Saturday, 13 December 2008

மீனவனும், வைரமும்

என்ன கண்ணுங்களா?? எல்லாரும் சவுக்கியமா?? நா தான் மக்கா உங்க நாட்டாமை வந்துருக்கேன்.. ஊருக்குள்ள வெள்ளம் வந்து ஒரு உலுக்கு உலுக்கிடிச்சி.. நம்ப ஊரு ஜனமெல்லாம் ரொம்ப ஆடிப்போய்ட்டாங்க தம்பி.. மக்களுக்கு ஏதாவதுனா உதவுது நாட்டாமை கடமை தானே? அப்படி இறங்கி பண்ணது நமக்கு உடம்பு கொஞ்சம் முடியாம போச்சு கண்ணு.. இந்த முள்ளமாரி பையன் சொன்னாலும் எனக்காக நீங்க பிராத்தனை பண்ணதுக்கு ரொம்ப நன்றி கண்ணு.. உங்க வேண்டுதலால நா சீககரம் குணம் ஆகி...  லொக்கு  லொக்கு லொக்கு... க்ர்ர்ர்ர்... இன்னும் கொஞ்சம் ஜொரம்  இருக்கு கண்ணு.. மாத்திர போட்டா  சரி ஆயிடும் (என்ன பா லொள்ளு பையா.. நல்லா ஜொரம் வந்த மாதிரி நடிக்கிறேனா?? போகும் போது கொஞ்சம் போட்டு கொடு கண்ணு..  

டேய் குண்டா தலையா.. 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா,500 ரூபாய்க்கு  நடிக்கிறகொடுத்த காசுக்கு மேல கூவாதடா கொய்யா..) ங்... இப்ப உங்க எல்லாருக்கும், நீங்க ஆவலா எதிர் பாக்குற கத சொல்ல போறேன் கத சொல்ல போறேன் கத சொல்ல போறேனே.... என்னடா நாட்டாமை பாட்டுலா பாடுறானு யோசிக்கிரீங்களா?? அட கண்ணு நம்ப வீட்டில தான் TV பெட்டி இருக்கு?? அதுல தினமும் SUN ம்யூஸிக் புதுசு புதுசா பாட்டு போடுறான்.. என்ன பாட்டு போடும் போதுலா அந்த பொண்ணு பாட் தறிக்கெட்டு செய்யுது... கலி காலம் கண்ணு.. (காதுல.. ஐயா.. அது தறிக்கெட்டு இல்ல DEDICATE) சரி.. சரி.. அடுத்து படம் பாக்கலாம்னா, மின்சாரம் எப்ப இருக்கும், எப்ப போகும்னு சொல்ல முடியாத காலம் இது... அன்னிக்கு ரொம்ப சுவாரசியமா ஒரு படம் பாத்தேன் கண்ணு... மின்சாரம் போச்சு.. மின்சாரம் வந்த அப்ப படம் முடிஞ்சிடிச்சுன்னு போட்டுட்டான்.. என்ன கொடு கண்ணு இது... அரவிந்த் சாமிக்கும், ஆற்காடு வீராசாமிக்கும் என்ன விதியாசம் தெரியுமா?? அரவிந்த் சாமி வந்தா மின்சார கனவு.. ஆற்காடு வீராசாமி வந்தா மின்சாரமே கனவு தான்.. அட கத சொல்ல வந்த இடத்துல என்ன அரசியல் பேசிட்டு.. என்ன G3, ஷாங்கி, விஜய், அம்பிPoornimaபுனிதா மற்றும் நம் உறவினர்லா வந்துருக்காங்களா?? வாங்க கதைக்கு போகலாம்

 

ஒரு ஊருல (எந்த ஊரா இருந்தா என்ன? கத கேளுங்க) ஒரு மீனவன் ஒருத்தன் இருந்தான்.. ஆனா அவன் வீசுற வலைல மீனுங்க கொஞ்சம் கம்மியா தான் சிக்கும்.. அவன் மனைவி ரொம்ப நல்ல. கிடைக்கிற சொற்ப சம்பாத்தியத்திலும் அவ புருசன வையாம, சிக்கனமா குடும்பம் நடத்துனா.. (கல்யாணம் ஆன நண்பர்கள் பெருமூச்சு சத்தம் கொஞ்சம் கேக்குது.. கூடவே நாட்டமையுமா?? வீட்டுக்கு வீடு வாசப்படி) ஆனா மீனவனுக்கு மட்டும் மன வருத்தம்.. என்னடா ஏவளவு தான் முயற்சி பண்ணாலும் நமக்கு அதிர்ஸ்தம் இல்லையே, குஞ்ச சம்பளம் தான் வருதேன்னு.. ராத்திரி பூரா அவனுக்கு இந்த கவலையால தூக்கமே வரல.. அதுனால 2 மணிக்கே எழுந்து கடல் பக்கமா நடக்க ஆரம்பிச்சான்.. கால் வலிக்கவே அப்படியே கரைல படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத் பாக்கலானான்.. பக்கத்துல ஒரு மூட்டை இருந்துச்சு.. பயபுள்ள இருந்த கடுப்புல,அத திறந்து பாத்து, இருக்குற கல்லலா எடுத்து, ஒண்ணு ஒண்ணா பொறுமையா தண்ணி தூக்கி அடிச்சான்.. ஒவ்வொரு கல்லுயும், ஒவ்வொரு கவல கண்ணு.. அப்ப தான் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பிச்சிச்சி.. விடியல் அவன் கண்ணுல பட, மூட்டை இருக்குற கடைசி கல்ல எடுத்தான்.. அப்போ தான் அவனுக்கு தெரிஞ்சுது, அதுல இருந்தது வெறும் கல்லு இல்ல (அப்ப செங்கலா??) அது வைரம்னு.. அவளவு நேரம் அவன் தூக்கி எறிஞ்சது, எல்லாமே வைரக்கல்லு கண்ணு.. தன்னோட நிலமைய நினைச்சு, தலைல கைய வைச்சு பொலம்ப ஆரம்பி ச்சிட்டான்கத தீர்ப்பு: ஒரு காரியத் செய்யற்துக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்.. பதறிய காரியம் சிதறும்.. அதுனால கவனம் தேவ..லொள்ளு தீர்ப்பு: இதுக்கு தான் நா சொல்றேன்.. காலைல சீக்கிரமா எழுந்துக்க கூடாது!! பாத்தீங்கல இவனுக்கு என்ன ஆச்சுனு.. இதுவே கொஞ்சம் தாமதமா எழுந்து இருந்தா, பையனுக்கு எல்லா வைரமும்  கிடச்சி இருக்கும்..நாட்டாமை
தீர்ப்பு: அட விடு கண்ணு.. இதுக்குலா பொலம்பிட்டு.. எப்பவுமே, உழைப்பால கிடச் காசு தான் கடைசி வரைக்கும் இருக்கும்.. அதிர்ஸ்தம் ஒரு முறை தான் கதவை தட்டும்.. உழைப்பு எப்பவுமே வீட்டுக்குள்ள தான் இருக்கும்.. சரியா கண்ணு.. அப்ப நா கிளம்புறேன்.. ஆஸ்பத்திரிக்கு போகணும் (டேய்.. டேய்.. நாடிச்சது போதும்... 500 500.. புரியுதா).. எல்லாரும் லொள்ளா இருங்க.. 


போறர்துக்கு முன்னாடி எல்லாரும் லொள்ளு பண்ணிட்டு போங்க!! நன்றி!!

14 comments:

Lancelot said...

என்னவே மீன் கதை சொல்லிப்புட்டு...ஐயா உங்க கிராமத்துள்ள கடல் இருக்க சொல்லவே இல்ல?

Lancelot said...

தலை மேட்டர் இன்னா நா நீங்க சொன்ன மாதிரி சன் டீவீ வீ ஜே ங்கோ தறிகெட்டு தான் கடகுங்கோ, இவங்கல பார்த்துதான் பாரதி அண்ணாதே , "தமிழ் இனி மெல்ல புட்டுக்கும்" அப்டிநாறு ... அப்புறம் கதைய படிக்க சொல்ல எனக்கு இன்னா ஞாபகத்துக்கு வர்துனா, உழ்ச்சா தான் எல்லாருக்கும் சோறு, என்ன பாரு யோகம் வரும்னு சொல்றது எல்லாம் பம்மாத்து வேல. டைய'மண்டு' கேட்சா கூட நீ 'மண்டா' இருந்தினா வேலைக்கு ஆவாது.... சோக்கா சொன்ன பாரு மேட்ர, பெர்சு ஸலாம் சொல்லிக்கினு அபிட்டூ ஆவூரேன் பா...இன்னிமே உன் போஸ்ட் ல போஸ்ட் பண்ண போறது இந்த ஸால்ட்கோட்டை சிலுவை...ஸால்ட்கோட்டை சிலுவை...ஸால்ட்கோட்டை சிலுவை...

பி.கு...லான்சிலட் இன்னிமே உங்க பீடர் ப்ளோக்க்குக்கு மட்டும் தான் வருவார்....

viji said...

agree with lancelot. ulaicatan munnera mudiyum. ulaipu namathu sotthu, atishttam kaalaithin anbalippu. nirantamatrathu.

nalla karutulle katai.. nattamai vazha. :)

SUN mUSIC pudikathi, makkal tolaikatchi parkavum.... yethuku pombala pullaingala vanjikittu... HEhehehHEHHE

GAYATHRI said...

lol!! andha meenkaaran seriyaana loosu..aana avana nenacha paavadhaan iruku[:(]

Karthick Krishna CS said...

//அரவிந்த் சாமி வந்தா மின்சார கனவு.. ஆற்காடு வீராசாமி வந்தா மின்சாரமே கனவு தான்..// good one...

//ஒரு காரியத்த செய்யற்துக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்//
instead u can use, "எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணனும்.
பிளான் பண்ணமா பண்ணா இப்படித்தான் "

Karthick Krishna CS said...

@lancelot
இன்ன நைனா இப்டி சொல்ட... அது ஏன் தமிழ் ப்ளோக்ல சிலுவைனு பேரு??? மதம் மாறிகினியா??? பாத்து பிரதர், சாமி குத்தம் வந்துற போவுது...

@viji
மேடம், தமிழ் இனி மெல்ல சாகும்னு சொன்னது, தமிழ்ல தப்பா எழுதி, தப்பா படிச்சி, தப்பா பேசும்போது... ஆனா நீங்க, அத இங்கிலிஷ்ல எழுதியே கொன்னுடீன்களே...

ex: nalla karutulle katai.. nattamai vazha.

ex2: ulaicatan munnera mudiyum.

PoornimaSaran said...

நாங்க எல்லாம் சின்ன குழந்தைகளா கதை கேட்க??
அவ்வ்வ்வ்வ்வ்வ்

PoornimaSaran said...

//தினமும் SUN ம்யூஸிக்ல புதுசு புதுசா பாட்டு போடுறான்.. என்ன பாட்டு போடும் போதுலா அந்த பொண்ணு பாட்ட தறிக்கெட்டு செய்யுது... //

நிஜமாவே கலக்கிடே நாட்டமை!!

PoornimaSaran said...

//அரவிந்த் சாமிக்கும், ஆற்காடு வீராசாமிக்கும் என்ன விதியாசம் தெரியுமா?? அரவிந்த் சாமி வந்தா மின்சார கனவு.. ஆற்காடு வீராசாமி வந்தா மின்சாரமே கனவு தான்..//

ஆற்காடின் காதில் விழுந்த மாதிரி தெரியலையே!!!!!!!!!!

GLO said...

உங்க blog ரொம்ப நல்லா இருக்கு காமெடி யா இருக்கு , லொள்ளு இருக்கு . பாராட்டுக்கு நன்றி , keep visiting my blog

viji said...

:( enaku terinja tamil le elutunen pa. manichukungooo....!

swathi paul(dew drop) said...

hey i told the same story when i was in first std. in a story telling competition and got the first prize.the adaptaton was good.

Lancelot said...

@இன்னாமே ஸால்ட் கைல பேசாம லான்ஸ் கைல பேசிக்கினு இருக்க நீ??? எது நாளும் என்கிட்ட பேசு இன்னா..இல்லாட்டி டங்கு வார் அந்துடும்

Lancelot said...

@ kaki

en ayya Saltaa tension aakuraa nee..naan than intha postla innime comment panna maattenu solittenlaa...btw enaku matham pidikaathu so ennaku matham kidayathu...

Blogger templates

Custom Search