா? ? அதை 158 நிமிசம் எடுத்தா??  அதான் வில்லு.. ட்ரைலர் செமயா இருந்துதேனு படத்துக்கு போனா??? கத என்னா பெரியா புடலங்கா கத.. விஜய் படத்துக்கு கதய கேக்குறது டு-மச்..    அப்பாவை கொன்ன வில்லன் கோஷ்திய பையன் பழி வாங்குற 4009வது படம்.. வருசா வருசம் மழை வருதோ இல்லையோ,  இந்த கதைல ஒரு 15-20 படம் வரும். இந்த வருசம் முத படம் வில்லு.. கொஞ்சம் எம்.ஜி.ஆர் பார்முலா,  நிறய தெலுகு பார்முலா.. இதுல அப்பாக்கு மிலிட்டரி ஆபிசர், பய்யனுக்கு முல்லமாரி வேசம்.. போக்கிரி டீம் கூட்டணி. அதுனாலே படம் ஃபுல்லா போக்கிரி ஹங்-ஓவர்.. போக்கிரி 2 பாதியோனு சந்தேகம் வர அளவுக்கு பாட்டு,  சண்டை,  சில காட்சிகள் எல்லாதுலயும் கிட்டத்தட்ட அதே பீல்...

 

தியேட்டர்ல ரசிகர்கள்லா விஜயோட அறிமுகம் எப்படி இருக்கும் யோசிக்க, சுட்டி டிவி கணக்கா,  500 அடி பறந்து வராரு.. அதுவும் கொள்ளகாரன் மாதிரி முகமெல்லாம் புடவைய சுத்திகிட்டு.. கேட்டா போக்கிரி மேன்.. இது கொஞ்ச நாள் முன்னால நெட்ல உலவ விட்ட விடியோ காட்சிகள்.. அத பாத்தே சிரிச்சாங்க.. மாத்தி வச்சி இருக்கலாம்.. புருஸ் லியா,  ஜெட் லியாஅண்ணன் கில்லிடானு பன்ச் வச்சி,  வில்லனை பஞ்சர் ஆக்குராரு.. கடசிலே சிவனேனு கிடந்த சுறா மீன எடுத்து, ஒருத்தன் முதுகுல குத்துறாரு.. ஐயோ அம்மா... அப்டினு நாங்க கத்தல.. அடுத்து என்ன?? ஒ ஓ ஒ ஓ ஓ ஒ ஒ ஓ ஓ ஓ ஆமாம் பாட்டு தான்.. ஆனா போக்கிரி அளவுக்கு குத்தாட்டம் இல்லனாலும் தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டத்துக்கு குறைவில்லை... நடுவுல குஷ்பு வந்து ஒரு ஆட்டம் போட்டு,  அதிர்ச்சி அலையை உருவாக்குறாங்க... விசிலு சத்தம் காதை பொலக்க மச்சி படம் தாறுமாறுடானு நண்பனுக்கு குறுந்தகவல் தட்டி விட்டேன்.

 

அப்டியே அழகான கிராமத்துக்கு படம் நகர,  அங்கே நயந்தாரா,  வடிவேலு நகைச்சுவையால முதல் பாதி நகருது.  தூத்துக்குடியிலிருந்து முனீச்ஜெர்மனிக்கு தாவி மீண்டும் சென்னையில் முடிகிறது. முதல் பாதி வரை பிரச்சனை இல்லாம,  வடிவேலு நகைச்சுவை,  நயந்தாரா கவர்ச்சி (ஆபாசம் கூட சொல்லலாம்) என போற படம்,  2வது . பாதில ரெண்டு விஜய் பண்ற காமெடியால களையிழந்து போகுது. அதுலயும் பறக்குற ஏரோப்ளேன்ல இருக்குற சாவிய எடுத்து கடல்ல போட்டு வில்லன சாவடிக்கிற வித்தை டேய்.. இது என்ன அவர் சைக்கிளா? , சாவி எடுத்து விளையாட? பாரசூட்டை அலேக்காக தன்னோட சட்டைல பதுக்கி வச்சி,  சரியா நயந்தாரா படகுல குதிச்சி,  அடுத்து என்னபா?? ஃபைட் அப்றோம் பாட்டு தானே? ? பீச்ல நயந்தாராவோட ஜல்சா பாட்டு.. போங்கப்பா நீங்களும்,  , உங்க காமெடியும்! இதை விட கடசி 15 நிமிச சிரிப்பு கலந்த சீரியஸ் க்ளைமாக்ஸ் தான் படத்தோட மிகப்பெரிய மைனஸ்.. மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தளபதி, இயற்கையின் உதவியால்,  மணற்புயல் மூலமா வெளிய வர காட்சி, இயக்குநரின் அதி புத்திசாலிதனத்திற்கு ஓர் உதாரணம்.. எப்படிலா யோசிக்கிறாங்க???? விஜய் ரசிகர்களே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. மரண மொக்கயான  சொதப்பல் முடிவால்,  கில்லி மாதிரி வெளிய வர வேண்டிய ரசிகர்கள்,  வெளிரிய முகத்தோடு டல்லாக வந்தார்கள்.

 

விஜய் ரசிகர்களுக்கு நல்ல தீனி.. நடனம்குறும்புத்தனம், கல்யான வீட்டில நடனம் ஆடிக்கொண்டே சண்டை என பின்னி பெடலுடுத்துதனக்கு இட்ட பணியை நன்றாக செய்துள்ளார். அப்பா- மகன் இரு வேடத்தில் மகன் தான் டாப்பு... அப்பா விஜய் சிரிப்பு..  சிக்ஸ்-பேக்,  ஹர் ஸ்டைல் வித்தியாசம் காட்டாம,  மிலிட்டரி சட்டை,  முறுக்குன மீசை என மெனக்கெடாமல் செய்துள்ளார்.. வாரணம் ஆயிரம் சூரியாவ கொஞ்சம் பாத்து பண்ணி இருக்கலாம்... இல்ல அப்பாவா வேற யாரவாது போட்டு இருக்கலாம்... போக்கிரி போலிஸ் வெற்றியால பிரபு தேவா யோசிக்கல போல.. அதயே வாட்ச்-மேன்னு கிண்டல் பண்ணவங்க,  இந்த சோல்ஜர் கெட்-அப்ப சும்மா விடுவாங்களா? ? மேஜர் விஜய்யும்,  அவரோட ஃப்ளாஷ்பேக்கும் தான் படத்தோட இன்னொரு மேஜர் மைனஸ்.

 

நயந்தாரா தான் நாயகினு தெரிஞ்சதாலே என்னவோ, தியேட்டர்ல எப்பவுமே விஜய் படத்துக்கு இருக்கும் தாய்மார்கள்,  பெண்கள்,  குட்டீஸ் கூட்டம் மிஸ்ஸிங்.. அம்மணி நடிக்க கத்துக்கணும்.. பொருளாதார நெருக்கடில சம்பளம் குறைக்க தயக்கம்.. ஆனா ஆடைக்குறைப்புல நயந்-தாராளம்.. மேடம்,  நீங்க நடிப்பு கத்துக்கறதுக்கு முன்னாடி,  ஒரு ஆடை வடிவமைப்பாளரை பாக்கறது நல்லது.. படத்துக்கு படம் ஆடை குறையுது.. இப்படியே போனா,  அடுத்த 2 படத்துல???  சீ சீ

 

படத்தோட ஓரே,  மிகப்பெரிய பலம் வடிவேலுவின் காமெடி.. அவரையும் ரெண்டாவது பாதில வீணாக்கித்தாங்க.. வடிவேலுவோட அறிமுகமே சூப்பரா இருக்கு.. இதே மாதிரி விஜய்க்கும் யோசிச்சி இருக்கலாம்லே???? ஆனா மாட்டு காமெடி எரிச்சல்.. அதே மாதிரி வாயை உவ்வென்று குவித்து இன்னும் எத்தனை படம் தான் பீல் பண்ணுவாருனு தெரியல.. ரூட்ட மாத்துங்க சார்.. இல்லனா யாராவது வீட்டுல கல்லடிக்க போறாங்க!

 

இசை இன்னொரு பலம்.. தெலுகு வாடை அடித்தாலும்,  தாளம் போட வைக்கிறது... ஆனா போக்கிரி எஃப்பெக்ட்லேயே எல்லா பாடலையும் படமாக்கியது மிகப்பெரிய மைனஸ்.. நீ கோபப்பட்டால் பாடலில் 5 விஜய் ஆடும் நடனம்,  படமாக்கிய விதம் அருமை.. பின்னணி இசையில கோட்டை விட்டுட்டாரு தேவி ஸ்ரீ.. விஜய் படம்னா அதிர வேணாமா? ? ரஷ் பாக்கும் போது தூங்கிகிட்டே போட்டாரா? ? தசாவதாரம் ரவி வர்மனா கேமரா??? என்னப்பு சம்பள பிரச்சனையா? ? சண்டை,  பாடல் காட்சிகளில் சல்லி அடிக்குது கேமரா கோணங்கள்.

 

பழகுன பாவத்துக்கு பிரகாஷ் ராஜ் வில்லன்.. அநியாயத்திற்கு வீண் ஆக்கிட்டாங்க.. மற்ற கேரக்டர்கள்லா கல்யாண வீட்டுல தலைய காட்டுன கணக்கா,  உள்ளேன் அய்யா கோஸ்திகள்..

 

படம் முடிஞ்சி வெளிய வரும் போது ரசிகர்கள் பச்சயா திட்டுறாங்க!

 

1: மச்சி, படம் வில்லு இல்லடா... *லு மாதிரி இருக்கு

2: பாண்ட் படம் எமாத்திட்டான்டா,... சரியான *டு படம்

3: 300 ரூபாய்க்கு ப்ளாக்ல வித்தவன தேடுங்கடா..

4: நயந்தாரா பிட்டுக்கு காசு சரியா போச்சு

5. பயப்புள்ள சண்ட சீன்ல நல்லா சிரிக்க வச்சான்டா

 

என்னைப்போல பல நொந்த உள்ளங்கள் உலகம் முழுதும் இருக்கும் என்று நம்புகின்றேன். குருவி கொடுத்த அடியை மறந்து திரும்ப அதே தவறை செய்துள்ளார்.. நான் எம்.ஜி.ஆர் ரூட்ல போறேன்னு சொல்ற விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படும் விஜய் அவர்களை மாதிரி நல்ல திரைக்கதை உள்ள படத்தை மொதல்ல தேர்வு செய்ங்கணா... அடுத்து சிறுபுள்ள தனமான சண்டை காட்சிகள் வைக்காம, நல்ல ஸ்டண்ட் மாஸ்டரை தேர்வு செய்ங்கணா.. முக்கியமா உங்க அப்பா பேச்ச கேக்காதீங்கணா.. இருந்தாலும் போஸ்டர் அடிச்சி படத்தை ஓட வைப்பீங்க... ஆனா விஜய் இனிமேல் கவனமா பயனப்பட வேண்டிய நேரம் இது.. ரசிகர்களுக்கே வில்லு புடிக்கல.. இதே ரேஞ்ச்ல போனா அடுத்து ஹாட்-ரிக் ஃப்லாப் தான்.. உங்களுக்கு வில்லு ஒரு எச்சரிக்கை மணி..

 

வில்லு.. சுல்லுனு பாய்ந்து,  குறி தவறி எங்கேயோ விழுந்து போச்சு


35 பூச்செண்டுகள்


பி.கு: இந்த படத்துக்கு பதிலா புத்தக கண்காட்சிக்கும்சென்னை சங்கமத்திற்கும் சென்றவர்கள் பல்லாண்டு வாழ்க!!!

 

வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search