Saturday, 29 November 2008

நான் மழை நாட்டாமை

தடங்கலுக்கு வருந்துகிறோம் மாதிரி 2 நாட்களாக வர முடியல.. 
அட
நிம்மதியா இருந்தோம்டா சாமி.. ஏன்டா வந்த?? அப்படி   நினைக்கலாம் நீங்க..
ஆனா
  உங்கள பிரிஞ்சி இருக்க முடில.. சென்னை பேய் மழை பெய்யுதுனு உங்களுக்கு தெரியும்.. அதுனால மின்சார வாரியம் மின்சாரத் துண்டித்து விட்டாங்க..
சாத  நாளுல இவங்க தட்டுபாடு காரணமா 2 மணி நேரம் நிறுத்தி வைப்பாங்க..
இதுல
 மழை வேற அவங்களுக்கு கை கொடுத்துடிச்சி.. அட அரசியல் வாணாம்ங்க...இருந்தாலும் மாநகாராட்சி குத்தம் சொல்ல கூடாது.. ஆற்றோரமா வீடு கட்டியது நம்ப தப்பு.. அதுக்கு  குலுக்கல் மூலமா அனுமதி தந்தது அரசாங்கம் தப்பு.. அப்றோம்... சரி  வேணாம்..  அரசியல் வேணாம்.. 
இயற்கை
கிட்ட "பாருடா மவனே நா தான்  பெரியவன்" ஸீன் போட்டா  அது திருப்பி நம்பள பல்மடங்கு  திருப்பி போடும்.. இத நா திருப்பி சொல்ல மாட்டேன்.. 50 மணி நேரத்துக்கு அப்ரமா இப்ப தாங்க வீட்டில வெளிச்சம் வந்துச்சு.. சூரிய பகவானும் காலை உதிகல.. அதுனால இப்ப தான் 'வெளிச்சம்' வந்துச்சுனு நா சொன்னது சரி தானே?? வீட்ட சுத்தி ஒரே தண்ணி.. வெளிய கூட போக முடில.. ரெண்டு நாள் மின்சாரம் இல்லாம நாம சம காண்டு ஆகுறோமே... இந்தியா எத்தன பேரு தினமும் மின்சாரம் இல்லாம தவிக்கிறாங்க நினச்சா.. சரி விடுங்க.. ளார் பொலிர்.. அரசியல் வேணாம்..

பல்ப் (நா இல்லைங்க) வேற என்ன பாத்து கண்ணு அடிக்குது.. எப்ப வேணா மின்சாரம் திரும்பி போகலாம்.. அதுனால நா ஒரு சின்ன தபால் அடிக்கிறேன்.. நம்ப (அதான் ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆயிட்டோம்) ப்ளோக் நா புதுசா கொஞ்சம் கதாபாத்திரம் அறிமுகம் செய்வேன்.. அதுல ஒருத்த இப்ப அறிமுகம் செய்றேன்.. புதுமுகம்லா இல்ல.. அறிமுகம் தான்.. இந்த அறிமுகம் முன்னாடி சொன்ன அறிமுகம் இல்ல.. இது அறிந்த முகம்.. அவர் தாங்க நாட்டாமை.. 

இந்த நாட்டாமை தீர்ப்பு சொல்ற நாட்டாமை இல்லைங்க..  

"அத்திப்பட்டி  ட்டிப்பட்டி" அப்டி 18 பட்டி கூப்டு நாட்டாமை இல்லைங்க.. 

இத்து போன சொம்புஅத்தான அலுமினிய வேத்தல டப்பா  வெச்சிகிற நாட்டாமை இல்லைங்க..   

" " ஸைட் ம்யூஸிக் ஓட வர நாட்டாமை இல்லைங்க.. 

"பசுபதி இங்க வாடா" கூப்ட்டு தம்பி அடி வாங்க வைக்கிற நாட்டாமை இல்லைங்க.. 

பின்ன யார் தான் இந்த நாட்டாமை??

யாரு
யாரு
யாரு
நாட்டாமை யாரு??


யாரு
யாரு
யாரு
நாட்டாமையாரு??


ஆறு (ஸ்ச்ஸ.. வெள்ள ஞாபகம்... )
யாரு
அந்த நாட்டாமை யாரு???இப்படி பாட்டு பாடிட்டு இருங்க... அடுத்த தபல்ல யாரு அந்த நாட்டாமை.. அவர் பெயர் என்ன?? எந்த ஊரு?? என்ன பண்ணுவாரு? எல்லாத்தையும் சொல்றேன்..


யூகிக்க முடிஞ்சா கும்மி அடிங்க.. யூகிக்க முடியாதியும் கும்மி அடிங்க.. சரியா கும்மி அடிச்சா குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு உங்க ப்ளோக் 3 கும்மி அதிகமாக அடிக்கப்படும்..மீண்டு வந்து மீண்டும் சந்திக்கிறேன்


நீங்க
உசாரா இருங்கோ... அதே நேரம் லொள்ளாவும் இருங்க!!!!

Thursday, 27 November 2008

வணக்கம்- ஏன் பிறந்தாய் பிளோக்கே ஏன் பிறந்தாயோ

வணக்கம் வணக்கம் வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஒரு வேல இருந்தா சாமிக்கும் வணக்கம்
குத்த வச்சி ப்லோக படிக்கும் எல்லாருக்கும் வணக்கம்
லொள்ளு பண்ண வந்துருக்கும் நண்பருக்கும் வணக்கம்
வாத்தியார் சொல்லி தந்த தமிழுக்கும் தான் வணக்கம்
நான் வலைப்பூ ஆரம்பிக்க இடமும் தந்த கூக்ல் வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்


ன் இனிய தமிழ் மக்களேனு பாரதிராஜா மாதிரி ஆரம்பிக்கலாம் ஆசைதான்.. ஆனா அதுலா பழசுல, அதான் இந்த மூளை குழந்தை கவிதையோடஆரம்பிக்கிறேன்(டேய்!! நாங்க தென்றல் படம் பாத்தாச்சி)

குறை பிரசவம் சொல்வாங்க.அது மாதிரி இது குறை ப்ளோக்.என்னடா தவறுகளை சுட்டிகாட்டும் ப்ளோக் என்பதால் இது குறை ப்ளோக்னு என்ன வேணாம்.நாட்டுநடப்ப புட்டுபுட்டு வைக்க நா ஒண்ணும் எதிர்கட்சி அளவுக்கு திறமையானவன் அறிவுள்ளவன் இல்ல.இந்த ப்ளோக் பொறந்தநாள் DEc3 முடிவோட இருந்தேன்.ஏன் Dec3தேதினு யோசிக்காடீங்க..அன்னைக்கு என் பொறந்த நாள், என் காதலி(இருந்தா தானே.. நீ பண்ற லொள்ளுக்கு எந்த பொண்ணும் உன்ன மதிக்க மாட்டா;மிதிக்காமவிட்டாளேனு சந்தோசப்படு மகனே)பொறந்த நாள் இல்ல என் வாழ்க்கைல மிகவும் ராசியான நாள் அப்படிலா இல்ல.இந்த ப்ளோக் நா என்னோட தேர்வுகள் முடிஞ்ச உடனே ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்.ஆனா வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்று அழுத்த காரணமாக சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலும்,தமிழகத்தின் பலஇடங்களில் பேய் மழை கொட்டி தீர்கின்றது.. 
அதனால என்னோட தேர்வுகள்அடுத்த மாசம் தள்ளி வச்சிதாங்க..போற சனியன் சீககரமா போகாம டாங்குடாங்கு னு ஒரு மாசம் கழிச்சி வர போகுது.. 
இந்த ப்ளோக் பொறந்த நாள் DEC3முடிவோட இருந்தேன்..ஆனா எப்படி இருந்தாலும் பொறக்க வேண்டியதுதானேஅதனால என்னோட வலை பூ இன்னிக்கு பொறந்து வர நாள்லஉங்களோட ஆதரவு இருந்தா வளரும். இல்லாடியும் வளரும்..நா எப்படியோ தண்டமா தான் இருப்பேன்!அதுனால என்னோட லொள்ளு,நக்கலு எல்லாமே இந்த வலைப்பூல தான்..சரி நா ஏன் இந்த ப்ளோக் ஆரம்பிச்சேனு தானே கேக்குறீங்க..கேக்கலனாலும் பரவால..நா சொல்றேன்..இந்த ப்ளாக்(பதிவு) ஏன் ஆரம்பிச்சேன், எதுக்கு ஆரம்பிச்சேன்னு எல்லாம் எனக்கு தெரியாது.தோணிச்சி அதுனால ஆரம்பிச்சித்தேன். 

சரி இந்த ப்ளோக்ல எத பத்தி எழுதுவேன்? 

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவாரா??
இந்திய அணி உலக கோப்பை வெல்லுமா??அணு சக்தி ஒப்பந்தம் அதுனால இந்தியாக்கு ஏதாவது நல்லது நடக்குமா???ஓபாமா வெற்றியால நமக்கு நல்லது நடகும்மா??
த்ரிஷா- விஷால் காதலா??
நயந்தாரா சிம்பு மோதல்??

இப்படி நாட்டுக்கு தேவையான விசயத்த இந்த வலை பூ ல எதிர்பாக்காதீங்க..அப்படியே வந்தாலும் எனக்கு ஞாபகமறதி இருக்கும்.. அதுனால தெரியாம எழுதிவிட்டேன்னு நினச்சிகோங்க. இவ்வளவு நேரம் படிச்சதுலஉங்களுக்கு தெரிஞ்சி இருக்கும் நா உருப்படியா எதுவும் எழுத மாட்டேனு!
நாட்டுக்கு தேவ இல்லாத எல்லாத்தையும் இங்க நீங்க பாக்கலாம்.அத என்னோட நக்கல் லொள்ளு எல்லாம் சேர்த்து எழுதுவேன்..என்னடா இவன பத்தி இவனே இவளவு பெருமையா சொல்றானேனு எண்ணிக்கோங்க..ஏனா இந்த பிளோக்கு 2விதி இருக்கு.. 
Newton,Gallileo விதிலா இல்ல. அவங்க அளவுக்கு பெருசால நாயோசிக்க மாட்டேன்.
ரொம்ப சின்ன விதி தான்.. சுலபமா புரியும்.. எந்த தேர்வுக்கும் கேக்க மாட்டாங்க.. 
அதுனால தைரியமா படிங்க!!

விதி1:இது என் ப்ளோக்.. இதுல நா மட்டும் தான் என்ன பத்தி பெருமையா எழுத முடியும். 

விதி2: உங்களுக்கு அதுலொள்ளு, நக்கால இல்லாம இருந்தா.. அத வெளிய சொல்லாதீங்க..
ஏனா,இதுலா ஒரு ப்ளோக் இத போய்படிச்சியேனு நாளைக்கு ஊர் உங்கள தப்பா சொல்ல கூடாதுல.
அதான்!ஒரு வேள நல்லா இருந்தா 16 வயதினிலே மயிலு மாதிரி எல்லாருக்கும் உரக்க சொல்லுங்க என் ப்ளோக் பத்தி 

சரி நா விட்டா மொக்க போட்டுக்கிட்டே இருப்பேன்.. இதோட நிறுத்திக்கிறேன்.ஏனா அப்ப தான் எனக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.. 
பூவுக்கு பொறந்த நாளுபாடி என் ப்ளோக் வரவேற்பீங்கனு நம்பிக்கை இருக்கு..

இது தான் ஆரம்பம்
இனிமே தான் பூகம்பம்
போக போக தெரியும்
இந்த வலை'பூ' வின் வாசம் தெரியும்

எதுக்கு இந்த கவிதையா?(து! து! தந்த கருமமே! இதலா கவிதைனு சொன்னா அப்ப வைரமுத்து, வாலி எழுதுறதுலா என்னடா டப்ஸா மண்டையா)இது கவிதைதான்.. 
எப்படி கேட்டா விதி 1 திருப்பி படிக்கவும்!!

நன்றி!! உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் உங்கள அடுத்த தபால்ல பாக்குறேன்!!

மீண்டும் வருக!! கூத்தடிக்க மறக்காதீங்க!!

Blogger templates

Custom Search