Friday, 26 December 2008

புதன்'s மொக்க விருதுகள்- தமிழ் சினிமா 2008

வணக்கம்.. மீண்டும் உங்களை மற்றுமொரு புதன்'s குறைப்பார்வை நிகழ்ச்சியில் சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு... இன்று என்ன பாக்க போறோம்?அரங்கம் பிரமாண்டமா இருக்கு.. இதுல இருந்து நீங்க கண்டுபிடிக்கலாம்.. சரி இன்னொரு க்லூ தரேன்... போன தபால நா சொல்லி இருந்தேன்... பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாமா? பணம் மரத்துல காய்க்காது சொல்றாங்க.. அப்போ பணம் இருக்குற வங்கிகளுக்கு மட்டும் ஏன் கிளை இருக்கு? (கண்டுபிடிசித்தான்.. விருது கொடுங்கபா) அய் அய் நீங்க ஒரு வழியா பாதி கண்டுபிடிச்சித்தீங்க.... இப்படி பணத்தை அதோட அரும தெரியாம செலவு பண்ற உங்களுக்கு சொல்றேன்... காசு இருந்த செத்துபோன மனைவிக்கு கூட தாஜ் மஹால் கட்டலாம்... ஆனா காசு இல்லயா, கொய்யால உசிரொடு இருக்குற உன் காதலிக்கு கூட உன்னால தாலி வாங்க முடியாது.. என்னடா இவன் இப்படி மொக்க போடுறானே சிந்தனையா? பாத்தீங்களா? கடைசியா நீங்களே வந்துத்தீங்க... நா எதை பத்தி பேச போறேன்! ஆமாம்.... விருது.. மொக்க... தமிழ் சினிமாவுல போன வருசம் வந்த படங்களுக்கு அதுவும் மொக்க படங்களுக்கு பஞ்சமே இல்ல... எனக்கு மிகப்பெரிய தலைவலி வந்துச்சு... படம் பார்த்ததால் மட்டும் இல்லை.. ஒவ்வொரு படமும் போட்டி போட்டு மொக்க பண்ணாங்க.. இந்த போட்டியில வென்று, விருதுகளை தட்டி செல்லும் படங்கள் எவை? ஒவ்வொரு துறையுலும் படங்களுக்கு விருது.. இந்த மொக்க விருது நிகழ்ச்சிகளுக்கு வந்து இருக்கும் அனைத்து பிரபலங்களுக்கும் நன்றி.. அதோடு இல்லாம நீங்க வந்து இந்த விருதை கொடுத்தா சந்தோசமா இருக்கும்...


முதலில் தலைவர் ஸால்ட் சிலுவை அருண் வாங்க

மொக்க நடனம்:

சந்தோஷ சுப்ரமணியம் படத்துல காதலுக்கு கண்கள் இல்லை அந்த பாட்டுல பயபுள்ள என் கண்ண இல்லாம பண்ணிடான்... குரங்கு சேட்டை.. ஆனா அத விடஒருத்தர் பண்ணாரு பாருங்க நடனம், யப்பா முடில.. பக்கத்து வீடு பாப்பா கூடசிரிக்குது... நம்ப வீர தளபதி J.K.RITHEESH போட்ட நடனம், நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா... TV ல பாத்த உங்களுக்கு இந்த எஃபெக்ட் தெரியாது.. தியேடர்ல பாத்த நமக்கு தான் இதோட வரவேற்பு தெரியும். உங்கள் சேவை தொடர, ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது..


மொக்க ஒப்பனை:

மகேஷ், சரண்யா மற்றும் பலர்.. இந்த படத்துக்கு தியேடர்ல சிலர். ஏனா அதுக்கு முக்கிய காரணம் தாலாட்டும் திரைக்கதை விட, சந்தியாவின் ஒப்பனையும் ஒரு காரணம்.. கல்யாண விழாவில் கூட அழகா ஒப்பனை பண்ணுவாங்க... ஆனா அம்மணிக்கு ஒவ்வொறு காட்சியில் வித்யாசமான ஒப்பனை.. தசவதாரம் படம் பெண் கதாபாத்திரம் வச்சி எடுத்தா, இவங்க சரியா இருப்பாங்க.. ஏம்மா இப்படி பயம் காட்டும் ஆசை?

தாங்க்ஸ் பா ஸிலுவதமால்னு வாங்க ஜமால் அண்ணா (பிரியாணி எங்க பா)

மொக்க எடிட்டிங்:

பந்தயம் படத்துல ஒரு காட்சிய கூட பாக்குற மாதிரி எடுக்கல... அழகான சிந்துதுலானிய இப்படி பண்ணிட்டீங்கலே.. காதல் தீவிரவாதி, சூராங்கனி இப்டி எல்லா பாடல்களிலும் மோசமான எடிட்டிங்.. பாடகர் சூராங்கனி பாடும் போது மாலு கண்ணா உதடு அசைகிறது... பாடகர் மாலு கண்ணா பாடும் போது நாயகன் பாட மாட்டேன் அடம் பிடிக்கிறார்!! சம்பள பாக்கியோ?? படத்த எப்படி எடிட்டிங் பண்றதுனு தெரியாம காட்சிகள கண்ணா பின்னானு சேர்ததுறுக்குராறு...


மொக்க ஒளிப்பதிவு:

சூரியா படத்துக்கு.. விஜய சிரஞ்சீவிய அழுக்கா காட்டியதில் இருந்து, பாடல்,கதாநாயகி, CAMERA-ANGLE என சொல்லப்படும் எதயும் கவனிக்காமல், கல்யாண விழாவை படம் பிடிப்பவரை விட கேவலமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்..

நன்றீங்க (அவர அப்டியே ஓரமா பிடிச்சித்து போங்க.. பிரியாணி வாங்கிட்டு விடுங்க)அடுத்து G3 வாங்க

மொக்க பாடல் ஆசிரியர்:

அடியே கள்ளி சிறுக்கி, வரவா மீச முறுக்கி... ளோக்கு ளோக்கு ளோக்கு ளோக்கு லோகல்லு.. என்ன எதுக்கடி எதுக்கடி ANGELலு.. போக்கு போக்கு போக்கு போக்கு போக்கிரி போக்கிரி.. நா நெய்யுல செஞ்சு வச்ச ஜாங்கிரி.. இது மாதிரி தத்துவபாடல்களை தந்த பேரரசு அவரோட இசை சேவையை பாராட்டி, அவரை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது.. கண்டிப்பா அடுத்த வருசம் இவர் படம் எடுத்து, அதுல பாட்டு எழுதுணாருனா, இந்த விருது தொடர்ந்து அவருக்கு கிடைக்கும்... அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..


மொக்க காட்சி:

திருவண்ணாமலை படத்துல பேரரசு அவரோட அறிமுக காட்சி, அதோட பழநில அவரோட அறிமுக காட்சி..  தனி தனி திருத்தணி தனி தனி திருத்தணி தனி தனி திருத்தணி டா!!! விசிலு வீசூலு!!!

நன்றி!!அடுத்து பூர்னிமா அக்கா வாங்க

மொக்க இசையமைப்பாளர்:

இது இரு வழி.. ஸ்ரீகாந்த் தேவா, G.V.பிரகாஷ்.. ஸூபர் ஸ்டார்(SUPER STAR) படத்துக்கு இது மாதிரி இசை போடலாமா?? எல்லா பாடலுக்கும் வெளி நடப்பு தான்.. காளை படத்துல சொம்பு கூட இரவு பார்ட்டி போய், அந்த போதையிலே இசை போட்டார் போல.. மொதல் பாடல்ல தூங்க ஆரம்பிச்ச நாங்க, படம் முடியும் போது தான் எழுந்தோம்... ஒரே நல்லது சொம்புவின் முழு தொல்லையும் ரசிக்க முடியாம செஞ்ச உங்க இசைக்கு நன்றி அதோடு இந்த விருது சமர்ப்பணம். சேவல் ஏதோ பரவால

நன்றி அக்காதளபதி விஜய் வாங்க

மொக்க அறிமுக இயக்கம்:

ரஹ்மான் இசை. இத வச்சி படத்த ஓட்டலாம் பாத்து, கடைசியில் என்ன தியேடர் விட்டு ஓட வச்சிதாரு.. நல்ல இசை, அதை கேவலமான நடனம், ஒளிப்பதிவு, மாயாஜாலம் அது இது என்னமோ பண்ணிட்டாரு.. பாத்த கண்ணு கெட்டு போச்சு..100 படம் பார்த்து அதுல இருக்குற மொக்க காட்சி எல்லாம் எடுத்து, அதுக்குஆங்கில வசனம் போட்டு படம் எடுத்தாரு.. பேரு கலா பிரபு... இவர் பலா பிரபு தான்..

மொக்க அறிமுக நடிகை:

இந்த வருடம் வந்த பல படங்களில் 95% நடிகைகள் நடிப்பு, அழகு எல்லாததுலயும் மொக்க... காத்தவராயன் நடிகை விதிஷா.. அலிபாபா நடிகை ஜனனி ரெண்டு பேருக்கும் கடும் போட்டி... செறி இருவரும் சேர்ந்து இந்த விருத வாங்கிக்கோங்க

நன்றி விஜய் அண்ணா (இவரை ROUND கட்டுங்க.... அண்ணா டக்(TAG) என்ன ஆச்சு)
அடுத்து ஆளவந்தான் வாங்க

மொக்க அறிமுக நடிகர்:

விஜய சிரஞ்சீவி... நேத்து தான் இந்த படத்த CDல பாத்தேன்.. யப்பா!! ஜாக்குவார் தங்கம் மகன்..  ஒரு பிரபலமானவரோட மகன்னா எப்படி சுலபமா ஸிநிமா உள்ள வரலாம் பாருங்க.. படம் முழுக்க தன்னோட அப்பா மாதிரி எல்லாரையும் அடிக்கிறார்.. ஆனா நடிப்பு?? துடிப்பு இருக்கு..  நடிப்பு இல்ல... அவரோட முகத்துல சுண்ணாம்பு அதிகமா பூசித்தாங்க.. ஒளிப்பதிவு மோசம்.. முகம் க்லோஸ்-அப்(CLOSE-UP) காட்சிகளில் பயமுறுத்துகிறார்..

நன்றீங்கஅடுத்து சுவாதி வாங்க


மொக்க சண்டைக்காட்சி:

வேற யாரு... குருவி குருவி அடிச்சா... ப்ரேக் இல்லாத வாகனம், வையர் எடுத்து வாயில வச்சி வெற்றி பெற்ற சாகசம் ஆகட்டும்... 2 KM தூரம் இருக்குற ரயில் வண்டிய ஆலாக்கா ஒரே JUMPல புடிச்ச வீரம் ஆகட்டும்... எல்லா சண்டைகளிலும் ஸூபர் மன், ஸ்பைடர் மேன் அவங்களோட விஜய்ய போட்டி போட வைத்த திறமை ஆகட்டும்.. குருவி அப்டிங்கிற படப்பேர தப்பா நினைத்து, எல்லா சண்டையும் காற்றுல நடத்துன காற்று அரசனுக்கு இந்த விருது.. இதோட அவர இந்தியா அணியோட ஒலிம்பிக் பயிற்சியாளரா போடலாம்.. நீளம் தாண்டுதல்,ஹை JUMP, RUNNING ரேஸ், குண்டு எறிதல், POLE வால்ட் இப்படி அனைத்து அத்லேத்திக் போட்டிகளுக்கும் ஒரு சேர பயிற்சி தந்தாருனா புண்ணியமா போகும் சாமி.. நமக்கு தான் தங்கம், வெள்ளி, வெண்கலம், வெங்காயம் எல்லாமே!!!

நன்றி ஹெய்ன்அடுத்து தாரணி அக்கா வாங்க (சீக்கிரமா வாங்க)

மொக்க PUNCH வசனம்:

சிலம்பாட்டம் படத்துல கதாநாயகி முதல் பாதியில் காட்சிகளில் முழுக்க விரசம்...அதோட வசனத்திலும் இன்னும் விரசம்.. தன்னை ஏதோ பெரிய மாஸ் ஹீரோஅப்டி எண்ணி கொண்டு சிலம்பு பேசுற வசனம்லா காதுல எரிகிற எண்ணையஊத்தி, வெறி எத்துற கணக்கா இருந்துச்சு.. இதுல சக நடிகர்களை வம்புக்குஇழுக்குறார்.. ல்லி மாதிரி இருக்குற.. நீ கில்லியா.. சில்லி வசனம்

நன்றி அக்காகார்த்திக் கிரிஷ்ணா வாங்க


மொக்க கதை:

குருவி குருவி அடிச்சா? இத நா கத அப்டி சொன்னா பல பேர் சண்டைக்கு வருவாங்க.. ஒரு ஊரே அடிமையாம். அவங்க அப்பா, சபதம் எடுப்பாராம், புள்ள இது தெரியாம வளருமாம், இடைவேளை முன்னாடி தெரிஞ்சி அந்த சபதத்த எப்படி நிறைவேற்றுவார் SUSPENSEஆம்... அட போங்கப்பா


மொக்க திரைக்கதை:

அழகான கதை, மலையாளம் மொழியில வெற்றி பெற்ற படம்... அத பசுபதி வச்சி பண்ணலமா, ரஜினி வச்சி பண்ணலாமா, நயந்தாரா வச்சி பண்ணலமா குழம்பி, ரசிகர்களையும் குழப்பி, ஒரு RE-MAKE படம் எப்படி எடுக்க கூடாதோ, அதுமாதிரி எடுத்தாரு... தெளிவில்லாத திரைக்கதை.. P.வாசு வாங்க உங்களுக்கான விருது இதோ

நன்றி ஹெய்ன்...அடுத்து கில்மா அண்ணா வாங்க


மொக்க வசனம்:

இந்த படம் கத, திரைக்கதை அதுல கூட வந்து இருக்கும்... ஆனா வசனம் இருக்கே.. உலக மகா மொக்கடா சாமி.. ஆங்கில வசனம் மூலமா தப்பிக்கலாம் முடிவு பண்ணி படத்த எடுத்தாங்க போல.. தமிழ் வசனமும் மொக்க.. ஆங்கில வசனம் அட விட மொக்க... புரிஞ்ச பாசைய புரியாத பாசையா பேச நல்ல திறமை வேண்டும்... அந்த திறமைக்கு இந்த விருது..  சக்கரகட்டி


மொக்க வில்லன்:

சிவாஜி படத்துல வாங்குனா பேரு.. மத்த படத்துல வாங்குனாரு போரு.. குருவி படத்துல மொதல்லயே அடி வாங்கி சப்ப வாங்கி, CLIMAXல ஏதோ பண்ண வந்து இன்னும் மொக்க வாங்குனாரு... ஏகன்ல இன்னும் என்னென்னமோ பண்ணார்.. உறுமுனார், கததுனார், அஜித் தவிர அவரோட அடி ஆட்கள சுட்டு, கடைசியில், அவர் கூட யாரும் இல்லாததால பாவமா செத்து போனாரு..  அந்த விக் இருக்கே அது தான் உங்களுக்கு இந்த விருது கிடைக்க முக்கிய கருமம்... சே..காரணம்... சுமன்வாங்க

நன்றி அண்ணா (இவரையும் ROUND... டக்(TAG) என்ன ஆச்சு??)அடுத்து அம்பி மாமா வாங்க


மொக்க நகைச்சுவை நடிகர்:

வடிவேலு இந்திர லோகத்தில் ஒரே மயக்கத்துல இருந்தாரு போல.. காமெடீ இல்ல... ஆனா வேறு சில படங்களில் ரசிக்க வைத்தார்... இதே நிலமை தான் சந்தானம் கூட... அறை எண் 305 3 காட்சி கூட சிரிப்பு வரல.. மூட்டை பூச்சி கடிச்சி அரிப்பு தான் வந்துச்சு... சில படங்களில் ரசிக்க வைத்தார்.. ஆனா விவேக்ன்னு ஒருத்தர் இருந்தாராம்.. அவர் காமெடீ பேருல காம நெடி தான் செஞ்சாரு.. இந்த வருசம் நாயகன், நாயகி, பாடல் வந்தா யாரும் வெறி ஆகி கட்டல.. விவேக் வந்தா "மொக்க சாமி வந்துட்டான் டா.. வா போய் தம்அடிக்கலாம்"னு கொஞ்ச பேர் கிளம்பிட்டாங்க.. சில பேரு "ஐயோ.. வேற SCENE போடு... அவங்க தொல்ல தாங்கல பார்த்தா, இவன் தொல்ல வேற!" கூச்சல் போட்டாங்க.. அடுத்த வருசம் மீண்டு வருவாரா இல்ல மீண்டும் இதே மாதிரிவருவாரா?? தெரில.. இந்த வருசம் எந்த படத்துலயும் இவர் கோமெடி எடுப்படல...


மொக்க நடிகை விருது:

இரு வழி போட்டி... நயந்தாரா, த்ரிஷா... நயந்தாரா யாரடி நீ மோஹினி படம் மூலமா தப்பி விட்டாலும், ஏகன், குசேலன், சத்யம் படத்துல மொக்க பண்ணிட்டாங்க... த்ரிஷாக்கு ரெண்டு படம்- குருவி, பீமா... ரெண்டுமே சொல்லிகிற மாதிரி இல்ல... வித்யாசமா எதுவும் பண்ணாம, அப்டியே வந்ததால,ஒரு கல்லூரி ப்ரொஃபெஸர் (PROFESSOR) இவளவு கவிர்ச்சியா வருவாங்களா அப்டி கொஞ்ச கூட யோசிக்காம, படம் முழுவதும், CHEWING GUM பண்ணிட்டு கும்னு இருந்த நயந்தாராக்கு மொக்க நடிகை விருது...

நன்றீங்க...அடுத்து பொடியன் சஞ்சை வாங்க

மொக்க இயக்கம்:

மீண்டும் மீண்டும் வா! வாசு ஸார்.. குசேலன் படத்துக்கு உங்களோட இயக்கம் பார்த்து நா மெய் சிலிர்த்து போய்ட்டேன்.. இந்த விருது மூலம் ஒரே வேண்டுகோள்.. தயவு செய்து மீண்டும் RE-MAKE படம் பண்ணாதீங்க.. ஒரு நல்ல நடிகர், எப்படியெல்லாம் வீணடிக்கலாம், அதற்கு ரணமாய், சே,உதாரணமாய் இருந்த உங்க இயக்கத்துக்கு இந்த விருது


மொக்க நடிகர் விருது:

சந்தேகமே இல்லாமல், இவர் சொல்ல மாதிரி "எனக்கு போட்டியே இல்ல"அதுனால இந்த விருது சிலம்பரசனுக்கு... இந்த வருடம் சில பேரு ஒரு மொக்க படம் கொடுத்தா இவரு நா தான் அதிகமா தருவேனு ரெண்டு மொக்க படம்-காளை, சிலம்பாட்டம் அப்படி நம்ப உயிர வாங்குற ரெண்டு படம் கொடுத்தாரு..சூடு பட்ட பூனை திரும்பவும் சூடு வச்சா? சொம்பு நீங்க மாறானும்... எது வருமோ,அதை மட்டும் பண்ணுங்க!! பேசி பேசியே காலத்த ஓட்ட முடியாது... நீங்க வளரனும்

நன்றி பொடியன்


கடைசி விருதுகள் வழங்க லொள்ளு கார்த்திக் வாங்க


மொக்க படம்:

போன வருசம் நல்ல படத்த விட, பல மொக்க படம் தான் வந்தது... விஷால்'s சத்யம், குசேலன், பந்தயம், சக்கரகட்டி, காளை, சிலம்பாட்டம், குருவி, ஏகன்,தெனாவெட்டு இப்படி ஒரு பெரிய பட்டியல் இருக்கு.. குசேலன் ரஜினி, பசுபதி அந்த கடைசி பள்ளிக்கூட விழாவில் பேசும் போது நல்ல நடிப்பு.. அதுனால இது இல்ல... காளை நல்ல தொடக்கம்... ஆனா அது எடுத்த விதம்?? பரவால போலச்சி போகட்டும்... சக்கரகட்டி, சத்யம், சிலம்பாட்டம், குருவி நல்ல பாடல்கள்.. அதுனால நீங்களும் போச்சு... ஆனா ஒண்ணு கூட நல்ல இல்லாம, எல்லாமே கேவலம், 15 நிமிடம் கூட பாக்க முடியாத படம், தலைவலியோட வெளிய வந்து, 3நாள் தூங்க முடியாம செஞ்ச படம்.... பந்தயம்... இந்த படத்த யாரால முழுசா பார்த்து ரசிக்க முடியும்னு ஒரே பந்தயமே வைக்கலாம்....

மொக்க விளம்பரம் செய்யப்பட்ட படம்:


காதலில் விழுந்தேன், தெனாவெட்டு.. எங்க கிட்ட CHANNEL இருக்குனு என்னஅடாவடி பண்ண முடியுமோ, அத்தனையும் பண்ணி, மொக்க படத்த விளம்பரம் செய்த சன் TVக்கு இந்த விருது.. தயவு செய்து 2 படத்தையும் CD ல கூட பாக்காதீங்க.... உங்க உசிருக்கு உத்தரவாதம் இல்ல...அவளவு தாங்க இந்த புதன் வழங்கும் மொக்க விருதுகள்.. திரும்பவும் சொல்றேன்... இத விட பல மொக்க இருக்கலாம்... அது நா பாத்து இருக்கமாட்டேன்.. உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா அதை நீங்க லொள்ளு பண்ற எடத்துல எழுதுங்க... நானும் அந்த படங்களை பாப்பேன் அப்டி நினைக்காதீங்க.. இது உஷார் ஆகாற்துக்கு தான்.. நீங்களும் இந்த படத்த பாக்கலனா, தயவு செய்து பாக்காதீங்க... இந்த விருது வழங்கும் விழா சந்தோசம் மட்டும் இல்ல.. தூக்கம்,வேதனை, ரோதனை, எரிச்சல், கோபம், சிரிப்பு இப்படி பல உணர்ச்சிகள் சேர்ந்தது!!மீண்டும் உங்கள அடுத்த வருசம் இதே இடத்துல, நிறய வித்யாசமான மொக்க படங்களோட சந்திக்கிறோம்.. விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி.. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. கொய்யால, திருப்பி இது மாதிரி ஏதாவது படம் எடுத்தீங்க, பிச்சு புடுவேன் பிச்சு.... இப்டிலா சொல்ல மாட்டேன்... எடுங்க.. இது மாதிரி நிறய எடுங்க.. அப்ப தான் எங்க பொழப்பு ஓடும்....

 
வருகைக்கு நன்றி!! மறக்காம லொள்ளு பண்ணிட்டு போங்க!!!
27 comments:

Arun Kumar said...

இந்த ஸிலுவய மதிச்சீ கூப்பிடடத்துக்கு நன்றி பா

அதிரை ஜமால் said...

இன்னாப்பா மீட்டரு ...

அதிரை ஜமால் said...

\\மொக்க எடிட்டிங்:\\

அட நம்ம எடிட்டிங்கும் அப்படித்தான்றேளா ...

அதிரை ஜமால் said...

\\பந்தயம் \\

நம்ம கிட்ட போடாதீங்க பந்தயம்

நமக்கு போட்டில கலந்துக்கவே இன்னும் தகுதி வரல

அதுக்குல்ல நமக்கு தொகுதி ஒதுக்கிட்டீயளே ...

Arun Kumar said...

நைனா திரும்ப சொல்லிக்கினேன் லான்ஸ் தான் அருண், நான் ஸால்ட் சிலுவை மட்டும் தான், அந்த டொமறு கூட என்ன லிங்க் பண்ணாத... அப்புறம் எனக்கு தலைவர் ரித்தீஷ்க்கு விருது கொடுக்க வசதுக்கு நன்றி... அப்புறம் அந்த சந்தியா பொண்ணு என்ன தாவு விடுதுப்பா சொல்லி வை அது கைல நமக்கு என்னைக்குமே முனிம்மா தான் ஆ ஆங்... எல்லா விருதும் ஓ.கே ஆனா நீ நம்ம தங்க தலைவர் சாம் ஆண்டார்சன் விட்டுட ??? அதே மாதிரி இன்னொரு மொக்கை படம் காப்டேன் படமும் விட்டுட்டா?

அதிரை ஜமால் said...

\\
மொக்க ஒளிப்பதிவு\\

இத வன்மைய கண்டிச்சே ஆகனும் ...

நாங்கல்லாம் பல படங்கள இதுக்காக மட்டுமே பார்ப்போம் ...

இதுலயுமா ...

அதிரை ஜமால் said...

\\பிரியாணி வாங்கிட்டு விடுங்க\\

பிரித்து ஆணி அடிக்கனும்

அங்க போய் பிரியாணி கேட்பதா ...

Anonymous said...

நல்ல இருந்துச்சு!! அடுத்த பதிவு இவங்களுக்கு யார் யாரை கூப்பிட்டு விருது கொடுக்கலாம் என்று போடவும்!! என்ன விஜயகாந்த, டி.ஆர் னு நிறைய Seniors இருகாங்க!! நாம அவங்களையும் கவுரவ படுத்தனும் இல்லையா ??

gils said...

அடபவி மக்கா...உருப்பிடியான படமா பாக்கவே மாட்டேன்னு சத்தியம் பண்ணி வச்சிட்டியா?? all mokkai pilim u the c...!!! aana super nakkal post :)

gils said...

//மொக்க நடிகை விருது:

இரு வழி போட்டி... நயந்தாரா, த்ரிஷா... நயந்தாரா யாரடி நீ மோஹினி படம் மூலமா தப்பி விட்டாலும், ஏகன், குசேலன், சத்யம் படத்துல மொக்க பண்ணிட்டாங்க... த்ரிஷாக்கு ரெண்டு படம்- குருவி, பீமா... //

thalaivi 9* and shashasha rendu periayum vaari irupathai vanmaiyaga kandikiren

பொடியன்-|-SanJai said...

ஹாஹா.. என் மனசை புரிஞ்சிகிட்டு அழைத்த மாதிரி இருக்கு.. இதை வன்மையாக ஆமோதிக்கிறேன்.. சூப்பர்பா கார்த்திக்.. கலக்கிட்ட போ.. :))

ambi said...

ஹஹா, செம நக்கல்ஸ்.

யப்பா இவ்ளோ பொறுமையா டைப் பண்ணீயா? உனக்கு 'பொறுமை பொன்னுசாமி' அவார்டை நான் தரேன். :))

@கில்ஸ், கார்த்திக்கின் பொறுமைய பாரு ராசா!

gayathri said...

காசு இருந்த செத்துபோன மனைவிக்கு கூட தாஜ் மஹால் கட்டலாம்... ஆனா காசு இல்லயா, கொய்யால உசிரொடு இருக்குற உன் காதலிக்கு கூட உன்னால தாலி வாங்க முடியாது

:)))))
:)))))
:)))))

G3 said...

Indha padamellam endha dhairiyathula edukkaraangannu ithana naal doubt irundhudhu.. naama enna padam eduthaalum oruthan salaikaama paapaandannu unga mela nambikkai vechu dhaan padatha edukkaraanunga pola :)

G3 said...

Evvvvvvvvvvvvvlo mokkaiya padam eduthaalum asaraama paathu adhukku award vera kudukkareenga paarunga.. unga kadamai unarchiya naan paaraataren :D

ஆளவந்தான் said...

//
Post perusssssssu!! Viral reagigal pathiram!!! Padhikum pothu glows pothu padikavum!!!!
//
Already in this climate.. the whole body has THERMAL COVER.. so no need to worry

ஆளவந்தான் said...

நான் இந்த லிஸ்ட் ல இருக்குற எந்த படமும் பார்க்கல ( நல்ல வேள தப்ப்சிசேன்)

குருவி கொஞ்சம் பார்த்ததுக்கே கண்ண கட்டிட்டு வந்துடுச்சு

குசேலன்.. முழுசா பார்த்தேன்.. கண்ணீரோட

காளையும் பார்த்தேன்...

மத்தபடி எந்த படமும் பாக்கலீங்க

ஆளவந்தான் said...

மெய்யாலுமே .. இவ்ளொ படம் பார்த்தியா ?

நீ ரொம்ப்ப்ப்ப்ப்ப்பபபபப நல்லவன் பா..

viji said...

~~ஆளவந்தான் said...
மெய்யாலுமே .. இவ்ளொ படம் பார்த்தியா ?

நீ ரொம்ப்ப்ப்ப்ப்ப்பபபபப நல்லவன் பா.. ~~

I agree with aalavanthan. NInga ROMBEEE nallavaru thaan...

Karthick Krishna CS said...

என்னை இந்த விழாவிற்கு அழைத்த, தம்பி கார்த்திக் அவர்களுக்கு என் நன்றி... இந்த விழாவை, எங்கோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு பார்க்கும் நாட்டாமை அவர்களுக்கும், என்னுடைய நன்றி. கார்த்திக் கிருஷ்ணா என்ற என் பெயரை கார்த்திக் கிரிஷ்ணா என்று விழா அழைப்பிதழில் தவறாக போட்டிருந்தாலும், தம்பியின் அன்பிற்கு கட்டுப்பட்டு இங்கே வந்துள்ளேன்.

இந்த விருதிற்கு கடும் போட்டி நிலவுவதாகவும், தவறினால், போட்டி காலியாகிவிடும் என்றும் குழம்பிய தம்பி, கடைசியாக ஒரு சிறந்த முடிவுக்கு வந்துள்ளார் என்றே நினைக்கிறேன். இவர்களை விட தகுதியானவர்கள் இருப்பார்களா என்று லைட் அடித்துதான் தேட வேண்டும்.. பரிசு பெற்றவர்கள், அடுத்த வருடமும், நம் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவார்கள் என்று நம்புவோமாக...
வாழ்க தமிழ்,
வளர்க தம்பியின் பணி,
மார்கழியில் ஒரே பனி,
தமிழ் சினிமாவிற்கு பிடித்தது சனி
என் வழி தனி
வரும் விடியல் இனி இனி இனி....

தாரணி பிரியா said...

நன்றி கார்த்திக் என்னையும் ஒரு மனுசியா மதிச்சு கூப்பிட்டியே ராசா. எனக்கு ஏத்த டாபிக் மொக்க பன்ச் வசனம்.

நன்றி. அதுவும் சொம்புவுக்காக தேங்க்ஸ்பா எல்லாம் சரிதான் ஆனா சீக்கிரம் வர சொல்லிட்டியே அதுதான் :(

எல்லாமே தகுதியான விருதுகள்தான்பா. கண்டிப்பா இதைவிட சிறந்த செலக்சன் இருக்கவே முடியாது.

ஆனாலும் இத்தனை படத்தையும் பார்த்த உன் மன தைரியத்தை முன்னிட்டு உனக்கும் ஏதாவது அவார்டு தரணுமே. என்ன தரலாம். எந்திரன் மாதிரி தைரியன் கார்த்திக்

சுமாராதான் இருக்கு இல்லையா இப்போதைக்கு இதை வெச்சுக்கோ. நாளைக்குள்ள ஒண்ணு நல்லதா சொல்லறேன். :)

ஆளவந்தான் said...

//ஆனாலும் இத்தனை படத்தையும் பார்த்த உன் மன தைரியத்தை முன்னிட்டு உனக்கும் ஏதாவது அவார்டு தரணுமே. என்ன தரலாம். எந்திரன் மாதிரி தைரியன் கார்த்திக்
//
ரிப்ப்பிபீட்ட்ட்ட்டெடெடேடேய்ய்ய்ய்ய்ய்ய்

PoornimaSaran said...

மொக்கை இசையா??

காளை படத்துல சொம்பு கூட இரவு பார்ட்டி போய், அந்த போதையிலே இசை போட்டார் போல.. //

சத்தியமா என் இசை இல்லை

Divyapriya said...

நல்ல வேளை இதுல ஒரு படம் கூட நான் பாக்கல :))
வருஷம் பூரா இந்த மாதிரி படங்கள தேடி தேடி பாத்து இந்த பதிவ எழுதின உங்களுக்கு "மொக்கை ரசிகர்" ன்னு ஒரு பட்டம் குடுக்கலாம் ;)

நாகை சிவா said...

:))

கே.ரவிஷங்கர் said...

கார்த்திக்,

நல்ல வேளை நான் எந்த படமும் பார்க்கவில்லை.கடைசியாக பார்த்தது
“கணவனே கண் கண்ட தெய்வம்”

மொக்க ஒகே.

swathi paul(dew drop) said...

you have a lot of patience to take note of all these things.These ppl are never going to change.seriuosly.I hate J.K.Ritheesh .But the best was chakkrakatti tuut(dude in chakarekatti ishtyle).

Blogger templates

Custom Search