Tuesday, 2 December 2008

வாறாரு வாறாரு வந்துத்தாரு நாட்டாமை

அப்பாடா ஒரு வழியா வீட்ட சுத்தி இருந்த தண்ணி கொஞ்சம் வற்றி இப்போ நல்லா நா என்னோட வேலை முழுமையா இறங்கிட்டேன்.. என்ன வேலை தானே?? HCL மென்பொருள் பொறியாளர் வேல............... செய்யணும் ஆச தான்.. ஆனா இன்னும் பொறியியல் படிப்பெ முடிஞ்ச பாடில்லை.. தல (அஜித் இல்லைங்க) கீழா நின்னு தண்ணி குடிக்கிற பாடா தான் இருக்கு நாம படிக்கிற பொழப்பு.. (சென்னை வெள்ளத்துல இந்த பழமொழி சரியா பொருந்தும் பாஸ்.. ஏந்தெரியுமா?? நீங்க கேக்கல.. ஆனாலும் நா சொல்றேன்.. சாலைலா ரொம்ப அழகா குண்டும் குழியுமா இருக்குல.. மழை நீர் தேங்கி எது பள்ளம் எது மேடு தெரியாம அதுவும் விளக்குகள் எரியாம, பல பேர் உள்ள விழுந்து அதாவது 'தலை கீழா' விழுந்து தண்ணி குடிச்சாங்க.. எப்படி நம்ப ஆய்வு?? அட ராமா.. ஏன்டா இவன உசிரோட வச்சிருக்கீங்க?? செறி விடுங்க.. ப்ளோக் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்)


சரி இன்னைக்கு நம்ப தபால்ல என்ன பாக்க போறோம்னு உங்களுக்கு தெரியும்... ஆனா தெரியாது.. இப்போ நாம நாட்டாமை பத்தி பாக்க போறோம்னு உங்களுக்கு தெரியும்... ஆனா என்ன நாட்டாமை உங்களுக்கு தெரியாது... சரி இதுக்கு மேல நா லொள்ளு பண்ணல.. Over to நாட்டாமை..

வணக்கம் கண்ணு.. நா தான் நாட்டாமை பேசுறேன்.. என்னடா வயசானவர் என்னத்த பண்ண போறார் யோசிக்கிறீங்களா.. பெருசா எதுவும் சொல்ல போறர்தில்ல கண்ணு.. அப்ப சிருசா சொல்வேணாகும்??? இந்த நாட்டாமை நட்டகுணம் (அட.. இது தானுங்க என் பேரு) பூச்சிகாட்டுல (அட.. இது தானுங்க என் ஊரு) மக்கள நல்வழி படுத்த நக்கலா இல்ல இல்ல நல்ல கதைகள் சொன்னேன் (அட.. இது தானுங்க என் செயல்)... இதோ இந்த நல்லவன்வல்லவன்நாளும் தெரிஞ்சவன் (திங்கள்செவ்வாய்அப்படினு தன்னையே சொல்லிகிற கார்த்திக் (கேட்டா விதி 1 வெண்கலம் 1 சொல்லுவான்) கேட்டதால மலேரியா, ப்லேக்.. இல்ல இல்ல.. அது என்ன கண்ணு... ப்ளோக்ல இருக்குற தமிழ் மக்களுக்கு இந்த நாட்டாமை சொல்றான்டா கதை... நற்கதை..

கதை ( எதிரொலி கொஞ்சம் அதிகமா)
கதை( முன்ன விட கம்மியா)
கதை( அப்படியே செத்து போகுது)

 

இந்த நாட்டமைய பாத்து யாரும் பயப்பட வேணாம்ங்க.. இந்த ப்ளோக்க ஆரம்பிச்சான் பாருங்க.. அவ தான் லொள்ளு புடிச்சவன்.. மத்தபடி இந்த நாட்டாமை போட்டுருக்குற வேட்டியும் வெள்ள.. மனசும் வெள்ள கண்ணு.. அதுனால தான் நாட்டாமை கதைகள் இன்னைக்கு ஆரம்பிக்கல கண்ணு.. வாத்தியார் எப்படி அவரோட மொத வகுப்புல பாடம் நடத்த மாட்டாரோ (என்னமோ புள்ள Engineering டிக்ரீவாங்கி கல்லூரில  கோல்ட் Medal வாங்குன மாதிரி பேசுது.. நாயே.. மழைக்கு கூட பள்ளி கூடம் பக்கம் ஒதுங்கஸ்கூல்கு போறேன்னு ஊர் சூத்தி, சாயங்காலம் பள்ளி கூடம் போய் மணி(பெல்)அடிச்ச ப்யூன ஏன்டா நா வரர்துகுள்ள மணி அடிச்சனு அந்த ப்யூன் மணிய School மணியாலேயே (அதாங்க.. ஸ்கூல் Bell) சம மாத்து மாத்துன்னியே.. மறந்து போச்சா மகனே??) அது மாதிரி இந்த நாட்டாமை அடுத்த தபால்ல உங்களுக்கு நீதிக்கதைகள் சொல்ல ஆரம்பிக்கிறேன்..  ரொம்ப தொல்ல கொடுக்க மாட்டேன்.. ஒரு தபால்ல ஒரு கதை தான் கண்ணு..

அந்த கதயோட கடைசில நா.... அட இதுக்கு மேல சொன்ன க்ரில்  இல்ல இல்ல த்ரில் போய்டும் கண்ணு (டேய் அண்டா தலையா.. இவர் பெரிய நாவல் ஆசிரியர் ராஜேஷ் குமார்.. த்ரில் வைக்கிறாராம்..) அதுனால கத சொல்வேன்.. அப்ப பாருங்க.. 

சரி சரி.. இதோட கத பஞ்சாயத்து முடியுது.. எல்லாம் போய் பொலப்ப பாருங்க... போறர்துக்கு முன்னாடி லொள்ளு பண்ணிட்டு போங்க... அடுத்த தபால்ல பாக்கலாம்...13 comments:

Silly Village Girl said...

Nattammai vijaykumar / sarathkumar dialogue pattern in your blog is good.

Silly Village Girl said...

Karthik

Thanks for your comments. I would like to view this as normal thing rather than Andaranga vishayam. What do you say?

viji said...

hahaha karthik at first i tot u r my follower. after click ur name ony i knew u r different guy.. ade raama.. yenna kodumai ithu.. so notty uh u...

anyway great sense of humor..

chennai le tanni ellam vattiduca??

ambi said...

நீ அடிச்சு ஆடு மக்கா. :))

அப்படியே படிப்பும் நினைவுல இருக்கட்டும். :)

அப்ப தான் ஹெச்சிஎல் போய் பிளாக் எழுத முடியும். :D

PoornimaSaran said...

அப்பாடா ஒரு வழியா நாட்டாமை வந்து சேர்ந்துட்டார் போல..

arun said...

nalla aarambam..kathaia aarambiunga..epdi irukunu paakalam..

விஜய் said...

ஐயையோ, கார்த்திக் உங்க லொள்ளு தாங்க முடியலியே. லொள்ளு சபா சந்தானத்தையெல்லாம் தூக்கி சாப்பிட்டுடுவீங்க போலிருக்கே.

I like your lollu very much. Thanks for giving me a free publicity :-)

அதிரை ஜமால் said...

அது இன்னா மர்மம்ங்க லொள்ளு உங்களுக்கு குறைக்காமலே ... ச்சே குறையில்லம வருது.

அதிரை ஜமால் said...

படிங்க படிங்க - நல்லா படிங்க

அப்பதான் ... (இதோ வந்துட்டானுங்கயா கருத்து கண்ணாயிரம் - அட்வைஸ் அம்புஜம்)

எஸ்க்கேப்புபுபு.....

அதிரை ஜமால் said...

நாட்டாமை தீர்ப்ப மாத்திலாம் எழுத மாட்டீங்கள்ள...

Anonymous said...

Rofl on the post!
Tamizh blogla english comment. I know, but its okay;-):P

Laryssa said...

Part of me wishes I could understand this language. I have many Indian friends (that's what you are, yes? I thought I read that in a comment once) that would be able to translate, but I would feel weird asking them.
Yes, you could say America is pretty bad when it comes to falling into the "pre-marital sex" trap. And I am pretty possessive over Jerome and my few close friends, but I find them to be the most important things in my life, other than my family. Nothing materialistic could suffice.
Thank you for reading and commenting. I didn't think anyone would read them, for I have not given my blog to anybody but one or two people before.

Divya said...

Karthik.......unga LOLLU blog, sema colourfullaa irukku,[font colura sonein]

after a long time , inikku than unga blog pakkam vara time irunthathu......blog start panni few days la semaya lollu panreenga, dhool:)))

Kalakkunga.....!!

Blogger templates

Custom Search