Thursday, 27 November 2008

வணக்கம்- ஏன் பிறந்தாய் பிளோக்கே ஏன் பிறந்தாயோ

வணக்கம் வணக்கம் வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஒரு வேல இருந்தா சாமிக்கும் வணக்கம்
குத்த வச்சி ப்லோக படிக்கும் எல்லாருக்கும் வணக்கம்
லொள்ளு பண்ண வந்துருக்கும் நண்பருக்கும் வணக்கம்
வாத்தியார் சொல்லி தந்த தமிழுக்கும் தான் வணக்கம்
நான் வலைப்பூ ஆரம்பிக்க இடமும் தந்த கூக்ல் வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்


ன் இனிய தமிழ் மக்களேனு பாரதிராஜா மாதிரி ஆரம்பிக்கலாம் ஆசைதான்.. ஆனா அதுலா பழசுல, அதான் இந்த மூளை குழந்தை கவிதையோடஆரம்பிக்கிறேன்(டேய்!! நாங்க தென்றல் படம் பாத்தாச்சி)

குறை பிரசவம் சொல்வாங்க.அது மாதிரி இது குறை ப்ளோக்.என்னடா தவறுகளை சுட்டிகாட்டும் ப்ளோக் என்பதால் இது குறை ப்ளோக்னு என்ன வேணாம்.நாட்டுநடப்ப புட்டுபுட்டு வைக்க நா ஒண்ணும் எதிர்கட்சி அளவுக்கு திறமையானவன் அறிவுள்ளவன் இல்ல.இந்த ப்ளோக் பொறந்தநாள் DEc3 முடிவோட இருந்தேன்.ஏன் Dec3தேதினு யோசிக்காடீங்க..அன்னைக்கு என் பொறந்த நாள், என் காதலி(இருந்தா தானே.. நீ பண்ற லொள்ளுக்கு எந்த பொண்ணும் உன்ன மதிக்க மாட்டா;மிதிக்காமவிட்டாளேனு சந்தோசப்படு மகனே)பொறந்த நாள் இல்ல என் வாழ்க்கைல மிகவும் ராசியான நாள் அப்படிலா இல்ல.இந்த ப்ளோக் நா என்னோட தேர்வுகள் முடிஞ்ச உடனே ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்.ஆனா வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்று அழுத்த காரணமாக சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலும்,தமிழகத்தின் பலஇடங்களில் பேய் மழை கொட்டி தீர்கின்றது.. 
அதனால என்னோட தேர்வுகள்அடுத்த மாசம் தள்ளி வச்சிதாங்க..போற சனியன் சீககரமா போகாம டாங்குடாங்கு னு ஒரு மாசம் கழிச்சி வர போகுது.. 
இந்த ப்ளோக் பொறந்த நாள் DEC3முடிவோட இருந்தேன்..ஆனா எப்படி இருந்தாலும் பொறக்க வேண்டியதுதானேஅதனால என்னோட வலை பூ இன்னிக்கு பொறந்து வர நாள்லஉங்களோட ஆதரவு இருந்தா வளரும். இல்லாடியும் வளரும்..நா எப்படியோ தண்டமா தான் இருப்பேன்!அதுனால என்னோட லொள்ளு,நக்கலு எல்லாமே இந்த வலைப்பூல தான்..சரி நா ஏன் இந்த ப்ளோக் ஆரம்பிச்சேனு தானே கேக்குறீங்க..கேக்கலனாலும் பரவால..நா சொல்றேன்..இந்த ப்ளாக்(பதிவு) ஏன் ஆரம்பிச்சேன், எதுக்கு ஆரம்பிச்சேன்னு எல்லாம் எனக்கு தெரியாது.தோணிச்சி அதுனால ஆரம்பிச்சித்தேன். 

சரி இந்த ப்ளோக்ல எத பத்தி எழுதுவேன்? 

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவாரா??
இந்திய அணி உலக கோப்பை வெல்லுமா??அணு சக்தி ஒப்பந்தம் அதுனால இந்தியாக்கு ஏதாவது நல்லது நடக்குமா???ஓபாமா வெற்றியால நமக்கு நல்லது நடகும்மா??
த்ரிஷா- விஷால் காதலா??
நயந்தாரா சிம்பு மோதல்??

இப்படி நாட்டுக்கு தேவையான விசயத்த இந்த வலை பூ ல எதிர்பாக்காதீங்க..அப்படியே வந்தாலும் எனக்கு ஞாபகமறதி இருக்கும்.. அதுனால தெரியாம எழுதிவிட்டேன்னு நினச்சிகோங்க. இவ்வளவு நேரம் படிச்சதுலஉங்களுக்கு தெரிஞ்சி இருக்கும் நா உருப்படியா எதுவும் எழுத மாட்டேனு!
நாட்டுக்கு தேவ இல்லாத எல்லாத்தையும் இங்க நீங்க பாக்கலாம்.அத என்னோட நக்கல் லொள்ளு எல்லாம் சேர்த்து எழுதுவேன்..என்னடா இவன பத்தி இவனே இவளவு பெருமையா சொல்றானேனு எண்ணிக்கோங்க..ஏனா இந்த பிளோக்கு 2விதி இருக்கு.. 
Newton,Gallileo விதிலா இல்ல. அவங்க அளவுக்கு பெருசால நாயோசிக்க மாட்டேன்.
ரொம்ப சின்ன விதி தான்.. சுலபமா புரியும்.. எந்த தேர்வுக்கும் கேக்க மாட்டாங்க.. 
அதுனால தைரியமா படிங்க!!

விதி1:இது என் ப்ளோக்.. இதுல நா மட்டும் தான் என்ன பத்தி பெருமையா எழுத முடியும். 

விதி2: உங்களுக்கு அதுலொள்ளு, நக்கால இல்லாம இருந்தா.. அத வெளிய சொல்லாதீங்க..
ஏனா,இதுலா ஒரு ப்ளோக் இத போய்படிச்சியேனு நாளைக்கு ஊர் உங்கள தப்பா சொல்ல கூடாதுல.
அதான்!ஒரு வேள நல்லா இருந்தா 16 வயதினிலே மயிலு மாதிரி எல்லாருக்கும் உரக்க சொல்லுங்க என் ப்ளோக் பத்தி 

சரி நா விட்டா மொக்க போட்டுக்கிட்டே இருப்பேன்.. இதோட நிறுத்திக்கிறேன்.ஏனா அப்ப தான் எனக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.. 
பூவுக்கு பொறந்த நாளுபாடி என் ப்ளோக் வரவேற்பீங்கனு நம்பிக்கை இருக்கு..

இது தான் ஆரம்பம்
இனிமே தான் பூகம்பம்
போக போக தெரியும்
இந்த வலை'பூ' வின் வாசம் தெரியும்

எதுக்கு இந்த கவிதையா?(து! து! தந்த கருமமே! இதலா கவிதைனு சொன்னா அப்ப வைரமுத்து, வாலி எழுதுறதுலா என்னடா டப்ஸா மண்டையா)இது கவிதைதான்.. 
எப்படி கேட்டா விதி 1 திருப்பி படிக்கவும்!!

நன்றி!! உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் உங்கள அடுத்த தபால்ல பாக்குறேன்!!

மீண்டும் வருக!! கூத்தடிக்க மறக்காதீங்க!!

24 comments:

Lancelot said...

arambichitaanya arambichitaan...

Anonymous said...

Kalakkunga karthik.. enoda vazhthukkal :)

GAYATHRI said...

shappppppppaaa....ipove kanna katudhe!!

gils said...

adadadadaaaa...aarambamay ivlo alaparaya :) nadakattum nadakattum

தாரணி பிரியா said...

ஹாய் கார்த்திக் வாழ்த்துக்கள்

கலங்குங்க. மொதல்ல நம்ம பெருமையை நாமதான் பேசணும். அதனால நீங்க ஆரம்பிங்க.

நடத்துங்க உங்க ராஜாங்கத்தை.

தாரணி பிரியா said...

அய்யா இந்த word verification எடுத்திட்டாங்க புண்ணியமா போகும் :)

Divya said...

ஹாய் கார்த்திக்,

உங்க தமிழ் ப்ளாக்.....முத பதிவே....சும்மா அதிருது!!!

பட்டைய கிளப்புங்க கார்த்திக்....வாழ்த்துக்கள்!!

Divya said...

can u pls remove WORD VERIFICATION

Karthick Krishna CS said...

"Karthik"nu name irundhaale ippadidhaan... vaazthukkal....

Lancelot said...

cycle gap la auto otriya kaki thalai...narayanna narayanna

ambi said...

ஆரம்பமே பட்டய கிளப்பி, லவங்கத்தை லவட்டறீங்க கார்த்திக். :))

முதல் பதிவு - So ஸ்பெல்லிங்க் மிஸ்டேக், பாரா சொதப்பல்கள் எல்லாம் மன்னிச்சு வுடறேன். :p

ambi said...

why there is no Anony, other options..? :))

விஜய் said...

Great opening. Literally enjoyed your opening Post. You have literally started like Sehwag, slamming with a six in the first ball.

All the best Karthik. Keep slammering :-)

G3 said...

aadharavu thandhom :))

Aanalum aaramba soundae konjam overa thaan irukku :P exam thalli pona sandhoshamo? nadakkattum nadakkattum :D

Ramyah said...

Karthik i do read tamil and your blog is such a delight. Aruvaikku naan ready:p

Karthick Krishna CS said...

@lancelot
edho ennala mudinjadhu...

Karthik said...

@Lance: நன்றி தோழா.. இது தான் ஆரம்பம்.. போக போக எஹோ என்னால முடிஞ்ச லொள்ளு, நக்கல்.. அடி'கடி' வாங்க

@kanaguonline:கலக்குறோம் உங்க ஆதரவு இருந்தா இன்னும் நெறய பண்ணலாம்.. திரும்ப வாங்க

@GAYATHRI: கண்ண கட்டுடா?? அப்ப கண்ணாமூச்சி விளையாடலாம்.... திரும்ப வாங்க

Karthik said...

@GILS:
கால் வலிங்க அதுனால நடக்க வேணாம்...


@ Divya, தாரணி பிரியா: எடுதாச்சு... மீண்டும் வாங்க!! நன்றிங்க

Karthik said...

@ambi: நா பொறுமையா அழக டைப் அடிச்சேன்ங்க.. justify பண்றேன் ஸொதப்பல் ஆயிடிசிங்க... அதுக்குள்ள autosave ஆயிடிச்சி.. என்ன செய்ய?? word la copy கூட பண்ணல.. அடுத்த முறை தவறு நடக்கா... மீண்டும் வாங்க!! நன்றிங்க

Karthik said...

@Vijay: நீங்க comment, visit அப்டிங்ற no ball போட்டா நா அடிச்சிடே இருக்கேன்..

@G3: Volume ஏத்தி விட்டுட்டான்.. அதான் Sound கொஞ்சம் அதிகம்.. இனிமே கம்மியா இருக்கும்ங்க.. நா exam தள்ளி போன காண்டுல இருக்கேங்க.. ஒரே exam... அட முடிசா இன்னும் சந்தோசமா இருக்கலாமே?? எதுக்கு அத மட்டும் தள்ளி வைக்க??

@Ramya: திரும்ப வாங்க

viji said...

what a great introduction.........


I WILL FOLLOW YOUUUUUUUUUUU......

Anonymous said...

SUPERRRR!!!
:))

- Mathu

arun said...

summavae un lollu thaanga mudiathu..ini ingaiyum athavae panna pora..nadathu raja nadathu..

இனியவள் புனிதா said...

வணக்கம் கார்த்திக் ...ஆரம்பமே அசத்தல்...நீங்க அசத்துங்க ராசா :-)

Blogger templates

Custom Search