Saturday, 6 December 2008

நல்லா கேக்குறாங்கயா கேள்விய

நாட்டாமை கதை சொல்லலாம்னு பார்த்தா அவரோட ஊருல தண்ணி அதாங்க மழை நீர் புகுந்து ஒரு ரணகளம் பண்ணிடிச்சி.. தலை வயசான காலத்திலும் அஞ்சா, கலப்பணி செய்ததால், அவருக்கு ஒடம்பு சரி இல்லாம போச்சு... ஆஸ்பத்திரி சிகிச்சை முடிஞ்சு இப்ப தான் ரெஸ்ட் எடுக்குராரு... அதுனால அடுத்த வாரம் குணம் அடஞ்சி வந்து உங்களுக்கு எல்லாம் கத சொல்லுவாரு... அவரு சீககரமா குணம் அடையணும்னு வேண்டிக்கோங்க (அப்றோம் கத சொல்ல ஆரம்பிச்சு, அதுனால உங்களுக்கு முடியாம போசுனா, அதுக்கும் நா இப்பவே வேண்டிகிறேன்) இந்த எதிர்பாரத இடைவெளி அருண் அண்ணா நம்பல Tag பண்ணிருக்காரு.. சரி.. அதுனால அவருக்கு பதில் சொல்லலாமே... (நாயே!! கத யோசிக்க தெரில.. அத விட்டுட்டு என்னடா வெள்ளம், நாட்டாமை, ஆஸ்பத்திரி, வேண்டுதல் கத விடு ( ... வஸமா சீக்கிடீனே?? கண்டுபிடிச்சிட்டாங்களே).. நாட்டாமை கத விட உன் கத பெருங்கத போல)

 

சரி.. நம்ப அருண் அண்ணா என்ன கேட்டுருக்கார்னு பாக்கலாம்..

 

1. உங்களோட கனவு நிறைவேரணும்னா என்ன கனவா அது இருக்கும்??

என் ப்ளோக் தினமும் 50 லொள்ளு பண்ணனும்... நா பொறியியல் படிப்ப நல்லபடியா முடிக்கணும்.. நல்ல வேல கிடைக்கணும்.. அட ஒரு கனவா?? ஆச யாரங்க விட்டது?? எல்லாரும் நல்லா, லொள்ளா, நக்கலா இருக்கணும்ங்க... அவ்வளவு தான்...

 

2.யாரோட சூ** குத்தணும்னு நீங்க விருப்பப்படூறீங்க?

தீவிரவாதிகள உள்ள வர வழி வகுத்த அரசியல்வாதிளை விட எல்லா பிரச்சனைகளுக்கும்  (அரசியல்வாதிள்) இவங்க தான் காரணம் குற்றம் சாற்றி தொலைக்காட்சி தான்.. பத்து நிமிசத்துக்கு ஒரு முறை 'இந்த செய்தி எங்களின் பிரத்யேக செய்தி. இத மொதல்ல சொன்னது நாங்க தான்..' ஒலிபரப்பு மற்றும் ஒளி-பரபரப்பு செய்த இவங்க சொல்றாங்க 'தேச நெருக்கடி என்றால் அரசியல்வாதிள் வேற்றுமையை வித்து சே சே விற்று சே சே விட்டு ஒண்ணு சேரணும்.. அத அரசியல் செய்ய கூடாது' டேய் சட்டி தலையா அப்ப நீங்க பண்ணது பெயர் என்ன??

 

3.எதுக்கு ப்ளோக் பண்றீங்க??

இந்த கேள்வி அவசியமா?? யப்பா... என்னோட தேர்வுகளுக்கு கூட ஏதோ ஒப்பேற்றி சமாளிச்சிடுவேன்.. ஆனா?? இந்த கேள்விக்கு பதில் தெரியலியே ராசா... யாரையாவது கொடுமை பண்றது, லொள்ளு பண்றதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுனால தான்...

 

4,. எது உங்கள வேகமா கூட்டிட்டு போகும்???

நண்பன் BIKE தான்.. கல்லூரி வாகனம் கொஞ்சம் மெதுவா தான் போகும்.. மாநகர பேருந்து கேக்கவே வேணாம்...

5.உங்க பலம் என்ன??

இந்த குஸும்பு தானே வேணாம்ங்கறது... அஜித்  கிட்ட போய் நீங்க  டிச்  ஆழ்வார் படம் செம மெகா மகா வெற்றியாமேனு  கேட்ட மாதிரி இருக்கு..  என்னோட பலம்னு சொல்லணும்னா எனக்கு GIRL FRIENDSலா இல்லைங்க.. (நம்பிட்டோம் நம்பிட்டோம்) வீட்டில COMPLAN, MILO, பூஸ்ட்லா வாங்கலங்க...

 

6.உன்ன டேக் பண்ண மனுசன் எப்படி பட்டவர்???

நல்லவருங்கோ, வல்லவருங்கோ, நாலும் தெரிஞ்சவருங்கோ, உத்தமருங்கோ, எந்த கெட்ட சகவாசமும் இல்லாதவருங்கோ, பொண்ணுங்கள பார்த்தா அப்படியே அத தொங்க போத்துப்பாருங்கோ... அத நா தலைய சொன்னேங்கோ.. து... சாமி தங்குவாறு அறுந்து போச்சு.. இதுக்கு மேல  பொய்சொல்ல முடியாதுடா

 

7.ரெண்டு பொண்ணுங்கள லவ் பண்றீங்க.. யார PICK(பிக்) பண்ணுவீங்க??

அட.. இதுலா ஒரு கேள்வியா.. முதலில்  யாரு கூப்பிடுறாங்களோ அவங்களுக்கே முன்னுரிமை... ஆனா காசு நா செலவு பண்ண மாட்டேன்

8.நீ லவ் பண்ற பொண்ணு உன்ன ஏமாத்திதா என்ன பண்ணுவ?

சின்ன வயசுல அம்மா சொல்லிருகாங்க நீ ரொம்ப வெகுளிடா.. உன்ன எல்லாரும் ஏமாதிடுவாங்கனு.. சரி அந்த பொண்ணோட துரதிஸ்தம்.... நமக்கு அதிர்ஸ்தம் நினச்சிப்பேன்... (டேய்.. அதிர்ஸ்தம், துரதிஸ்தம் மாத்தி போட்டு லொள்ளு பண்றியா??  அடி பாடுவா!!)

9.உங்களோட உயிர் தோழி மேல காதல் வயப்படுவீங்களா??

அவங்க நம்பள காதலிச்சா எந்த பிரச்சனையும் இல்லாம காதலிக்லாம்.. அட குடிக்க கூழ் இல்லையாம்.. கொப்பளிக்க பன்னீர் கேக்குதாம்... நம்ப பண்ற லொள்ளுக்கு ஒரு பொண்ணு கூட பேச மாட்டாங்க.. இதுல தோழியாம்... காதலியாம்.. போங்க.. செம கோமெடி நீங்க....

 

10.இந்த TAGனா என்ன பயன்??

படிக்கிற உங்களுக்கு எதுவும் இல்ல... GOOGLEக்கு காசு.. எனக்கு என்னோட பதிவை பாத்தால, இது மாதிரி  மொக்க தபால படிச்சதால, உங்க நேரம் வீணாதால சந்தோசம்... அப்படியே லொள்ளு பண்ணா இன்னும் பயன்... COMMENTS கொஞ்சம் அதிகரிக்கும்...

 

11.கொசு கொட்டாவி விடுமா??

டேய்.. படுவா.. கைல மாத்னா நீ காலிடா... அய்யோ... முடியலியே... என்ன பாத்து ஏண்டா இப்படி கேக்குற?? எப்படி நீ என்ன பாத்து இந்த மாதிரி கேள்வி கேக்கலாம்?? ஆமாம்டா EINSTEIN தலையா... கொசு கொட்டாவி விடும்... நீ போய் அது வாய்ல தலைய விட்டு, அது பல்லுலா நல்லா இருக்கானு பாத்துட்டு வா... இன்னொரு வாட்டி இப்படி கேட்டா, மகனே உனக்கு மலேரியா தான் டா...

 

12. காதல யார் மொதல்ல சொல்லணும்?? ஆணா இல்ல பெண்ணா??

ஆணா இருந்தாலும் சரி.. பொண்ணா இருந்தாலும் காதல மொதல்ல வாய் தான் சொல்லணும்... பொண்ணுக்கு  எதிர்காலம் நல்ல இருக்கும்னு தைரியம் இருந்தா மொதல்ல சொல்லலாம்... ஆணுக்கு அடி வாங்குற தைரியம் இருந்தா,  மொதல்ல சொல்லலாம்..

 

13.ஒத்தையா இருக்க விருப்பமா இல்ல ரெட்டையா இருக்க விருப்பமா??

லவ் பண்ற பொண்ணுக்கு அண்ணன் இல்லைனா, இல்ல இருந்தா லூஸ் மோகன் மாதிரி ஸோப்லாங்கியா இருந்தா ஒத்தையா இருக்கலாம்..

இல்ல அண்ணன் பயில்வான் ரங்கநாதன் மாதிரி இருந்தா, சூரியா, விஷால் மாதிரி 6-PACK இருந்தா ரெட்டையா இருந்தா கூட சமாளிக்க முடியாது...

14.நீங்க லவ் பண்ண பொண்ணுங்க??

ஒண்ணும் இல்லை.... டேய்... சரி சரி... 3.... டேய்.... சரி சரி... 6... டேய்... அதான் தெரியுதுல... அப்றோம் என்ன??? TAN 90*.. வானத்துல உள்ள நட்சத்திரம் எத்தனையோ, அரசியல்வாதியோட சொத்துக்கள் எத்தனையோ... அது மாதிரி தான்.... ஏனா இது வாலிப வயசு...

15.உங்கள லவ் பண்ண பொண்ணுங்க???

வானத்துல உள்ள நட்சத்திரம் எத்தனையோ, அரசியல்வாதியோட சொத்துக்கள் எத்தனையோ... அது மாதிரி தான்.... டேய்.. டேய்... வேணு....சரி இல்ல... சரிபா... 3... டேய்... டேய்.. வேணு.... சரி சை...COS90*...  வாத்தியார் என் பேப்பர்ல என்ன போடுவாரோ, கோழி என்ன போடுமோ, அரசியல் தலைவர்கள் உங்களுக்கு செஞ்ச நல்லதுகள் எத்னியோ.. அது தான் பதில்... சந்தோசமா?? போய்ட்டு வாங்க...

16. நீ லவ் பண்ற பெண்ணை உன் தோழன் லவ் பண்ணா??

பாவம் யாரு பெத்த புள்ளையோ.. போன ஜென்மம் என்ன பாவம் பண்ணானோ.. இவ கிட்ட மாட்டிக்கிட்டான்.. நா தப்பிச்சேன்டா சாமே.. ஹே ஹே.. ஹே ஹே.. எஸ்கேப் எஸ்கேப்(I ESCAPE) அப்படினு கவுண்டர்மணி SOUND விட்டு மனச தேத்திக்க வேண்டியது தான்...  இது மாதிரி எத்தன இன்னல்கள், தடைகள் நாங்க சாந்திச்சு இருக்கோம்??? எங்கிருந்தாலும் வாழ்க.... டோய்ன் டோய்ன் டோய்ன்..... :( :(

 

17.வாத்தியாரை டாவடிச்ச அனுபவம்??


ஐயோ.. நா நல்லவன்னு சொல்ல மாட்டேன்... ( அது ஊருக்கே தெரியும்) பதினோராம் வகுப்பு படிக்கும் போது எங்க கணிப்பொறி ஆசிரியையை டாவடிச்சேன்..  அவங்க பெயர் ரா.......  ஒரு 2 மாசம் எடுத்தாங்க.. நமக்கு ஒரு காதலி இருந்தா எப்படி இருக்கணுமோ அது மாதிரி இருந்தாங்க.. என் கற்பனை தேவதை அவங்க...  இன்னைக்கு வரைக்கும் அவங்கள மாதிரி நா ஒரு பொண்ண சந்திச்சதே இல்லைங்க (சத்தியமாங்க... நம்புங்கஅவங்க கிட்ட நல்ல பெயர் எடுக்கணும்னு அந்த பாடத்துல மட்டும் 90 மேல வாங்குவேன்... ஆனா என் கெட்ட நேரம்.. அவங்க நல்ல நேரம்.. 3 மாசம் தான் எடுத்தாங்க... அதுக்கு அப்றோம் அவங்களுக்கு கல்யாணம் ஆகி என் மனச உடச்சிட்டு போய்ட்டாங்க... அவங்க பெயர நா ஏன் குறிப்பிடலனா பொதுநலன்  கருதியும், அவங்க நலன் கருதியும், என்னோட நலன் கருதியும் (அவங்க வீட்டுக்காரர் ஆஜானுபாகுவா இருப்பாரு.. செய்க்கூலி இல்லாம, சேதாரம் தருவாரு) அது தான் முதல் மற்றும் கடைசி டாவடிச்ச அனுபவம்.. அதுக்கு அப்றோம் நா டாவடிச்ச  ஆசிரியை  எல்லாம்  ஏகன் நயந்தாராகாக்க காக்க ஜோதிகாமுந்தானை முடிச்சு  தீபா, வல்லவன் நயந்தாரா (என்ன அழகுஎத்தனை அழகுஅவ்வளவு தான்...

18.இந்த உலகத்துல ரொம்ப அழகான ஆண்மகன் யாருங்க??

அட.. மறுபடியும் குஸும்பு பாரு.. DHONI(தோணி) கிட்ட போய் இந்தியா க்ரிக்கெட் அணியோட காப்டன் யாருனு கேட்ட மாதிரி இருக்குது... அட இதுக்குத்தான் நா வரல என்ன அசிங்கப்படுத்துவாங்கனு சொன்னேன்.. கேட்டீங்களா டேய்.. சரி நீங்க தான் அழகு.. சந்தோசமா.. திருப்தியா?? ஒரு சின்ன பையன வேடிக்கை, லொள்ளு, கிண்டல், அழ வச்சி பாக்து என்ன ஒரு ஆனந்தம்???

 

19. யாரு பில் கேட்ஸ்க்கு அவ்வளவு காசு கொடுத்தா??

இதுல என்ன சந்தேகம்???நம்ப பாரிவள்ளல்மாமனிதர்மாமாமனிதர்தொழிலதிபர்ஓரிகாரி,பூரி 
சிங்காரி.......  களின் கனவு நாயகன் J.K. ரித்தீஷ் தான்

 

போறர்துக்கு முன்னாடி லொள்ளு பண்ணிட்டு போங்க.. நா கொஞ்சம் பேர tag பண்ணலாம்னு இருக்கேன்... ஆனா அவங்க இந்த கேள்விய எல்லாம் படிச்சிட்டு மதிச்சி tag எடுப்பாங்களா?? இல்ல இதுலா ஒரு கேள்வியான்னு என்ன போட்டு மிதிச்சி எடுப்பாங்களா?? முடிவு அவங்க கையில், காலில் தான்.. இதுல ஏதாவது கேள்விகள் வில்லங்கமா (எல்லாமே வில்லங்கமா தான் இருக்கா??) இருந்தா அத எடுத்து நீங்க உங்க கேள்விய போடுங்க... நீங்க இந்த கேவலமான tag என்ன மாதிரி வேற யாருக்கு வேணும்னாலும் மாட்டி விடலாம்...

சரி.. நாலு பேருக்கு நன்றி மாதிரி.. நாலு பேருக்கு tagகு... இந்த நாலு பேருக்கு tagகு.. tagகு tagகு.... 


1.Shanki Anna

2. Vijay Thalapathy

3.Poornima Saran

4.GAYATHRI


எல்லாரும் குதூகலமா இருங்க.. லொள்ளா இருங்க.. நன்றி!!!

18 comments:

பொடியன்-|-SanJai said...

அடப்பாவிகளா.. எங்கய்யா ஒளிஞ்சி இருக்கிங்க நீங்க எல்லாம்.. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாய்டிச்சி.. :))

செம கலக்கலா இருக்கு ராசா..

...... வழி சொன்ன சொர்ணாக்கா.. சாரி.. பூர்ணாக்காவுக்கு நன்றி.. :)

பொடியன்-|-SanJai said...

//நிறைய லொள்ளு; கொஞ்சம் ஜொள்ளு; நிறைய நக்கல்; கொஞ்சம் சிக்கல்//

கார்த்திக் .. இவ்ளோ பெரிய தலைப்பு வேணாம்பா..
இப்டி இருந்தா நல்லா இருக்கும்னு தோனுது..

தலைப்பு : லொள்ளும்..நக்கலும்
டிஸ்கி : நிறைய லொள்ளு; கொஞ்சம் ஜொள்ளு; நிறைய நக்கல்; கொஞ்சம் சிக்கல்

Lancelot said...

Nandri for accepting the tag...irunthaalum antha obscene wordaa change panni irukkalam...anyways...vazhthukkal...


btw unga friendoda ponna unga girl friend peru SANTHI thaanae?? neenga kudaa adhaan oh shanti shanti nu paatu padringala??

PoornimaSaran said...

சிக்கிட்டேன்யா சிக்கிட்டேன்:(((((((

gils said...

echusueme...enna kodumai ithu...imbutu kostin naan lkglenthu mothama eluthina athani examaiyum sethu poata kuda varathu..choice pls..

viji said...

damn....! so funny.... really cant stop laugh.... keep on writing.. :)

Karthick Krishna CS said...

//கொசு கொட்டாவி விடுமா??//
//காதல யார் மொதல்ல சொல்லணும்?? ஆணா இல்ல பெண்ணா??//
//நீங்க லவ் பண்ண பொண்ணுங்க??//
//உங்கள லவ் பண்ண பொண்ணுங்க???//
//நீ லவ் பண்ற பெண்ணை உன் தோழன் லவ் பண்ணா??//
//வாத்தியாரை டாவடிச்ச அனுபவம்??//
//இந்த உலகத்துல ரொம்ப அழகான ஆண்மகன் யாருங்க??//
//யாரு பில் கேட்ஸ்க்கு அவ்வளவு காசு கொடுத்தா??//

உங்க மன வருத்தத புது கேள்விகளா மாத்திட்டீங்க...
ஆனா உங்க தமிழ்ல சின்ன சின்னாதா தப்புகள் இருக்கு..
திருத்திக்கங்க...
இப்ப tit for tat

ஆரம்பத்துல இது என்னோட tag-u
இத வெச்சு நீ பண்ற gag-u
லோகநாதான சுருக்கினா லோகு
கேதுவுக்கு முன்னாடி ராகு...
துபாய்ல இருப்பாங்க ஷேக்கு...
இப்பகூட புரியலனா நீ பேக்கு..
-----------------------------------------------------------------------
இப்ப அடுத்த punch,

naan சாப்பிடுகிற எல்லாரும்
ஆணவம் புடிச்ச ஆளுங்க இல்ல...

Lancelot said...

aiyayo kaki thalai neenga canibalaa?? neenga manushangala sapiduvangala, athuvum aanavamllatha appavi manuchangalaya...ohmy gawd...

naanum vependa revittu,
pudikilana nee abittu,
pudichakka kelu repeattu,
en accountla ellamae debittu...

chennai la oduthu koovam,
athu romba naaruthu paavam,
ath vithaa namakku laabam,
ennake theriyathu ennoda balam...

nethilla potta pattai,
udambulla potta sattai,
sethakka thaarai thappattai,
purinchikadaa vazhkappatta...

இனியவள் புனிதா said...

Nice answer sheet.. உங்க ஒளிமயமான எதிர்காலம் இப்பவே ஆரம்பமாகிடுச்சு போல...அட பரிட்சையை சொன்னேன்பா :-P

Karthick Krishna CS said...

@lancelot
thalai, singaporela "naan" main dish illaathathunaala maranthutteengala illa nejamave theriyadha?? adhanaladhan adha mattum englishla poaten... vidunga..

பண்ணிட்டீங்க தப்பு
அது ஒங்க மப்பு ...
மன்னிக்கிறேன் உங்கள
கவிதை கடி தாங்கல...

Lancelot said...

kanna karthick,

ennakum theriyum nee sonnathu naannu,
irunthallum naan solluven ponnu,
australia teamla david boonu,
chandrayan poyirukathu moonu...

mappukku thevaa quarteru,
athulla kalakanum bisleri waterru,
ponnunga kitta podanum meteru,
appo thaan vazhkai aagum matteru...

thindukkala seyurathu poottu,
manmohan sonia kaila puppettu,
sonna kellu nippattu,
illati nikathu en paattu...

nandri hein :P

ஆளவந்தான் said...

//முந்தானை முடிச்சு தீபா,//
எங்கள் தலைவி “சில்க்” ஸ்மிதாவை பட்டியலில் சேர்க்காததிற்கு, என்னுடைய கடுமையான கண்டங்கள்.

GAYATHRI said...

hi karthik nice replies..lol!i did 8 questions but typin in tamil was kinda difficult..ll publish the post soon..lol sorry fot the delay..and i ve changed "certain" elements in the questions for well knon reasons..lol don mind those;)

usha said...

ada ennanga neenga, naane vayitherichal-la en blog-la pulambina enkittaye vandhu logic kekkareenga?? :(

I liked the JK Riteesh answer to this tag, semaya irundhadhu :)) Aana neenga singari-nu pottu copyright violation panteenga, adhuku enna thandanai-nu appurama yosichu solren ;-) adhu eppadi neenga singarigalin kanavu nayagan-nu podalam??? Singari kulathuke izhuku!!!

Divyapriya said...

//ஆணா இருந்தாலும் சரி.. பொண்ணா இருந்தாலும் காதல மொதல்ல வாய் தான் சொல்லணும்... //

ROFTL :-D

G3 said...

idhu pazhaya posta??? Google reader sadhiya appo adhu? indha blog posts mattum ozhunga kaata maatengudhu.. overa nakkal pannitiyo adhu kitta :P

நாமக்கல் சிபி said...

சூப்பர் பதில்கள்!

நல்லா ரசிச்சேன்!

ஆளவந்தான் said...

//
adhi illai thalaiva!!!! Link idho!!! Inda post blog la thaan irukku
//
உங்களை போய் தப்பா சரியா நினைச்சுட்டேனே... Google Reader சதி பண்ணிடுச்சே....

Blogger templates

Custom Search