Sunday, 28 December 2008

கேள்வியும் நானே, பதிலும் நானே-1

வணக்கம்... புதனின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து தமிழ் நல்உள்ளங்களுக்கு நன்றி... புதன் எப்படி திரை உலகின் கலைச்சேவையை பாராட்டி விருதுகள் வழங்கினாரோ, அதற்கு கைமாவாய் சே சே கைமாராய் விருது பெற்ற சில நண்பர்கள் நம்ப புதன் அவர்களை அப்பிடியே  ஊட்டி, கொடைக்கானல், வட இந்தியா  ஆகிய ரூம்-போட்டு அடிக்கும் இடங்களுக்கு கடத்தி கொண்டு சென்று விட்டார்கள்.. எனவே புதன் கொஞ்ச நாள் விமர்சனம் பண்ண முடியாது என வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்!! இதோட நா அடுத்த கதாபாத்திரம் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.. வாங்க திரு பத்து கேள்வி பத்மநாபன்...

வணக்கம்.. நா பத்து கேள்வி பத்மநாபன்... நீங்க நினைக்கிற மாதிரி நா நாக்க புடிங்க்கிற மாதிரி 10 கேள்விலா கேக்க மாட்டேன்... நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லிக்குவேன்... அரசியல், பொது அறிவு (அது உங்களுக்கு இருக்கா), சினிமா, இசை, வாழ்க்கை இப்படி அனைத்து துறைகளுக்கும் உரித்தான கேள்விகளுக்கு இந்த துரை தோள உரிக்காத மாதிரி பதில் அளிப்பேன்... இது நம்ம முதல் பதிவு.. ஆதலால் நம்ப மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வோம்1. ஜார்ஜ் புஷ் தமிழ் பாட்டுலா கேட்பார்னு கேள்வி பட்டேன்.. இப்ப என்ன பாட்டு கேக்குறாரு?

இராக் பாத்து சிரிச்சிசாம்
அமெரிக்கா கண்ணு அடிச்சிசாம்
சு(SHOE) சு(SHOE) மாரி சு சு மாரி2. தமிழக அரசு அரிசி, தொலைக்காட்சி கொடுத்துட்டாங்க... ரேசன் கடைகளில் மலிவு விலையில் மாளிகை பொருட்கள்... இப்ப பொங்கல் முன்னிட்டு பொங்கலுக்கான பொருட்கள்... அடுத்து என்னன்னு நீங்க நினைக்கிறீங்க??

அல்வா3. சமீபத்தில் நீங்கள் பார்த்து ரசித்த காமெடீ படம்?

நம்ப கைப்புள்ள மாஸ் ஹீரோ ஆன படம்...  "வட போச்சே" போக்கிரி பட  வசனத்தை விட "ஜன்னல் போச்சே" தான் இப்ப ஹிட்டு... "அண்ணே... சும்மா இருந்த என்ன இப்படி ஊசுபேத்தி விட்டுட்டாங்க... நா காமெடியன் எண்ணி இப்படி பண்றாங்க... நாங்களும் நிப்போம்ல" என்ற ன்ச் வசனம் நி உள்ள, சண்டையே இல்லாத காமெடி படம்... வடிவேலு தன்னோட கைப்பிடி இல்லாம பண்ண ஒரிஜில் காமெடீ இது தான் அப்பு....4. ஸ்பெக்ட்ரம் - ராஜா?

அவர் . ராஜாவா இருந்தார்... இப்ப ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. ராஜாவா ஆகிட்டாரே5.ஏன் எஸ். வீ. சேகரை அம்மா செயற்குழு  கூட்டங்களுக்கு கூப்ட மாட்டேங்கிறாங்க?

அவர் ரொம்ப ஸ்நாக்ஸ்(SNACKS) சாப்பிட்டு கட்சி நிதியை வீண் அடிக்கிறாராம்.... அதுனால தான்... மாயாவதி கட்சிக்கு போக போறார்னு பேச்சு.. அங்க நிரய ஸ்நாக்ஸ் கிடைக்குமா?6. ATM மெசின் பணம் எடுத்த அனுபவம்??

இல்லைங்க.. நா இன்னும் வீரத்தளபதி ரித்தீஷ் அவரை பாக்க வில்லை...

 

7. அபியும் நானும் எப்படி???

யோவ்.. என்ன நக்கலா? ... கடுடாசில பேர மட்டும் போட்டு இருக்க... ? அடுத்த வாட்டி உன் புகைபடமும், ,,,,.. அபியோட புகைபடமும் அனுப்பும் ஓய்! 2 பேரும் எப்படின்னு சொல்றேன்...

 

8. மானாட மயிலாடவில் நமிதா இனிமேல் வரமாட்டாரா???

ஹே ஹே.... ஹி ஹி... நமிதா போனா என்னய்யா! அதான் ரம்பா இருக்காங்களே? நா உங்குல்கு 10 மார்க் கொடுக்க்ர்ந்ன் அப்டி ரம்பா தர 10 தான் ராசா டமில் சே சே... தமிழ் நாடுல செம ஹிட்டு...

 

9. சமீபத்தில் வந்த குறுந்தகவல்(SMS) ஜோக் ஒண்ணு சொல்லுங்க???

“2011ல் எங்க ஆட்சி- 234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் சரத்குமார்,.. கார்த்திக், ..,  ..               விஜய டி ராஜேந்தர் பேட்டி

 

10. வரும் ஆனா வாராது... அப்படினா என்னங்கய்யா???

கொஞ்ச நாள் முன்னாடி மின்சாரம்... இப்போ பாராளமன்ற தேர்தல்

 

இந்த வாரத்தோட கேள்விகள் அவளவு தான்... என்னங்க பண்றது? .. எனக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லணும்னு ஆச தான்.. ஆனா பத்மநாபன் பத்து கேள்விகளுக்கு தான் பதில் சொல்வேன்னு கொள்கையோட இருக்கேன்.. உங்க கேள்வியும் இதுல இடம் பெறணுமா? ???.. அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதாங்க... உடனே ஒரு அஞ்சல் அட்டை எடுங்க.. அதுல உங்க பெயர் மற்றும் கேள்வி(கள்) எழுதி அனுப்புங்க.. பின்புறம் சரியான விலாசத்தோட அனுப்புங்க.. ஏனா தேர்ந்தெடுக்கப்படும் “கடிதங்கள் இங்கு பிரசுரிக்கப்படும்.. அதோடு வெரியாகும் சே சே வெளியாகும் கேள்விகளுக்கு பரிசும் காத்து இருக்கு... நீங்க அனுப்ப வேண்டிய முகவரி...

 

பத்து கேள்வி பத்மநாபன்

லொள்ளு வீதி

நக்கல் நகர்

வெண்ணை-1234567890

 

தபால் வந்தா உங்களை சந்திக்கிறேன்... அது வரை நக்கல் கலந்த வணக்கத்துடன் விடைபெறுகிறேன்... நன்றி!!

 

பி.கு.: இதை நான் தமிழில் சுலபமாக அடிக்க,     ,,.,. இந்த மென்பொருள் தந்து உதவிய ஆளவந்தான் அவர்களுக்கு நன்றி!!

 

எல்லாரும் லொள்ளா இருங்க!! கூத்தடிச்சிட்டு போங்க

Blogger templates

Custom Search