Wednesday, 24 December 2008

புதனின் குறைப்பார்வை- சினிமா அன்றும் இன்றும்

வணக்கம்.. ஆங்கில பதிவு கொஞ்சம் (இல்ல ரொம்ப) பிசியானதுனால் தமிழ் வலைப்பக்கம் தல, கை, கால் எதயும் காட்ட முடில... (நல்லா தானே இருந்தோம்? ஏன் இப்படி?? நாங்க சந்தோசமா இருந்தா பிடிக்காதே??) எனக்கு தமிழ் வலைப்பூ தாங்க ஆர்வம்... ஆனா என்ன தமிழில் அடிக்க நான் எடுத்த மென்பொருள் எல்லாம் என் மெய்ப்பொருளை சோதித்து விட்டன... அதுனால நா தமிழில் அடிக்கணும்னா ONLINE இருக்க வேண்டும்.. க்வில்பட்(QUILLPAD) என்ற வலை நல்ல உதவியாக இருக்குங்க!! அழகி இருந்து இறக்குமதி செய்த மென்பொருள் செல் அரித்து போய் விட்டது (CORRUPTED) அப்டி சொன்னதால் நமக்கு கஸ்தமாக தான் இருக்கு... சரி எதுக்கு லொள்ளு பண்ண வந்த இடத்துல பொலம்பிகிட்டு.. விசயத்துக்கு வருவோம்!!

நம்ப நாட்டாமை மாசம் ஒரு கதை தான் சொல்வாரு (நாயே!! கத சொல்ல தெரிலனு ஒத்துக்கோ) அதுனால  உங்களுக்கு அடுத்த கதாபாத்திரம் அறிமுகம் செய்றேன்ன்.. சினிமானா நம்ப எல்லாருக்கும் ஆர்வம் ஆச்சே.. அதுனால சினிமா சொல்ல வரார்.. வரார்... 5...  4... 3... 2... 1.... (டேய்!! இது என்ன விருது வழங்கும் நிகழ்ச்சியா??) புதன்... என்ன புதன் கிழமை சொல்ல போறேன் யோசிக்கிரீங்களாஅட.. இவர் பேரு புதன்ங்க.. ஓவர் 2 புதன்..

வணக்கம்... நா தான் புதன் பேசுறேன் (பின்னாடி யாரும் DUBBING கொடுக்கல..அதுக்கு தான் இந்த வசனம்)என்னடா பேரு புதன் இருக்கே, புதன் கிழமை பிறந்தானா?? இல்ல புதன் கிழமை இவன் பல்லானா பல்லனா பண்ணுவானா யோசிக்காதீங்க... நா புதன் கிழமை அன்று போய் படம் பாப்பேன்.. அதுனால என் பேரு புதன்... (என்ன ஒரு காரணப்பெயர்).. நா தமிழ் சினிமா மட்டும் பார்த்து நடுநிலையாக (ஏதோ நடுவுலனு ஸால்ட் ஸிலுவ மொக்க போடாதீங்க) விமர்சனம் செய்வேன்... ஏனா எனக்கு பிற மொழிள் தெரியாது.. அதோட இல்லாம தமிழ் சினிமா கொடுமையே தாங்க முடில... இதுல பிற மொழிகளின் கொடுமைவேறயா?? என்னோட நிகழ்ச்சி பேரு குறைப்பார்வை.. அதாவது புதன்'s குறைப்பார்வை.. என்னடா இவனுக்கு பார்வை கோளாறா அப்படி லொள்ளு பண்ண கூடாது... படங்களை நிறை, குறை பார்த்து விமர்சனம் செய்து அதோட குறைகளை மட்டும் அதிகமாக எடுத்து சொல்வேன் (வர பல படங்களில் குறைகள் தானே அதிகம்) அதுனால இந்த நிகழ்ச்சி பேரு புதன்'s குறைப்பார்வை.. ஆரம்ப நிகழ்ச்சியே படத் லொள்ளு பண்ண வேணாம்.. அதோட வருசம் முடியும் போது, நல்லவனை மற்றும் நினைவில் நிற்கணும்.. அதுனால நாம தமிழ் சினிமாவின் வரலாற்றை பார்ப்போம்..  அரசியல் பற்றி தெரியாம பலர் அரசியில் செய்யும் நாட்டில்சினிமா பற்றி தெரியாமல் சினிமா பேசுனா?? அதுனால நா என்னோட  சினிமா அறிவைஎனக்கு தெரிந்த சினிமாவை உங்க கிட்ட மொதல்ல சொல்றேன்... பேசா படத்தில் ஆரம்பித்து பேசும் படம் வந்து, இப்ப பேச முடியாத அளவுக்கு வந்துள்ள படங்களை கொடுத்த தமிழ் சினிமா- ஒரு  பின்னோட்டம்.. சோய்ன்க்க்க்க்க்க்க்க்க்

 

சென்னையில் சினிமா தோன்றி ஏறக்குறைய 75 ஆண்டுகளை கடந்து விட்டோம். சென்னையில் மௌன சகாப்தத்தில் தயாரிக்கப்பட்ட 50 தொடர்கதை படங்களும்,முப்பது செய்தி படங்களும் இன்று ஒன்று கூட இல்லை. அதுவுமில்லாமல் 1931 முதல் பேசும் தமிழ்படம் காளிதாஸூம் சரி, முதல் 6 வருடங்களில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் படங்களும் முற்றிலும் அழிந்து விட்டன. இந்திய ஆரம்பகால திரைபடங்களை பற்றி அறிவதற்கு இருக்கும் ஒரே ஆதாரம் Report of the indian cinemato-graph committee,1927-28 என்ற ஆவணம் தான்1857-களில் எம்.எட்வர்டு என்ற அமெரிக்கர் சென்னை மாநகராட்சிக் கட்டிடத்திற்கு அடுத்த விக்டோரியா பொது அரங்கத்தில் முதன்முதலில் திரைப்படங்களை காட்டினார். 400-500 அடி நீளம் கொண்டு 10 நிமிடமே ஓடக்கூடிய தொகுக்கப்படாத நகைச்சுவை காட்சிகளோ, இயற்கை காட்சிகளையோ, பல்சுவை நிகழ்ச்சிகளையோ ஒன்றன் பின் ஒன்றாக 3 மணி நேரத்திற்கு காட்டியது. ரூ5, ரூ3, ரூ2 என்று நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பணம் படைத்தோருக்கும், வசதியானோருக்கும் மட்டுமேயான சினிமாவாக விளங்கியது. இது நகரம் நகரமாக நகர்ந்து சினிமாக்களை இந்தியாவில் காட்டப்பட்டு வந்தது.

1913-ஆம் ஆண்டு அளவிலேயே தான் முழுநீளத் திரைப்படங்கள் என்று காட்டப்பட்டது. அந்த திரைப்படங்கள் லண்டனிலிருந்து உரிமை வாங்கி சென்னையில் காட்டப்பட்டது. அதற்கு முன்பாக 1907-ல் எலெக்டிரிக் பயாஸ்கோப், லிரிக் தியேட்டர் என்ற இரு திரையரங்குகள் தோன்றின. இது மவுண்ட் ரோடின் வடகிழக்குப் பகுதியில் ஆங்கில கணவான்களும், சட்டைக்காரர்களும் (ஆங்கிலோ-இந்தியன்) அதிகமாக வாழ்ந்த பகுதியில் இருந்தது. அவற்றை முழுமையான திரையரங்குகள் என்றழைக்க முடியாது. அவற்றை மது,நடனம், குத்துச்சண்டை,பல்சுவை நிகழ்ச்சிகள் போன்றவற்றை திரைப்படங்களுடன் அவ்விடங்களை பயன்படுத்தியது. இவையும் விரைவில் மூடப்பட்டன. லிரிக் தியேட்டர் தீக்கிரையாயிற்று. எலெக்ட்ரிக் பயாஸ்கோப் அஞ்சல்நிலையம் கட்டுவதற்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது.

 

தமிழில் முதல் (மௌனபடம் தான்) திரைப்படத்தை தயாரித்தவர் நடராஜா.ஆர்.முதலியார். இவர் கர்சன் பிரபுவுக்கு ஆஸ்தான சினிமொட்டோ கிராஃபராக இருந்தவர். ஒரு பழைய கேமராவை வாங்கி கீழ்பாக்கம் மில்லர் ரோடில் ஒரு ஸ்டூடியோவை திறந்தார்.கீச்சக வேதம் (1916),திரௌபதி வஸ்திராபரணம்(1917),மயில் ராவணன்(1918) போன்று 7 படங்களை எடுத்தவர். அவரது ஸ்டூடியோ திக்கிரையாகி அவரது மகனும் இறந்துவிட சினிமாத் தொழிலை விட்டுவிட்டார். - நன்றி: ப்லிம் நியூஸ் ஆனந்தன்

1915-
க்கு முன்பு வரை சென்னை மாகாணத்தில் சினிமா எந்த வகையிலும் பரவலான சமூக நிகழ்வாக இருக்கவில்லை. ஏராளமான மௌனப்படங்கள் சென்னையில் தயாரிக்கப்பட்டாலும் சென்னை மாகாணத்தில் பரவலாக திரையிடப்பட்ட படம் தாதாசாகிப் பால்கேயின்ஸ்ரீகிருஷ்ண ஜன்மா(1919). பால்கேயும் தென்னக பயணம் மேற்கொண்டு புதுக்கோட்டை மன்னரின் அவையில் திரையிட்டு காட்டிய பிறகு பரவலாக திரையிடப்பட்டது மக்களுக்குகிடையே அதற்கு அமோகமான வரவேற்பு கிட்டியது. அப்படம் எதிர்பாராத வகையில் 3 வாரங்கள் ஓடியது. போலீசார் அனுமதியுடன் மாலை 6 மணியிலிருந்து இரவு 3 மணி வரை நான்கு காட்சிகளாக இந்தப் படம் காட்டப்பட்டது. இத்திரைப்படம் திரையிட்ட வெல்லிங்டன் தியேட்டர் மட்டும் 60000 ரூபாய் பார்த்தது. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த படம் தான் புராண படங்களை எடுப்பது வெற்றிப்பெறக் கூடிய பார்மூலாவாக கருதப்பட்டது. காதல் காட்சிகளையும், மற்றக் காட்சிகளையும் கொண்டிருந்த ஹாலிவுட்டோடு மக்கள் இந்த படங்களை ஒப்பிட்டு இதற்கு வாய்ப்பளிக்க ஆரம்பித்தனர்.4
0 பாடல்கள் இருந்த படங்களில் இருந்து, புராண சாலையில் மயங்கி கிடந்த தமிழ் சினிமாவை, வசனம் வடம் கொண்டு அண்ணாவின் வேலைக்காரியும், கருணாநிதியின் பராசக்தியும் சமூக வீதிக்கு இழுத்து மாற்றம் கொண்டு வந்தனர்... தமிழ் கடவுளுக்கு ஆறு முகம் என்றால், இந்த நடிப்பு கடவுள் சிவாஜிக்கு 100 முகங்கள்... முதல்  ஸூபர்(SUPER) ஸ்டார் M.K.தியாகராஜ பாகவதர்.. பெண் ரசிகைகள் அதிகம் கொண்ட முதல் நடிகர்..  ஸ்டைல், பாசம் இரண்டும் கலந்த M.G.R.. சிரிப்பும் சிந்தனையும் கொடுத்த NSK ஒரு மைல்  கல் என்றால் சந்திரபாபு, பாலையா, நாகேஷ் வைரக்கல்.. நம்பியார் நல்லவருக்குள் ஒரு வில்லன், வில்லனாக வந்து நாயகனான M.R. ராதா,  அழியாத படங்களை தந்த பீம்சிங்ஸ்ரீதர்.... ஸ்டூடியோ சுவர்களில் இருந்த தமிழ் சினிமாவைகிராமத்து புழுதிக்குள் கொண்டு வந்த என் இனிய தமிழ் மக்கள் பாரதி ராஜாவின் 16 வயதினிலே சப்பாணி, மயிலு , பரட்டை தமிழ் சினிமாவின் படியன்கள்.. நறுக்கென வசனம் வைத்த பாலசந்தர், வசனம் வேணாம், ஒளியில் வசனத்தை பேச வைத்ததேசியத்தை காட்டிய மணிரத்னம்.. கலை வழி சினிமா மாஸ் படமாக மாற்றிய பெருமை A.V.M நிறுவனம் பெற்றது..  முரட்டு காளை, சகல கலா வல்லவன் இன்னும் கண்களில்... கில்மா காட்சிகளை சரியான இடங்களில் வைத்து, ஜனரஞ்சகமாக, குடும்பங்கள் ரசிக்கும் விதத்தில், காமெடீயோடு தந்தவர் பாகியராஜ்..

 

ஆனா இப்போ? மசாலா படம் எப்படி எடுக்கணும் தெரியாம, கில்மா படம் எப்படி எடுக்கணும் தெரியாம எல்லாமே கேவலமாக வந்து கொண்டிருக்கிறது...  அத்திப்பூ மாதிரி வருசா வருசம் 5 நல்ல படம் வந்தா, 20 சகிக்க முடியாத படங்களும் வருது... தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் நஷ்டம் என்பதே குதிரைகொம்பு. ஆனால் இன்றைய நிலையே வேறு. திருட்டு வி.சி.டி., பொழுதுபோக்கு சேனல்கள் என சினிமா ரசிகர்கள் பார்வை சற்று இடம் மாறியுள்ள காலம் கட்டம் இது. படம் ஊத்தி கொண்டால் கூட அதன் ஆடியோ விற்பனையே தயாரிப்பாளரை காப்பாற்றிய வரலாறு தமிழ் சினிமாவில் உண்டு. இன்றோ புதிய ஒரு படத்தின் பாடல்கள் வெளிவருவதற்கு முன்னரே இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன


7
0 சதவீத படங்களில் புதுமுகம்... அதுல 5 பேருக்கூட தேறாத பசங்க... நாயகன் இப்படினா நாயகிகள் கவிர்ச்சி ஆகிடாங்க.. புடவை, சுடிதார் ஆகி அப்றோம் Jeans மாறி, இப்ப Kerchief கூட மிஞ்சாதுங்கற அளவுக்கு உடை வடிவமைப்பு... அடுப்பு சுட்ட ஓமிளெட்(OMLET) இப்ப நாயகி தொப்புள்.. கண்றாவி.. யார் வேணா சினிமாவில் வரலாம்னு ஆகி போச்சு இப்ப இருக்குற நிலமை.. உங்க அப்பா சினிமா சும்மா தலைய காட்டியவரா?? உடனே அந்த பையன் கதாநாயகன்...

கதை பஞ்சத்தை போக்க சதை.. இல்லாட்டி ஹிந்தி படம், தெலுங்கு படம், ஆங்கில படம் அதுல இருந்து கதைய சுடு.. சுட்டா ஒழுங்கா சுடுறாங்க?? எல்லாம் கலந்த கலவையா ரசிக்க முடியாத அளவுக்கு ஆபாசம், காட்சியமைப்பு... இதுல முக்கியம் நேத்து வந்தவங்கஇன்னைக்குவந்தவங்க எல்லாருக்கும் பில்ட்-அப்(BUILD_-UP) காட்சிகள்... தமிழ்படத்துக்கு பிடிச்சிருக்கும் சனி முன்னனி ஹீரோக்களின் துதி தான். பாடல்களின் வார்த்தை ஜாலங்களும், காட்சி அமைப்பில் கதாநாயகன் செய்யும் வண்ண ஜாலங்களும் அடிதட்டு மக்கள் முதல் மேல் தட்டு வர்க்கம் வரை கதாநாயகனுக்கு தட்டு தூக்க வைக்கிறது.கதாநாயகன்களை துதி பாடி வரும் பாடல்களும்,கதாநாயகனுக்கு பில்ட்-அப் கொடுத்து வரும் பாடல்களும் கேட்டு கேட்டு காதுகள் தான் புண்ணாகிப் போகிறது. ஊருக்கு நல்லது செய்யும் பெரியவராக,சேரி மக்களுக்கு நல்லது செய்யும் சேவகனாக….. டேய் டேய் நிப்பாட்டுங்கடா…. திருந்த விடுங்கடா மக்களை.

இத மீறியும் கதை தட்டுப்பாடு.. பழய படத்த திருப்பி எடு.. கேட்டா RE-MAKE.. பூடலங்கா MAKE.. அப்றோம் படப்பேருக்கு பஞ்சம்.. எடுங்கடா அசிங்கமா வார்த்தையெல்லாம்.. பாடல் வரிகளுக்கு பஞ்சம்  போடு அசிங்கமான வார்த்தையெல்லாம்.... இசைக்கு பஞ்சம் போடுங்கடா பழய பாடல்களை.. RE-மிக்ஸ்.. மொத்ததுல நல்ல படம், காட்சி, பாடல், நடிப்பு எல்லாத்துக்குமே இப்ப பஞ்சம் தான்.மகேந்திரன் உதிரிபூக்களை புதுமைபித்தனின் கதையிலிருந்து தழுவியது என நேர்மையாக டைட்டிலில் போட்டார். இன்றைய காலக்கட்டத்தில் எங்கிருந்து உருவப்பட்டாலும் நேர்மையற்ற தன்மை தான் திரைஉலகில் நிலவுகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சந்திரமுகி. சந்திரமுகி கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் P.வாசு என வெட்கமில்லாமல் போட்டு கொண்டிருக்கிறார். சந்திரமுகியின் உண்மை கதைக்கு சொந்தக்காரர் மது முட்டம் என்பவர் உண்மை மூலத்தை சொன்னால் தன் திறமை மீது மக்களுக்கு சந்தேகம் வந்து விடுமோ என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். சினிமாவில் இப்போது நேர்மை என்பது நகைப்பு உரியது ஆகிவிட்டது.

நான் ரீமேக் படங்களை வெறுப்பவன் அல்ல. நல்ல கதையின் தமிழ் வெர்சனை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைபவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன்

காசு இருந்தா என்ன வேணா பண்ணலாம்.. அதுக்குனு சினிமா பண்ணலமா?? இறுதியில் நட்டம் தான்.. மஞ்சா பையோடு இங்க வந்து மஞ்ச நீஜார் கூட இல்லாம தோத்து போனவங் பலர்.. முகம் காட்ட வந்து முகம் இன்றி தொலைந்து போனவர்கள் பலர்.. இங்கு வெற்றி என்பது சிலருக்கு, தோல்வி என்பது பலருக்கு.. அதில் எதிர்நிச்சல் போட்டு கரை கடந்தவர்கள் சிலர்.. நீச்சல் தெரியாமல் மூழ்கி போனவர்கள் பலர்.. சினிமா என்னும் சுனாமி விழுங்கிய ஆட்கள் தான் எத்தனை?? மாய உலகத்தில் நாளை நானும் ஒரு ஸ்டார் என்று கனவுகளோடு வரும் பலர் வாழ்க்கை கனவாகி போய் விட்டது... எப்படியாவது காசு பாக்கணும்னு தரமற்ற படங்களை தந்து, இருக்கும்  தமிழ் சினிமாவின் ஆயுளை இன்னும் போட்டு தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.. நாங்கள் கேட்பது நல்ல படங்களை  மட்டும் இல்லை... மசாலா படமாக இருந்தாலும் அதில் சண்டை, பாடல், திரைக்கதை அனைத்தும் ரசிக்கிற மாதிரி வையுங்கள்...

 

அடடா இவன மாதிரி லொள்ளு பண்ண வந்தா என்னையும் பொலம்ப வைத்து விட்டாங்க.... தமிழ் சினிமா பேசுனாலே தயாரிப்பாளர்கள் மாதிரி புலம்ப வேண்டியது தான்.. அடுத்த தபாலும் நா தான் எழுத போறேன்.. அட கவனிச்சீங்களா? இன்று புதன் கிழமை... அதுனால புதன் நானும் உங்களோட அறிமுகம் ஆயிட்டேன் (சப்பா!! முடில!!) அடுத்த தபாலில என்ன?? ஒரு க்ளூ தரவா?? இன்றைய தாபால அது வந்துருக்கு... அதை நான் சிகப்பு நிறத்துல போட்டுருக்கேன்.. நான் சிகப்பு வார்த்தை.. அதை யோசிச்சி வைங்க.. நா அடுத்த தபால வந்து பாக்குறேன்.. மறக்காம லொள்ளு பண்ணிட்டு போங்க!!  மீண்டும் உங்கள அடுத்த குறைப்பார்வை நிகழ்ச்சியில் சந்திக்கிறேன்.. அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது புதன்..


வருகைக்கு நன்றி!!

 

7 comments:

PoornimaSaran said...

கார்த்தி,
சினிமா வரலாறே உன் கையில் இருக்கும் போல:)

PoornimaSaran said...

// எப்படியாவது காசு பாக்கணும்னு தரமற்ற படங்களை தந்து, இருக்கும் தமிழ் சினிமாவின் ஆயுளை இன்னும் போட்டு தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.. //


உண்மை :(

PoornimaSaran said...

//நாங்கள் கேட்பது நல்ல படங்களை மட்டும் இல்லை... மசாலா படமாக இருந்தாலும் அதில் சண்டை, பாடல், திரைக்கதை அனைத்தும் ரசிக்கிற மாதிரி வையுங்கள்...
//

வழிமொழிகிறேன்

ஆளவந்தான் said...

சிரத்தையும் உழைப்பும் வெளிப்படுகிறது..

Good keep it up

Arun Kumar said...

இன்னமா நைனா எங்க அந்த பெர்சு...அப்புறம் நீ புதனோ இல்ல சனியோ...மரியாதையா ஒன்னெ ஒண்ணு சொல்லிடு- நீ நம்ம காப்டேன் ரசிகனா இல்ல டீ.ஆர் ரசிகனா?? ஆமா உன்ன மாதிரியே ஒருத்தர் ஸூட் கோட்டு போட்டு கீனு வந்து விசய் டீவீ ல பேசுவாரே அவரு யாரு? மன்மதன்? செறி உனக்கு குறை பார்வைனா நமக்கு தேய்ன்சா டாக்டர் ஒருத்தர் இருக்காரு என் வீடு நாய்க்கு அவர் தான் பிரசவம் பார்த்தரு பா அவர் கைல கட்டுநனு வையேன் சுபெர கொடுப்பாரு பா மருந்து.... அப்புறம் நீ சொன்ன மாட்டேர் எல்லாம் ஓ. கே ஆனா இன்னாதுக்கு அங்க சரித்திர பாடம் நடத்த்துர நீ?? மீதி மாட்டேர் எல்லாம் சுப்பெரு அந்த கவிர்ச்சி ஏன் கூடாதுன்? என் வீட்டில தான் முனிம்மா ஷோக்கா ட்ரெஸ் பண்ண மட்டிரா தியேட்‌ரெலா யாவது பாக்க ஊடு நைனா...அப்பால அடுத்த பூத உன்ன மீட் சேஸ்தானு (நேத்து அந்த்ர பக்கம் சவாரி நைனா)

gils said...

??!!! sathiayama mudiala...saami..en intha kola veri..oru semester sylabusa oray classla nadathura mari iruku!!! scroll panni veral regai thenji poachu rasa..chinna posta postavum :))

GLO said...

amma ungaluku evalavu post panna neram pathutha???

Blogger templates

Custom Search