Monday, 21 December 2009

வேட்டைக்காரன்- விஜய் வெறியர்களுக்கு


பாபுசிவன்: சார்.. உங்களுக்கு ஒரு சூப்பர் கதை இருக்கு


விஜய்: ண்ணா... நம்ப படத்துல கதைலா இருக்க கூடாது... 5 பாட்டு, 3 ஃபைட்டு, அப்றோம் அங்கங்க கொஞ்சம் பஞ்ச் டயலாக்.. இதான் ஃபேன்ஸ் கேக்குறாங்க.. அதுமாதிரி ஸ்கிர்ப்ட் இருக்கா?


பாபுசிவன்: இருக்கு சார்.. நல்ல பரபர ஆக்‌ஷன் கதை..


விஜய்: இப்டி சொல்லித்தான் மூணு படம் ஊத்திகிச்சு... போஸ்டர்ல ஓடவைச்சாச்சு.. இதாவது சுடச்சுட தரணும்ன்னா..


பாபுசிவன்: ஓகே சார்... எல்லா பழைய படத்துல இருந்தும் சீன் சுட்டு, சுடசுட ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு வரேன்..


விஜய்: எதுக்கு டைம் எடுத்துக்கிட்டு... நாம பேசிக்கிட்டே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலாம்..


பாபுசிவன்: டைட்டில் என்ன வைக்க?


விஜய்: நாம தான் அடுத்த எம்.ஜி.ஆர் ஆக ட்ரை பண்றோம்ண்ணா.. அவர் படடைட்டில் வைக்கலாம்...

எஸ்.ஏ.சி: குருவி, வில்லு ரெண்டையும் தூக்கி சாப்பிடுற மாதிரி ஒரு பேரு வைப்பா..


பாபுசிவன்: குருவி, வில்லு ரெண்டையும் இணைக்குறதுன்னா வேட்டைக்காரன்.. எம்.ஜி.ஆர் சார் படம் வேற.. நல்லா இருக்கும்... ஆனா கதைக்கு பொருந்துமா?


விஜய்: அட.. போங்கண்ணா காமெடி பண்ணிக்கிட்டு... இதுவரைக்கும் வந்ததெல்லாம் அப்டியே பொருத்தமா இருந்த மாதிரி..

(அப்போ திருப்பாச்சி பாடல் சன் மியுசிக்ல ஓட)


பாபுசிவன்: சார்.. அதுல வர மாதிரி நீங்க கிராமத்துல இருந்து சென்னைக்கு வரீங்க..


எஸ்.ஏ.சி: என்ன காரணம் தம்பி?


விஜய்: வேற எதுக்கு நைனா.. சென்னைல இருக்குற எல்லா தாதாக்களையும் அழிக்க தான்...


பாபுசிவன்: சார்... இங்க தான் நாம வித்தியாசம் காட்றோம்.. நீங்க போலிஸ் ஆகணும்னு ஆச படுறீங்க..


எஸ்.ஏ.சி: அட.. காக்கி சட்டை கமல் சார் மாதிரியா?

கவுண்டமணி: சத்ய சோதனை


பாபுசிவன்: லீட் எடுத்து கொடுத்ததுக்கு நன்றி.. சத்யம் விஷால் மாதிரி ஒரு போலிஸ்காரர் தான் உங்க இன்ஸிபிரேசன்..


கவுண்டமணி: ஆமாமா.. இவருக்கு இன்ஸிபிரேசன், பாக்குற நமக்கு லூஸ்மோஷன்..

எஸ்.ஏ.சி: ஓகே.. சென்னைக்கு வந்தாச்சு.. அடுத்து எப்டி பொழைக்கற்து?

பாபுசிவன்: அங்கே தான் நாம பாட்ஷா கதைய எடுக்குறோம்.. நீங்க சென்னை வந்து ஆட்டோ ஓட்றீங்க..

விஜய்: வாவ்.. ரஜினிண்ணா.. அடுத்த சூப்பர்ஸ்டார்க்கு பேஸ்மண்ட் போடுற மாதிரி..

எஸ்.ஏ.சி: தம்பி.. பாட்ஷால வர அதே ட்ரெஸ், கர்சீப், ஆட்டோ நம்பர் இருக்கட்டும்..

கவுண்டமணி: நாறிடும்..

எஸ்.ஏ.சி: என்ன?

கவுண்டமணி: இல்ல.. அதயேவா யூஸ் பண்ண போறீங்க? பேட்-ஸ்மெல் வருமே.. நீ மேல சொல்லுப்பா...

(அப்போ எஸ்.ஏ.சி போன் அலற..)


எஸ்.ஏ.சி: சொல்லு... என்னது? 100 நாள் போஸ்டர் முடியாதா? என்ன தெனாவட்டு அவனுக்கு... மலைக்கோட்டை ஏரியா பசங்களே இப்டி தான்.. சாமி அருள் எப்பவுமே நம்மகிட்ட இருக்குடா...


பாபுசிவன்: ஐ.. ஐ... இன்னொரு லீட்... தெனாவட்டு, அருள், மலைக்கோட்டைல வர மாதிரி வில்லனோட பையன் ஒரு பொண்ணு கூட பிரச்சனை பண்றான்...

கவுண்டமணி: அந்த பொண்ணு தானே விஜய் சென்னைக்கு வந்த உடனே ஹெல்ப் பண்ணா..

பாபுசிவன்: ஆமா.. எப்படி சார்?


கவுண்டமணி: ஐயோ.. ராமா ராமா.. டேய்.. இந்த மொக்க மாவத்தானே பல வருஷமா அரைக்கிறீங்க?? ஓகே நெக்ஸ்ட்...


பாபுசிவன்: கோவம் வந்து நம்ப தளபதி அவன அடிச்சு ஹாஸ்பிட்டல்ல படுக்க வைக்க

எஸ்.ஏ.சி: அங்க வைக்கிறோம் இடைவேளை..

கவுண்டமணி: அங்க வச்சா இடிக்குமாம்.. கொஞ்சம் தள்ளி வைடா போண்டா மண்டையா...

விஜய்: இல்ல.. எப்பவுமே இடைவேளை முன்னாடி ஒரு ஜம்ப் வைக்கணும்... காற்று, நிலம், ஆகாயம்னு பறந்தாச்சு..

பாபுசிவன்: அடுத்து நீர்.. உங்கள ஒரு குருப் காட்டுக்கு கடத்தி போக, ஃபைட் பண்ணி, நீங்க நீர்அருவில இருந்து ஒரே ஜம்ப்...


கவுண்டமணி: டேய் ஜிம்பலக்கடி பம்பா... சென்னைல எங்கடா நீர்அருவி?? எம்.ஜி.எம், கிஷ்கிந்தால போயி எடுப்பியா? நீர்அருவில இருந்து குதிச்சா எலும்பு கூட மிஞ்சாது...


எஸ்.ஏ.சி: விதிய மதியால வெல்பவர் தான் எங்க தளபதி...


பாபுசிவன்: ஆமா.. அப்போகலிப்டோ மாதிரி தளபதி குதிச்சும் அடி படாம தப்பிப்பாரு...

கவுண்டமணி: டேய் நாதஸ்... தமிழ் படம் சுட்டது பத்தாதுன்னு இங்கிலீஸ் படம் வேறயா?


விஜய்: ஆமாங்ண்ணா... இங்கிலீஸ் படத்துல பண்ணா மட்டும் வாவ்ன்னு வாய திறந்து பாப்பீங்க.. இதுவே நான் பண்ணா கலாய்ப்பீங்க..


கவுண்டமணி: ராஜா... வாஸ்தவமான கேள்வி... நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல.. தமிழ்நாட்டுலேயே, அட உலகத்துலேயே ரெண்டு பேருக்கு தான் சினிமா அறிவு அதிகம்.. ஒண்ணு நீ.. இன்னொண்ணு உங்க அப்பா... சரி.. ரெண்டாவது பாதி கொஞ்சம் தூளா சொல்லு ராசா...


பாபுசிவன்: மறுபடியும் லீடுக்கு நன்றி.. நம்ப தளபதி இன்ஸ்பயர் ஆன போலீஸ வில்லன் க்ரூப் பழி வாங்கிடுறாருங்க.. அதுனால பழிக்குப்பழி வாங்க தளபதி களம் இறங்குறாரு...


கவுண்டமணி: நல்லவேல.. இத கேக்க சிவாஜி சார் இல்ல..


பாபுசிவன்: சூப்பர் சார்.. சிவாஜி, பாட்ஷா, பகவதி மாதிரி 5-6 பேரோட ரௌடியிசத்த எதிர்த்து போராடுறார்... நடுவுல பஞ்ச், சாங்ஸ், மாஸுன்னு காட்டலாம்...


கவுண்டமணி: அடப்பாவி எது சொன்னாலும் அந்த படத்துல இருந்து உருவுறானே.. டேய்... க்ளைமாக்ஸ்க்கு என்னடா பண்ணுவ?


பாபுசிவன்: அதுக்கு தான் தில், திருப்பாச்சில இருந்து எடுக்குறோம்... விஜய் சார் நண்பன வில்லன் ஆளுங்க போட்டு தள்ளிடுறாங்க... அதுனால கொந்தளிக்குற நம்ப தளபதி எப்டி வில்லன அழிக்குறாரு தான் க்ளைமாக்ஸ்...


எஸ்.ஏ.சி: தம்பி.. அருமையான கதை.. தமிழ் சினிமால இது மாதிரி ஒரு கதை வந்ததே இல்ல...


கவுண்டமணி: ஆமாமா.. இதுமாதிரி எல்லா படத்தோட கதையும் சேத்து, குழம்பி, கேவலமா ஒரு ஸ்கிரிப்ட் பண்ணிருக்கீங்களே... கண்டிப்பா வந்ததே இல்ல..

விஜய்: ஹீரோயின்னா யார போடலாம்?


கவுண்டமணி: இதுவரைக்கும் யார போடலையோ அவங்கள போடலாம்..


பாபுசிவன்: டபுள் மீனிங் மாதிரி இருக்கே..


கவுண்டமணி: நான் சொல்றது எப்பவுமே டைரக்ட் மீனிங் தான்டா காரகுழம்பு மண்டையா... ஏன்டா ரெண்டு ரெண்டா நினைக்குற?

விஜய்: ரெண்டு.. அனுஷ்காவ ஹீரோயினா போடலாம்ண்ணா..

கவுண்டமணி: டேய் இப்பதான்டா அவங்க அருந்ததின்னு ஒரு நல்ல படத்துல நடிச்சாங்க.. வெயிட்டான ரோல் இருக்கா?


பாபுசிவன்: இருக்கு.. 3 பாட்டு, 6 சீன்னு... அவங்க இன்ட்ரோவே புதுசா இருக்கும்...

எஸ்.ஏ.சி: எப்புடி?


பாபுசிவன்: விஜய்யோட அம்மா “உனக்கு எப்படா கல்யாணம் ஆகும்”ன்னு கேப்பாங்க.. அப்போ காட்றோம்..

கவுண்டமணி: எத?

பாபுசிவன்: அனுஷ்காவ..

கவுண்டமணி: ஓஓஓஓஓ... போக்கிரி மாதிரி இருக்கும் போல... சரி.. படத்துல பஞ்ச், பஞ்ச்ன்னு சொல்ற.. எங்க கொஞ்சம் எடுத்து விடு தீச்சட்டி தலையா..

பாபுசிவன்: நான் சாமிகிட்ட மட்டும் தான் சாந்தமா பேசுவேன்.. சாக்கட முன்னாடி இல்ல..


கவுண்டமணி: நீ ஏன்டா சாக்கட கிட்டல்லா போயி பேசுற? முனுசிபால்ல வேல பாக்குறியா? வேற சொல்லு...

பாபுசிவன்: நேத்து கலக்டர், இன்னிக்கு சி.எம். நாளைக்கு?


கவுண்டமணி: பிச்சைக்காரன்... இந்த மாதிரி வசனங்கள் வச்சா படத்த எடுத்த தயாரிப்பாளரும் பிச்ச எடுக்கணும், டைரக்ட் பண்ற நீயும் பிச்ச எடுக்கணும்..


எஸ்.ஏ.சி: சார்.. சும்மா இருங்க.. பஞ்ச் டையலாக்லா சூப்பரா இருக்கு.. நீ சொல்லுப்பா...


பாபுசிவன்: வேதநாயகம்னா பயம்..

கவுண்டமணி: டேய்.. பூதநாயகம்னு வை... அதப்பார்த்தா தான் பயம் வரும்..


விஜய் சன்: யப்பா... நீயும் எல்லா படமும் இதயே பண்ற... வேற ட்ரை பண்ணுப்பா.. சும்மா ரௌடிஸ்ஸ கொன்னுட்டே இருக்க.. இப்டியே போனா அடுத்த படத்துல கொல பண்ண ஆளுங்களே இருக்கமாட்டாங்க.. அதுவும் உன்கிட்ட ஃப்ர்ஸ்ட் சீன்ல அடிவாங்குற ஆளுங்க திரும்ப கூச்சமே இல்லாம, க்ளைமாக்ஸ்லயும் அடிவாங்குறாங்க.. ஏன்பா? ஸ்கூல்ல என் ஃப்ரெண்ட்ஸ் கூட கிண்டல் பண்றாங்க...


விஜய்: இவன் ஓவரா பேசுறான்... எதாவது பனிஸ்மெண்ட் கொடுக்கணுமே...


பாபுசிவன்: நம்ப படத்துல நடிக்க வச்சிடலாம்... இண்ட்ரோ சாங்க்கு இவன ஆட வைக்கலாம்.. நான் அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட, மோதிபாரு வீடு போயி சேர மாட்ட..


விஜய்: தெரிக்குது... மாஸ் தெரிக்குது... சூப்பர் லைன்..


கவுண்டமணி: டேய்.. இது சூப்பரா? நீ நடிச்சாலே தாங்க முடியாது, இதுல அடிக்க போறியா? உன் படத்த பார்த்தா தான் வூடு போயி சேர மாட்டாங்க..


எஸ்.ஏ.சி: இவர் கிடக்குறாரு... கத எனக்கு புடிச்சிருக்கு.. ஏ.வி.எம் கிட்ட சொல்லிடுங்க.. அட்வான்ஸ் வாங்கிக்கோங்க..


கவுண்டமணி: டேய்.. இந்த படத்த எடுத்தே ஆகணுமா?? வேணாம்டா.. டேய் டேய்.. ஐயோ இவன்கிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதான்... நல்லா பேசிட்டு இருப்பான்.. நடுவுல இதுமாதிரி ஏதாவது மொக்க பண்ணிடுவான்...


*************************


இந்த படத்த இதுக்குமேலயும் விமர்சனம் பண்ணியே ஆகணுமா?? ஏதாவது இருந்தா தானே பண்றதுக்கு... விஜய் ஏன் இதுமாதிரி பண்றாரு தெரில.. இந்த படத்த பார்த்தா லொல்லுசபா மாதிரி இருந்துச்சு... அவங்க ஆர்டிஸ்ட் வச்சு சூட் பண்ண வேணாம்.. அப்டியே டெலகேஸ்ட் பண்ணலாம்... எடிட்டர் ஒருத்தர் ரெண்டாவது பாதில இருந்தாரா தெரில்ல.. இன்ட்ரோ சாங் யாரு டான்ஸ் மாஸ்டர் தெரில.. மகாமட்டம்.. வடிவேலுக்கு கம்போஸ் பண்ண மாதிரி ஸ்டெப்ஸ்... ப்ளஸ் என்னன்னா விஜய்யோட எனர்ஜி, சாங்க்ஸ், அனுஷ்கா கில்பான்ஸி... மத்ததெல்லாமே மைனஸ் தான்... படத்த பார்த்த என் ஃப்ரெண்ட விஜய் ஃபேன்ல இருந்து தனுஷ் ஃபேன் ஆகிட்டான்... படம் முழுக்க ஒரே கூச்சல்... இந்த சீன் எந்த படத்துல வந்துச்சுன்னு.. பாரப்பட்சம் பாக்காம எல்லா படத்துல இருந்தும் பாபுசிவன் சுட்டுட்டாரு... என்னய்யா நீ.. சுடுறது தான் சுடுற, நல்ல படத்துல இருந்து சுட்டுருக்கலாம்ல? படம் பார்த்த ஏ.வி.எம் முடிவு பண்ணிட்டாங்க போல, வேலைக்காவதுன்னு... அதான் சன் பிக்சர்ஸ் கிட்ட வித்துட்டாங்க...



விஜய்ண்ணா, உங்க்கிட்ட இருந்து கமர்ஷியல் படம் வேணாம் சொல்லல.. கொஞ்சம் வித்தியாசமா தாங்க.. ENTERTAINMENTன்னு ஆங்கிலத்துல ஒரு வார்த்தை இருக்கு... அதை கரெக்டா புரிஞ்சிக்கோங்க... உங்க படம் விஜய் ஃபேன்ஸ் விட அஜித் ஃபேன்ஸுக்கு கலாய்க்க நல்ல ENTERTAINMENT… படத்துல வர பாடல்வரி உங்களுக்காகவே எழுதிருக்காங்க, “ஏதோ நானும் சொல்லிபுட்டேன் ஏத்துக்கா ஏத்துக்கோ.. சொன்னதெல்லாம் உண்மையுனா உன்ன நீயே மாத்திக்கோ”



36 பூச்செண்டு தரலாம்

வேட்டைக்காரன்- ஒரே மாதிரி வேட்டையாடுபவன்








இடமிருந்து வலம்

1. அண்ணா... இனிமேல் கெட்-அப் சேஞ்ச் பண்ணுங்கன்னு கேக்க மாட்டோம்ன்னா...

2. சன் பிக்சர்ஸ் துணை.. நீங்க தான் காப்பத்தணும்.. சீக்கரமே தியேட்டர், தியேட்டரா வந்து பாட்டு பாடுறேன், டான்ஸ் ஆடுறேன்


3.சத்தியமா மொக்க படத்துல தான் நடிப்பேன்...


வருகைக்கு நன்றி!!


Thursday, 10 December 2009

நான் அவன் இல்லை

இந்த பதிவு ஒரு பாசமான இதயத்தை வைத்து எழுதுவதால், இதில் கொஞ்சம் ஆ’பாசம்’ இருக்கும்.. 18+ மட்டுமே அனுமதி... அதையும் மீறி படித்து, ச்சீசீசீன்னு சொன்னா அதற்கு நான் பொறுப்பல்ல...


டிசம்பர்-9, 198*


டாக்டர் டாக்டர்..

என்ன?

இந்த குழந்தை ரொம்ப மோசம் டாக்டர்..

ஏன்?

நர்ஸ் நாங்கல்லா தூக்குன்னா சிரிக்குது, கண்ணடிக்குது, முத்தம் கொடுக்குது...

என்கிட்ட கொடு..


(சிறிது நேரத்தில் டாக்டர் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்கிறது)

ஏன் டாக்டர், என்ன ஆச்சு?

என் மேல கக்கா போயிட்டான்... இவன் பிற்காலத்துல பெரிய ஆளா வருவான்... பெண்கள் உஷாரா இருக்கணும்...


*********************

3 வருடம் கழித்து


கனகு:
தல தல தல.. சீக்கிரம் வெளிய வா தல

பால்கோவா: என்னடா ஆச்சு?

கனகு: பக்கடா ஆளுங்க நம்ப செரோலாக் பாண்டிய போட்டு அடிச்சிட்டு இருக்காங்க தல..

பால்கோவா: ஏன்டா?

கனகு: அவன் ஃபிகர் நிம்மிக்கு ரப்பர் வச்ச பென்சில் கொடுத்து நம்ப பாண்டி கரெக்ட் பண்ணிட்டான் தல..

பால்கோவா: பக்கடாக்கு காரம் ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு... நம்பள போட்டு நொறுக்கற்தே அவனுக்கு வேளையா போச்சு.. இன்னிக்கு முடிவு பண்றேன்டா.. பக்கோடாவா இல்ல இந்த பால்கோவான்னு... எடுறா வண்டிய...

பொதுஜனம்: ஐயய்யோ... பால்கோவா ஷார்ப்னரோட கிளம்பிட்டானே... இவனே ஒரு ப்ளேடு.. இப்போ ஷார்ப்னர் வேற.. இன்னிக்கு எத்தன பென்சில் சீவ போறான்னு தெரில்ல..


*********************

+4 வருடம் கழித்து


பால்கோவா: அவ என்ன பார்த்து சிரிச்சா மச்சான்

பால்கோவா: நான் என்ன அவள ஒரு 2 வருஷமா பார்த்துட்டு இருப்பேனா? நடுவுல ஒரு நாள் பாக்கலன்னு வையேன், என்னமோ மாதிரி இருக்கும் மச்சான்.. எப்டி சொல்றது?? DAIRY MILK, MILKY BAR நாலஞ்சு சாப்டு, அப்டியே கோக-கோலா குடிச்சோம்னு வையேன், வாந்தி வர மாதிரி இருக்கும் ஆனா வராதுல, அப்ப இருக்கும் பாரு அந்த மாதிரி...


அடுத்த நாள் காலைல அப்டியே சோகமா, ஆட்டோல்ல அவ பக்கத்துல உக்காருவேன் மச்சான்... ஆட்டோ மாமா வந்துட்டாரான்னு சைடா ஒரு லுக் விடுவா பாரு, அப்டியே உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணும் மச்சான்... எனக்கே தெரியாம சிரிச்சிட்டு இருப்பேன்... அவளும் அதே மாதிரி சிரிச்சிட்டு இருப்பா...


கார்த்தி: என் ஆளு கூட தான் என்ன பார்த்து சிரிக்கிறா..


காகி: உன்ன பார்த்து மட்டும் இல்லடா... அவ ஊருல இருக்குற எல்லாரையும் பார்த்து சிரிக்கிறா.. அவ ஆள் இல்ல, பைத்தியம்... ஆனா மச்சான் உன் ஆளு உன்ன பார்த்து சிரிக்கிறான்னா புடிச்சிருக்கு தானே அர்த்தம், STRAIGHTa போயி சொல்ல வேண்டியது தானே..


பால்கோவா: அப்டி நம்பி தான் ஒரு நாள் ஆட்டோல அவ பக்கத்துல தைரியத்த வரவழச்சு போயி பேசலாம்னு நின்னா...... குனிஞ்சி ஸ்கூல்-பேக்க காட்றா... த்தா... இவ்வளவு பெரியா சாக்-பீஸ்ஸு... 2 ஸ்டெப்ஸ் BACK…


காகி: கை கொடு மச்சான் கொடுத்து வச்சவன் நீ.. சாக்-பீஸ்ஸே அவ்வளவு பெர்ஸுன்னா??


காகி மூக்குல பாக்கி


பால்கோவா: வீட்ல புது ட்ரெஸ் எடுத்துக்கொடுத்தா, நம்ப கூட கண்ணாடில சரியா பார்க்காம, போவோம்.. ஊரே பாக்கும் மச்சா.. கட்டிபுடுச்சி கொஞ்சும்... கண்டுக்கவே மாட்டா டா...

காகி: மச்சான் அவ...

பால்கோவா: என்னடா...

காகி: ஒண்ணுமில்ல.. சொல்லு..


பால்கோவா: ஆனா சண்டேஸ்ல கரக்டா நாலு மணிக்கு சைக்கிள் எடுத்து அவ தெருவுக்கு போவேன்டா... அவ கைல ஒரு குழந்த வச்சிக்கிட்டு எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா... அவ என்ன பார்த்து சிரிச்சென்னே, அந்த குழந்தைக்கு ஒரு கிஸ் அடிப்பா... ஹிஹி... எனக்கே கொடுத்த மாதிரி இருக்கும்...


*********************

+5 வருடம் கழித்து


மிஸ்: 26 மார்க்கு... நீ எல்லாம் படிச்சு உருப்பட்ட மாதிரி தான்... ஃபெயில் தான் ஆக போற...

பால்கோவா: ஹீஹீஹீஹீஹீஹீஹீ

மிஸ்: என்னடா சிரிப்பு?

பால்கோவா: நேத்து, க்விஸ்ல ஆன்ஸர் தெரில.. அப்ப பாஸ்ன்னு சொன்னீங்க.. இப்ப எனக்கு ஆன்ஸர் தெரில... ஃபெயில்ன்னு சொல்றீங்க.. அதான்..

மிஸ்: ?!?!?!?!?!?!?!?!


*********************


+6 வருடம் கழித்து


காமெடி பீஸ்: அது என் ஃபிகரு... நீ பார்க்காத..

பால்கோவா: அத நீ சொல்லாத... அவ சொல்லட்டும்

காமெடி பீஸ்: த்தா.. அவ்வளவு தான் உனக்கு, மாடு..

பால்கோவா: நீ மூடு. போடா **

மிஸ்: என்னடா சண்ட?

காமெடி பீஸ்: மேம்..

மிஸ்: பொண்ணுக்காக அடிச்சிட்டு இருக்கீங்களா? யார் அவ?

அந்த பொண்ணு அங்கே வர, பால்கோவா ஒரு பார்வை பார்க்க,


வாக்க்க்க்க்க்க்க்க் வாக்க்க்க்க்க்க்க்க்

மிஸ்: என்னடா ஆச்சு?

பால்கோவா: நாங்கலா பார்வையாலே கற்பழிப்போம்டா... ஹிஹி.. அப்றோம் சொல்லுங்க மேம்..

மிஸ்: ஐயோ.. பெருமாளே... ஆள விடு... எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்...


*********************



இந்த பதிவில் வரும் பால்கோவா வேற யாரும் இல்ல.. அல்வா மன்னன், தென்னகத்து புலி, கமிட் ஆன ஆண்களுக்கு கிலி, குட்டி தாதா, கன்னி பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன், மற்றவர்களின் காதலிகளை தன்னுடைய காதலியாக பாவிக்கும் நல்லுள்ளம், கூச்சமே இல்லாமல் பல பெண்களை கரெக்ட் செய்து எனக்கு வயிற்றெரிச்சலை தரும் வள்ளல், சரக்கடித்தாலும் சரக்கு தீராத சக்கரவர்த்தி, இந்தியாவில் காதல் இலக்கணம் பயின்றும், பயிற்றுவிட்டும், சிங்கப்பூர் சென்றும் சில்மிஷத்தை நிறுத்தாமல், லண்டனில் லவகுசாவில் இருக்கும் லாலாக்கு டோல் டப்பி, கடலை கப்பி- லான்ஸு என்னும் அருண்குமார்... அவருக்கு நேத்து பொறந்த நாள்... இணையத்தள பிரச்சனையால் பதிவு லேட்டா வந்ததுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்... இதையெல்லாம் படித்து, அவர் சொல்ல போவது, “நான் அவன் இல்லை, நான் அவன் இல்லை, நான் அவன் இல்லை”




வருகைக்கு நன்றி!!

Tuesday, 17 November 2009

கில்ஸ் அண்ணாவின் தசவாதாரம்

ரொம்ப நாளா ஜி3 அக்காவ வேண்டிக்கொண்டதிற்கு, ஒரு வழியா பதிவுலக சந்திப்ப நட்த்தியாச்சு.. TARAPORE டவர்ல இருக்குற ஒரு ஹோட்டல்ல 11.30 மணிக்கு வர சொன்னாங்க... மீட்டிங்கு கில்ஸ் அண்ணாவும் வராங்கன்னு சொன்னதால, 12 மணிக்கு வரலாம், எப்படியோ அண்ணாத்த லேட்டா தானே வருவாருன்னு நினச்சேன்... ஆனா ஜி3 அக்கா, அவர்கிட்ட 11 மணி ட்ரீட்னு சொல்லிட்டாங்க (அப்ப தான் 11.30க்கு வருவாருன்னு) ஆனா அன்னிக்கு பார்த்து, கில்ஸ் அண்ணா உள்ள உறங்கிட்டு இருந்த PUNCTUALITY மிருகம், சீக்கிரமா எழுந்ததால், பாவம் 11 மணிக்கே வந்துட்டாரு... நான் பஸ் பிடிச்சி 11.20க்குல்லா வந்துட்டேன்.. ஆனா ஹோட்டல் பேரு மறந்துபோச்சு.. எதிர்தாப்புல வேற ஒரு ஹோட்டல் (BAHURI) இருந்துச்சு.. சரி ஒரு வேள இந்த ஹோட்டல் தான் போலன்னு அவசரப்பட்டு உள்ளே போனா, மொய்க்க ஈ கூட காணோம்.. ஆஹா அக்கா நமக்கு ஆப்பு வச்சிட்டாங்களான்னு யோசிச்சே அவங்களுக்கு ஃபோன் போட, மதுரா ஹோட்டல்னு ஞாபகப்படுத்துனாங்க.. கில்ஸ் வந்துட்டாருன்னு கூடுதல் தகவல் தெரிவிச்சாங்க.. அங்க அடையாளங்கள்: உயரமானவர், கண்ணாடி அணிந்திருப்பார், அழகாக இருப்பார்..




அவங்க சொன்னதுக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் மார்ச் ஃபாஸ்ட் பண்ணிண்டே இருந்தாரு.. அவர் தான் கில்ஸோன்னு ஒரு DOUBT.. ஆதவன்ல பத்து வயசு சூரியா பார்த்தீங்களே.. அதே மாதிரி ஸ்கூல் பையன் கணக்கா BAG மாட்டிக்கிட்டு இருந்தாரு அவரு.. SIX PACK சூரியாக்கு போட்டியா BACK PACK சூரியா... அதுமட்டுமின்றி, ஜீ-டாக்ல அவரோட போட்டோ சீரியல் ஹீரோ அப்ஸர் (அலைகள், பாலசந்தர் சீரியல்ல நடிச்சவரு) மாதிரியே இருந்துச்சு... ஆனா நேர்ல பார்க்க வேற மாதிரி இருந்ததால் ஒரு தயக்கம்.. பக்கத்துல ஒரு சூப்பர் ஃபிகரு பஸ்க்கு காத்துக்கொண்டு இருந்தாங்க.. சரி.. முதல்ல இவங்கள டீல் பண்ணலாம்னு ஒரு 10 நிமிசம் விடாம நோட்டம் விட்டேன்.. ஆனா அவங்க பஸ் வந்த உடனே கிளம்பி என்ன டீல்ல விட்டுட்டாங்க.. ஒகே.. பாவம் கில்ஸ், போய் அவர அப்ரோச் பண்ணலாம்னு பேசி, அறிமுகம் ஆகிட்டோம்..




ஆனா எங்கள சீக்கிரமா வரசொன்ன ஜி3 அக்கா, கரகாட்டகாரன்ல வந்த சொப்பனசுந்தரி காரோட உதிரி பாகங்கள்ல செய்யப்பட்ட அவங்க ஸ்கூட்டியை உருமிக்கொண்டே, சே சே.. உருட்டிக்கொண்டே பொறுமையா, 12 மணிக்கு வந்தாங்க... கேட்டா “ஓவர்-ஸ்பிட் பண்ணி மாட்டிக்கிட்டேன்” சொல்லி எங்களுக்கு ஹார்ட்-அட்டாக் கொடுத்துட்டாங்க... கில்லி சேஸ் சீனுக்கு அக்காவோட வண்டிய தான் முதல்ல கேட்டாங்க.. ஆனா ஒரு முறுக்குல மதுரைல இருந்து சென்னைக்கு வந்ததால, வேணாம்னு சொல்லிட்டாங்க.. கனகு அண்ணாக்கு ஃபோன் பண்ணா, “ஓஓஓ... விடிஞ்சிடிச்சா?” கேட்டு, இதோ கிளம்புறேன்னு சொன்னாரு..


கில்ஸ்: கனகு எங்க இருந்து வராரு?

ஜி3 அக்கா: எண்ணூர் கிட்ட..

கில்ஸ்: எண்ணூர் கிட்டயா?? எண்ணூர் ரொம்ப தூரம்மா...



இந்த மொக்க தாங்க முடியாததால் எல்லாரும் சாப்பிட கிளம்பினோம்.. CVRன்னு இன்னொரு பதிவர் வந்தாரு... அவர் ப்ளாக் நான் பார்த்ததில்லை... ஆனா எல்லாத்தையும் அவர் கலைகண்ணோட பார்ப்பாருன்னு கில்ஸ் அண்ணா சொன்னாரு... மீட்டுக்கு வர சொன்ன உடனே, அமெரிக்கால இருந்து நேரா வந்துட்டாரு போல, எல்லாமே ஆங்கிலம்+தமிழ் மொழிப்பெயர்ப்போட தான் பேசுனாரு.. “YES!! YOU CAN SEE IT! பாருங்க.. LOOKS DIFFERENT... வித்தியாசமா இருக்கு” இவருக்குள்ள மேஜர் சுந்தராஜன்னும் இருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன்... ஹோட்டல்ல நுழைந்த உடனே அங்கே இருந்த சேர்ஸ் எல்லாம் பார்த்து “SUPER VIEW.. இதே பார்த்தா வித்தியாசமா இருக்கு” தன்னோட கலா ஆர்வத்த (யார் அந்த கலான்னு மொக்க போடக்கூடாது) ஸ்டார்ட் பண்ணிட்டாரு.. சீரியல் ஆக்டர், ஸ்மார்ட்ன்னு சொன்னதாலோ என்னவோ கில்ஸ் அண்ணா பின் டேபிள்ல இருந்த ஃபிகர நோட்டம் விட டேபிள் மாறுவதிலேயே குறியா இருந்தாரு... ஏன் சார்.. நமக்கு எது வருமோ அத ட்ரை பண்ணுவோமே?? இவர் தன்னோட தொடர்கதையில ராம்னு எழுதுற கிருஷ்ண லீலை சேட்டைகளுக்கு எது மூலத்தனம்னு தெரிஞ்சிகிட்டேன்.. கில்ஸ் இன் தசாவதாரத்துல ரெண்டு பார்த்துட்டேன்... இனிமேலும் நா ராம் இல்ல, நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டேள், நான் அது மாதிரி கிடையாதுன்னு சேது வசனம் பேசக்கூடாது.. கடசி வரைக்கும் நாங்க டேபிள் மாறல.. கடவுள் இருக்காருன்னு இது மாதிரி சம்பவங்களால் தான் தெரியுது :P




விஜய்ய நடிக்க சொன்னா எப்டி இருக்கும்? அது மாதிரி மெனு கார்ட் கொடுத்து என்னை ஆர்டர் பண்ண சொன்னாங்க.. அதுல இருந்த முக்கால்வாசி ஐட்டம் எனக்கு புரியவே இல்ல.. அபியும் நானும் ரவி சாஸ்திரி மாதிரி பேந்த பேந்த முழிச்சிக்கிட்டே ஜி3 அக்கா என்ன சொல்றாங்களோ அதையே ஆர்டர் பண்ணேன்.. நல்ல வேள ஐஸ்-க்ரிம் மட்டும் எனக்கு புரிஞ்சிது :D உல்லாச பயணம், கோடை சுற்றுலா சென்று வந்த மாதிரி முகமெல்லாம் பல்லோட சென்னைய சுத்தி பார்த்துக்கிட்டே நாங்க எல்லாம் முடிச்ச உடனே கனகு அண்ணா வந்தாரு.. வந்தவருக்கு என்ன கோவமோ தெரில, செர்வர்வ (ஏனா இவர் க்ளைண்ட்) அசிங்கமா திட்டிட்டாரு.. வெஜ் ஹோட்டல்ல ஏன் நான்-வெஜ் போடலன்னு டென்ஸன் ஆகிட்டாரு.. ஹோட்டல்ல இருந்த மான், சிங்கம், மாடு அவற்றின் PAINTING, SCULPTURES பார்த்து நான்-வெஜ் நினச்சிட்டாரு.. நல்ல வேள, பேர பார்த்து (மது+ரா) சரக்கு கொண்டு வான்னு கேக்கல...



அப்புறம் கில்ஸ் அண்ணாக்கு ஆபிஸ்ல ஸ்நாக்ஸ் தராங்கன்னு செய்தி வந்த உடனே, அலுவலக பணி, கடமை என்னை அழைப்பதால் நான் செல்கிறேன்னு ஜகா வாங்கிட்டாரு..



டிஸ்கி 1: கடைசி வரை ஜி3 அக்கா எனக்கு சமோசா மட்டும் வாங்கி தரலை


டிஸ்கி 2: மீட்டிங் ப்ளான் போட்டு கடைசி நிமிடத்தில் திருவல்லிக்கேணியில் தனது கேர்ள் ஃப்ரெண்டுடன் டேட்டிங்.. சே மீட்டிங் போன வானவில் கார்த்திக்கை கண்டித்து இந்த போஸ்ட்...


டிஸ்கி 3: ஜி3 அக்காவின் தூண்டுதலின் பேரில், அல்ப சமோசாக்கு ஆசைப்பட்டு கில்ஸ் அவர்களை ஓட்ட எழுதப்பட்டதில்லை இந்த பதிவு என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்...



வருகைக்கு நன்றி!!

Wednesday, 11 November 2009

கேள்வியும் நானே, பதிலும் நானே- 5

1. விழா, போஸ்டர் மூலம் எதாவது ஆதாயம் இருக்குதா?


அண்ணா அறிவாலயத்துக்கு அனுப்ப வேண்டிய கேள்வில்லா ஏன்யா எனக்கு அனுப்புறீங்க.. என்ன கொடும ஜெகட்ரட்சகன் இது?



2. வீட்ல பொண்டாட்டி தொல்ல தாங்கல.. சாமியார் ஆகலாம்னு இருக்கேன்..


அடேய்.. ஒரு பொண்ணய உன்னால சமாளிக்க முடில.. நீ எல்லாம் சாமியார் ஆகி எப்படி அத்தன பொண்ணுங்களயும் சமாளிப்ப??



3. சப்ப ஃபிகர், சூப்பர் ஃபிகர்- வித்தியாசம்?


உன்ன, கனகு அண்ணன, வானவில் வீதி கார்த்திக், கில்ஸ் இவங்கள பாக்குறதுல்லா சப்ப ஃபிகரு..


என்ன பாக்குறதுல்லா சூப்பர் ஃபிகரு..


4. தனக்குத்தானே சிரிச்சீப்பீங்களா?


இல்லங்க.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல



5. எனக்கு லவ் ஃபெயிலியர்.. என்ன பண்ண?

தற்கொலை
தம்
மது
கஞ்சா
இதெல்லாம் வேண்டாம்..



இன்னொரு ஃபிகர லவ் பண்ணு.. நமக்கு ஆயிரம் ஃபிகர் மடியும் மச்சி.. CONFIDENCE மச்சி CONFIDENCE



6. டைட்டானிக் கப்பல் எப்படி மூழ்கியது?


லுபுக்
குபுக்
புலுக்
குலுக்
பொதக்
பொதக்
லொசக்
சக்
க்க்க்க்க்க்...




7. இப்ப நீங்க முணுமுணுக்குற பாடல்??


22 22222 22222 22222 222222222222222 222 222 2222 2222

டொகோமோ பாடல்..



8. சில நேரம் நம்ம சுத்தி இருக்கறத பாக்கவே வெறுப்பா இருக்கு.. எதுவுமே இல்லாம ஒரு வெறுமையும், இருளுமா இருக்கு. என்ன செய்ய?


வாங்க.. வாசன் ஐ-கேர் க்ளினிக் போலாம்.. நாங்க இருக்கோம்!!



9. குட்டி கதை ஒண்ணு சொல்லுங்க.


கடவுள் சரகடிக்க டாஸ்மாக் போனாரு..

ஒரு பீர் முதல்ல குடிச்சாரு.. கிக் ஏறல

அடுத்து ஒரு ஃபுல் விஸ்க்கி.. கிக் ஏறல

அடுத்து ஒரு ஃபுல் ப்ராண்டி.. கிக் ஏறல

மீண்டும் ஒரு ஃபுல் விஸ்க்கி.. கிக் ஏறல

அசால்டா தலய சொரிங்சிட்டு என்ன பண்ணலாம்னு யோசிச்சாரு.. பக்கத்துல இருந்தவனுக்கு அதிர்ச்சி..


யோவ்.. என்னய்யா ஆளு நீ.. இவ்வளவு அடிச்சும் போத ஏறல உனக்கு? செம STEADYயோட இருக்க? எனக்கு போதை ஏறாது.. ஏன்னா நான் கடவுள்.. ரைட்டு.. உனக்கு போதை தலைக்கு ஏறிடிச்சி!! பாத்து வீட்டுக்கு போப்பா..



10. இடைத்தேர்தல்ல யாருக்கு வெற்றின்னு நினைக்கிறீங்க?









மீனாட்சி... எப்பூடி??



வருகைக்கு நன்றி!!


Wednesday, 4 November 2009

சிம்போசியத்தில் கடலை

இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு சிம்போசியம் (SYMPOSIUM) என்பது தேவதைகளின் தரிசனம் மாதிரி.. மற்ற கல்லூரியில் நடக்கும்போது.. அப்ப அவங்க கல்லூரியில் நடந்தா?? சொந்த செலவுல சூனியம் வச்சிக்குற மாதிரி.. எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் தன்னுடைய கல்லூரியைக் காட்டிலும், பிற கல்லூரி பெண்கள் மீது தான் ஈர்ப்பு இருக்கும்.. அதுனால எந்த காலேஜ் சிம்போசியம் என்றாலும் நாங்க ஓடிடுவோம்.. இப்படி நான் ஆர்.எம்.கே கல்லூரிக்கு சென்று அங்கே ஒரு பொண்ண டாவடித்த அனுபவம் இதோ..


ஜேஜே, கடல, மெசேஜ் மாமா, நான்!!


கடல: என்னடா மச்சி.. ஒரு ஃபிகரும் காணோம்..

ஜேஜே: வந்த உடனே கடய போட்டுட்டான்டா.. கொஞ்சம் பொறுமை காக்கவும் தம்பி!!

மெசேஜ் மாமா: டேய் கார்த்தி.. இப்டி எமாத்திட்ட.. ஓ** உன்ன நம்பி வந்தோம்.. காலைல 6:30 மணிக்குலா பஸ் பிடிச்சேன்டா.. இன்னிக்கு ஒண்ணுமே தேறலைன்னா, இது ஒரு கருப்பு நாள்டா..


நான்: தம்பி.. நீ நினைக்குற மாதிரி பொண்ணுங்கல்லா வந்து ஜாலியா பேசுவாங்க நினைக்காதே.. இங்கல்லா ரேஞ்ஜே வேற.. கொஞ்சம் STRICT.. காலேஜ் வெளியே தான் வச்சிக்கணும்.. நிறய டெலுகுகாரங்க.. ரெட்டி காருக்கு நீ ரொட்டி காரு ஆகிடாத..


கடல: மாப்ள.. நமக்கு டெலுகு, ஹிந்தி, கன்னடா எல்லாமே அத்துப்படி.. ஆர்க்குட்ல எத்தன பொண்ணுங்களுக்கு வலை வீசுறோம்.. இதெல்லாம் கத்துக்கிட்டா தான் பொழப்பு ஓடும்.. இப்ப மராத்தி கத்துக்கிட்டு இருக்கேன்.. WANT TO HEAR SOME TELGU? ஏமி பாகுன்னாரா? மாட்லாடு, சேசுனாரா?


ஜேஜே: தம்பி.. இந்த ஆர்வத்த கொஞ்சம் அப்டியே படிப்புல காமிச்சு இருந்தீங்கன்னா, ஒரு ரெண்டு PROGRAMMING LANGUAGES கத்துக்கிட்டு இருக்கலாம்.. அப்பத்தான் எதிர்கால பொழப்பு ஓடும்..


மெசேஜ் மாமா: போடா.. நீ பேசுவ.. உனக்கொடு ஆள் இருக்கு.. நாங்கல்லா இன்னும் ஆரம்ப பாட சாலையிலே இருக்கோம்.. இதெல்லாம் யூத்து.. உன்ன மாதிரி UNCLESக்கு தெரியாது..


அப்ப A அங்கே வர..


நான்: டேய் A.. மச்சி.. இவங்க தான் என் ஃப்ரெண்ட்ஸ்.. என்னடா எல்லாமே சுமாரா இருக்கு?? நீ கூப்பிட்டன்னு தான் வந்தோம்.. ஆனா ஒண்ணும் வேலைக்காவது போல இருக்கே.. பசங்கல்லா ரொம்ப ஃபீல் பண்றாங்க.. உன்ன நம்பி வந்தவங்கள இப்டி கலங்கின மனதோட அனுப்புறது ஒரு நண்பனுக்கு அழகில்லை..


A: டேய்... என் DEPARTMENT சிம்போசியத்துக்கு வாடா...


அதிர்ச்சி

கடல: அப்ப இது உங்க டிப்பார்ட்மெண்ட் சிம்போசியம் இல்லையா?

A: இல்ல... இது E&I


எல்லாரும் என்னை முறைக்க

நான்: டேய்.. அப்டி பெருசா என்ன தப்பு பண்ணிட்டேன்?? ஏதோ TECHNICAL FAULT.. IT HAPPENS டா.. அதான் சாப்பாடு இருக்குல.. இங்க செமத்தியா இருக்கும்!!


கடல:
ஓஓஓ... E&I?? எல்லாரும் சுமாரா இருக்கும் போதே ஒரு DOUBT வந்துச்சு..


ஜேஜே: ஆமா.. இவரு பழம் தின்னு கொட்டை போட்டவரு.. சொல்றாரு, எந்த டிப்பார்ட்மெண்ட்ல சூப்பரு, எதுல சப்பைன்னு... நாயே.. E&I ஃபுல் ஃபார்ம் தெரியுமா?


A:
ஜேஜே... இன்னிக்கு நீ ஃபுல் ஃபார்ம்ல இருக்க போல??

மெசேஜ் மாமா: ச்ச்சே.. CSE சிம்போசியம்ன்னா கூட DE-BUGGING, QUIZல கலந்து இருக்கலாம்... இப்டி ஆகிடிச்சே... இந்த கார்த்தி ** நம்புனா இதான்டா...


நான்: டேய் என்னமோ கலந்துக்கிட்டா பரிசு வாங்கப்போற மாதிரி பேசுற?? லேப்ல அவுட்புட் (OUTPUT) வராம முக்கிட்டுருப்ப.. தும்பி DE-BUGGING பத்திலா பேசுது.. வா.. நமக்கு தான் AD-ZAP இருக்குல்ல?


A: டேய், இது உங்க காலேஜ் மாதிரி நினச்சிட்டீங்களா?? அரசியல் கட்சி ஆள் சேக்குற மாதிரி எந்த DEPARTMENT பசங்க வந்தாலும் உள்ள விட? ஜே.ஜே PASSED OUT.. ஐ.டி கூட இல்ல.. நீங்க எல்லாம் ஒவ்வொரு காலேஜ், வேற வேற DEPARTMENT.. E&I DEPARTMENT ஒரு மாதிரி... வேணாம்... MONDAY எங்கள்து... நீ வா மச்சி... என்ன PRIZE வேணுமோ வாங்கிக்கோ


ஜேஜே: அப்ப இன்னிக்கு ஒரு ஆறுதல் பரிசு கூட இல்ல?


A: சாரிடா... வழக்கம் போல சாப்டோமா, சைட் அடிச்சோமான்னு இருங்க... EVENTS நடக்குற ஹால்ல நல்லா இருப்பாங்க... என் கூட வாங்க... பராக்கு பாக்குற மாதிரி சைட் அடிக்கலாம்!


அப்ப ஒரு குரல்..


ஹாய் A..

ஹாய் S..


கடல:
வாவ்.. செமயா இருக்காடா..

A: அவ என்னோட ஃப்ரெண்ட்டா...

கடல: தெய்வ மச்சான் நீ.. INTRO PLEASE…

S: என்ன... எங்க DEPARTMENT GIRLS சாரில இருக்கறதுனால சைட் அடிக்கலாம்னு வந்தீயா?


A: புலி எளச்சு போச்சுன்னா எலி எலக்காரமா பாக்குமாம்.. இல்லப்பா.. அதுக்கு நான் LECTURE க்ளாஸ் ATTEND பண்ணுவேன்!!


S: டேய்..


A: சும்மா.. இவங்களா என் FRIENDS.. சிம்போசியத்துக்கு வந்தாங்க.. இவ S.. வேற டிப்பார்ட்மெண்ட்டா இருந்தாலும் என் CLOSE FRIEND!!

S: ஹாய்

ஹாய்


A: சம படிப்ஸ்டா.. 80+ தான் எப்பவுமே.. படிப்புன்னா இவ ஒரு புலி!!

நான்: வாவ்.. அப்ப நான் உங்க்கிட்ட ஒரு கேள்வி கேக்கவா? சிம்பிள் தான் :)

S: ம்ம்ம்ம்

நான்: இது என்னனனு சொல்லுங்க..

குழப்பமாக நம்மை பார்க்க!!

நான்: அட சொல்லுங்க.. உங்க மேத் அறிவுக்கு ஒரு சவால்..

S: காயின்..

நான்: ஏங்க? ஏன் எல்லா பொண்ணுங்களும் இப்டி இங்கிலிஷ்ல சீன போடுறீங்க?? தமிழ் தெரியும்ல?? இப்டி சின்னசின்ன விசயத்துக்கு கூட ஆங்கிலமா?? அதுவும் அழகா, லட்சணமா புடவைல இருக்கீங்க..

S: காசு..

நான்: ம்ம்ம்ம்.. நிறைய சர்க்யூட், ப்ராப்லம்ஸ் கரெக்ட்டா ஆன்ஸர் பண்ணித்தானே முதல் மதிப்பெண் எடுத்தீங்க.. எங்க இந்த காச (COS) கொஞ்சம் சைன்னா (SIN) மாத்துங்க பாக்கலாம்...


அவள் அதிர்ந்து போனாள்..


நான்: என்னங்க.. இவ்வளவு தான் உங்க அறிவா? உங்கள போய் மேத் புலி, எலக்ட்ரிக்கல் எலின்னு கலாச்சிட்டான் இவன்.. உங்க கிட்ட இருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம்... சே... HIGHLY DISAPPOINTED…

S: எனக்கு தெரில.. என்ன விட்டுடுங்க..

நான்: சரி சரி.. பயப்படாதீங்க.. உங்க பர்ஸ் கொஞ்சம் ஓப்பன் பண்ணி காட்றீங்களா??


அவள் முழிக்க..


நான்: அடடா.. என்ன ஒரு குற்றவாளி மாதிரியே பாக்குறீங்க.. எதுவும் பண்ண மாட்டேங்க.. உள்ள இருக்குற லிப்-ஸ்டிக், ஃபேசியல் க்ரீம்லா நாங்க எடுத்துக்க மாட்டோம்.. அத வச்சி நாங்க என்ன பண்ண?? நம்புங்க..

S: அதெல்லாம் இருக்குன்னு உங்களுக்கு எப்டி.......??

கடல: அட.. எங்க காலேஜ் மொக்க ஃபிகர்ஸ் பர்ஸ் எல்லாம் நைசா பாக்கறது தானே எங்க ஹாபி.. அவங்களே யூஸ் பண்ணும் போது, நீங்க சூப்பர் ஃபிகரு இதெல்லாம் வச்சிக்காம இருப்பீங்களா?


அவள் முறைத்துக்கொண்டே


S: அதில்ல.. காலேஜ்ல பாய்ஸ்-கேர்ள்ஸ் இப்டி நின்னு பேசுனா பிரச்சனை.. அதான்..

மெசேஜ் மாமா: நீங்க என் அக்கான்னு சொல்லிடுறேன்.. பர்ஸ்ஸ காட்டுங்க..


அவள் எங்களிடம் நீட்ட, அதை பிடுங்கி, ஆராய்ந்தோம்.. அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் எடுத்து,


நான்: இந்தாங்க.. காசு.. (ஒரு ரூபாயை அவளிடம் கொடுத்தோம்).. இதோ பாருங்க.. GOVERNORக்கு மேலே ஒரு WAVE போகுதா? அதான் சைன்னு (Sin) எப்டி காசு சைன்னு ஆகிடிச்சா??


அவள் சில செகண்ட்ஸ் சைலண்ட்.. அப்றோம் சிரித்துக்கொண்டே..


S: கலக்குறீங்க.. எப்டி தான் இப்டி யோசிக்கிறீங்களோ?? ஆனா ஒரு ரூபா கொடுத்து, 10 ரூபா ஆட்டய போட பாக்குறீங்க??

நான்: அட... இது 360* அங்க காசு ஒண்ணு தானே..


வெடுக்கென்று கையில் இருந்த நோட்டை பிடுங்கி..


S: 360* ல சைன்னு 0.. அதுனால இந்த நோட்டு எனக்குத்தான்..


டொயிங்க்..


டிஸ்கி 1: A மூலமா நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், S தற்போது GRE எழுதி இருக்காங்க.. என்னோட MARKS எடுத்துருக்காங்க.. IRONY or CO-INCIDENCE or FIXED?


டிஸ்கி 2: நான் APPLY பண்ணப்போற யுனிவர்சிட்டியிலே அவங்களுக்கும் சீட் கிடைக்கணும்னு ஆசை.. :)



வருகைக்கு நன்றி!!

Saturday, 17 October 2009

இந்த வருடம் தீபாவளி இல்லை


Mr. I.G.R. MAARAR… நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க... I’M SURE YOU ARE AWARE OF THE POWER OF THE லஷ்மி வெடி... பிஜிலி B4 வகை... அந்த மாதிரி பாம் உங்க சிட்டில 5 இடத்துல வச்சிருக்கேன்... இன்னிக்கு காலைல சரியா 8 மணிக்கு THERE WILL BE MANY EXPLOSIONS IN YOUR CITY… எந்த குப்பனோ சுப்பனோ இத செய்ய முடியுமா மாறர்?

இப்டிலா ஃபோன் பண்ணி கலாய்க்கணும் ஆச தான்.. ஆனா தீபாவளி நான் இன்னிக்கு கொண்டாடல... ஏன்?? ஏன்?? ஏன்?? காரணம் கீழே உள்ள படத்தை பாருங்கள்...










தலைவர் படம் இல்லாம எப்டி தீபாவளி கொண்டாட?? சுந்தரா ட்ராவல்ஸ் படமாவது கே டீ.வியில் போட்டுருக்கலாம்.. :(

தலைவி நமிதாவின் ஜெகன்மோகினி படத்த ரிலீஸ் பண்ண விடாம ஸ்டே (STAY) வாங்கிட்டாங்க.. இதனாலும் தீபாவளி கொண்டாட மனசே வரல... இந்த தீபாவளி மனதுக்கு தீரா-வலி.. :(

புது மொபைல் வாங்கி தரேன்னு போன தீபாவளி மாதிரியே அப்பா என்கிட்டேயே லொல்லு பண்ணிட்டாரு.. அது அடுத்த பதிவில் சொல்றேன்..

தீபாவளி ரீலிஸ்லா நேத்து பார்த்தோம்...


பேராண்மை- கொஞ்சம் பொறுமையா போகுது ஆரம்பத்தில்.. ஆனா டைரக்டர் அடுத்த அரை மணி நேரத்துல புது உலகத்துக்கு கொண்டு போகுறாரு.. THE MOMENTUM AND PACE IS MAINTAINED TILL THE END... வித்தியாசமான படம்... ஆனா அருமை, ரொம்ப சூப்பருன்னுலா சொல்ல முடியாது... GOOD BUT NOT THE BEST. ஜெயம் ரவி பிண்ணிருக்காரு... ஆனா குரல் தான் ஒத்துலைக்கல... ஹை-பிட்ச்ல கத்தும் போது கொஞ்சம் காமெடியா இருக்கு... ஆனா நடிப்புல குறைவைக்கல மனுசன்... சந்தோஷ சுப்பிரமணியம் அடுத்து நல்லா நடிக்கக்கூடிய நடிகர்னு மீண்டும் நிருபிச்சிட்டாரு... அண்ணன் கிக் ரீ-மேக் வேற வாங்கிருக்காரு.. தில்லாலங்கடின்னு எடுத்துக்கிட்டு இருக்காங்க.. அதையும் பார்த்துட்டோம்.. ENTERTAINMENT GUARANTEED… அடுத்த ஹிட்க்கும் ரெடி ஆகிக்கோங்க அண்ணா... இவருக்கு கிக் ஸ்க்ரிப்ட் சரியா இருக்குமான்னு தெரில... ஆனா தளபதி விஜய் நடிச்சிருந்தா செம மாஸ்ஸா இருக்கும்… TAILOR-MADE SCRIPT FOR VIJAY… யார் யாருக்கு என்ன எழுதிருக்கோ அதானே நடக்கும்... சுறா... கொடுமை...



ஆதவன், நேத்து நைட் ஷோ பசங்க போனாங்க.. 12 மணிக்கு “HAPPY DIWALI.. BUT NOT FOR US MAAPS!!” மெசேஜ் வந்துச்சு... தலைவரு அவன் கேர்ள்-ஃப்ரெண்டுக்காக சூரியா ஃபேன் ஆனவன்... இப்பல்லா ஃபிகர மடிக்க சூரியா ஃபேன் ஆகணும்கறது எழுதப்படாத சட்டம்... நடத்துங்கடா... இன்னும் எத்தன நாளைக்குன்னு பாக்குறேன்.. படம் பாக்கலாமான்னு கேட்டேன்.. “டேய் தப்பிச்சிக்கோ.. அவ்வளவு தான் சொல்வேன் சொல்லிட்டான்.. தேவில்ல 10ரூவா தானே டிக்கெட்டு... சரி போய் தான் பார்க்கலாம்... (சூரியாக்காக இல்ல, அங்க வர போற ஃபிகர்களுக்காக) :D


தீபாவளி ரிசல்ட், சுருக்கமா சொல்லணும்னா, விரைவில் பசங்க ஜெயம் ரவி ஃபேன்ஸ் ஆனாலும் ஆச்சிரியம் இல்லை... அரவிந்த் சாமி, மாதவன், சூரியா, ஜெயம் ரவி???


எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்... பலகாரம்லா சாப்பிடுங்க... எனக்கு அப்டியே கொஞ்சம் அனுப்பிடுங்க... பட்டாசுலா ஜாக்கிரதையா வெடிங்க... நமிதா வெடி வேற வந்துருக்கு... வெடிக்கும் போது ஹாய் மச்சான்னு சொல்லுமாம்.. யாருடா மாப்பிள கூப்பிடுறதுன்னு திரும்பிடாடீங்க...


வருகைக்கு நன்றி!!



Blogger templates

Custom Search